Monday, 1 August 2016

புதுக்கோட்டை - வீதி.29 இல் கவிஞர்கள் வலைப்பதிவர்கள்



இப்போதெல்லாம் பெரும்பாலான கவிஞர்கள் வலைப்பதிவர்களாக இருக்கிறார்கள். ஆனால் வலைப்பதிவர்கள் எல்லோரும் கவிஞர்கள் அல்லர். அதேபோல கவிஞர்களாக மட்டுமே இருப்பவர்களும்  உண்டு. அந்த வகையில் கவிஞர்கள் வலைப்பதிவர்கள் என இரு சாராரையும் உறுப்பினர்களாகக் கொண்டு இலங்குவது வீதி இலக்கியக் களம், புதுக்கோட்டை ஆகும். 

நேற்று (31.07.2016 –ஞாயிறு) இவ் வீதியின் 29 ஆவது சந்திப்பு, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய மாடியில் அமைந்து இருக்கும், ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜில் காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. வழக்கம் போல மறக்காமல் எனக்கும் அழைப்பிதழை மின்னஞ்சல் வழியே அனுப்பி இருந்தார்கள். நேற்று காலை 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருந்த வசந்த பவனில் காலை உணவை முடித்துக் கொண்டு பஸ்சில் புதுக்கோட்டை பயணமானேன். புதுக்கோட்டை வந்ததும், பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த ’வீதி’யின் ப்ளக்ஸ் பேனரை படம் பிடித்துக் கொண்டு நிகழ்ச்சிகள் நடக்கும் கல்லூரிக்கு சென்றேன். 

(படம் மேலே) புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த ப்ளக்ஸ் பேனர்.



(படங்கள் மேலே) ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜ் இருக்கும் மாடி

(படம் மேலே) விழா நடந்த அறை வாசலில் புதுக்கோட்டை கம்பன் விழாவிற்கு வந்து இருந்த, விருத்தாசலம் ஓவியர் மோகன் அவர்கள் சிடி கடை வைத்து இருந்தார்.

நிகழ்ச்சிகள்:

முனைவர் நா.அருள்முருகன் அவர்களின், புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள் என்ற புத்தக அறிமுகம், சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் நாறும்பூ நாதன் அவர்களின் சிறப்புரை மற்றும் மறைந்த கவிஞர் வைகறை குடும்பநிதி வழங்குதல் என்று மூன்று நிகழ்ச்சிகள் ஒருசேர நடைபெற்றன. ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் தலைமை தாங்கினார். நூல் அறிமுகத்தை, கவிஞர்கள்  கு.ம.திருப்பதி, ராசி பன்னீர் செல்வன் மற்றும் தங்கம் மூர்த்தி ஆகியோர் சிறப்புற செய்தனர். பின்னர் எழுத்தாளர் நாறும்பூ நாதன் அவர்கள் சிறப்புரை செய்ய, முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் ஏற்புரை செய்தார்.

கூட்டத்தின் முடிவில் சகோதரி ஆசிரியை மு.கீதா அவர்கள் , பணம் கொடுத்தவர்கள் பட்டியலை வாசித்திட, மறைந்த கவிஞர் வைகறை மனைவி ரோசலின் மற்றும் அவர்களது மகன் ஜெய்க்குட்டி ஆகியோரிடம் குடும்பநிதி வழங்கப்பட்டது. ( LIC Endowment Policy For Rs 2,03,000/= (Rupees two lakhs and three thosand only)  மற்றும் ரொக்கப் பணமாக ரூ 40,500/=)
இன்று (01.08.16) மீண்டும் ரூ 10,000/= வழங்கப்படுகிறது.)

கூட்ட அமைப்பாளர்கள் கவிஞர்கள் நீலா மற்றும் பா.ஸ்ரீ மலையப்பன் ஆகிய இருவரும் கூட்ட ஏற்பாடுகளை சிறப்புற செய்து இருந்தனர்
 
(படம் மேலே) நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் சகோதரி கவிஞர் த.ரேவதி அவர்கள் வீணை வாசித்தார்.

(படம் மேலே) மேடையில் (இடமிருந்து வலம்) ராசி. பன்னீர் செல்வன், நா.முத்துநிலவன், நா.அருள்முருகன் மற்றும் கு.மா.திருப்பதி


(படங்கள் மேலே) வந்திருந்தவர்கள்

(படம் மேலே) ஆசிரியை மு.கீதா அவர்கள் மறைந்த கவிஞர் வைகறை குடும்பநிதி கொடுத்தோர் பட்டியலை வாசிக்கிறார்.



(படங்கள் -  மேலே) மறைந்த கவிஞர் வைகறை குடும்பநிதி அவரது மனைவி மற்றும் மகனிடம் வழங்கப்படுகிறது.

(படம் மேலே) முனைவர் நா.அருள்முருகன் சிறப்புரை

(படம் மேலே) மறைந்த  கவிஞர்  வைகறையின் மனைவி சகோதரி ரோசலின் அவர்களின் கண்ணீர் உரை 

(படம் மேலே) கவிஞர் பா.ஸ்ரீ மலையப்பன் நன்றியுரை

கீழே உள்ள படங்கள் கவிஞர் பா.ஸ்ரீ மலையப்பன் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொண்டவை. 

(படம் – மேலே) ஆசிரியர் நா.முத்துநிலவன் உரை 

(படம் மேலே) கவிஞர் கு.மா. திருப்பதி உரை
             
எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்துபவர் ஆசிரியர் மகாசுந்தர்
                                      

41 comments:

  1. ஆஹா, வழக்கம்போல, தங்கள் பாணியில் மிகவும் அருமையான படங்களுடன் அழகான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

      Delete
  2. ’வீதி’யில் இலக்கியத்துடன் கூடவே மனிதாபிமானமும் சேர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. விழாவிற்கு வந்ததுபோல் உணர்ந்தேன்

    ReplyDelete
  4. மிக்க நன்றி சார்....வீதிக்கு நீங்கள் வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி...அழகாக எழுதிவிட்டீர்கள்....

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

      Delete
  5. உங்களின் அனுமதியோடு சில படங்களை சுட்டுக்கொள்கின்றேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மேடம். உங்கள் பதிவின் ஒரு மூலையில் படம் எடுத்த எனது பெயரினையும் சேர்த்தால், இன்னும் மகிழ்ச்சி

      Delete
  6. வர விருப்பம் இருந்தும் வர இயலாத சூழல். உங்கள் மூலம் நானும் கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வு.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட, வீதி இலைக்கியக் கள கூட்டத்தில்தான், கவிஞர் வைகறை அவர்களைக் கடைசியாக நான் சந்தித்தது. அப்போது நீங்கள் எடுத்த புகைப்படங்கள் , குறிப்பாக அவரது மகன் ஜெய்க்குட்டி மற்றும் நிகழ்ச்சிகள் யாவும் நிழலாடின.

      Delete
  7. வீதிக்குப் போகமுடியாத வருத்தம் கொஞ்சம் குறைந்துள்ளது அய்யா நன்றி

    ReplyDelete
  8. வீதிக்குப் போகமுடியாத வருத்தம் கொஞ்சம் குறைந்துள்ளது அய்யா நன்றி

    ReplyDelete
  9. நிகழ்வுகளை சிற்ந்த முறையில் போட்டோவாக எடுத்து போடும் உங்கள் பாங்கு மிகவும் பாராட்டதக்கதாக இருக்கிறது பெரிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது எந்த விழாவாக இருந்தாலும் சரி அது பற்றி படிக்கும் போது அல்லது நாளிதழ்களில் அதற்கான செய்திகளை போடும் போது நிகழ்விற்கு தகுந்த புகைப்படங்கள் வருவதில்லை ஆனால் நீங்கள் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்வுகளிலும் உங்கள் முத்திரையாக அழகான தெளிவான போட்டோக்கள் வருகின்றன. பாராட்டுக்கள்.


    நீங்கள் ஏன் பிரபல பத்திரிக்கைகளில் போட்டோகிராபர்களா பணி புரியக்கூடாது, முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்கள் திறமை உலகெங்கும் வெளிப்படும்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மதுரை தமிழன் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும், பாராட்டினுக்கும் நன்றி. நான் எனது போட்டோகிராபி ஆர்வப் பகிர்வுகளை வலைப்பதிவோடு மட்டுமே வைத்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களது அன்பான ஆலோசனைக்கு நன்றி.

      Delete
  10. கபாலி என்ற குப்பையை குப்பை என்று சொன்ன உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நான் கபாலியை குப்பை என்று பட விமர்சனம் ஏதும் செய்யவில்லை. வேறு ஒருவர் பதிவிற்கு எழுத வேண்டிய கருத்துரையை இங்கு தவறாக எழுதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

      Delete
  11. தகவல்களோடு தாங்கள் வழக்கம் போல் தரும் புகைப்படங்கள் பதிவில் சொல்லாதவைகளை சொல்லிவிடுகின்றன! புதுக்கோட்டையில் ‘வீதி’ யின் 29 ஆவது சந்திப்பில் கலந்துகொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய அய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. மனம் லயித்த ஒரு பணியில் ஒரு நாள் செலவழித்து இருக்கிறீர்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எனக்கு போட்டோகிராபி என்பது மனம் லயிக்க வைக்கும் கலைதான் .

      Delete
  13. விழாவில் கலந்து கொள்ளாத குறையை போக்கியது தங்களின் பதிவு. படங்கள் அனைத்தும் அருமை.
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  14. அருமையான புகைப்படங்களுடன் நிகழ்வுகளை தொகுத்து தந்தமைக்கு நன்றி! நேரில் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  15. அய்யா வணக்கம். நிகழ்வுக்கு வந்ததோடு, நிகழ்ச்சித் தொகுப்பையும் அழகான படங்களுடன் பதிவெழுதியமைக்கு நன்றிகலந்த வணக்கம்.
    (ஜெய்க்குட்டியைத் தனியாக எடுத்த படத்தைச் சேர்க்க வேண்டுகிறேன்)

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தங்கள் பாராட்டினுக்கு நன்றி. கவிஞர் வைகறையின் மகன் ஜெய்க்குட்டியைத் தனியாக படம் எதுவும் நான் எடுத்ததில்லை. நண்பர், வலைப்பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்கள் எடுத்து இருக்கிறார். அந்த படத்தினை

      ஜெய்க்குட்டிக்காக...... http://venkatnagaraj.blogspot.com/2016/07/blog-post_19.html

      புதுக்கோட்டையில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு..... http://venkatnagaraj.blogspot.com/2016/01/blog-post_26.html

      என்ற இரு பதிவுகளிலும் வெளியிட்டு இருக்கிறார்.

      Delete
  16. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதவர்களின் மனக்குறையைப் போக்கிவிட்டீர்கள். உங்களது எழுத்தும் புகைப்படங்களும் வழக்கம்போல மிகவும் சிறப்பாக அமைந்துவிட்டன. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி.அண்மையில் தஞ்சையில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. தஞ்சையைச் சேர்ந்த வலைப்பதிவர்கள் யாரும் இதுபற்றி ஏன் எழுதவில்லை என்று தெரிய்வில்லை.என்னாலும் வர இயலாமல் போய்விட்டது.

      Delete
  17. அருமையான நிகழ்ச்சித் தொகுப்பு
    தொகுத்து வழங்கிய தங்களுக்குப் பாராட்டுகள்
    தொடருங்கள்
    தொடருகிறோம்

    ReplyDelete
  18. படங்களும் செய்திகளுக்கும் மிக்க நன்றி அருமை!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  19. படங்களுடன் விரிவான விடயங்கள் நன்று நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லஜி அவர்களுக்கு நன்றி.

      Delete
  20. அழகாகச் தொகுத்திருக்கிறீர்கள் !

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வானவில் மனிதன் - மோகன்ஜி அவர்களுக்கு நன்றி.

      Delete