சென்ற பதிவின் ( http://tthamizhelango.blogspot.com/2016/12/2016-1.html
) தொடர்ச்சி …… …
இணையத் தமிழ் பயிற்சி முகாம்:
ஒரு சிறிய தேநீர் இடைவேளை (TEA TIME ) முடிந்ததும், கல்லூரி வளாகத்தின்
இரண்டாவது தளத்தில் இருந்த ’கம்ப்யூட்டர் லேப்’ – இல் இணையத் தமிழ் பயிற்சி முகாம் தொடங்கியது.
(படம் மேலே) பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் புதிய
பயனர்களுக்கு ஜிமெயில் தொடங்குவது, வலைப்பக்கம் தொடங்குவது என்று பாடம் எடுத்தார்.
(படம் மேலே) திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தனது வலைத்தளத்தினில்
உள்ள, தொழில் நுட்பம் சார்ந்த பதிவுகளை எடுத்துக் காட்டி விளக்கினார்.
(படம் மேலே) பிரின்சு என்னாரெசுப் பெரியார், (சென்னை) அவர்கள்
தமிழ் விக்கிபீடியாவில் எழுதுவது குறித்து விளக்கம் அளித்தார்.
மதிய உணவு இடைவேளை:
காலையும் மாலையும் கல்லூரி நிர்வாகம் சார்பாக தேநீரோடு பிஸ்கட்டுகளும்
மற்றும் மதிய உணவும் (சைவம் அசைவம்) வழங்கப் பட்டன. மதிய உணவின்போது எடுக்கப்பட்ட படங்கள்
கீழே.
மதிய உணவிற்குப் பிறகு மீண்டும் பயிற்சி முகாம் தொடங்கியது.
(படம் மேலே) NM.கோபிநாத் (G Tech Education புதுக்கோட்டை) அவர்கள்
தொழில்நுட்ப பயன்பாடுகளை விளக்கினார்.
(படம் மேலே) ரமேஷ் டி.கொடி (CODESS TECHNOLOGY, திருச்சி) அவர்கள்
யூடியூப்பைப் பயன்படுத்துவது குறித்து விளக்கினார்.
கில்லர்ஜி – எஸ்.பி.செந்தில்குமார் – கவிஞர் மீரா செல்வகுமார்
– புதுகை கேமரா செல்வா – ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
(படம் மேலே) முனைவர் பா.ஜம்புலிங்கம் (தஞ்சை) அவர்கள், தமிழ்
விக்கிபீடியாவில் எழுதும்போது எவையெவற்றை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்பதனை,
தனது அநுபவங்களோடு விளக்கினார்.
(படம் மேலே) பயிற்சி முகாமின் போது, ஆசிரியர் நா.முத்துநிலவன்
அய்யா அவர்கள், ஒவ்வொரு பயிற்சியாளரையும் அறிமுகப்படுத்தி பேசினார்.
(படம் மேலே) கல்லூரி ஆசிரியர் பா.சக்திவேல் (ஆங்கிலத் துறை)
அவர்கள் நன்றியுரை நவில பயிற்சி முகாம் இனிதே நிறைவுற்றது.
பயிற்சி முகாமில் எடுக்கப்பட்ட மற்ற படங்கள் கீழே
காலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு
வருவதற்கும், மாலை திரும்பி செல்வதற்கும், மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர்
தங்களது கல்லூரி பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் அவர்கள் வரும் 2017 ஆம்
ஆண்டிற்கான, தங்களது கல்லூரியின் மாதக் காலண்டரையும்
ஒவ்வொருவருக்கும் கொடுத்தனர்.
கீழே உள்ள படங்கள்
புதுகை செல்வா அவர்களது வலைத் தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை ஆகும். அவருக்கு மனமார்ந்த
நன்றி. மேலும் பல படங்களத் தெளிவாகப் பார்க்க அவரது வலைத்தளம் அல்லது ஃபேஸ்புக் சென்று
பார்க்கவும்.
அனைவருக்கும் நன்றி! வணக்கம்!
ஒவ்வொரு நிகழ்வையும் அழகாக படம் பிடித்துள்ளீர்கள் அய்யா... நன்றி...
ReplyDeleteநண்பர் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
Deleteபடங்களின் தொகுப்பு அற்புதம் ஐயா
ReplyDeleteநன்றி
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.
Deleteஇணையத் தமிழ் பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கும்,நிறைவாக படங்களுடன் பதிவு செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபலவகையிலும் உதவியிருக்கும் மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினரும் பாராட்டுக்கு உரியவர்கள் :)
தோழர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி.
Deleteநேரில் வந்த உணர்வு!! எக்சலண்ட் ஃபோட்டோஸ்!!
ReplyDeleteநன்றி மேடம்.
Deleteஇன்னொரு முறை வகுப்பறையும் பாடங்களும் அனுபவம் வித்தியாசமாய் இருந்திருக்கும் வழக்கம் போல் படங்களுடன் பதிவும் அழகு வாழ்த்துகள்
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் அய்யா G.M.B அவர்களின் பாராட்டினுக்கு நன்றி. பயிற்சி முகாமில், இன்றைய வயதில் அன்றைய மாணவனைப் போல காலை முதல் மாலை வரை மீண்டும் ஒடுங்கி இருப்பது என்பது பெரிய விஷயம்தான்.
Deleteஅருமையான தொகுப்பும் படங்களும் சார் நன்றி..
ReplyDeleteஒன்றுகூட விட்டுப்போகாமல், அனைத்தையும் அருமையான தெளிவான புகைப்படங்களாக எடுத்துக்காட்டி கலக்கியுள்ளீர்கள்.
ReplyDeleteபல்வேறு உதவிகள் செய்திருக்கும் மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் பாராட்டுகள். பொதுவாக நிகழ்ச்சிகளில் ஓர் நிறைவு படங்களில் மூலம் தெரிகிறது.
சாப்பிடுபவர்களை புகைப்படம் எடுத்துள்ள தாங்கள் சாப்பிட்டீர்களா, இல்லையா? அந்தப்படங்களில் எங்குமே உங்களைப் பார்க்க முடியவில்லையே ... அதனால் எனக்கு ஓர் சந்தேகம் :)
பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களின் அன்பான பாராட்டினுக்கு நன்றி.
Delete//சாப்பிடுபவர்களை புகைப்படம் எடுத்துள்ள தாங்கள் சாப்பிட்டீர்களா, இல்லையா? அந்தப்படங்களில் எங்குமே உங்களைப் பார்க்க முடியவில்லையே ... அதனால் எனக்கு ஓர் சந்தேகம் :)//
தங்கள் அன்பான வினவுதலுக்கு நன்றி அய்யா. நான் அன்றைய பயிற்சி முகாமில் எனக்கான மதிய உணவை சாப்பீட்டேன். சாப்பிடுவதற்கு முன்னும் சாப்பிட்ட பின்பும் புகைப்படம் எடுக்கும் பணிதான். பெரும்பாலும் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் பற்றிய எனது பதிவுகளில், என்னைப் பற்றிய புகைப்படங்களை அதிகம் வெளியிட்டுக் கொள்வதில்லை. கலந்து கொண்டதற்கு அடையாளமாக ஒன்றிரண்டு மட்டுமே வரும்.
காலை முதல் மாலை வரை முகாம் நிகழ்வுகளில் கலந்துகொண்டேன்.அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் ஒன்றிணைத்து உரிய குறிப்புகளுடன் தந்த விதம் அருமை. ஒவ்வொரு புகைப்படத்தையும் நீங்கள் எடுக்கும்போது காட்டிய ஆர்வத்தையும், உரிய வகையில் படம் அமைய நீங்கள் எடுத்த முயற்சிகளையும் நேரில் கண்டு வியந்தேன். பாராட்டுகள்.
ReplyDeleteமுனைவர் அவர்களின் பாராட்டினுக்கு மீண்டும் நன்றி.
Deleteஎவ்வளவு படங்கள்... அருமை. கில்லர்ஜி கம்பீரமாகக் காட்சி தருகிறார். DD ஹீரோ போல இருக்கிறார். ஜம்புலிங்கம் ஐயா, முத்துநிலவன் ஐயா, உள்ளிட்ட எல்லோரும் கண்ணில் படுகிறார்கள். நல்ல பணி நடந்திருக்கிறது.
ReplyDeleteநண்பர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அடுத்து நடக்க இருக்கும் பயிற்சி முகாமிற்கு நீங்களும் மற்றவர்களும் வரலாம்.
Deleteஅருமையான புகைப்படத்தொகுப்பு!
ReplyDeleteமவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினருக்கு இனிய பாராட்டுக்கள்!
மேடம் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.
Deleteஸூப்பர் படங்கள் நண்பரே
ReplyDeleteஃப்ரம் செல்
நண்பருக்கு நன்றி.
Deleteஇவ்வாறான பயிற்சி நிகழ்வுகள் தொடர வேண்டும்.
ReplyDeleteஇவற்றை நாளைய தலைமுறை அறிந்தால்
இணைய வழி தமிழ் பேண உதவுமே!
விழா ஏற்பாட்டாளர்களுக்குப் பாராட்டுகள்!
http://www.ypvnpubs.com/
கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.
Deleteரொம்ப நல்ல முயற்சி. இதை ஏற்று நடத்துவது எவ்வளவு கடினம். ரொம்ப கோ-ஆர்டினேஷன், பயனாளர்களின் ஒத்துழைப்பு, ஏற்று நடத்துபவர்களின் விட்டுக்கொடுக்கும் தன்மை... இப்படி ஒரு பயிற்சி முகாம் நடத்தவேண்டும் என்று நினைத்தமைக்கே பெரிய பாராட்டு. அதை வெற்றிகரமாக்க உழைத்தவர்கள், பயனாளர்களுக்குப் பயிற்சி கொடுத்த, இதற்கான இடமும் மற்ற உதவிகளும் வழங்கிய கல்லூரி நிர்வாகம் ஆகிய அனைவருக்கும் பாராட்டுக்கள். பாராட்டுதலுக்குரிய Service.
ReplyDeleteகில்லர்ஜி ஊருக்குப் போய் இன்னும் ஸ்மார்ட்டாக ஆகிவிட்டார். அதைப்போன்றே மற்றவர்களும்...
நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.
Deleteஅற்புதமான பவு ஐயா. மிக்க மகிழ்ச்சி ஐயா.
ReplyDeleteஅற்புதமான பவு ஐயா. மிக்க மகிழ்ச்சி ஐயா.
ReplyDeleteதங்கள் பாராட்டினுக்கு நன்றி அய்யா
Delete