நேற்று (09.ஜனவரி.2016, சனிக்கிழமை) மாலை திருச்சியில் பாரத ஸ்டேட்
வங்கி ஓய்வூதியர் நலச் சங்கம் (STATE
BANK OF INDIA PENSIONERS’ ASSOCIATION) நடத்திய, சிறப்பு கூட்டம், திருச்சிராப்பள்ளி
கிளையில் நடைபெற்றது.
உறுப்பினர் என்ற முறையில்
அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். இறை வணக்கத்தோடு கூட்டம் தொடங்கியது. திருச்சி மண்டல
செயலாளர் திரு V
கிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். SBI திருச்சி மண்டல மேலாளர் மற்றும் திருச்சி
கிளையின் உதவி பொது மேலாளர் ஆகியோர் துவக்க உரை நிகழ்த்தினர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான புதிய
மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் GROUP MEDICLAIM
POLICY ‘A’ மற்றும் GROUP MEDICLAIM POLICY ‘B’ என்ற இரண்டு பாலிசிகள் உள்ளன. இவை
FAMILY FLOATER GROUP HEALTH INSURANCE POLICIES FOR SBI RETIREES எனப்படும். இந்த
திட்டம் குறித்து . திரு ஜெய கிருஷ்ணன் அவர்கள், (Officer, Retired) உரையாற்றினார்.
மேலும் இந்த திட்டத்தை ஸ்டேட் வங்கியுடன் இணைந்து நடத்தும் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக
இருவர் வந்திருந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கம் தந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே.
….. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்
…..
நமது பாரத ஸ்டேட் வங்கி, ஊழியர்களுக்கு
அவர்களது பணிக்காலத்தில் அனைத்து விதமான மருத்துவச் செலவுகளையும் தானே ஏற்றுக் கொண்டு,
நமது வங்கி ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினரையும் பேணி வந்தது நமக்கெல்லாம் தெரியும்.
ஆனால் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெறும்போது முன்பு தந்தது போல வங்கி நமக்கு உதவிட முடியவில்லை.எனினும் அவ்வப்போது சில
திட்டங்களை அறிமுகப்படுத்தி விருப்பப்பட்டவரிடம் சந்தாதொகை வசூலித்து அவர்களூக்கு உதவி
வந்தது. தற்போது அமுலில் இருக்கும் REMBS என்ற ஓய்வூதியர் மருத்துவ நலத் திட்டம் கடந்த
பல ஆண்டுகளாக அமுலில் இருந்து வருவது தெரிந்ததே. அத்திட்டத்தில் பல அவசியமான மாற்றங்கள்
செய்ய வேண்டுமென்று நாம் கூறி வந்தோம். REMBS திட்ட பலன், விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும்
60 வயதுக்கு முன் வங்கிப்பணி முடிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், அவர்கள் சந்தாதொகை
செலுத்த முன்வந்தபோதும் மறுக்கப்பட்டது. இந்த அநீதி களையப்பட வேண்டும் என்று நாம் நெடுங்காலமாக
கோரி வந்தோம். இப்பொழுது ஒரு புதிய திட்டத்தை அமுல்படுத்தி அதன்படி நமது கோரிக்கைகளுக்கு
ஓரளவு செவிசாய்த்துள்ளது நமது வங்கி. அந்த திட்டத்தின் பலனை நமது உறுப்பினர்களின் கவனத்திற்கு
கொண்டு வருகிறோம்.
இந்தப் புதிய திட்டம் A பாலிசி என்றும்
B பாலிசி என்றும் இரு வகைப்படும். ஏற்கனவே SBI – REMBS என்ற திட்டத்தில் உறுப்பினராக
இருந்தவர்கள் புதிய A பாலிசி என்ற திட்டத்தின் உள் சேர்க்கப்படுவார்கள். ஏனையோர், அதாவது
வங்கியின் மருத்துவப்பலன் திட்டத்தில் சேராதவர்கள் B பாலிசி என்ற திட்டத்தில் சேர்ந்து
கொள்ளலாம். மருத்துவக் காப்பீடு தொகையை நாமே நமது விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்..
ஆனால் அதற்குண்டான பிரிமியம் தொகையை நமது கையிலிருந்து ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.
REMBS திட்டத்தில் இருந்தவர்களுக்கு, அவர்களுக்கு உறதி அளிக்கப்பட்ட தொகை முழுவதும்
தீரும்வரை வங்கியே பிரிமியம் செலுத்தும். அதன்பின் REMBS திட்டத்தில் இருந்தவர்களும்
தங்களுடைய பிரிமியத்தை தாங்களே செலுத்த வேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரிமியம்
தொகை ஆண்டுதோறும் மாறும். சேவைவரியும் கூடுதலாக (14.5%) செலுத்த வேண்டும். காப்புத்
தொகையும் பிரிமியமும் கீழ் உள்ள அட்டவணைப்படி இந்த ஒரு வருடத்திற்கு இருக்கும்
காப்புத்தொகை (லட்சத்தில்)
|
பிரிமியம்
|
3
|
5577
|
4
|
7282
|
5
|
9285
|
7.5
|
12677
|
10
|
16902
|
15
|
23353
|
20
|
33804
|
25
|
42255
|
திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு ATM கார்டுபோல
ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அட்டையைக் கொண்டு எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை
பெற்றுக் கொள்ளலாம். மேற்படி சிகிச்சைக்கான பில் எதுவும் கட்ட வேண்டியதில்லை. வங்கியிடம்
முன்ஒப்புதல் வாங்க வேண்டியதில்லை. மருத்துவமனை இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடம் தானே பெற்றுக்
கொள்ளும்.
REMBS திட்டத்தில் ஏற்கனவே உறுப்பினராக
உள்ளவர்கள் புதிய திட்டத்தில் 1.4.2016 அன்று இணைக்கப்படுவார்கள். எந்தத் திட்டத்தில்
இல்லாதவர்களும். குடும்ப பென்ஷன் வாங்குவோர்களும் திட்டத்தில் சேர, தாங்கள் அப்ளிகேசனை.
பென்சன் வாங்கும் கிளையில் 1.1.2016 முதல் 31.3.2016குள் தர வேண்டும். இந்த அப்ளிகேசன்
பாரம் வங்கி கிளையில் கிடைக்கும்.
… 63 வகையான நோய்களுக்கு மருத்துவமனையிலும்,
வீட்டிலிருக்கும்போதும் ஆகும் மருத்துவ செலவுகள்
… ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஓமியோபதி,
இயற்கை வைத்தியம் மூலமும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
புதிய இன்ஷ்யுரன்ஸ் திட்டத்தில் சேர்வதற்கு
கடைசிநாள் 31.03.2016
இது தொடர்பாக விரிவான சுற்றறிக்கை விரைவில்
வெளியிடப்படும்.
( கட்டுரை – நன்றி: SBI ELDERS VOICE (SUPPLEMENT) 24th
DECEMBER 2015 )
( குறிப்பு: இப்போது அரசு அலுவலகங்களிலும்,
பொதுத்துறை நிறுவனங்களிலும், அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும், மற்றும் தனியார் நிறுவனங்களிலும்,
தங்கள் ஊழியர்களுக்கும் பணிஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு
திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தினை எல்லோரும் தெரிந்து கொள்ளவும்,
ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே மேலே
சொன்ன கட்டுரையை இங்கு அப்படியே டைப் செய்து வெளியிட்டுள்ளேன்.)
பயனுள்ள பதிவு ஐயா
ReplyDeleteநன்றி
தம1
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபலருக்கும் உதவும் பகிர்வு ஐயா... நன்றி...
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. புதிய திரட்டியின் பணிகள் எவ்வாறு இருக்கின்றன?
Deleteபலருக்கும் இந்தப்பதிவினில் உள்ள தகவல்கள் பயன்படக்கூடும். படங்கள் எல்லாம் பளிச்சென்று எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.
ReplyDelete-=-=-=-=-=-
தங்களின் இந்தப்பதிவு ஏனோ டேஷ்-போர்டில் எனக்குக் காட்சியளிக்கவே இல்லை.
கீழேயுள்ள இதுபோல ஒன்று மட்டும் இப்போது தெரிகிறது:
தலைப்பிடாதது
எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL இல் தி.தமிழ் இளங்கோ - 35 நிமிடங்கள் முன்பு
-=-=-=-=-=-
அன்புடன் VGK
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. எனக்கும் எனது பதிவை டேஷ் போர்டில் பார்க்க இயலவில்லை. UNTITLED என்று காட்டுகிறது. காரணம் தெரியவில்லை. பதிவை நீக்கி விட்டு தொடரலாம் என்றால் கருத்துரைகள் வரத் தொடங்கி விட்டன.
Deleteஅன்புள்ள V.G.K அவர்களுக்கு, டேஷ் போர்டில் எனது பதிவு வந்து விட்டது.
Deleteஆமாம் சார், இப்போ வந்துடுச்சு. மிக்க மகிழ்ச்சி.
Delete-=-=-=-=-
ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்
எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL இல் தி.தமிழ் இளங்கோ - 10 நிமிடங்கள் முன்பு
நேற்று (09.ஜனவரி.2016, சனிக்கிழமை) மாலை திருச்சியில் பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்கம் (STATE BANK OF INDIA PENSIONERS’ ASSOCIATION) நடத்திய, சிறப்பு கூட்டம், திருச்சிராப்பள்ளி கிளையில் நடைபெற்றது. உறுப்பினர் என்ற முறையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். இறை வணக்கத்தோடு கூட்டம் தொடங்கியது. திருச்சி மண்டல செயலாளர் திரு Vகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். SBI திருச்சி மண்டல மேலாளர் மற்றும் திருச்சி கிளையின் உதவி பொது மேலாளர் ஆகியோர் துவக்க உரை நிகழ்த்தினர். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒன்றை அறிமுகம் செ... மேலும் »
அனைவருக்கும் தகவல் பயனுள்ளது நன்றி நண்பரே தமிழ் மணம் 3
ReplyDeleteநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி!
Deleteபயன் தரும் நல்ல திட்டம்!
ReplyDeleteபுலவர் அய்யா அவர்களுக்கு நன்றி
Deleteபயனுள்ள பதிவு...
ReplyDeleteதம +
ஆசிரியர்
Deleteஅவர்களுக்கு
நன்றி
இப்போது எல்லா ஓய்வூதியதாரர்களுக்கும் காப்பீடு வழங்குவதில் நான் பணிபுரியும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும் முன்னிலை வகிக்கிறது
ReplyDeleteகவிஞருக்கு நன்றி! நீங்கள் சொல்வது சரிதான் என்று நினைக்கிறேன்.
Deleteஅருமையான பணித்திட்டம்
ReplyDeleteசிறந்த பகிர்வு
தொடருங்கள்
கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி!
Deleteசமீபத்தில் நடந்து முடிந்த வங்கி ஊழியர்களின் சம்பள விகிதம் பற்றிய இரு தரப்பு ஒப்பந்தப்படி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இத்திட்டத்தின்படி ஓய்வு பெற்ற வங்கி அலுவலர்களுக்கும் அவர்களது வாழ்க்கைத்துணைக்கும் ரூபாய் 4 இலட்சம் மற்றும் வங்கி ஊழியர்களுக்கும் அவர்களது வாழ்க்கைதுணைக்கும் ரூபாய் 3 இலட்சம் வரையிலும் காப்புறுதி உண்டு. அதற்காக ஒய்வு பெற்றோர் செலுத்தவேண்டிய காப்புத்தொகை முறையே ரூ. 7494 இம் 5621 இம் ஆகும். 2015 ஆம் ஆண்டு நவம்பர் திங்களிலிருந்து இது தொடங்கப்பட்டுள்ளது. வீட்டிலிருக்கும்போதும் ஆகும் மருத்துவ செலவுகளும் இந்த திட்டத்தில் உண்டு என சொல்லி பணம் வாங்கிக்கொண்டு இப்போது அது இந்த திட்டத்தின் கீழ் வராது என அந்த காப்புறுதி நிறுவனம் சொல்லிக்கொண்டு இருக்கிறது!
ReplyDeleteதங்கள் வங்கியில் உள்ள திட்ட்ம இதை விட நன்று என எண்ணுகிறேன்.
அய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
Delete// வீட்டிலிருக்கும்போதும் ஆகும் மருத்துவ செலவுகளும் இந்த திட்டத்தில் உண்டு என சொல்லி பணம் வாங்கிக்கொண்டு இப்போது அது இந்த திட்டத்தின் கீழ் வராது என அந்த காப்புறுதி நிறுவனம் சொல்லிக்கொண்டு இருக்கிறது! //
உங்களுடைய கருத்தினுக்கு மறுமொழி தருவதற்கு முன்பு என்னுடன் பணிபுரிந்த சில நண்பர்களிடமும் கலந்து பேசினேன். விருப்ப ஓய்வுபெற்ற என்னைப் போன்றவர்களுக்கு இதுநாள் வரையில் மருத்துவ பயன் ஏதும் இல்லாமல் இருந்தது. இப்போது இந்த திட்டம் மூலம் அது கிடைக்க இருக்கிறது. ஒருவேளை அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் வீட்டிலிருக்கும்போதும் ஆகும் மருத்துவ செலவுகளுக்கும் உண்டு என்று சொல்லிவிட்டு இப்போது இல்லை என்றால் அப்போது நிர்வாகம் என்ன செய்யும் என்று பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். மேலும் VRS வாங்கியவர்களுக்கு ஒன்றுமே கிடையாது என்று இருந்த நிலையில் இந்த திட்டம் இப்போது நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றார்கள்.
பயனுள்ள பதிவு நன்றி..
ReplyDeleteசகோதரிக்கு நன்றி!
Deleteநடன சபாபதி சொல்லி விட்டார்!
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
யாவருக்கும் பயனுள்ள பதிவு..ஐயா..பகிர்வுக்கு நன்றி த.ம9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!
Deleteஅவசியமான பதிவு.
ReplyDeleteபகிர்தலுக்க்கு நன்றி
சகோதரிக்கு நன்றி!
Deleteபல பயனுள்ள செய்திகளை அறிந்தேன். ஒப்புநோக்கல் எங்களுக்கு ஒரு தெளிவினைத் தந்தது.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
Deleteவணக்கம் ஐயா. மற்றவருக்கும் பயன் படவேண்டும் என்று பகிர்ந்ததற்கு நன்றி.
ReplyDeleteபலருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
Deleteபொங்கல் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி நண்பரே!
Delete2016 தைப்பொங்கல் நாளில்
ReplyDeleteகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி
Deleteதங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி அய்யா!
Deleteபயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி ஐயா
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களுக்கு நன்றி!
DeletePlease inform me 63 diseases that are covered under New Insurance scheme
ReplyDeleteபுதிதாக அறிமுகமான தியாகு அவர்களது அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! ஒரு ப்ளாக்கர் என்ற முறையில் தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை மட்டுமே இங்கு எழுதியுள்ளேன். உங்களுக்கு தனியே விவரம் தெரிவிப்பதற்காக உங்களது தன்விவரத்தில் (PROFILE) விவரம் தேடினேன். கிடைக்கவில்லை. (மேற்கொண்டு விவரம் வேண்டினால், உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள என்போன்ற, SBI பென்ஷனரிடம் கேட்கவும்)
Delete