புதுக்கோட்டையில். இணையத் தமிழ் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த,
புதுக்கோட்டை கணிணித் தமிழ்ச் சங்கம் நடத்திய, இணையத் தமிழ் பயிற்சி ஒருநாள் முகாமானது,
மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி (MOUNT ZION COLLEGE OF ENGINEERING &
TECHNOLOGY) வளாகத்தில் சென்ற 18.12.2016 – ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.
அறிவிப்பு வந்ததிலிருந்து அதில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்ற
ஆர்வம் எனக்குள் மேலோங்கியே இருந்தது. நல்லவேளையாக அன்றைக்கு திருமணம் போன்ற வேறு எந்த
நிகழ்ச்சியும் இல்லை. திருச்சியிலிருந்து பஸ்சில்
புறப்பட்டு புதுக்கோட்டைக்கு காலை ஏழு மணிக்கெல்லாம் வந்து விட்டேன். புதுக்கோட்டையில்
எப்போதும் சாப்பிடும் ஹோட்டலுக்கு சென்று விசாரித்தால் டிபன் இன்னும் ரெடியாகவில்லை,
இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்று சொன்னார்கள்.
எனவே பஸ் ஸ்டாண்ட் பக்கம் சென்று பொழுதைப் போக்கினேன். தஞ்சையிலிருந்து
வரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு போன் செய்ததில் அவர் நேரே பயிற்சி முகாம் நடக்கும்
கல்லூரிக்கு வந்து விடுவதாகச் சொன்னார். எனவே அரைமணி நேரம் சென்று அதே ஹோட்டலில் காலை
டிபனை முடித்துக் கொண்டேன். பின்னர் ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு போன்
செய்தேன். அவர் கல்லூரியின் தனிப் பேருந்து ஒன்பது மணிக்கு புறப்பட இருப்பதாகச் சொன்னார்..
மறுபடியும் பஸ் ஸ்டாண்டில் பொழுதைப் போக்க இஷ்டப் படாததால் தேவகோட்டை செல்லும் பஸ்சில் ஏறி, லேனா விளக்கு என்ற
இடத்தில் இறங்கிக் கொண்டேன். நான்கு சாலைகள் சந்திக்கும் அந்த கூட்டுரோட்டில் பயிற்சி
முகாம் பற்றிய ப்ளக்ஸ் பேனர் அன்புடன் வரவேற்றது. மிதமான பனி; ’சுள்’ என்ற இதமான வெயில் என்று,
நான் பயிற்சி நடக்கும் மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி (MOUNT ZION COLLEGE OF
ENGINEERING & TECHNOLOGY) நோக்கி நடந்தேன். கல்லூரி வாசலிலிலும் ஒரு ப்ளக்ஸ் பேனர்
அன்புடன் வரவேற்றது..
(படம் மேலே) லேனா விளக்கு சாலை முக்கில் ப்ளக்ஸ் பேனர்
(படம் மேலே) கல்லூரி வாசலில் ப்ளக்ஸ் பேனர்
விழா தொடங்குவதற்கு முன்னர்:
கல்லூரியில் நுழைந்தவுடன், முன்னதாகவே வந்துவிட்ட, முனைவர் B.ஜம்புலிங்கம்
அய்யா மற்றும் நண்பர் கில்லர்ஜி இருவரும் என்னை வரவேற்றனர். அதுசமயம் நண்பர் கில்லர்ஜி
தான் எழுதிய ‘தேவகோட்டை தேவதை தேவகி’ நூலினை எங்களுக்கு அன்பாக வழங்கினார்.அப்போது
அங்கு வந்த, அந்த கல்லூரி ஆசிரியர் பா.சக்திவேல் (ஆங்கிலத் துறை) அவர்கள் எங்களை வரவேற்று,
கல்லூரியின் முதல் தளத்தில் இருந்த அரங்கத்திற்கு அழைத்துச் சென்றார்.
(படம் மேலே) கில்லர்ஜி, முனைவர் ஜம்புலிங்கம் மற்றும் நான்
விழா தொடங்கியது:
ஒவ்வொருவராக வர அரங்கம் நிரம்பியது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் புதுக்கோட்டை,
கணிணித் தமிழ்ச் சங்கம் நடத்திய இணையத் தமிழ் பயிற்சி முகாம் இனிதே துவங்கியது. திரு
ராசி.பன்னீர் செல்வன் அவர்கள் எல்லோரையும் வரவேற்று பேசினார். மவுண்ட் சீயோன் கல்லூரி
நிர்வாக இயக்குநர் திரு ஜெய்சன் K.ஜெயபாரதன் அவர்கள் தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.
கவிஞர் திரு.தங்கம் மூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை செய்தார்..கல்லூரி
முதல்வர் திரு பி. பாலமுருகன் அவர்கள் வாழ்த்துரை நல்கினார்.
விழாவில் மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா, கவிஞர் வைகறை மற்றும்
ஆசிரியர் குருநாத சுந்தரம் ஆகியோருக்கு மவுன.அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேடையில் இருந்தவர்களையும், மூத்த வலைப்பதிவர்களையும் கவுரவிக்கும்
விதமாக அவர்களுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பயிற்சி
முகாம் சார்பாக ‘கணிணித் தமிழ்க் கையேடு’ வெளியிடப்பட்டது. கல்லூரி ஆசிரியர் பா.சக்திவேல்
(ஆங்கிலத் துறை) அவர்களது உரைக்குப் பிறகு ஆசிரியை மு.கீதா அவர்கள் நன்றி கூறினார்.
மேடை நிகழ்ச்சிகளை ஆசிரியர் - முனைவர் மகா சுந்தர் அவர்கள் சிறப்பாகத் தொகுத்துத் தந்தார்.
(படம் மேலே) திரு ஜெய்சன் K.ஜெயபாரதன் அவர்கள் தலைமை ஏற்று
உரை – (மேடையில் இடமிருந்து வலம் கல்லூரி முதல்வர் திரு பி. பாலமுருகன், கவிஞர் தங்கம்
மூர்த்தி, ஆசிரியர் நா.முத்துநிலவன், ஆசிரியர் முனைவர் மகா.சுந்தர் மற்றும் ராசி.பன்னீர் செல்வன்)
(படம் மேலே) ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் உரை
(படம் மேலே) ‘கணிணித் தமிழ்க் கையேடு’ என்ற கையேட்டினை கவிஞர்
திரு.தங்கம் மூர்த்தி அவர்கள் வெளியிட ஆசிரியை மு.கீதா அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
(படம் மேலே) ஆசிரியை மு.கீதா அவர்கள் நன்றி தெரிவிக்கிறார்.
விழா அரங்கில் எடுக்கப்பட்ட மற்ற படங்கள் கீழே
சிறிது இடைவேளைக்குப் பிறகு இதன் தொடர்ச்சி (பகுதி.2) வெளிவரும்.
சீக்கிரமே சென்று விட்டீர்கள் போல... வருகைப்பதிவு கம்மிதானோ?
ReplyDeleteநண்பர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஒரு மணிநேரம் முன்னதாகவே போய் விட்டேன். உண்மையைச் சொல்வதானால், எனது மனைவி, சென்னையில் உள்ள எங்கள் மகள் வீட்டுக்கு பல்லவனில் செல்ல வேண்டி இருந்தது. எனவே நாங்கள் இருவரும் எங்கள் வீட்டிலிருந்து ஆட்டோவில் பயணம் செய்து திருச்சி ரெயில்வே ஜங்ஷன் வந்தோம். அவரை ரெயிலுக்கு அனுப்பி விட்டு நான் பஸ்சில் புதுக்கோட்டை வந்தேன்.
Deleteபயிற்சிக்கு வந்தவர்களின் வருகைப் பதிவு குறைவு என்று சொல்ல முடியாது. சிலர் காலை நிகழ்ச்சிக்கு மட்டும் வந்து விட்டு சென்றார்கள். பலர் தாமதமாக வந்தார்கள். ஆசிரியை மு.கீதா அவர்கள் தனது ஃபேஸ்புக்கில் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்.
// புதுக்கோட்டை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து 80 பேருக்குமேல் பயிற்சியில் கலந்து கொண்டனர்.அதில் 40 பேருக்கு மேல் அன்றைய பயிற்சியில் மின்னஞ்சல் துவங்கி, வலைப்பூவும் வடிவமைத்தனர் //
மிகவும் அருமையாக விழா நிகழ்வினைப் பகிர்ந்துள்ளீர்கள். ஆவணப்படுத்திய தங்களுடைய பணி பாராட்டுதலுக்குரியது. நன்றி.
ReplyDeleteமுனைவர் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.
Deleteஇனிய சந்திப்பு... நேற்றே தங்களின் பதிவை எதிர்பார்த்தேன்... மிகவும் மகிழ்ச்சி ஐயா... நன்றி...
ReplyDeleteநண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
நிகழ்வு நடைபெறுகிறது என்பதை புலனம் வழி அறிந்தேன் நிகழ்வை மிக அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞருக்கு நன்றி.
Deleteசில தவிர்க்க இயலாத பணிகளால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது
ReplyDeleteதங்களைச் சந்திப்பதற்கு உரிய வாய்ப்பினையும் இழந்துவிட்டேன்
நன்றி ஐயா
தம +1
ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி. நானும் உங்களை ஆவலோடு எதிர்பார்த்தேன்.
Deleteபதிவுலக போட்டோ ஜர்னலிஸ்ட் நீங்கள் தான் படங்களின் மூலம் நிகழ்ச்சியை நேரில் பார்த்த அனுபவத்தை ஒவ்வொருதடவையும் ஏற்படுத்திவிடுகிறீர்கள். பாராட்டுக்கள்
ReplyDeleteநண்பர் மதுரைத் தமிழன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteஅலுவலகப் பணியின் காரணமாக கலந்துகொண்டு ,நண்பர்களை சந்திக்க முடியாமல் போனது.தங்களின் அடுத்த பதிவைக் காண ஆவலோடு இருக்கிறேன் :)
ReplyDeleteதோழரின் கருத்துரைக்கு நன்றி. மதுரை புதுக்கோட்டைக்கு பக்கமாக இருந்தும், வலைப்பதிவு நண்பர்கள் வராதது ஏமாற்றமே.
Deleteஆஹா, சுடச்சுடப் படங்களுடன் பதிவினைத் தருவதே தங்களின் தனிப்பாணியாக மிகவும் அழகாக உள்ளது. தங்களுடனேயே புறப்பட்டு நேரில் வந்து விழாவினில் கலந்துகொண்டது போன்ற மனத்திருப்தி இந்தப் பதிவின் மூலமே கிடைத்து விட்டது.
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். தொடரட்டும் :)
மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.
Deleteநீங்கள் கற்றுக் கொடுத்தது அதிகமா கற்றுக் கொண்டது அதிகமா கணினி பற்றி அறியாதவர்கள் வந்தனரா.
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் G.M.B அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் கற்றுக் கொடுக்கச் செல்லவில்லை. கற்றுக் கொள்ளவே சென்றேன். ஏற்கனவே கம்யூட்டர் மற்றும் இணையதள பயன்பாடுகளை அறிந்தவன் என்பதனால், புதியவர்களுக்கு வழிவிட்டு கம்ப்யூட்டர் முன் அமரவில்லை. பயிற்சி முகாமில் எனக்குத் தேவையான, நான் அறிந்திடாத தொழிநுட்பங்களை குறிப்பெடுத்துக் கொண்டேன். அவ்வப்போது எனது கேமராவில் படங்களும் எடுத்தேன். பயிற்சிமுகாம் பயனுள்ளதாக இருந்தது.
Deleteபடங்கள் அருமை நண்பரே
ReplyDeleteநண்பருக்கு நன்றி.
Deleteஇவ்வாறான பயிற்சி நிகழ்வுகள் தொடர வேண்டும்.
ReplyDeleteஇவற்றை நாளைய தலைமுறை அறிந்தால்
இணைய வழி தமிழ் பேண உதவுமே!
விழா ஏற்பாட்டாளர்களுக்குப் பாராட்டுகள்!
http://www.ypvnpubs.com/
விளக்கமான தகவல்களுடன் புகைப்படங்களுடன் நிகழ்வு பற்றிய பதிவ அருமை
ReplyDelete