Sunday, 7 August 2016

டமில்நாடு தமிழ்நாடாக மாற வேண்டும்



அண்மையில். தமிழக சட்டசபையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சென்னை உயர்நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்ற வேண்டும் என்று, ஒரு தனித் தீர்மானம் (01 ஆகஸ்ட் 2016) கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அனைத்துக் கட்சியினராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதமும் எழுதியுள்ளார். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஆனாலும், தமிழ் உச்சரிப்பின் போது ‘தமிழ்நாடு’ என்று சொன்னாலும், ஆங்கிலத்தில் எழுதும்போது ‘டமில்நாடு (TAMIL NADU) என்றுதான் எழுதுகிறோம். எனவே இவ்வாறு ஆங்கிலத்தில் எழுதுவதையும் THAMIZH NADU என்று மாற்ற வேண்டும். அதேபோல தமிழ்நாட்டிலுள்ள ஊர்களின் பெயர்களையும் தமிழ் உச்சரிப்பின்படி ஆங்கிலத்தில் எழுதிடச் செய்தல் வேண்டும்.

எனது பழைய பதிவு

அப்போதுதான் நான் வலைப்பக்கம் ஒரு வலைப்பதிவராக எழுத வந்த நேரம். நமது எழுத்துலக பயணத்திற்கு வரவேற்பு இருக்குமோ என்னவோ என்ற பயத்தின் காரணமாக சின்னச் சின்ன பதிவுகளாகவே எழுதினேன். நான்கு வருடங்களுக்கு முன்னர் (21 டிசம்பர் 2011) அப்படி நான் எழுதிய ஒரு பதிவுதான் ”டமில்நாடு நல்ல தமிழ் நாடு” http://tthamizhelango.blogspot.com/2011/12/blog-post_21.html 

அப்போது நான் ஒரு புதுமுகம் என்பதால் வலையுலகில் இந்தக் கட்டுரைக்கு வரவேற்பும், கருத்துரைகளும் அதிகம் இல்லை. ( அந்த காலகட்டத்தில் புதிய வலைப்பதிவர்களை ஊக்குவிப்பவர்களாக இருந்த கவிஞர் எஸ்.ரமணி அவர்கள், திண்டுக்கல் தனபாலன் அவர்கள் ஆகிய இருவர் மட்டுமே பின்னூட்டங்கள் எழுதி ஊக்கம் தந்தனர்.இருவருக்கும் மனமுவந்த நன்றி.) இங்கு அந்த கட்டுரையை அப்படியே மீள்பதிவாகத் தருகிறேன். 

அறிஞர் அண்ணா, 1967 - இல் ஆட்சிக்கு வந்தவுடன், அதுவரை சென்னை மாகாணம் ( MADRAS STATE )  என்று இருந்த பெயரை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்தார். பெயர் மாற்றம் நடந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் அரசு அலுவலக நடவடிக்கைகளில் ஆங்கிலத்தில் டமில் நாடு” ( TAMIL NADU ) என்றும் தமிழில் தமிழ் நாடு என்றும் குறிப்பிடப் படுகிறது. அதே போல தமிழையும் “டமில்” ( TAMIL )  என்றே குறிக்கின்றனர். இந்த நடைமுறை தமிழ் நாடு முழுக்க விரவி உள்ளது. தமிழ் என்பதற்கு ஆங்கிலத்தில் “ THAMIZH ” என்று எழுதுவதே சரியான வடிவம் ஆகும். சிலர் “ THAMIL “ என்றும் எழுதுகின்றனர்.

தமிழரசன் “டமிலரசன்” (TAMILARASAN) எனவும், தமிழ் அரசி “டமில் அரசி” (TAMILARASI) எனவும், தமிழ் மணி “டமில் மணி” (TAMIL MANI) எனவும் தமிழர்களின் பெயர்கள் எழுதப் படுகின்றன. தமிழ் நாடு சைவம் வைணவம் இரண்டும் தழைத்தோங்கிய நாடு. எனவே திருக் கோயில்கள் உள்ள ஊர்கள் அனைத்தும் ” திரு ”  என்ற சொல்லொடு அழைக்கப் பட்டன. ஆனால் திருவுக்குப் பதிலாக டி ( T ) ஒலியில் டிரு (TIRU) என உச்சரிக்கப் படுகிறது. உதாரணம் திருவாரூர் > ”டிருவாரூர்” (TIRUVARUR) , திருவையாறு > ”டிருவையாறு” (TIRUVAIYARU) , திருவானைக் கோயில் > ”டிருவானைக் கோயில்” ( TIRUVANAIK KOYIL) , திருவண்னாமலை > ”டிருவண்னாமலை” (TIRUVANNAMALAI) , திருப்பூர் > ”டிருப்பூர்” (TIRUPUR)   இவ்வாறாக பல ஊர்கள். சில ஊர்கள் ஆங்கிலேயர் அழைத்தது போலவே இன்னும் ஒலிக்கின்றன. தஞ்சாவூர் > ‘’டேஞ்சூர்” (TANJORE) திருவல்லிக்கேணி > ட்ரிப்ளிகேன்” (TRIPLICANE) திண்டுக்கல் > டிண்டிகல்” (DINDIGUL), திருச்சிராப் பள்ளி ” டிருச்சிராப்பள்ளி “ ( TIRUCHIRAPALLI) அல்லது ட்ரிச்சி “ (TRICHY), மதுரை > “மடுரை” (MADURAI).  மெட்ராஸ் (MADRAS) என்ற பெயர் சென்னை (CHENNAI)  என்று மாற்றப் பட்டு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் சென்னை உயர் நீதி மன்றத்தில்,  “மெட்ராஸ் ஹைகோர்ட்” (MADRAS HIGH COURT) என்ற பெயரிலேயே  அலுவலக வேலைகள் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் யாவும் இவ்வாறே இருக்கின்றன. 

 மணக்க வரும் தென்றலிலே  
 குளிரா இல்லை?  தோப்பில்                  
 நிழலா இல்லை?
 தணிப்பரிதாம் துன்பமிது!
 தமிழகத்தின தமிழ்த் தெருவில்
 தமிழ்தான் இல்லை!            
                     - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.( தமிழியக்கம் )

4 comments:

மிகச் சரியாகச் சொன்னீர்கள் சைக்கிளை மிதிவண்டி என மாற்றலாம்
ஆனால் சைக்கிளைப் பிரித்தால் தமிழ் காணாமல் போய் விடும் என்பார்கள் எல்லாமே மேலோட்டமாகத்தான் நடக்கிறது
மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்

த.ம 1


தி.தமிழ் இளங்கோWednesday, December 21, 2011 11:04:00 pm 
வணக்கம்! ரமணி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! அயல்நாட்டினர் கண்டுபிடித்த பல பொருட்களை, உலகப் பொதுத்தன்மை (UNIVERSAL) கருதி அந்த பெயரிலேயே அழைப்பதில் தவறு இல்லை. உதாரணம் நீங்கள் குறிப்பிட்ட சைக்கிள் ( CYCLE) மற்றும் பஸ் ( BUS ), ஆட்டோ ( AUTO), டியூப் ( TUBE ), டெலிவிஷன் (TELEVISION) போன்றவை. அதே போல அயல் நாட்டினர் பெயர்கள். ஷேக்ஸ்பியரையே ஜெகப் பிரியர் என்று சொல்ல வேண்டும் என்று சொன்னவர்களும் ஒரு காலத்தில் உண்டு. இது தேவையில்லை.

திண்டுக்கல் தனபாலன்Friday, December 23, 2011 6:28:00 pm
அருமை! த.ம. 2  பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

ஒரு வேண்டுகோள்:

எனவே தமிழக முதல்வர் அவர்கள், தமிழ்நாடு என்ற பெயரினையும் மற்றும் தமிழ்நாட்டு ஊரின் பெயர்களையும், தமிழ் உச்சரிப்பின் படியே, ஆங்கிலத்திலும் எழுதிடச் செய்தல் வேண்டும் என்பதனை எனது வேண்டுகோளாகச் சொல்லிக் கொள்கிறேன்.


62 comments:

  1. அழகாகச் சொன்னீர்கள் ஐயா. அரசின் சட்டத்தால் மட்டுமே இந்த மாற்றத்தைக் கொண்டுவர இயலாது என்று நான் கருதுகிறேன் ஐயா. தனிமனித மொழிப்பற்றும் இதற்குத் தேவை என்பது எனது கருத்து.

    டமிலன் என்றொரு அடிமை என்ற தமிழ்மணம் விருதுபெற்ற என்ற எனது இடுகையைத் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

    http://www.gunathamizh.com/2009/04/blog-post_28.html

    நான் thamizh என்றுதான் பயன்படுத்துகிறேன். என் மாணவர்களுக்கும் அதையே அறிவுறுத்திவருகிறேன்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி. நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது, எனக்குத் தெரிந்து நிறையபேர் நல்ல தமிழில் அல்லது தனித்தமிழில் மட்டுமே எழுத வேண்டும், பேச வேண்டும் என்ற உணர்வோடு இருந்தார்கள். இப்போது எல்லாமே மாறிவிட்டது. நீங்கள் கொடுத்த சுட்டி வழியே உங்கள் பதிவினைப் படித்துவிட்டு, நான் எழுதிய கருத்துரை இது ....

      // தமிழ்மண விருது - முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். தங்கள் தமிழ் உணர்வின் முன் நான் தலை வணங்குகின்றேன்.//

      Delete
  2. நீங்கள் thamizhelango ஆனதால் ,நீங்க சொல்றதே சரி :)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, தமிழில் பெயர் வைத்துக் கொண்டதாலேயே நான் தமிழுக்கு அதிகாரம் படைத்தவன் ( Authority ) ஆகிவிட முடியாது.

      Delete
  3. தஞ்சாவூர் - Thanjavur - என்று அறிவிக்கப்பட்டு எவ்வளவோ நாட்கள் ஆகின்றன..

    நாக்கில் வசம்பை வைத்துத் தேய்த்தாலும் - நம்மவர்கள் உணர்வு பூர்வமாகப் பேசுவதில்லை..

    ஒரு சமயம் - அப்போதைய பல்லவன் பேருந்தில் - எழும்பூருக்கு ஒரு சீட்டு கொடுங்கள்!.. என்று நான் கேட்டபோது,

    நக்கலாகவும் நையாண்டியாகவும் பார்த்தார்கள் அருகிருந்த சென்னை வாசிகள்..

    இப்போதும் அப்படித்தான்!...

    ReplyDelete
    Replies
    1. எனது தவற்றினை (Tanjore)சுட்டிக்காட்டிய சகோதரருக்கு நன்றி. எனக்கும் தஞ்சாவூர் வரும் போதெல்லாம் ஒரு குழப்பம். டவுன் பஸ்சில் டிக்கட் கேட்கும் போது, வண்டிக்காரத்தெரு கிழக்கு கோடியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு, தொம்பன் குடிசை என்று சொல்லுவதா அல்லது தொல்காப்பியர் சதுக்கம் என்று சொல்லுவதா என்று ஒரே யோசனை தான்.

      Delete
    2. அன்பின் அண்ணா..

      தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது - தொம்பன் குடிசை என்று வழங்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் மணி மண்டபம் ஒன்றை அமைத்து தொல்காப்பியர் சதுக்கம் என்று பெயர் மாற்றம் செய்தார்கள்..

      அரசு பதிவுகளில் தொல்காபியர் சதுக்கம் என்று மாறினாலும்
      மக்கள் தங்களை மாற்றிக் கொள்ளத் தயாரில்லை..

      Delete
  4. நல்ல வேண்டுகோள். ஆங்கில அடிமைத் தமிழர்கள் உணர்வுபூர்வமாகவும் செயல்பூர்வமாகவும் தமிழர்களாக இருக்கவேண்டும். தமிழில்தான் பேசுவது என்பது பெருமைக்குரிய விஷயமாக ஆக்கவேண்டிய கடமை உங்களைப்போல் உள்ளவர்களுக்கு உண்டு.

    கேரளாவிலும், கர்னாடகாவிலும் இதுபோல் ஆங்கிலப்படுத்திய பெயர்களெல்லாம் பூர்வீக நிலத்திற்குறிய பெயரால் அழைக்கப்படுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். நாமும் விரைந்து செயல்படவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. விரிவான தகவல் தந்த நண்பருக்கு நன்றி.

      Delete
  5. அடிமை எண்ணங்கள் புறையோடிவிட்டுள்ள நிலையில் மாற்றிக்கொள்ள சிரமப்படுகிறார்கள், அல்லது மாற்றுவது பற்றி சிந்திப்பதேயில்லை. தாங்கள் கூறிய கண்ணோட்டத்தில் மொழிப்பற்றோடு சிந்திக்கவேண்டிய நேரம் இதுவே. தமிழை தமிழன் எப்போது போற்றப்போகின்றானோ தெரியவில்லை. வேதனையே.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களது தமிழ் உணர்வோடு கூடிய கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. http://yaathoramani.blogspot.in/2011/09/blog-post_15.html

    113 பின்னூட்டங்கள் கிடைத்துள்ள நம் யாதோ ரமணி சாரின் மேற்படி பதிவு ஏனோ இப்போது என் நினைவுக்கு வந்தது.

    நாம் பேசுவது அடுத்தவனுக்குப் புரிய வேண்டும் என்பதே மிகவும் முக்கியமாகும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

    எனினும் யோசிக்க வைக்கும் தங்களின் இந்தப் பதிவுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நீங்கள் சுட்டிக் காட்டிய
      எங்கு தமிழ் எதில் தமிழ் ? ( 15.09.2011) என்ற கவிஞர் யாதோ ரமணியின் கவிதையையும், 113 பின்னூட்டங்களையும் இப்போதுதான், இன்று அதிகாலை படித்தேன். (காலை எழுந்தவுடன் படிப்பு?) இந்த பதிவு வந்தபோது நான் ஆரம்பகால புதிய வலைப்பதிவர். அப்போதுதான் நான் எழுதத் தொடங்கிய நேரம். எனவே என்னுடைய பின்னூட்டம் அங்கே இல்லை. ஆனால், இந்த பதிவை நான் தமிழ்மணத்தில் மீள்பதிவாக (ஏனில்லை எதிலும் தமிழ் ? Tuesday, December 3, 2013) படித்தது நினைவுக்கு வந்தது. மீள் பதிவினில் நான் எழுதிய பின்னூட்டம் இது…

      /////
      தி.தமிழ் இளங்கோ said...
      // ஏனில்லை எதிலும் தமிழ் ? //

      நல்ல கேள்வி. புதிய தமிழ் சொற்களை உருவாக்கி மக்கள் மத்தியில் பழக்கத்திற்கு கொண்டுவர அரசுதான் முயற்சி செய்ய வேண்டும். பல தமிழ் சொற்கள் அரசு அறிவிப்பு, அரசு ஆவணங்கள் என்று அரசு சம்பந்தப்பட்டவற்றின் மூலமே பழக்கத்தில் வரும்.
      December 3, 2013 at 7:48 PM ////

      நிற்க.

      // எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
      நிச்சயமாக நம்மைப் போலவே
      அவனுக்கும் சில நாளில் புரியக் கூடும் //

      என்ற கவிஞர் ரமணி அய்யா அவர்களின் கருத்தினில் எனக்கும் உடன்பாடே. நானும் இதே கருத்தினை, ” குளம்பியும் குழப்பமான தமிழும் http://tthamizhelango.blogspot.com/2014/11/blog-post_20.html “ என்ற எனது பதிவினில் குறிப்பிட்டுள்ளேன். அந்த கட்டுரையில் உள்ள எனது கருத்தும் இதுவேதான்

      // ஒரு பொருளை அல்லது செயலைக் குறிப்பிட்டால், அந்த சொல் அதன் வடிவத்தை சட்டென்று நினைவுக்கு கொண்டு வரவேண்டும். எனவே, தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு புதுமையான அதேசமயம் உலகளாவிய கண்டுபிடிப்புகளை அதே பெயரால் அழைப்பதில் தவறில்லை. அதே சமயம் இருக்கும் தமிழ்ச் சொற்களை புறக்கணித்துவிட்டு அதற்கு மாற்றாக அயல்மொழிச் சொற்களைப் பயன்படுத்துதலும் கூடாது. (உதாரணம் முடி (HAIR), புத்தகம் (BOOK), தண்ணீர் (WATER),அடுக்களை அல்லது சமையலறை (KITCHEN) போன்றவற்றைச் சொல்லலாம்)

      உடனே நீ தமிழனா? உனக்கு தமிழ் மீது பற்று இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எனக்கு தாய்மொழி தமிழின் மீது பற்று உண்டு. ஆனால் வெறி கிடையாது. இது எனது தனிப்பட்ட கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.//

      காலையில் எழுந்தவுடன், மீள் வாசிப்பாக கவிஞர் ரமணி மற்றும் எனது பதிவுகளை படிக்கச் செய்திட்ட மூத்த வலைப்பதிவர் திரு V.G.K அவர்களுக்கு எனது நன்றி.

      Delete
  7. தமிழ் ஆர்வலர்களுக்கு!
    தமிழில் உள்ள ழ என்ற எழுத்தில் உள்ள உச்சரிப்பு...மற்றவர்களுக்கு தெரியவே தெரியாது! நாம் தமிழை thamizh என்றும் எழிலை ezhil என்று பயன் படுத்துவது நமக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். இங்கு நீங்கள் thamizh என்று எழதினால் தமிழ் மொழி தெரிந்தவர்கள் மட்டும்...அதிலேயும் ழ என்ற உச்சரிப்பு அறிந்தவர்கள் மட்டுமே thamizh-ஐ தமிழ் என்று உச்சரிப்பார்கள்.

    மற்ற மொழிக்காரர்களுக்கு ழ என்ற உச்சரிப்பு வராது; அப்படி ஒரு உச்சரிப்பு இருக்கு என்றே தெரியாது! இதை கொலை தான் செய்வார்கள்.

    tamil எம்று எழுதுவது தான் closest

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி. மற்ற மொழிக்காரர்களுக்கு சங்கடம் என்பதால் நமது தாய்மொழியில் சில சீர்திருத்தங்களை செய்யாமல் இருக்க முடியாது. (மேலே திரு வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு நான் எழுதிய மறுமொழியையும் படித்துப் பார்க்கவும்)

      Delete
  8. ஷேக்ஸ்பியரையே ஜெகப் பிரியர் என்று சொல்ல வேண்டும். இது தவறு தான்!
    உண்மையில் ஷேக்ஸ்பியர் என்பவர் தமிழர் தெரியுமா? தமிழ் நாட்டில் இருந்து சென்று இங்கிலாந்து சென்று ஆங்கிலத்தில் புலமை பெற்ற "சிகப்பு ஐயர்" தான் மருவி ஷேக்ஸ்பியர் என்று மாறிவிட்டதாக சென்னை மயிலாப்பூர் மந்தைவெளியில் இன்னும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்! தெரியுமோ?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்களுக்கு எப்போதுமே குறும்புதான். ‘அவர்களை’ விட்டு விட்டு உங்களால் எழுதாமல் இருக்க இயலாது.

      Delete
  9. ஆங்கிலேயர்களுக்கு நம் மொழிக்கேற்ப நாக்கு சுழலாது. ஆகவே பெயர்களை மாற்றி உச்சரித்தனர் அதுவே நமக்கு ஸ்டைலாகி விட்டது. தருமி அவர்கள் மதுரை மெஜுரா என்று கூறப்பட்டதை நினைவு கூர்ந்திருக்கிறார். பெரும்பாலான தமிழர்களிடம் இந்த ழகரம் , லகரம் ளகரம் எல்லாம் படும்பாட்டைப் பற்றியே ஒரு நீண்ட பதிவு எழுதலாம் எதுவும் அரசாணையாக வருவதையே நம்புகிறோம் .

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய அய்யா ஜீ.எம்.பி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட அய்யா தருமி அவர்களது கட்டுரையை இரண்டு தினங்களுக்கு முன்புதான் படித்தேன்; இதே தொடர்புடைய சமஸ் அவர்களின் கட்டுரையையும் ( தி இந்து - தமிழ்) படித்தேன். நீங்கள் சொல்வது போல அரசாணையைத்தான் நாம் நம்புகிறோம்.

      Delete
  10. என் இளம் பருவத்திலேயே 'தமிழ்' என்னும் வார்த்தையை ஆங்கிலத்தில் எழுத வேண்டிய தருணங்களில் THAMIZH என்று எழுதுவதில் ஒரு திமிர்த்தனமான வேட்கை இருந்தது. அஞ்சலட்டைகளில் முகவரி எழுதும் இடத்தில் தமிழ் நாடு என்று குறிப்பிடுவதும், ஆங்கிலத்தில் முகவரி எழுத வேண்டிய தருணங்களில் THAMIZH NADU என்று குறிப்பிடுவதை நாங்கள் ஒரு குழு வழக்கமாகவே கொண்டிருந்தோம். 1957-ல் நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் காலத்து (Forth Form) தேர்வு விடைத்தாள்களில் THAMIZH என்று குறிப்பிட்டிருந்ததினால் சிவப்பு மையில் சுழிக்கப்பட்டு பக்கத்தில் ஒரு கேள்விக் குறியும் போடப்பட்டு மதிப்பெண்கள் குறைக்கப் பட்டிருக்கிறேன். தமிழை THAMIZH என்று ஆங்கிலத்தில் எழுதுவது ஒரு எழுத்துத் தவறாகவே கணிக்கப்பட்டிருந்த காலம் அது. இப்பொழுது கூட இணையத்தில் தமிழ் பற்றியும் தமிழகத்தில் தமிழ்க் கல்வி பற்றியும் எழுதும்
    பொழுது யாராவது வந்து முரட்டுத்தனமான மொழியில் சாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

    நான் பெரும்பாலும் தமிழிலேயே கையெழுத்திடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்ற அரசு ஆவணங்களில் கூட இந்தப் பழக்கம் தொடர்கிறது.

    ஆங்கிலத்தில் கையெழுத்திடுவோரை படித்தவராகவும் தமிழில் கையெழுத்திடுவோரை பாமரர்களாகவும் கருதும் போக்கு இன்றும் இருக்கிறது. ஆங்கில மோகம் என்பது ஒரு மேல்தட்டு மனப்பான்மையை இங்கு விதைத்திருப்பது சோகமான ஒரு உண்மை.



















    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. உங்களுக்குள் இருக்கும் தமிழ் உணர்வோடு ஒப்பிடும்போது நான் ஒரு சிறுதுளி தான். எம்.ஏ. படித்து முடிக்கும்வரை நான் தமிழில்தான் (அது ஆங்கில மனுவாக, கடிதமாக இருந்தாலும்) கையெழுத்து இடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தேன். அப்புறம் வங்கி வேலையில் சேர்ந்த பிறகு ஆங்கிலத்திற்கு போய் விட்டேன்.

      Delete
  11. படித்ததும் பதிலுரைத்திருந்ததும்
    மற்ந்து போய் இருந்தது
    மீண்டும் படித்து இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் எஸ்.ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் இன்றைக்கு ஒரு வலைப்பதிவராக இன்னும் எழுதுவதற்கு உங்களுடைய பின்னூட்டங்களும் ஒரு காரணம் என்பதை, நன்றியுடன் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  12. நல்லதொரு விடயம் நண்பரே அலசிய விதம் நன்று வாழ்த்துகள்,
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றி. மீண்டும் தாய்நாடு வரும்போது, ஒரு சிறிய பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வித்திடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

      Delete
  13. யோசிக்க வைத்த பதிவு! ழகரம் தமிழின் சிறப்பு! இது மற்றவர்களுக்கு வராமையால் லகர உச்சரிப்பில் உச்சரித்தார்கள் சரி! ஆனால் தமிழர்கள் ஏன் தமிலர்கள் என்று உச்சரிக்க வேண்டும். மற்றவர்களுக்கு வராது என்பதால் நம் தனித் தன்மையை நாம் ஏன் மாற்றிக்கொள்ளவேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்கள் சொல்லும் கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை.நன்றி.

      Delete
  14. டமில், டமில்நாடு என்று ஸ்டைலா சொல்லி கொண்டு திரியலாம் என்றால் வைத்து விட்டீர்களே ஆப்பு :)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே இப்போதைய சூழலில் டமால், டுமீல்தான் நடக்கிறது.

      Delete
  15. ஐயா...
    உள்ளபடியே நல்ல ஆலோசனைதான்!
    தமிழக அரசு முயற்சி எடுக்கும் (என்று எதிர்பார்க்கிறோம்)!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. நண்பரின் வாக்கு பலிக்கட்டும்.

      Delete
  16. நான் சொல்ல வந்ததை யாரும் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ் தனித்தன்மையை இழக்கக் கூடாது என்பது சரி! உலகத்தில் 600 கோடி மக்களில் தமிழர்கள் என்ன சுமார் ஒரு 12 கோடி இருப்பார்களா? மீதி உள்ளவர்கள் ஆங்கில விக்கிபீடியா அல்லது வேறு ஏதாவது ஆங்கில செய்திகளில், புத்தகங்களில் THAMIZH என்று எழுதினால் அதை அவர்கள் எப்படி படிப்பார்கள். தமிஸ்ஷ் அல்லது தமிஸ் என்று படிப்பார்கள்! அது சரியா?
    இல்லை THAMIZH NADU தமிஸ்ஷ் நடு அல்லது தமிஸ் நடு என்று தான் படிப்பார்கள். Naadu என்று போட்டால் ஒரு நாடு என்று படிக்கலாம்.

    முதலில் Z என்ற வார்த்தைக்கு ழ் என்பது சரியான உச்சரிப்பே இல்லை. யார் நமக்கு சொன்னது Z என்ற வார்த்தைக்கு ழ் அல்லது ழ என்பது சரியான உச்சரிப்பு என்று சொன்னது. ஒரு வேளை இது வெள்ளைக்காரன் வேலையாக இருக்கும். நான் சிறு வயதில் Palum Pazhamum என்பதை பாலும் பஸமும் என்று தான் முதலில் படித்தேன்! அப்புறம் பழமும் என்று சொல்லிகே கொடுத்தார்கள்!

    Zoo, Zip, Zinc, Zygote, Zebra, Whiz, Topaz, Fuzzy, Jazz, Quartz--இவைகளை எப்படி படிப்பது. வேண்டுமென்றால் நாம் விளம்பரப் படுத்தலாம்! Tamizh என்றால் தமிழ் என்று தான் படிக்கவேண்டும். அப்படி இருந்தாலும், ஹிந்திக்கரானுக்கும், அங்கிலம் படிப்பவர்கள் வாயில் 'ழ' வரப் போவதில்லை. அந்த வார்த்தை உச்சரிப்பே அவர்களுக்கு தெரியாது. 'ழ' வந்தாலும் 'ழ்' அவர்கள் வாயில் வராது. தமிழர்களைத் தவிர உலகத்தில் எல்லோரும் வாழும் செம்மொழி என்றால் சீனம் மற்றும் தமிஸஷ் என்று தான் சொல்வார்கள். இது ஓகேவா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நண்பரின் மீள் வருகைக்கு நன்றி. நமது தமிழ்மொழியில் என்ன உச்சரிக்கின்றோமோ (ஒலிவடிவம் – Phonetic ) அதனையே வரிவடிவத்திற்கும் (எழுத்துக்கள்) அடையாளப் படுத்தி இருக்கிறோம். (உதாரணத்திற்கு அம்மா – என்று எழுதியதை அப்படியே உச்சரிக்கிறோம். ஆங்கிலத்தில் BOOK என்பதனை நியாயமாக பீஓஓகே என்றுதான் உச்சரிக்க வேண்டும்.) நமது மொழியை உச்சரிக்க மற்ற மொழிக்காரர்கள் சிரமப் படுவார்கள் என்பதற்காக, நமது மொழியில் சில நடைமுறைகளை , சீர்திருத்தங்களை செய்யாமல் இருக்க முடியுமா? ( அபார்ட்மெண்ட்டில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிடிக்காது என்பதற்காக மீன் குழம்போ, மீன் வறுவலோ நம்ம வீட்டில் செய்யாமல் இருந்து விடுவோமா?) நமது மொழியை நமது தமிழர்கள் சரியாக உச்சரித்தாலே போதும். ( பெரும்பாலும் லகரம், ளகரம் ; நகரம், னகரம், ணகரம் – போன்றவற்றை உச்சரிப்பதில் வேறுபாடே இல்லை )

      Delete
  17. Ezekiel என்ற வார்த்தையை ஈஸீகியல் அல்லது ஈசிகியல் என்று இங்கு உச்சரிப்பார்கள்.

    Ezhil என்ற வார்த்தையை எசைல் இங்கு என்று உச்சரிப்பார்கள்! அவர்களுக்கு இந்த 'ழ' உச்சரிப்பு தெரியாது

    அப்புறம் முதலில் செத்து காரியம் செய்த சமஸ்கிரித மொழிக்காக தமிழை நாசம் செய்த கிரந்த எழுத்துக்களை தூக்கிக் கடாசுங்கள். அப்படியே சமஸ்கிரித மொழியில் 'ழ' மற்றும் ள' எழுத்தை கொண்டு வாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் விளக்கத்திற்கு நன்றி. தமிழின் பழைய வட்டெழுத்துமுறை, தமிழக அரசியல் மாற்றத்தால் கிரந்த எழுத்துகளுக்கு மாறியது. அப்புறம் காலம்தோறும் ( கல்வெட்டில் ,ஓலைச்சுவடியில், சீலைத் துணியில், என்று ) தமிழ் எழுத்துக்களில் மாற்றம் இருந்தது. வீரமாமுனிவர் எனப்பட்ட கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) அவர்கள் செய்த தமிழ் எழுத்து சீர்திருத்தம் என்பது தமிழின் மறுமலர்ச்சி காலம் எனலாம். அதன் தொடர்ச்சி இன்று நாம் எழுதும் தமிழ் எழுத்துக்கள் வசதியாகவே இருக்கின்றன. பழக்கமாகி விட்டன.

      Delete
  18. ​எழுத்துக்களின் ஒலி வடிவம் மாறாமல் வார்த்தைகளில் இருப்பது கீழை நாட்டு மொழிகளில் தான். அதாவது எழுதிய படியே உச்சரிப்புகள் வரும்.ஆனால் மேலை நாட்டு மொழிகளில் எழுதும் வார்த்தைகளில் உள்ள எழுத்துக்கள் பலநேரங்களில் பல ஒலி வடிவம் பெறும். முக்கியமாக ஆங்கிலத்தில் உள்ள a e i o u போன்ற ​உயிர் எழுத்துகள். ஆகவே நாம் ஆங்கிலத்தில் எப்படி எழுதினாலும் உச்சரிப்பு அவர்களுக்கு தோன்றும் விதத்திலேயே இருக்கும்.

    முதலில் தமிழர்களை தமிழ் பேச வையுங்கள்.
    ​ஜெயக்குமார் ​

    ReplyDelete
    Replies
    1. நண்பர் JK @ ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  19. ​ஆமாம். இந்தப் பதிவு "tamilmanam" என்ற பதிவுத் திரட்டியில் தான் வெளியாகிறது. "thamilmanam" த்தில் அல்ல என்றும் கவனிக்க வேண்டும்.

    ஜெயக்குமார்

    ReplyDelete
  20. [[நண்பரின் கருத்துரைக்கு நன்றி. மற்ற மொழிக்காரர்களுக்கு சங்கடம் என்பதால் நமது தாய்மொழியில் சில சீர்திருத்தங்களை செய்யாமல் இருக்க முடியாது. (மேலே திரு வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு நான் எழுதிய மறுமொழியையும் படித்துப் பார்க்கவும்)]]

    இளங்கோ!
    சரி! நம் ஆசைக்கு thamaizh Naadu என்று மாற்றிக்கொள்வோம்! அவசியம் நாம் தமிழ் எனபதை Thamizh என்று எழுதி அதை தமிழ் என்று தான் உச்சரிக்கவேண்டும் என்று எல்லா இந்தியர்களுக்கும் சொல்வோம். மலையாளிகள் தவிர (அவர்கள் மட்டும் தமிழ் என்று தான் சொல்வார்கள்) யாரும் தமிழ் என்று உச்சரிப்பது கடினம். மலயாளிகள் ழகரம் தமிழர்களை விட மேல். முக்கால்வாசி தமிழர்கள் தமில் அல்லது தமிள் என்று தான் சொல்கிறார்கள். இவர்களை முதலில் ""தமிழ் என்று தமிழில் எழுதி"" அதைப் ஒழுங்காக உச்சரிக்க வைக்கவேண்டும்!

    சென்னையில் பிராமண ஆசிரியர்கள் கிட்டே படித்த மாணவர்கள் மட்டும், லகரம், ளகரம், ழகரம் அட்சர சுத்தமாக பேசுவார்கள். என் அம்மாவும் சென்னையில் படித்தவர் தான்! அழகான உச்சரிப்பு! எங்கள் வீட்டில் எல்லோரும் நல்ல தமிழ் பேசுவோம்! இங்கு வளர்ந்த என் குழந்தைகள் லகரம், ளகரம், ழகரம் அட்சர சுத்தமாக பேசுகிறார்கள். பெற்றோர்கள் நல்ல தமிழ் பேசினால் குழந்தைகளும் பேசுவார்கள்!

    தமிழ்நாடு தாண்டினால் ஏன் இந்தியாவில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் கூட தோசா, வடா தான். ஹிந்திக்காரனுக்கு சை மற்றும் டை வாயில் வராதா? 'சை'த்தான் கி பச்சா ஜோரா சொல்றான்! அப்புறம் என்ன?

    இந்தியாவில் படித்தவர்கள் உள்பட, எல்லோரும், ஏன் இங்கும் நிறைய இந்தியர்கள் pizza எனபதை பிஸ்ஸா என்று தான் சொல்கிறார்கள். அதன் சரியான உச்சரிப்பு பீட்ஸா (long ஸா); நடுவில் ட் வருமாறு உச்சரிக்க வேண்டும். பிஸ்ஸா என்றால் வாட் என்ற கேள்வி தான்!

    நாமமும் ஆசைக்கு thamizh என்று வைத்துக்கொள்ளலாம்; அனால் எல்லோரும் தமிஸ்ஷ் என்று தான் சொல்லப் போகிறார்கள்
    ----------------
    ஒரு முறை இங்கு இந்திய ஹோட்டலுக்கு சென்ற போது, அந்த சர்வர் வடா, தோசா என்று சொன்னபோது...நான் சப்பாத்தா மற்றும் பூரா இருக்கா என்று கேட்டான். அதற்க்கு அவன் கியா பூரா? பூரா நஹி பூரி என்றான். சப்பாத்தா நஹி சப்பாத்தி என்றான்! நான் தோசா நஹி தோசை ஹை, வடா நஹி வடை ஹை என்றேன். மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆச்சு! எல்லாப் பயலும் தமிழை இங்கு கொலை செய்வார்கள். சுருங்க சொன்னால்...இந்தியாவில் ஏன் தமிழ்நாட்டில் கூட தமிழ் ஒரு வேசி மொழி தான் மற்ற வர்களுக்கு!!
    எவன் வேணா...?!



    ReplyDelete
    Replies
    1. நண்பரே, மற்றவர்களுக்கு என்றே சுட்டினாலும், தமிழ்மொழியை ஒரு கடுமையான சொல்லால் நீங்கள் விமர்சனம் செய்ததற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதனால், உங்களது தாய்மொழி தமிழ் இல்லையோ என்று நினைக்க வேண்டியுள்ளது.

      Delete
    2. மன்னிக்க அப்படி எழுதியதற்கு!
      வேசி மொழி என்று சொன்னதன் அர்த்தம் நீங்கள் out of context ல் எடுத்துகொண்டீர்கள். உதரணமாக சமஸ்கிரத மொழிக்காக நாம் செய்த மாற்றங்கள் சரியா? அவ்வாறு சமஸ்கிரத மொழியில் உலகத்தில் யாராலாவது மாற்றம் செய்ய முடியுமா? உதரணமாக சமஸ்கிரித மொழியில் 'ழகரம்' மற்றும் ளகரம்' தமிழுக்காக கொண்டு வரமுடியுமா? தமிழில் என்ன வேண்டுமானால் யார் வேண்டுமானால் அதை வேண்டுமானால் செயலாம்..அதான் அப்படி எழுதினேன்! சரி தமிழை அப்படி எழுதியது உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். எல்லா தமிழ் ஆர்வலர்களும் என்னை மன்னிக்க...அந்த வார்த்தையை முழுவதும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்!

      அதற்கு பதில் சமஸ்க்ரிதம் தன் தனித்தன்மையை இழக்காத ஒரு தொன்மையான கற்புள்ள மொழி என்று கூறுவதில் தவறு இல்லையே? ---Again, no comparison with any language including Tamil. It is a stand alone statement!

      Delete
  21. தமிழ் இளங்கோ said...[[[அதற்கு மாற்றாக அயல்மொழிச் சொற்களைப் பயன்படுத்துதலும் கூடாது. (உதாரணம் முடி (HAIR), புத்தகம் (BOOK), தண்ணீர் (WATER),அடுக்களை அல்லது சமையலறை (KITCHEN) போன்றவற்றைச் சொல்லலாம்)]]

    அப்ப இனி தமிழ் இளங்கோ வட சொல்லான "முடிக்கு" பதில் தூய தமிழான ""மயிர்"" என்று உப்யோகப்படுதவார் என்று எதிர்பார்க்கலாம்.

    நான் என் இடுகைகளில் என்றும் மயிர் என்ற வார்த்தையை மட்டும் தூய தமிழில் தான் எழுதியுள்ளேன். முடி என்று எழுதவே மாட்டேன்--இளங்கோவும் அப்படி செய்வார்! சரி தானே!

    மயிர் தூய தமிழ் இல்லை என்பவர்கள்....கீழே படிக்கவும்...
    _______________

    மனோன்மணீயத்தின் இரண்டாவது சிறப்பாக, அந்நாடகம் பழந்தமிழ் நூற்கருத்துகளையும் பழமொழிகளையும் மேற்கோளாகக் காட்டுவதைக் கூறலாம்.
    திருக்குறள்
    திருவள்ளுவர்

    திருக்குறள் கருத்துகள் இடம் அறிந்து பாத்திரப் படைப்பின் தன்மை அறிந்து இடம்பெறுகின்றன. ஏறக்குறைய இருபத்தைந்து இடங்களில் குறள் கருத்துகளைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை கையாண்டிருக்கிறார்.

    முதல் நாள் போரில் தோல்வி அடைந்த சீவகன், வெட்கித் தலைகுனிந்து இனி, என் உயிரை வீணே சுமந்து திரிய மாட்டேன் என்று கூறுகிறான்.

    ....................... ஓர் சிறு
    மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமான்
    பெருந்தகை பிரிந்தும் ஊன்சுமக்கும் பெற்றி
    மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா
    (அங்கம் 4 : களம் 3 : 49-53)
    (ஊன் - உடல்)

    என நாராயணனைப் பார்த்துச் சீவகன் கூறுகிறான். இக்கருத்து,

    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின் (குறள் : 969)

    சிலப்பதிகார காலத்தில் பல வகைகள் சார்ந்த தங்கம் இருந்துள்ளது. “சாதருபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் ” என்ற நான்குவகையின அவற்றில் குறிக்கத்தக்கனவாகும்.

    அதுபோல் துணியில் கலைநயம் மிக்க படைப்புகள் அக்காலத்தில் இருந்துள்ளன. “நூலினும், மயிரினும், நுழைநூல் பட்டினும் பால்வகை தெரியாது பன்னூறு அடுக்கத்து நறுமடி சிறந்த அறுவை வீதி” என்று துணிக்கடை வீதியின் சிறப்பு குறிக்கப்படுகிறது. நூல், மயிரிழை, பட்டு முதலானவற்றில் இழையடுக்கு தெரியாத வண்ணம் துணிகள் நெய்யப்பட்டு அக்காலத்தில் இருந்துள்ளன. இவை வகை தெரியாமல் பல நூறாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணி வீதியைக் கோவலன் கண்டான்.
    -----------------------
    நெல்லைத் தமிழன் சொன்னார்..
    {{{நல்ல வேண்டுகோள். ஆங்கில அடிமைத் தமிழர்கள் உணர்வுபூர்வமாகவும் செயல்பூர்வமாகவும் தமிழர்களாக இருக்கவேண்டும். தமிழில்தான் பேசுவது என்பது பெருமைக்குரிய விஷயமாக ஆக்கவேண்டிய கடமை உங்களைப்போல் உள்ளவர்களுக்கு உண்டு.

    கேரளாவிலும், கர்னாடகாவிலும் இதுபோல் ஆங்கிலப்படுத்திய பெயர்களெல்லாம் பூர்வீக நிலத்திற்குறிய பெயரால் அழைக்கப்படுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். நாமும் விரைந்து செயல்படவேண்டும்.]]]

    -----இனி அவரும் வாடா சொல்லான ""முடி"" என்ற வார்த்தை வரும் இடத்தில் தூய தமிழான "மயிர்"--ஆம்! "மயிர்" என்ற சொல்லை உபயோகப் படுத்துவார் என்பது உறுதி!

    வாழ்க தமிழ் --சங்கத் தமிழ்--தூய தமிழ்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்பதுபோல் நீங்கள் சொல்கிறீர்கள். ஒரு காலத்தில் மயிர் என்ற சொல் சாதாரணமாகக் கருதப்பட்டது ; இப்போது ’உதிர்ந்த மயிர்’ என்று கேவலமாகப் பேசப்படுகிறது. சேரி என்ற சொல் ( பார்ப்பனச் சேரி ), அன்று பொதுவாகக் குடியிருப்பைக் குறிக்கப் பயன்பட்டது. இன்று அந்த சொல் மாறுபட்ட கருத்தினைத் தருகிறது. சிலசமயம் உலகத்தோடு ஒட்ட ஒழுகலும், சிலசமயம் தனித்துவமாகவும் நமது செயல்பாடுகள் அமையத்தான் செய்கிறது.

      ’பழையன கழிதலும் புதியன புகுதலும்’ ( நன்னூல் ) என்பது காலம் மெல்ல மெல்ல செய்யும் ஒரு மாற்றம். இருந்தாலும், “என்றுமுள தென்றமிழ்” என்று தமிழ் இன்னும் உலக வழக்கில்தான் இருக்கிறது.

      Delete
    2. முடி என்ற சொல் கெட்ட சொல்லாக மாற்றக் [மாற] காரணம் பொது ஜனப்பத்திரிகைகள். அவைகள் தமிழர் மற்றும் தமிழ் விரோதிகள். எல்லா வடசொல்லும் நல்ல சொல். வாலிப வயோதிக அன்பர்கள் என்று தொடங்கி எழுதும் வட சொற்கள் கெட்ட வார்த்தையில்லை. துக்ளக் பின் அட்டையில் அதான் வரும் குழந்தைகள் கூட படிக்கலாம். சொப்பன ஸ்கலிதம் இப்படி பல; சிறு வயதில் அதை பெரியவர்களிடம் அர்த்தம் கேட்டு,[பெரியவர்களிடம்] திட்டு வாங்கியது இன்றும் நினைவில் உள்ளது! வாழ்க வளமுடன் வட மொழி திணிக்கப்பட தமிழ்!

      Delete
    3. மேலே உள்ள பின்னூட்டத்தில் முடி எனபதற்கு பதில் மயிர் என்று வந்திருக்கக் வேண்டும்!

      Delete
  22. A small Suggestion from SriLanka
    Still you have not implemented the TRANSFORM in your Profile .
    Sorry to type in English Cause I don't have THAMIL Key Board.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பானு நியாஸ் அவர்களின் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. ’ TRANSFORM in Profile ‘ என்றால் என்ன, அதனை எப்படி எனது வலைத்தளத்தில் கொண்டு வருவது என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாக தமிழில் டைப் செய்ய, கம்ப்யூட்டரில் NHM Writer – ஐயும், செல்போனுக்கு Sellinam – என்று பயன்படுத்துகிறேன். நீங்களும் உங்கள் பயன்பாட்டுக்கு இவற்றை பயன்படுத்தலாம்.

      Delete
    2. NO SIR . MY SUGGESTION IS FIRST YOU HAVE TO IMPLEMENT THE CHANGE WHAT YOU EXPECT .
      STILL YOUR PROFILE SHOWS "TAMIL NADU".

      WE HAVE TO TAKE THE FIRST STEP.
      THEN ONLY OTHERS WILL FOLLOW US.
      AS I LEARNED.

      Delete
    3. நண்பர் பானு நியாஸ் அவர்களின் மீள் வருகைக்கும், உங்களது ஆலோசனையை எனக்கு புரியும்படியாக விளக்கமாக சொன்னமைக்கும் ( எனது குறையை சுட்டிக் காட்டியமைக்கு ) நன்றி. உண்மையில் முதலில் ’ TRANSFORM in Profile ‘ என்பது ‘Google settings’ – இல் செய்ய வேண்டிய திருத்தம் என்றே நினைத்து விட்டேன்.

      நீங்கள் சொல்வது போல, உங்கள் ஆலோசனையின்படி, எல்லோருக்கும் முன்னுதாரணமாக, எனது தன்விவரத்தில் (Profile) Tiruchirapalli, Tamilnadu போன்றவற்றை Thiruchirapalli, Thamizh nadu என்று திருத்தம் செய்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நடைமுறையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலக பயன்பாட்டிலும், உலகளாவிய வகையில் கம்யூட்டர் மென்பொருட்களில் (Location) Default ஆகவும் Tiruchirapalli, Tamilnadu, India என்று இருப்பதாலும், மாற்றம் குறித்த அரசு உத்தரவு ஏதும் இல்லாத படியினாலும் நான் அப்படியே விட்டு விட்டேன். இந்த பதிவின் முடிவிலும் அரசு ஆணை ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்றே வேண்டுகோள் வைத்துள்ளேன். ( ஆனாலும் எனது பெயரை விவரம் தெரிந்த நாள் முதலாய் T.THAMIZH ELANGO என்றுதான் எழுதி வருகிறேன் ) நீங்கள் எப்படி நினைத்தாலும் சரி, எனது நடைமுறைச் சிக்கலுக்கு மன்னிக்கவும். நிச்சயம் இதுவும் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

      Delete
  23. அன்புடையீர், தங்கள் தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  24. அருமையான யோசனை. அரசு நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பத்திரிக்கையாளர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  25. TRANQUEBAR என்று ஆங்கிலேயர் உச்சரித்ததை தரங்கம்பாடி என்று தான் அழைக்கிறோம். WANDIWASH வந்தவாசி தான். BATLAGUNDU வத்தலகுண்டு தான். ஆங்கிலேயர் தம் வசதிக்காக மாற்றிய உச்சரிப்புக்கு ஏற்ற மாதிரி தமிழில் எழுத்து மாற்றம் நாம் செய்தோமில்லை.

    அதுபோலவே, THAMIZH என்று உச்சரிக்க முடியாத அவர்கள் TAMIL என்று மாற்றி உச்சரித்ததை நாம் அப்படியே TAMIL என்று எழுத வேண்டிய அவசியம் இல்லை.
    TAMIL என்று எழுதி எழுதிப் பழக்கப்பட்டு விட்டதால், இது பூதாகர விஷயமாய் தெரிகிறது. THAMIZH என்று நாம் எழுதத் தொடங்கினால் அதுவே நாளாவட்டத்தில் புழக்கத்தில் வந்து விடும்.

    ஒருகாலத்தில் தொப்பியையும் (hat) கறுப்புக் கண்ணாடியையும் படமாக வரைந்து
    சென்னை--17 என்று போட்டால், மிகச்சரியாக தமிழ்வாணனின் 'கல்கண்டு' பத்திரிகை அலுவலத்திற்கு அந்தக் கடிதம் வந்து சேர்ந்து விடும். அது மாதிரி தான்.

    ReplyDelete
  26. //மிகச் சரியாக தமிழ்வாணனின் 'கல்கண்டு' பத்திரிகை அலுவலகத்திற்கு//

    மிகச் சரியாக 'கல்கண்டு' தமிழ்வாணனுக்கு -- என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீ.வி. அவர்களின் கருத்துரைக்கும், தகவல்களுக்கும் நன்றி. மெட்ராஸை சென்னை என்று மாற்றியபோது கூட, CHENNAI என்பதனை பிறமொழிக்காரர்கள் ‘செந்நாய்’ என்று உச்சரிப்பார்கள் என்று பயமுறுத்தியவர்களும் உண்டு. இப்போது எல்லாம் சரியாகி விட்டது. ஆனால் இந்த தொலைக்காட்சி செய்தி வாசிக்கும் அம்மணிகள் மட்டும் இன்னும் ‘ச்சென்னை’ என்றுதான் உச்சரிக்கிறார்கள்.

      Delete
  27. பகிர்வும் பின்னூட்டங்களும் ஸ்வாரஸ்யம்.... சற்றே பின்தங்கி வருவதில் இப்படி ஒரு வசதி.....

    தில்லியில் Ezhil, Kozhikode, Ezhilmalai, Pazhavanthangal, என ”ழ”வுக்கு பதில் zh என எழுதி இருக்கும் அத்தனை சொற்களும் “ஜ’ என்றே உச்சரிக்கப்படுகிறது - எஜில், கோஜிகோடே, எஜில்மலை, பஜவந்தாங்கல்.... இப்படி நிறைய உதாரணம் சொல்லலாம்.... நான் ஒவ்வொரு முறையும் Thamizh என எழுதும்போதும் தமிஜ் என்று படிக்கும் சிலர் உண்டு!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. சில பிரெஞ்சு மற்றும் சோவியத் யூனியன் ( இப்போது உடைந்து விட்டது ) எழுத்தாளர்கள் பெயர்களை தமிழில் எழுதும்போதும் நீங்கள் சொன்ன அதே குழப்பம்தான் வருகிறது.

      Delete

  28. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  29. நல்ல பதிவு. நாங்கள் தமிழ் என்றுதான் ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு. அதுபோல ஊரின் பெயர்களையும் உதாரணத்திற்கு கோழிக்கோடு....தஞ்சாவூர் திருநெல்வேலி என்று..ஆனால்..ஹிந்திக்காரர்கள் zh போட்டு எழுதினால் ஜ உச்சரிப்புதான்.....அரசு ஆவன செய்தால் நல்லது. கேரளத்தில் ஊரின் பெயர்களை மலையாள உச்சரிப்பில்தான் எழுதுவதுண்டு...

    ReplyDelete