Monday, 29 August 2016

புதுக்கோட்டை முப்பதாவது வீதியில் நான்



ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள், ’ புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள்’ (ஆசிரியர்: நா.அருள்முருகன்) என்ற நூலின் பிரதிகள் வந்து விட்டதாகவும் தேவையுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி இருந்தார். நானும் புதுக்கோட்டை செல்ல, யோசித்துக் கொண்டிருந்த வேளையில் வீதி இலக்கியச் சந்திப்பிற்கான அறிவிப்பு வந்தது நல்லதாகப் போயிற்று. எனவே இந்த கூட்டத்தின் போது ‘பாறை ஓவியங்களைப் பெற்றுக் கொள்வதாக அவருக்கு செய்தி அனுப்பினேன். எனவே எப்போதும் போல இலக்கிய ஆர்வம் காரணமாக நேற்று (28.08..16 –ஞாயிறு) முற்பகல் புதுக்கோட்டையில் நடந்த ’வீதி கலை இலக்கியக் களம் – 30 ஆவது இலக்கியச் சந்திப்பு சென்று வந்தேன்.

கூட்டம் தொடங்கும் முன்:

கூட்டம் நடக்கும் ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜிற்கு காலை 9.30 அளவில் சென்றேன்.. இந்த மாத கூட்ட அமைப்பாளர்கள் ஓவிய ஆசிரியர் திரு பவல்ராஜ், ஆசிரியை செல்வி. த.ரேவதி இருவரும் அன்புடன் வரவேற்றனர். சற்று நேரத்தில், கூட்டத்தின் சிறப்பு விருந்தினரான, தஞ்சை எழுத்தாளர் நா.விச்வநாதன் அவர்கள் வந்து இருந்தார். எங்கள் இருவருக்குமே ஒருவரைப் பற்றி ஒருவருக்கு தெரியாது. எனவே நானே அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். மற்றவர்கள் வரும் வரை அவரிடம் பேசிக் கொண்டு இருந்ததில், அவர் செய்துள்ள தமிழ் இலக்கியப் பணிகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

நிகழ்ச்சிகள்:

(படம் மேலே) த.ரேவதி, மூட்டாம்பட்டி ராஜூ, நா.விச்வநாதன் மற்றும் பவல்ராஜ்

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை செல்வி த.ரேவதி அவர்கள் வரவேற்றுப் பேசினார். கவிஞர் மூட்டாம்பட்டி ராஜூ அவர்கள் தலைமை தாங்கி அருமையான உரை நிகழ்த்தினார்: இடையிடையே இலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளுக்கு விமர்சனமும் தந்தார். கூட்டத்திற்கு வந்திருந்த அன்பர்களும் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் முன்னிலை வகித்தார். (வந்தவுடன் நான் முன்பதிவு செய்து வைத்து இருந்த பாறை ஓவியங்கள்’ நூலின் இரண்டு பிரதிகளை என்னிடம் தந்தார். அவருக்கு நன்றி) 

கவிஞர்கள் மா.ஸ்ரீ.மலையப்பன், மீரா.செல்வகுமார், இ.மீனாட்சி சுந்தரம், ஆகியோர் கவிதை வாசித்தனர். ஆசிரியர் கு.ம.திருப்பதி கட்டுரை ஒன்றை வாசித்தார்.

(படம் மேலே) தமிழாசிரியர் குருநாத சுந்தரம் அவர்கள் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நூலினைப் பற்றிய தனது பார்வையைச் சொன்னார்.

(படம் – மேலேஆசிரியர் மகாசுந்தர் அவர்கள் ’வழக்குரை காதை – மீள்பார்வை’ என்ற தலைப்பில் உடல்மொழிகளோடு ஒரு பிரசங்கம் தந்தார். (படம் -நன்றி ஆசிரியை கீதா)

(படங்கள் - மேலே கடைசியில் உள்ள இரண்டு படங்களும் – வீதி வாட்ஸ்அப் குழுவில் மாலதி அவர்கள் பகிர்ந்தது – நன்றி) கவிஞர் ஆசிரியை தா.மாலதி அவர்கள் ‘’கருகித் தளிர்த்த துளிர்’ என்ற தலைப்பில் தான் எழுதிய சிறுகதை ஒன்றைச் சொன்னார்.

(படம் மேலே) வீதிக்குப் புதுமுகமாக வந்த கவிஞர் இந்துமதி பாரதியாரின் ‘காக்கைச் சிறகினிலே’ பாடலை வாசித்தார்.

(படங்கள் -மேலே) கூட்டத்தில்

(படம் மேலே) பெரியவர் தோழர் செம்பை மணவாளன் அவர்கள் தன்னுடைய  அனுபவங்களைச் சொன்னதோடு, எல்லோரும் தமிழில் கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சிறப்பு விருந்தினர்:

நேற்றைய இலக்கிய சந்திப்பில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தஞ்சை திரு நா.விச்வநாதன் அவர்கள், இந்திய அஞ்சல் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். கவிஞர் மற்றும் எழுத்தாளர். தஞ்சையின் ஐநூறு ஆண்டு கால வரலாற்றை மையமாக வைத்து `லட்சுமிராஜபுரம்’ என்ற நாவலொன்றை எழுதி வருகிறார். தனது சிறப்புரையில், வீதி – இலக்கியக் களத்தினைப் பாராட்டிய அவர் ” சிறப்பு விருந்தினர்களை காக்க வைக்காமல், முன்னதாகவே பேச அழைக்க வேண்டும் ” என்று ஒரு கருத்தைச் சொன்னார். யோசிக்க வேண்டிய ஒன்று.

( கீழே உள்ள படம் -நன்றி ஆசிரியை கீதா)


இந்த மாத கூட்டத்தின் அமைப்பாளர்களுள் ஒருவராகிய ஆசிரியர் திரு பவல்ராஜ் அவர்கள் நன்றி கூறினார்.

22 comments:

  1. மிக அருமையான தொகுப்பு..நீங்கள் ஒருமுறை அமைப்பாளராய் இருந்து நடத்தவேண்டும் அய்யா...

    உங்கள் படைப்புகளும் வீதிக்கு வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் மீரா செல்வக்குமார் அவர்களின் கருத்துரைக்கும் ஆலோசனைக்கும் நன்றி.

      Delete
  2. நிகழ்வில் கலந்து கொண்டதுபோல்
    எண்ணம் வரும்படியாக படங்களுடன்
    பகிர்ந்த விதம் அருமை
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரமணி அய்யாவின் எப்போதும் போலான, ஊக்கம் ஊட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி.

      Delete
  3. முப்பதாம்வீதியில் நீங்கள் கலந்து கொண்டதற்கு என் வாழத்துகள் !
    கையெழுத்தை மட்டுமல்ல ,பெயரின் முன்னேழுத்தையும் தமிழில் எழுதிவருபவர்களில் நானும் ஒருவன் :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அவர்களின் தமிழ் உணர்வினுக்கு தலை வணங்குகிறேன். வேலையில் சேரும் வரை தமிழில்தான் எனது கையெழுத்து; அப்புறம் வங்கிப் பணிக்குச் சென்ற பிறகு சில சூழல் காரணமாக ஆங்கிலத்திலேயே அன்றுமுதல் கையெழுத்து இட்டு வருகிறேன்.

      Delete
  4. விழா நிகர்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. அமைப்பாளர்களின் பணி போற்றத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

      Delete
  5. இந்தக் கூட்டம் நடக்கும் சமயத்தில் நானும் தமிழகத்தில் இருந்ததால் கலந்து கொள்ளும் விருப்பம் இருந்தது. சூழல்கள் காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை. உங்கள் பதிவு மூலம் நானும் கலந்து கொண்ட உணர்வு.

    நன்றி தமிழ் இளங்கோ ஐயா. வீதி நண்பர்களுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  6. Mikka Nandri sir....ungal varukaiyal Veethi perumai adainthathu

    ReplyDelete
  7. ஐயா ,உங்களின் வருகை எங்களுக்குப் புத்துணர்ச்சி தருகிறது.வருகைக்கும், தங்களின் தெளிவான பதிவிற்கும் நன்றி..!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியரின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. வந்தது மட்டுமின்றி, பதிவும் தந்தது மகிழ்ச்சி தந்தது அய்யா. அருமையான நிகழ்ச்சிப் பதிவு, அதுவும் உங்களுக்கே உரிய படங்களுடன். நிற்க.
    பதிவின் கடைசிப்படம், சிறப்புவிருந்தினருக்கு நினைவுப் பரிசு இந்தப்பக்கம் எனில் அந்தப்பக்கம், சகோதரியும் ஆசிரியருமான மாலதி அவர்கள் இங்குள்ள ஓர் இலக்கிய அமைப்பினால் “நல்ல ஆசிரியர்” விருதுக்குத் தேர்வு பெற்றதைப் பாராட்டி, வீதி அமைப்பின் சார்பாக சகோதரி மு.கீதா, மாலதிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார். அடுத்த வீதி கூட்டத்தில் தாங்கள் ஒரு படைப்பை -கட்டுரை அல்லது நூல் அறிமுகம்- வழங்கிட வேண்டுகிறேன். தங்களுக்கு மீண்டும் நன்றியும் வணக்கமும்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அய்யா அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இந்த வீதிக் கூட்டத்திலேயே நான் ஒரு நூல் விமர்சனம் செய்வதாக இருந்தது. பேசுவதற்கு குறிப்புகளுடனேயே வந்து இருந்தேன். ஏனோ எனது பெயர் விடுபட்டு விட்டது.

      Delete
  9. தங்களின் பதிவு விழாவில் கலந்து கொண்ட திருப்தியை தந்தது. நண்பரே!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  10. விழா நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி விரிவான புகைப்படங்கள் தகவல்களுடன். அருமை ஐயா.

    ReplyDelete
  11. ஆவலைத் தூண்டிய தலைப்பு. 'இலட்சுமிராஜபுரம்' வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நாவல் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள், விச்வநாதன், அய்யா!

    ReplyDelete
  12. விழாவில் நேரில் கலந்து கொண்ட உணர்வு ஏற்பட்டது ஐயா
    படங்களும் தகவல்களும் அருமை
    நன்றி

    ReplyDelete