கடந்த ஒருவாரமாக (பொங்கலிலிருந்து) கையில் கொதிநீரால் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தேன். மூலிகை எண்ணெய் போட்டதில் இப்போது கைகள் குணமாகி விட்டபடியினால், உறவினர்கள் ஊர் ஏதேனும் சென்று வரலாம் என்ற யோசனையில் இருந்தேன். நேற்று முன்தினம் அய்யா ஆசிரியர் முத்துநிலவன் அவர்களது வலைப்பதிவில் ஒரு அழைப்பிதழ் இருந்தது.
புதுக்கோட்டை பயணம்
”தைப் பூசத் திருநாளில் தமிழெடுத்து பாடுவோம்” என்று பாடியபடி, நேற்று (24.01.16 – ஞாயிறு) காலை சீக்கிரமே திருச்சியிலிருந்து
புறப்பட்டு புதுக்கோட்டைசென்று விட்டேன். காலை
டிபன் முடித்துக் கொண்டு கூட்டம் நடைபெறும் ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜிற்கு சென்றேன்.
(பஸ் நிலையத்திற்கு உள்ளேயே மதுரை பஸ்நிறுத்தம் அருகில் மாடியில்தான் இந்த கல்லூரி
இருந்தது) அப்போதுதான் ஒரு தம்பி அந்த கல்லூரிக்கு மாடிக்குச் செல்லும் வழியிலிருந்த இரும்பு கிரில் கதவை திறந்து கொண்டு இருந்தார்.
சரி, மற்றவர்களும் வரட்டும் என்று கீழே சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து இருந்தேன். சற்று
நேரத்தில் வெங்கட் நாகராஜ் அவர்கள் வர அவரும் என்னுடன் அமரவே, நிறையவே பேச சந்தர்ப்பம்
அமைந்தது. கீதா மேடம் வந்ததும் அவருடன் கூட்டம் நடைபெறும் ஹாலிற்கு சென்றோம். அப்புறம்
ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.
படித்ததில் பிடித்தது:
சிறப்புக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ’படித்ததில் பிடித்தது’
என்று மேடையில் மாணவச் செல்வங்களும், நண்பர்களும் பேசினார்கள்: வாசித்தார்கள். (அப்போது
எடுக்கப்பட்ட படங்கள் சில கீழே)
படம் – மேலே - நானும் சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்த (விக்டர்
ஹ்யூகோவின்) ஏழைபடும்பாடு பற்றி பேசினேன்
சிறப்புக் கூட்டம்:
பின்னர் சிறப்புக் கூட்டம் இனிதே தொடங்கியது. ஆசிரியர் குருநாத
சுந்தரம் அவர்கள் தலைமை தாங்க, வீதி கலை இலக்கியக் களத்தின் நண்பர்கள் தங்கள் படைப்புகளை
மேடையில் பகிர்ந்தார்கள். (அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சில கீழே)
படம் – மேலே - கவிஞர் வைகறை, ஆசிரியர் குருநாத சுந்தரம், சிறப்பு
விருந்தினர் வெங்கட் நாகராஜ், ஆசிரியர் முத்துநிலவன், இவர்களோடு நான்.(ஆரம்பத்தில்
மேடையில் நானும் இருந்தேன்)
படம் – மேலே - கவிஞர் வைகறை, ஆசிரியர் குருநாத சுந்தரம், சிறப்பு
விருந்தினர் வெங்கட் நாகராஜ், ஆசிரியர் முத்துநிலவன், மற்றும் ஆசிரியை கீதா
சிறப்பு அழைப்பாளர்:
கூட்டத்தின் இறுதி கட்டமாக, சிறப்பு விருந்தினர் வெங்கட் நாகராஜ்
அவர்கள் கவுரவிக்கப்பட்டார்.
படம் – மேலே - வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு ’வீதி’ கலை இலக்கியக்
களம் சார்பில் நூல்கள் வழங்கப்படுகின்றன.
எப்போது புதுக்கோட்டை சென்றாலும் வயிறார சாப்பாடு போட்டுத்தான்
அனுப்புவார்கள். இந்தமுறை இலக்கியவீதியில் தானிய உணவு, வெஜ். சூப், வாழைப்பூ வடை, பாயாசம்
என்று கொடுத்தார்கள். மேலும் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும் எனக்கும் மதியம் ஒரு நல்ல
ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார்கள். கூட்ட ஒருங்கிணைப்பை ஆசிரியை கீதா மற்றும்
கவிஞர் வைகறை இருவரும் செய்து இருந்தனர். அனைவருக்கும் நன்றி. வெங்கட் நாகராஜ் அவர்களுடன்
நான் திருச்சி திரும்பினேன்.
புதுக்கோட்டையில் இயங்கி வரும் வீதி கலை இலக்கியக் களம் என்ற பயிற்சிப்
பட்டறையில் உருவாகிவரும் இலக்கிய ஆர்வலர்களுக்கு வாழ்த்துக்கள். பைபிளில் ஒரு வசனம்
உண்டு. “பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதோ, அறுப்பதோ இல்லை.
பறவைகள் வீடுகளிலோ, களஞ்சியங்களிலோ உணவைச் சேமிப்பதுமில்லை” அதைப்போல ஒவ்வொரு
கூட்டத்திலும் அன்றைக்கு இலக்கிய வீதி நண்பர்கள் தரும் அன்றைய வரவு, அன்றைய செலவு என்று
முடிந்து விடுகிறது. திருச்சியிலும் இதுபோல் தொடங்க வேண்டும்.
புதுக்கோட்டை – வீதி கலை இலக்கியக் களம்.23
பற்றிய மற்றைய நண்பர்களது பதிவுகள்:
வீதியில் சந்தித்த பயணச்சித்தர் !! http://makizhnirai.blogspot.com/2016/01/venkat-nagaraj-passionate-travellers-pudukai-visit..html
வெங்கட் அவர்களுக்கு “வீதி“ யில் வரவேற்புப் பூங்கொத்து! http://valarumkavithai.blogspot.com/2016/01/blog-post_25.html
புதுக்கோட்டையில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு..... http://venkatnagaraj.blogspot.com/2016/01/blog-post_26.html
நேர்முகமாக தங்களுடைய வர்ணனையும் தொகுப்பும் அருமை!.. அழகு..
ReplyDeleteவாழ்க நலம்!..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!
Deleteநல்ல பயணம், நல்ல உபசரிப்பு, நல்ல போட்டோக்கள். அனைத்தும் அருமை.
ReplyDeleteமுனைவர் அய்யாவின் பாராட்டிற்கு நன்றி.
Deleteவிழாவில் கலந்து கொண்ட உணர்வு
ReplyDeleteபடங்களுடன் தங்க்கள் பதிவு படிக்க உண்டானது
(நல்லவேளை வெங்கட் நாகராஜ் பெயர் போட்டிருந்தீர்கள்
இல்லையெனில் அவர் தம்பி என நினைத்திருப்பேன்
சென்னையில் சந்தித்ததை விட இளமையாகத் தெரிகிறார்)
வாழ்த்துக்களுடன்
கவிஞர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. பஸ் ஸ்டாண்ட் பெஞ்சில் உட்கார்ந்து இருந்தபோது, நானும் வெங்கட்நாகராஜ் அவர்களை யாரோ என்றுதான் நினைத்தேன். முன்பு அவரை திருச்சியில் நேரில் சந்தித்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறையவே மாறிவிட்டார்; இளைத்தும் இருக்கிறார்.
Deleteஅய்யா வணக்கம். அருமையான படங்களுடன் கூடிய தங்களின் அழகான பதிவுக்கு வீதி - கலைஇலக்கியக் களத்தின் சார்பில் நன்றிகள். ஒரே ஒரு சிறு திருத்தம் படங்களில் “நபி பவுல் நடராஜன்” என்றுள்ள படத்தின் கீழ் “மாணவி ஓவியா” என்று மாற்ற வேண்டும். கவிதை வாசித்த கல்லூரி மாணவரின் பெயரில் இந்த மாணவியின் பெயர் இடம்பெற்றுவிட்டது. மற்றபடி உங்கள் படங்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது? வந்து சிறப்பித்தமைக்கும், பதிவிட்டமைக்கும் நன்றிகளய்யா. வணக்கம்.
ReplyDeleteதமிழ் மண வாக்கு - 3
Deleteஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு நன்றி! மேலே தாங்கள் சுட்டிக் காட்டிய பிழையினை சரி செய்து விட்டேன். தகவலுக்கு நன்றி!
Deleteஆஹா, விழா பற்றிய நேர்முக வர்ணனை போல ஓர் அழகிய பதிவாகக் கொடுத்துள்ளீர்கள். படங்கள் அனைத்தும் அசத்தல். கூடவே தங்களுடன் பயணித்தது போன்ற மகிழ்ச்சியினை ஏற்படுத்துகிறது. மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.
ReplyDeleteஅன்புள்ள v.g.k. அவர்களின் பாராட்டிற்கு நன்றி! இப்போது வலையுலகில் எழுதுவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால், நீங்களும் அவசியம் எழுத வேண்டும்; மற்றவர்களையும் அழைக்க வேண்டும் என்று இந்த பதிவின் வழியே கேட்டுக் கொள்கிறேன்.
Deleteபுதுக்கோட்டை மற்றும் திருச்சி ஏரியாக்களை முத்துநிலவன் அவர்களும் நீங்களும் இணையத்தைப் பொறுத்தவரை என்றும் உயிர்ப்போடு வைத்துக்கொள்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஅய்யா அமுதவன் அவர்களுக்கு நன்றி! இறைவன் அருளால் என்னால் முடிந்த அளவு ஆர்வத்தோடு எழுதிக் கொண்டு இருக்கிறேன். அய்யா முத்துநிலவன் அவர்கள்தான், புதுக்கோட்டையில், வலைப் பயிற்சிப் பட்டறை போன்ற ஊக்கம் தரும் நிகழ்ச்சிக்களை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
Deleteநல்ல தொகுப்பு நண்பரே...வாழ்த்துக்கள்... நன்றி
ReplyDeleteபுதுக்கோட்டை நண்பர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி!
Deleteபுதுக்கோட்டை ‘வீதி கலை இலக்கிய களத்தின்’ சிறப்புக்கூட்டம் பற்றிய தகவலும் படங்களும் அருமை.
ReplyDeleteஇப்போது கையில் ஏற்பட்ட கொதி நீர் காயம் ஆறிவிட்டதா?
அய்யா V.N.S.அவர்களின் அன்பான கருத்துரைக்கும் நலன் விசாரிப்பிற்கும் நன்றி! கையில் ஏற்பட்ட கொதி நீர் காயம் ஆறிவிட்டது அய்யா. அதனால்தான் புதுக்கோட்டை சென்றேன்.
Deleteநேரில் கலந்து கொண்ட உணர்வை தருகிறது ஐயா.தம 4
ReplyDeleteஅள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல்
ReplyDeleteகாணக் காணத் தெவிட்டாதப் படங்களுடனும்
படிக்கப் படிக்க மனம் மகிழும் செய்களுடனும்
விழாவில் நானும் கலந்து கொண்ட ஓர் உணர்வை
ஏற்படுத்திவிட்டீர்கள் ஐயா
நன்றி
தம+1
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
Deleteநிகழ்வினை மிகச் சிறப்பாக புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்களைச் சந்தித்துப் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. புதுக்கோட்டையிலிருந்து திருச்சி பேருந்து பயணத்திலும் பேசிக் கொண்டே வந்தது இன்னமும் நினைவில். இந்த நாளை இனிய நாளாக்கிய உங்களுக்கும் புதுகை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் உங்களைச் சந்தித்த போது சரியாக பேச முடியாமல் போயிற்று. அந்த குறையை இந்த புதுக்கோட்டை சந்திப்பு நிவர்த்தி செய்து விட்டது.
Deleteகலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன்.
ReplyDeleteஒவ்வொரு நிகழ்வும் தங்களின் புகைப்படங்கள் மூலம் அறிய முடிந்தது ஐயா.... நன்றிகள் பல....
Deleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நீங்களூம் புதுக்கோட்டைக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அங்கிருந்த பலரும் திண்டுக்கல் தனபாலன் வரவில்லையா என்றுதான் கேட்டார்கள். பேசாமல் நீங்கள் புதுக்கோட்டை தனபாலன் ஆகிவிடலாம்.
Deleteஏகப்பட்ட அழகான புகைப்படங்களுடன் நல்லதொரு பகிர்வு.
ReplyDeleteசகோதரர் ஸ்ரீராம் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
நிகழ்வை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!
Deleteவிழா நிகழ்வினை மிகச் சிறப்பாக அழகான புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ள விதம் அருமை. தொகுப்பினைத் தந்த முறை அதைவிட அருமை.
ReplyDeleteமுனைவர் அவர்களுக்கு நன்றி!
Deleteதங்கள் நோ குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்.
ReplyDeleteபடங்களுடன் சிறந்த கருத்துப் பகிர்வு
இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!
மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html
கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! உங்கள் வலைத்தளம் வந்து, உங்கள் பதிவைப் படித்து விட்டு கருத்துரையும் தந்துள்ளேன். அந்த பதிவினில் மின்நூல் பற்றிய பல தகவல்களோடு, அதன் ஆக்கம் பற்றியும் அறியச் செய்தமைக்கு நன்றி!
Deleteநேரே வந்து கலந்துகொண்ட திருப்தியினை தந்தது தங்களின் நிழற்படங்கள்! அருமையான பகிர்வு. நன்றி!
ReplyDeleteசகோதரரின் பாராட்டிற்கு நன்றி.
Deleteபுகைப்படச்சித்தரின் கைவண்ணம் கண்டு களித்தேன் அருமை வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் 9
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி!
Deleteபடங்கள் அருமை....அதனை வாசகனுக்கு கொண்டு சென்ற தங்கள் எழுத்து படு நேர்த்தி!
ReplyDeleteஅய்யா ஆரண்ய நிவாஸ் அவர்களுக்கு நன்றி.
Deleteதாமதமான வருகைக்கு முதலில் மன்னிப்பு. நல்லதொரு நிகழ்வை, சந்திப்பைப் பற்றிப் பகிர்ந்தமைக்கும் அழகான புகைப்படங்களுக்கும் நன்றி ஐயா.
ReplyDelete