தொடர் பதிவு என்றாலே பாதிபேர் தூர ஓடி விடுகிறார்கள். இந்த வருடம்
ஆரம்பத்திலேயே இதனைத் தொடங்கி வைத்து இருப்பவர், (மகிழ்நிறை http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html
) சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்கள். அவர் தொடர்ந்து
வைக்க, தொடர்ந்த நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள்
பதிவு (http://killergee.blogspot.in/2016/01/in.html
) ஒன்றினுக்கு, நான் கருத்துரை எழுதினேன். அதற்கு மறுமொழி தந்த கில்லர்ஜி அவர்கள்
” தங்களின் பயண அனுபவங்களை படிக்க ஆவலுடன் நானும் “ – என்று சொன்னார். நானும்
விட்டேனோ பார் என்று பற்றிக் கொண்டு விட்டேன். இருவருக்கும் நன்றி.
பயணங்கள் முடிவதில்லை
(1982)
பொதுவாகவே பயணம் என்றாலே எல்லோருக்கும் மகிழ்வான ஒன்றுதான். தொடர்பதிவின் தலைப்பை பார்த்தவுடனேயே, எனக்கு
நினைவுக்கு வந்தது, அந்நாளில் (1982) திரைக்கு வந்த நடிகர் மோகன் நடித்த ’பயணங்கள் முடிவதில்லை’ என்ற திரைப்படம்தான். அந்தக்கால
‘பெல்ஸ் பாட்டம்” பேண்ட், கறுப்பு பெல்ட் என்று இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு துள்ளித்
துள்ளி பாடுவது இவர் ஸ்டைல். இவரை ’மைக் நடிகர்’ என்பார்கள். காரணம், இவர் நடித்த எல்லாப் படங்களிலும், ஒரு மைக்கைப் பிடித்தபடி பாடும்
பாடல் காட்சி இருக்கும். இந்த படத்தின் கதாநாயகி பூர்ணிமா ஜெயராம். இந்த படத்திலும்
மைக் பாடல் காட்சிகள் உண்டு. நமது வலைச்சித்தர், திண்டுக்கல்
தனபாலன் சார் அசப்பில் இந்த நடிகர் மோகன் போலத்தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
கேள்விகள் பத்து:
தொடர்பதிவு என்றாலே சிலசமயம் கேள்விகள் வைத்து விடுகிறார்கள்.
(நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி துவங்கி வைத்தது என்று நினைக்கிறேன்) பத்து கேள்விகளையும்,
சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் மற்றும் கில்லர்ஜி
இருவரும் மாறி மாறி கேட்பது போல் ஒரு கற்பனை. என்னால் இயன்ற பதில்கள் இங்கே.
1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி
தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
எனது அப்பா ஒரு ரெயில்வே ஊழியராக இருந்தவர். எனவே நான் ஆரம்பப்பள்ளி
மாணவனாக இருந்தபோது, ரெயில்வே பாஸில், முதன்முறையாக எங்களது உறவினர் ஊருக்கு, (திருச்சி
– பூதலூர் (தஞ்சாவூர் மார்க்கம்) சென்றதும், புகைவண்டியின் கரித்துகள் கண்ணில் விழுந்து
கசக்கிக் கொண்டதும் நினைவுக்கு வருகிறது. அப்புறம் தஞ்சாவூர், நாகூர், வேளாங்கண்ணி,
மெட்ராஸ், மண்டபம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி என்று ரெயில் பயணங்கள்.
2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
மறக்கமுடியாத பயணம் என்பதைவிட, மறக்க இயலாத பயணங்கள் என்பதே எனக்கு
பொருந்தும். P.U.C, B.A, M.A – என்று ஆறு வருடங்கள் கல்லூரிக்கு சென்றது ரெயிலில்தான்.
அதேபோல வங்கி வேலைக்கு மணப்பாறை சென்றதும், காலையில் பஸ், மாலையில் ரெயில் என்று தினசரிப்
பயணம்தான். மாலையில் ரெயிலில் திரும்பும்போது, மற்ற அரசு ஊழியர்களோடு ஒரே கம்பார்ட்மெண்டில்
பயணம். அப்போது திருச்சி வரும் வரை கோரஸாக பாடி வருவோம். அடிக்கடி பாடிய பாடல்கள் வரிசையில்
– சுராங்கனி (சிலோன் பாப் இசை), அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் (ஆயிரத்தில் ஒருவன்),
நானொரு குழந்தை நீயொரு குழந்தை (படகோட்டி) என்பவை.
வேலைக்கு சேர்ந்த புதிதில் டிரெயினிங் போனபோது பெங்களூர் – பெல்காம்
– கோவா பயணம். சென்னைக்கும் அடிக்கடி பயணங்கள்.. இப்போது ரெயில் பயணங்களை விட பஸ் மற்றும்
வேன் பயணங்கள்தான் அதிகம்.
முன்பெல்லாம் பணியில் இருக்கும்போது அடிக்கடி மேப்பை வைத்துக் கொண்டு,
திருச்சியிலிருந்து எந்தெந்த மார்க்கத்தில், எந்தெந்த ஊர் வரை சென்று இருக்கிறோம்,
பார்த்து இருக்கிறோம் என்று பார்ப்பது வழக்கம்.
3.எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
எப்போதுமே எனக்கு ஒற்றை ஆள் (Single) பயணம்தான் அமைந்து விடுகிறது.
(எல்லோரையும் போலவே ஜன்னல் ஓர இருக்கைதான் விருப்பம்; பஸ், ரெயில் எந்த பயணம் ஆனாலும்
திறந்தவெளியில் செல்லும்போது சுத்தமான காற்றை நன்கு இழுத்து அடிக்கடி ஆழ்ந்த சுவாசம்
செய்து கொள்வேன். மேலும் காமிரா வாங்கியதிலிருந்து இப்போது எங்கு பயணம் சென்றாலும்
கைப்பையில் காமிராவும் கூடவே வரும்)
4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை
பயணத்தில்
பலதரப்பட்ட மனிதர்களை கவனிப்பது, ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பது மட்டுமே
பிடிக்கும். (பஸ்ஸில் ஒலிபரப்பாகும் பாடல்களை தடை செய்ய வேண்டும்;
அவசரத்திற்கு வரும் செல்போன் அழைப்புகளுக்கும், மற்றவர்களிடம் பேசுவதற்கும்
முடிவதில்லை)
5.விருப்பமான பயண நேரம்
பகல் வேளைதான்.
6.விருப்பமான பயணத்துணை.
மூன்றாவது
கேள்விக்கான பதில்தான்.
7.பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
புத்தகத்தை எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். ஆனால்
அதே பயண அனுபவம், ரசிப்பு மீண்டும் வராது. (மேலும் பயணத்தின் போது படித்தல், கண்ணுக்கு
கெடுதல்) எனவே, மேலே சொன்னது போல, பயணத்தில்
பலதரப்பட்ட மனிதர்களை கவனிப்பது, ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பது மட்டுமே
பிடிக்கும்.
8.விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எங்களிடம் கார் கிடையாது; வாங்க
வசதி இருந்தாலும் வாங்க விருப்பம் இல்லை. இருக்கவே இருக்கிறது ‘கால் டாக்சி”. மற்றபடி
பணியில் இருந்தபோதும், இப்போதும் TVS 50 XL Super.
9.பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை.
10.கனவுப் பயணம் ஏதாவது ?
வாழ்க்கையே ஒரு பயணம் தான்; திக்கு தெரியாத இந்த பயணம். விதம் விதமான
மனிதர்கள், எதிர்பாராத இன்பங்கள், துன்பங்கள் என்று சந்திப்புகளோடு, போய்க் கொண்டு
இருக்கிறது.
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
- கவிஞர் கண்ணதாசன் (படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்)
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
- கவிஞர் கண்ணதாசன் (படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்)
அன்புடன் அழைக்கின்றேன்:
இப்போதெல்லாம் வலைப்பதிவில் எழுதுவதற்கு இளைஞர்கள் அதிகம் ஆர்வம்
காட்டுகிறார்கள். மகிழ்ச்சியான விஷயம். எனவே தொடர்பதிவு எழுத அழைக்கும்போது அவர்கள்
தங்களுக்குள் அழைத்துக் கொள்கிறார்கள். எனவே ’பயணங்கள் முடிவதில்லை’ - என்ற இந்த தொடருக்கு,
மற்றவர்களால் அழைக்கப்படாத மூத்த வலைப் பதிவர்களை அன்புடன் அழைக்கின்றேன்.
சுப்புத் தாத்தா http://subbuthatha72.blogspot.in
G.M.பாலசுப்ரமணியம் http://gmbat1649.blogspot.in
ரஞ்சனி நாராயணன் https://ranjaninarayanan.wordpress.com
வை.கோபாலகிருஷ்ணன் http://gopu1949.blogspot.in
துளசி கோபால் http://thulasidhalam.blogspot.in
சென்னை பித்தன் http://chennaipithan.blogspot.com
வே.நடனசபாபதி http://puthur-vns.blogspot.com
கோவை கவி https://kovaikkavi.wordpress.com
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)
பயணம் பற்றிய தங்களின் தொடர் பதிவுப்பயணம், தங்கள் பாணியில் ஜோராக உள்ளது.
ReplyDelete>>>>>
மரியாதைக்குரிய V.G.K அவர்களுக்கு வணக்கம். காலையிலேயே உங்களுடைய முதல் கருத்துரையைப் பார்த்து விட்டேன். தங்களது அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Deleteபடத்தேர்வுகள் அசத்தல் ... அதுவும்
ReplyDeleteஅந்தக்கடைசி படம் குலுக்கல். :)
>>>>>
அன்புள்ள V.G.K அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
Deleteவழக்கம்போல் சினிமா பற்றிய செய்தியினையும், சினிமா பாடலையும் பதிவினில் கொண்டுவந்து இணைத்துள்ளது அமர்க்களமாக உள்ளது.
ReplyDelete>>>>>
வலைப்பதிவுகளில் சுவாரஸ்யத்திற்காக சிலசமயம் அப்படி செய்ய வேண்டியுள்ளது அய்யா!
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete//’பயணங்கள் முடிவதில்லை’ - என்ற இந்த தொடருக்கு, மற்றவர்களால் அழைக்கப்படாத மூத்த வலைப் பதிவர்களை அன்புடன் அழைக்கின்றேன்.//
ReplyDeleteஎல்லோருமே சீனியர் சிடிசன்ஸ் என்பதால் அன்புடன் அழைக்கும் உங்களுக்கும், அவர்களுக்கான பயணச்செலவு கம்மியாகும். :) நல்ல ஐடியா.
மூத்த வலைப்பதிவர்கள் பட்டியல் இன்னும் பெரியது.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅந்த ரயில் என்னை மோதுவது போல் வருவது சூப்பர். அனைத்து அனுபவங்களும் அருமை. ரெயிலில் பாடிய சுராங்கனி பாடலை இன்னும் மறவாதிருப்பது அசத்தல்.
ReplyDeleteநம்ம வலைத்தளத்தில் ரயில் வேயில் வேலை செய்தோர் கொண்ட குடுபம் அதிகம் போல.... என் பையனும் இப்ப சுவிஸ் ரவல்ஸில் ரயில்வே துறையில் தான் ஆபிஸ் நிர்வாகம் படிக்கின்றார். நானும் ரயிவே குடும்பம் தானாக்கும்.
சகோதரி அவர்களுக்கு நன்றி! நீங்கள் சொல்வது சரிதான். ப்ளாக் எழுதும் நண்பர்கள் பலர் ரெயில்வேக்காரர்கள் குடும்பம்தான்.
Deleteவாழ்க்கைப்பயணம் ஒப்புமை அருமை. புகைப்படங்களைத் தெரிவு செய்து சிறப்பான முறையில் பகிர்ந்துள்ளீர்கள்.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. முதலில் உங்கள் பெயரையும் சேர்த்து இருந்தேன். இந்த தொடரை எழுத, ஒரு வலைப்பதிவர் உங்களை அழைத்ததாக நினைவு. எனவே எடுத்து விட்டேன். மன்னிகவும்.
Deleteகாணாளி காட்சிகளுடன் தங்களின் பயண நினைவுகள் அருமை ஐயா
ReplyDeleteநன்றி
தம +1
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteஇணைத்துள்ள படங்கள் அசத்தல்... கனவுப் பயணம் - இந்த பாடல் தான் நான் பதிவு எழுதும் போது, முதலில் ஞாபகம் வந்தது...
ReplyDeleteமூத்தவர்களின் பயண அனுபவத்தை வாசிக்க ஆவலுடன் உள்ளேன்...
வலைச்சித்தரின் கருத்துரைக்கு நன்றி!
Deleteஅழைப்புக்கு நன்றி. தற்சமயம் பயணத்தில் இருக்கிறேன். ஒரு மாதம் தமிழ்நாட்டில்.
ReplyDeleteதுளசி டீச்சர் அவர்களுக்கு நன்றி!
Deleteபயணம் முடித்த கையோடு, பயணங்கள் முடிவதில்லை னு தொடருங்க மேடம் :)
DeleteThis comment has been removed by the author.
Deleteபடங்கள் அருமை. அதுவும் கடைசிப் படம் மிக அருமை. டிடியைப் பார்க்கிறச்சே எல்லாம் தெரிந்த முகம்னு நினைப்பேன். நீங்கள் சொன்னதும் தான் மோகன் மாதிரி இருக்காரானு தோணுது! அருமையான பயணப் பதிவு. நானும் துளசிதரன்/கீதா அழைப்பின் பேரில் எழுதிட்டேன். யாரையும் அழைக்கலை! :) பலருக்கும் நேரப் பற்றாக்குறை! :)
ReplyDeleteமேடம் கீதா சாம்பசிவம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் பதிவையும் படித்தேன் திண்டுக்கல் தனபாலன் பற்றிய எனது ஒப்பீட்டை குறிப்பிட்டு எழுதியது . நீங்கள் மட்டும்தான். உங்களுடைய பயணத் தொடரையும், அதற்கு முன்பான பயணக் கட்டுரைகளையும் படித்துள்ளேன். ஆனால் முன்புபோல அதிக பின்னூட்டங்களை எழுத முடிவதில்லை
Deleteமிக்க நன்றி! என்னை எழுத அழைத்ததற்கு...
ReplyDeleteநான் நிச்சயமாக எழுதுவேன்! கொஞ்சநாள் ஆகும்!
என்னுடைய anonymity-யை பாதுகாக்க வேண்டுமே!--அதற்கேற்ப எழுதனும்!
நான் மிகவும் மதிக்கும் பதிவர் நீங்கள்!
நான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் நானும் நம்ம ஊர் பக்கம் வேற! என் அப்பாவும் St. Joseph College, Tiruchiraappalli-ல் intermediate-படித்தவராயிற்றே!
கட்டாயம் எழுதுவேன்!
நன்றி!
நம்பள்கி அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. மற்றவர்கள் எழுதத் துணியாதவற்றையும் எழுதும் துணிச்சல் உள்ள உங்கள் மீது நானும் மரியாதை உள்ளவன்தான்.
Deleteஉங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.
பயணங்கள் முடிவதில்லை..
ReplyDeleteமகிழ்ச்சியான இனிய பதிவு.. அருமை..
சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!
Deleteஆம் . ரயிலில் பயணம் செய்யும்போது அந்தக் காலத்தில் கண்ணில் கரிபடுவது வழக்கமான ஒரு விஷயம் .50 வயதைத் தாண்டிய அனைவரும் அறிந்திருப்பர்.
ReplyDeleteஇணைத்திருந்த போட்டோ சூப்பர் . சில சமயங்களில் இது நடக்கும் .
சகோதரி அவர்களூக்கு நன்றி.
Deleteஅன்பின் சகோதரா தொடர் அழைப்பிற்கு மிக்க நன்றி சகோதரர் கில்லர்ஜி - தனபாலன் இப்போது நீங்களும் அழைத்துள்ளீர்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து எழுதலாம் என உள்ளேன் .
ReplyDeleteஉங்கள் அனுபவங்களும் சுவையாக உள்ளது மிக்க நன்றி.
(வேதாவின் வலை)
கவிஞர் கோவைக்கவி அவர்களூக்கு நன்றி!
Deleteசிறப்பான பயண அனுபவங்கள்! நன்றி!
ReplyDeleteசகோதரருக்கு நன்றி!
Deleteவணக்கம் நண்பரே தங்களின் பயண அனுபவத்தை அழகாக விவரித்த விதம் அருமை சூராங்கனி பாடல் யாராலும் மறக்க முடியாதது பொருத்தமான நேரத்தில் அப்பாடலை நினைவூட்டினீர்கள்
ReplyDeleteஇதில் ஏழாவது கேள்வின் பதில் அருமை உண்மையான பதில் ஆம் நூலை எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாமே... பயண அனுபவம் அந்த நேரத்தில் மட்டுமே கிடைக்கும்.
முடிவில் சொன்ன நெஞ்சில் ஓர் ஆலயம் பாடல் மிகவும் அருமை நண்பரே நான் அடிக்கடி கேட்பது..
மூத்த பதிவர்களின் பயண அனுபவங்களை காண நானும் ஆவலுடன் இருக்கிறேன்
பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி நண்பரே...
அந்த ஆளு எவ்வளவு நேரம்தான் இடிச்சுக்கிட்டு நிற்பாரு ?
தமிழ் மணம் 4
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நானும் உங்களைப் போலவே, மூத்த வலைப்பதிவர்களின் பயண அனுபவங்கள் பற்றிய தொடர் கட்டுரைகளைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்
Delete//(விட்டுப் போனவர்களை அடுத்த தொடர் பதிவில் அழைப்பதாக உத்தேசம்)//
ReplyDeleteஇதில் ’விட்டுப்போனவர்கள்’ என்று தாங்கள் சொல்லியுள்ளது, தாங்கள் இப்போது அழைத்துள்ளவர்களிலேயே, தொடர்பதிவு ஏதும் தராமல் அல்லது தரமுடியாமல் ’விட்டவர்கள்’ அல்லது ’விட்டுப்போனவர்கள்’ என்றும் வைத்துக்கொள்ளலாம் தானே !
ஏனெனில் //தொடர் பதிவு என்றாலே பாதிபேர் தூர ஓடி விடுகிறார்கள்.// எனத்தாங்கள் ஆரம்ப வரிகளிலேயே ஓர் உண்மையைச் சொல்லியுள்ளீர்கள். :)
மரியாதைக்குரிய V.G.K அவர்களுக்கு காலை வணக்கம்.! ’விட்டுப் போனவர்கள்” – என்பதனை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் நகைச்சுவையை ரசித்தேன்.
Deleteஉங்களையும் இந்த தொடர் பதிவு எழுத அன்புடன் அழைத்துள்ளேன். சிரமம் பாராது, 10 கேள்விகளுக்கான அனுபவ வரிகளோடு எழுத வேண்டும் என வலையுலக நண்பர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். தங்களது அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
வணக்கம் ஐயா.
ReplyDeleteஅருமையான பயண அனுபவங்கள். சுராங்கனி, அதோ அந்த பறவைப் போல பாடல்கள் பயணங்களில் பாடும்போது குதூகலமாக இருக்கும் அல்லவா? உங்கள் கேமெராவால் தான் எத்தனை எத்தனை வலையுலகச் சந்திப்புகள் பதிவு செய்யப்படுகின்றன! உங்களைப் புதுகோட்டையில் பார்த்ததும் புகைப்படங்கள் எடுத்ததும் மகிழ்ச்சி. பேருந்துகளில் பாடல்கள் பலருக்கும் பொழுதுபோக்காக இருந்தாலும் நீங்கள் சொல்வதுபோல் இடைஞ்சலாகவும் ஆகிவிடுகிறது.
அட ஆமாம், டிடி அண்ணா மோகன் மாதிரி இருக்கிறார். ரயில் படங்கள் பிரமாதம், மிகவும் ரசித்தேன்.
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! புதுக்கோட்டைதான் பல வலைப்பதிவர்களின் அறிமுகத்திற்கு களமாக அமைந்தது என்று நினைக்கிறேன்.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteதங்களின் பயண அனுபவங்களை அருமையாகத் தொகுத்து அளித்தது கண்டு மகிழ்ச்சி. மணப்பாறை சென்ற அலுவலகப் பயணங்களை மிகவும் இரசித்தேன்.
நன்றி.
த.ம.6
ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Delete
ReplyDeleteபயணங்கள் முடிவதில்லை போல் இந்த சங்கிலித் தொடர் பதிவுகளும் முடிவதில்லை போலும். ’பயணங்கள் முடிவதில்லை’ - என்ற இந்த தொடரை எழுத என்னையும் அழைத்தமைக்கு நன்றி! நிச்சயம் எழுதுவேன் சில நாட்களுக்குப் பின். தங்களது பயணத்தை (தொடரை) இரசித்தேன்.வாழ்த்துக்கள்!
பி.கு நான்கு நாட்களாக ஊரில் இல்லாததால் பதிவுலகிற்கு வர இயலவில்லை.
அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
Deleteஅய்யா, முதற்கண் தாமத வருகைக்கு மன்னியுங்கள்.
ReplyDeleteமணப்பாறையில் என்று வாசிக்கும் போதே அத்தனை உற்சாகமாக இருக்கிறது. பிறந்த ஊருக்கு நிகரேது, இல்லையா அய்யா.
அப்புறம், புகைப்பட சித்தர் அல்லவா நீங்க, கேமரா இல்லாம பயணிப்பீர்கள்.
மூத்த பதிவர்களை அழைக்க தயக்கமாக இருக்கிறது.
அவர்களை நீங்கள் அழைத்தது மகிழ்ச்சி.பயணத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி அய்யா
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. என்னை புகைப்படச் சித்தர் என்று அழைக்கும் அளவிற்கு நான் அதி திறமைகள் உள்ளவன் அல்லன். இதுபற்றி உங்கள் பதிவின் பின்னூட்டம் ஒன்றிலும் குறிப்பிட்டுள்ளதாக நினைவு.
Deleteபயணங்கள் முடிவதில்லை என்ற தொடரை உங்கள் பாணியில் விவரித்த விதம் அருமை! கடைசி படத்தை வெகுவாக ரசித்தேன்! சுராங்கனி பாடல் அக்காலத்தில் மிகவும் பாப்புலராக இருந்தது. பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி!
Deleteபுகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை! பயணங்கள் அனுபவமோ மிக மிக இனிமை! இடையிலே ' நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்' பாடலை இடைச்செருகலாக புகுத்தியிருப்பது எத்தனை பொருத்தம்!
ReplyDeleteஇந்தத் தொடர்பதிவை எழுத என்னையும் அன்புடன் அழைத்ததற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி! இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தஞ்சை வந்து சேர்ந்தேன். விரைவில் எழுதுகிறேன்!!
சகோதரி அவர்களுக்கு நன்றி! உங்கள் தொடர் பதிவை ஆவலுடன் வரவேற்கிறேன்.
DeleteDear Madam,thank you for your information.
ReplyDelete
ReplyDeleteஅருமையான இலக்கியப் பகிர்வு.
அழகான பயண அனுபவங்கள் தங்களது அனுபவங்கள். பாடல்களுடன் சொல்லியவிதமும், படங்களும் அழகு. முதல் படம் பொருத்தம் தலைப்பு!!! ஆம் ஐயா வாழ்க்கைப் பயணமே கனவுப்பயணம்தான். எத்தனைக் கனவுகளுடன் நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம். அருமை. பேருந்தில் பாடல்களை ஒலிபரப்புவதைத் தடை செய்ய வேண்டும் என்பதே எங்களது கருத்தும். அமைதியாகப் பயணிப்பது என்பது எத்தனைப் பேரானந்தம்..
ReplyDeleteரசித்தோம் தங்கள் தொடரை.
நண்பர் தில்லைக்கது V துளசிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தாமதமான எனது மறுமொழிக்கு மன்னிக்கவும். சில சமயங்களில் இவ்வாறு நேர்ந்து விடுகிறது. உங்கள் புண்ணியத்தில், இந்த எனது கட்டுரையை மீண்டும் படிக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்தது.
ReplyDelete// பேருந்தில் பாடல்களை ஒலிபரப்புவதைத் தடை செய்ய வேண்டும் என்பதே எங்களது கருத்தும். அமைதியாகப் பயணிப்பது என்பது எத்தனைப் பேரானந்தம்..//
என்ற தங்களது கருத்தே என்னுடையதும் ஆகும். பேருந்துகளில் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று தமிழ்நாட்டில் சட்டம் இருக்கிறது; ஆனால் யாரும் கடை பிடிப்பதில்லை.