அடுத்தமாதம் ( 11.10.2015 ஞாயிறு) அன்று புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும்,
வலைப்பதிவர்கள் சந்திப்பில் ”கையேடு” ஒன்றை வெளியிட இருக்கிறார்கள். இதில் வலைப்பதிவர்கள்
பற்றிய தகவல்கள் இருக்கும் .எனவே வலைப்பதிவர்கள் அனைவரும் தம்மைப் பற்றிய விவரங்களை bloggersmeet2015205@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.09.2015 இற்குள்
அனுப்பி வைக்கும்படி விழாக்குழுவினர் கேட்டு இருந்தனர். இதுகுறித்து ஆசிரியர் நா.முத்துநிலவன்,
திண்டுக்கல் தனபாலன், அரும்புகள் மலரட்டும் அ.பாண்டியன், தேன்மதுரத்தமிழ் கிரேஸ்,
‘தென்றல்’ கீதா, தில்லையகத்து துளசிதரன், தமிழ்வாசி பிரகாஷ், மதுரை சித்தையன் சிவகுமார்,
ஞா.கலையரசி (ஊஞ்சல்), எஸ்.மது (மலர்த்தரு) , மைதிலி கஸ்தூரி ரெங்கன் (மகிழ்நிறை) மற்றும்
நான் என்று பல பதிவர்கள் தனிப்பட்ட முறையில் பதிவுகள் எழுதி இருந்தோம்.
ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு நமது வலைப்பதிவர்கள் பலரும் தங்களைப்
பற்றிய விவரங்களை அனுப்பவில்லை என்று தெரிய வருகிறது. சகோதரி கீதா அவர்கள் தனது “ தூக்கமா?
கலக்கமா? ஏன் தாமதம் “ - http://velunatchiyar.blogspot.com/2015/09/thukkamaa.html
என்ற பதிவினில்
/// ஆயிரக்கணக்கான வலைப்பதிவர்கள் உள்ள தமிழ் வலைப்பதிவர்களில்
130 வலைப்பதிவர்கள் வருகையும்,கையேட்டிற்காக 38 வலைப்பூ முகவரிகளும் மட்டுமே பதிவாகி
உள்ளன. ///
என்று தனது ஆதங்கத்தை சொல்லி
இருந்தார்.
இதுபற்றி யோசித்துப் பார்த்ததில், புனைபெயரிலும் சொந்தப் பெயரிலும்
வலைப்பதிவை தொடர்ந்து எழுதி வரும் பல வலைப்பதிவர்களுக்கு தாங்கள் இன்னார் என்று வெளிப்படுத்திக்
கொள்வதில் ஆர்வம் இல்லை எனும்போது எப்படி அவர்கள் தம்மைப் பற்றிய விவரங்களை கையேட்டில்
வர சம்மதிப்பார்கள்? என்றே எண்ண வேண்டியுள்ளது. முன்பு ஒருமுறை எனது பதிவினில் நான் எழுதிய வரிகள் இவை.(கீழே).
வலைப்பதிவில்
பலபேர் தங்களது உண்மையான பெயரில் எழுதுவதில்லை. இந்த முகமூடிப் பதிவர்கள் (MASKED WRITER) எழுதுவதில் சுய கட்டுப்பாடு எதுவும் இல்லை.
வானமே எல்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். மற்றவர்கள் வலைத்தளம் வந்து
இஷ்டத்திற்கு கருத்துரைகளும் தருவார்கள்; சிலர் வம்புக்கு நிற்பார்கள். இந்த முகமூடி பதிவர்களிலும் நன்கு சுவாரஸ்யமாக எழுதுபவர்கள் உண்டு. இவர்கள்
தரும் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கும். சிலர் தரும் பின்னூட்டங்கள் உற்சாகம்
தருவதாயும் கருத்துக்கள் நிரம்பியதாகவும் இருக்கும்.
எனவே தன்விவரம் (PROFILE) தெரிவிக்க விரும்பாதவர்கள் , தாங்கள்
தெரிவிக்க விரும்பும் விவரத்தை மட்டும் கையேட்டில் வெளியிடலாம். வேண்டாம் என்றால் தேவையில்லை.
அல்லது இப்போது அவர்கள் தமது வலைத்தளத்தில் உள்ள தன்விவரம் (PROFILE) மட்டும் தந்தால்
போதும் என்பது எனது கருத்து. எனவே இந்த ஒரு
காரணத்திற்காக மட்டும் அவர்கள் புதுக்கோட்டைக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. அவர்களும்
வந்திருந்து விழாவை சிறப்புறச் செய்ய வேண்டும்.
( PICTURE COURTESY: GOOGLE IMAGES)
மிக மிகச் சிறப்பான கருத்தை முன் வைத்தமைக்கு மிக்க நன்றி, பாராட்டுகள், வாழ்த்துகள் ஐயா! வரவேற்க வேண்டிய கருத்து. இதை வாசிக்கும் முகமூடிப் பதிவர்கள் இதனை மனதில் கொள்ளலாமே!
ReplyDeleteதில்லைக்கது துளசிதரன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி. ஏதோ எனது மனதில் பட்டதை எழுதினேன்.
Delete
ReplyDeleteமுகமூடிப் பதிவர்கள் என்பது ஒரு சில நல்லவர்களையும் காயப் படுத்தும் அய்யா!
இதுவரையில் நான் என்னை வெளிப்படுத்துக் கொள்ள வில்லை. விளம்பர படுத்திக் கொள்ள விரும்பாததும் ஒரு காரணம். எழுத்துக்கள் பேசினாலே போதும் என்றிருந்தேன். வேண்டுமாயின் எனது புகைபடத்தை விழாக் குழுவினருக்கு அனுப்பி வைக்கிறேன்.
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
உங்கள் கருத்தே எனதும் சரியானதும்கூட. மேலும் இன்னும் நாளிருக்கிறதே என்ற என்னதிலும். கடைசியில் பார்த்துக்கொள்ளலாமே என்றும் நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள்.
Deleteசகோதரர் மன்னிக்கவும்! நான் யாரையும் காயப்படுத்தும் எண்ணத்தில் எழுதவில்லை. பொருத்தமான சொல் கிடைத்ததும் மாற்றி விடுகிறேன்.
Deleteசகோதரர் அன்பே சிவம் கருத்திற்கு நன்றி.
Deleteநீங்கள் குறிப்பிட்டுள்ளதுதான் உண்மையான காரணமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்நிலையில் பதிவர் கையேடு அவசியமா என்பதையும் சிந்திக்க வேண்டுகிறேன். இப்போதுள்ள அறிமுகங்களே போதும் என்று கருதுகிறேன்.
ReplyDeleteஇந்த பதிவர் கையேட்டிற்காக திரு முத்துநிலவன் பல முன்னேற்பாடுகள் செய்துள்ளார். அதை மாற்றுவது என்பது மனதிற்கு வேதனையளிக்கும் ஒன்றாகும். ஆனாலும் சுமார் 600 பதிவர்கள் தமிழ் மணத்தில் இருக்கும்போது வெறும் 50 பேர்களைக் கொண்ட ஒரு பதிவர் கையேடு யாருக்கு எந்த விதத்தில் உபயோகமாக இருக்கும் என்று சிந்திக்க வேண்டுகிறேன்.
ஒருவன் 20 குதிரைகளை நீர் நிலைக்கு ஓட்டிச் செல்லலாம். ஆனால் 20 பேர் சேர்ந்தாலும் ஒரு விருப்பமில்லாத குதிரையை நீர் அருந்தச் செய்ய முடியாது.
முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. விழாக் குழுவினர் எடுக்கும் முடிவே இறுதியானது.
Deleteஎங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பி விட்டதாக கேஜிஜி சொன்னார். அப்டேட் விவரங்களில் இன்னும் எங்கள் பெயர் வரவில்லை.
ReplyDeleteதம +1
அப்டேட்டில் எங்கள் பெயர் இடம்பெற்றுள்ளது என்பதைப் பார்த்து விட்டேன். மன்னிக்கவும்!
Deleteதேடும் அளவிற்கு வர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்....!
Deleteupdate விவரங்கள் எங்கு பார்க்கக் கிடைக்கும் என்று தெரிவித்தால் சரிபார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்,
Deleteசகோதரர் ’எங்கள் BLOG’ ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteசகோதரி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு, மேலும் அதிக விவரங்களுக்கு ”வலைப்பதிவர் சந்திப்பு – 2015 புதுக்கோட்டை
Deletehttp://bloggersmeet2015.blogspot.com என்ற வலைத்தளம் சென்று பார்வையிடவும்.
400 எதிர்ப்பார்த்தோம்... 200 வரை வந்துள்ளது... பார்ப்போம்...
ReplyDeleteகடைசியில் பார்த்துக்கொள்ளாலாம். இன்னும் நாளிருக்கிறதே என்று (என்னைப்போல்) சோம்பல் வியாதிக்காரர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். நிச்சயம் உங்கள் கனவு நிறைவேறும். வேண்டுமானால் பாருங்கள் கடைசி நேரத்தில் பதிவு செய்ய எவ்வளவு பேர் கூடுகிறார்கள் என்று.
Deleteசகோதரர் திண்டுக்கல் தனபால, அன்பே சிவம் இருவருக்கும் நன்றி. 400 இற்கு 200 என்பது 50%. இதுவே பெரிய வெற்றிதான். சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறுவோம்.
Deleteதாங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம் ஐயா
ReplyDeleteஅதற்கான வாய்ப்புகள் அதிகம்
ஆனாலும் எழுதுகின்றவர்களின் பெரும்பாலானவர்கள்
தங்களை வெளிப்படுத்தத் ஏன் தயங்குகிறார்கள் என்பது
புரியவில்லை ஐயா
எனக்குத் தெரிந்து ஒரே ஒரு காரணம்தான்
இச்செயலினை, கையேடு முயற்சியை
அவர்கள் பெரிதாக எண்ணவில்லை என்பதே
காரணமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்
தம +1
யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்பது என் கருத்து. 200 பதிவர்கள் தங்களைப்பற்றிய தகவல்களை அனுப்பியிருக்கிறார்கள் என்கிறார். வலைச்சித்தர் திண்டுக்கல்லார். இன்னும் நாட்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை 300 ஐத் தாண்டலாம். எனவே கிடைத்த தகவல்களைக்கொண்டு கையேடு வெளியிடலாம்.
ReplyDeleteஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களது கருத்துரைக்கு நன்றி. முதல் தடவை என்பதால் நிறையபேருக்கு சற்று யோசனையாகவே இருக்கும். அடுத்தமுறை அதிகம் பேர் கையேட்டிற்காக ஆர்வம் காட்டுவார்கள்.
Deleteமிக்க நன்றி இளங்கோ சார்...இந்த ஒருங்கிணைப்பு நாளை வலைப்பதிவர்கள் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் நிச்சயம் பயன்படும்....பதிவு செய்து விடுவார்கள் என நம்புகின்றோம்.....
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி.
Deleteஒரு சிலர் தங்கள் விவரங்களை பொதுவில் வெளியிட தயக்கம் காட்டுகிறார்கள் போல. விரைவில் மற்றவர்களும் தகவல் பகிர்ந்து கொள்வார்கள்.... நம்பிக்கையுடன் இருக்கலாம்.....
ReplyDeleteநன்றி அய்யா! தங்கள் வாக்கு பலிக்க வேண்டும்.
Deleteதக்க நேரத்தில் தகுந்ததொரு பகிர்வு இன்னும் நாட்கள் இருப்பதால் மற்றவர்களும் பதிவார்கள் என்று நம்புவோம்.
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி. தங்கள் வாக்கும் பலிக்க வேண்டும்.
Deleteமிக நல்ல கருத்து. கையேடு என்பது புதியவர்களுக்கு மிகவும் பயன்படும் என்பது என் கருத்து. விவரம் தராத பதிவர்களும் விரைவில் விவரம் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ReplyDeleteபத்திரிகையாளர் எஸ்.பி செந்தில் குமார் அவர்களது கருத்துரைக்கு நன்றி.
Deleteஎன்ன விவரங்களைக் கொடுப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன் .
ReplyDeleteஇதோ அனுப்பி விட்டேன் . ஞாபகப்படுத்தியதற்கு நன்றி .
சகோதரி அவர்களுக்கு நன்றி.
Deleteயோசிக்கிறேன்ஜி!
ReplyDeleteநேற்று என் வலையில் http://kuttikkunjan.blogspot.com/2015/09/t.html
குட்டன்ஜி சார்! சேட்டைக்காரனே தன்னை இன்னார் என்று அறிமுகம் சொல்லி வந்துவிட்டார். நீங்களும் ஒருநாள் வருவீர்கள்.
Deleteநான் என் விபரங்களை அனுப்பினால் மெயில் ஐ டி தப்பு என்று திரும்பி வந்துவிட்டது . சரியான மெயில் ஐ டி தெரிவித்தால் நன்றாக இருக்கும் .
ReplyDeleteசகோதரி அவர்கள் மன்னிக்கவும். Bloggersmeet2015205@gmail.com என்பதனை bloggersmeet2015205@gmail.com என்று திருத்திக் கொள்ளவும் மேலே நானும் திருத்தி விட்டேன்.
Deleteவலைப் பதிவர்கள் பொதுவாகவே மெத்தனமாக இருக்கிறார்களோ என்றே தோன்றுகிறதுபதிவர் சந்திப்புக்கு வராவிட்டாலும் கையேட்டுக்காக விவரங்கள் தருவதில் என்ன நஷ்டம்
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete//இந்த முகமூடிப் பதிவர்கள் (MASKED WRITER) எழுதுவதில் சுய கட்டுப்பாடு எதுவும் இல்லை. வானமே எல்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். மற்றவர்கள் வலைத்தளம் வந்து இஷ்டத்திற்கு கருத்துரைகளும் தருவார்கள்; சிலர் வம்புக்கு நிற்பார்கள். இந்த முகமூடி பதிவர்களிலும் நன்கு சுவாரஸ்யமாக எழுதுபவர்கள் உண்டு.//
ReplyDeleteமுகமூடி என்று சொல்வது அவ்வளவு சரியில்லை.
இன்றைய நிலவரப்படி, பல பல தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர் வெளி நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து கொண்டு தான் இருக்கின்றன.அவற்றில் ஏதேனும் அந்த நிறுவனத்தின் கொள்கைக்கோ அல்லது வணிகப் போக்குக்கு மாறுபட்ட கருத்துகள் கூறப்பட்டால் , உடனடி யாக, அந்த ஊழியர் மீது வேறு ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி, டிஸ்மிஸ் செய்கின்றனர். அரசு அல்லது அரசைச் சார்ந்த நிருவனங்களில் வேலை பார்த்த நம்மைப்போன்றவர்களுக்கு இவர்களது ஹெச். ஆர்.கொள்கை விபரீதமாக படுகிறது. இந்த நிலையில் தமிழ்ப் பதிவர்கள் தமது தமிழ் ஆர்வத்தினால், தமது இயற்பெயரை சற்றே மாற்றிக் கொண்டு விடுவதில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை.
அப்படிப் பார்த்தால் சாண்டில்யன், சுஜாதா, அவர்களுக்கு அவர்கள் பெற்றோர் வைத்த பெயர் என்ன ?
ஷேக்ஸ்பியர் பெயர் என்ன ?
மா.கா. பா. என்று விஜய். டிவி யிலே கொடி கட்டி பறக்கிறாரே !!
அவர் பெயர் என்ன?
என்னவா இருந்தால் என்ன?
அவர் எழுதுவது, பேசுவது, நடிப்பது, நடப்பது, நடந்து காட்டுவது நமக்கு பிடிக்கிறது.
அது போதுமே.
நமது வீட்டு வாசற்கதவுகள் திறந்து இருக்கின்றன. வருபவரை இரு கரம் குவித்து, சிரம் தாழ்த்தி வரவேற்போம்.
என்ன சரிதானே !!
அது இருக்கட்டும். புதுகைக்கு வரும்போது சுப்பு தாத்தா உங்கள் வீட்டுக்கு வருவார் என பட்சி ஆருடம் கூறுகிறது. .
காபிலே சக்கரை குறைச்சலா இருக்கணும். நோ அதர் டிமாண்ட்ஸ்.
சுப்பு தாத்தா அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. சில நாட்களாக வெளியூர் பயணம் மற்றும் அலைச்சல். இதானால் உடன் மறுமொழி இட இயலவில்லை.
Delete// முகமூடி என்று சொல்வது அவ்வளவு சரியில்லை. //
அவர்கள் முகமூடிகளாக இருப்பதால்தான் சுதந்திரமாக வலைப்பக்கத்திற்கே உரிய கருத்துச் சுதந்திரத்தோடு எழுதுகிறார்கள் என்பது எனது கருத்து.
உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். வரவேற்க காத்திருக்கிறேன்.
வணக்கம்
ReplyDeleteஐயா
மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... யாவரும் அறியும் படி.. நிகழ்வு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.த.ம 12
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனனானிமிட்டி?
ReplyDelete
Deleteஆங்கில ஆசிரியர் எஸ். மது அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொல்லும் அனனானிமிட்டி > anonymity இந்த வலைப்பதிவர்களுக்கு பொருந்துமா? என்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் தெரிந்தும் தெரியாமலும், மறைந்தும் மறையாமலும் இருக்கிறார்கள்.
(anonymity > தெரியாத )
மற்றவர்களுக்குஎப்படியோ.. எனக்கு தெரிந்த சில முகமுடி பதிவர்களுக்கு தயக்கமும் ஒதுங்கும் போக்கும் இருக்கிறது.....
ReplyDeleteதோழர் வலிப்போக்கன் அவர்களுக்கு நன்றி.
Deleteசிந்திக்க வேண்டும் பதிவர்கள் ஐயா.
ReplyDeleteசகோதரர் சிவநேசன் (தனிமரம்) அவர்களுக்கு நன்றி.
Deleteபதிவர் கையேட்டுக்கு பேருதவி செய்கிற பதிவு அண்ணா!! மிக்க நன்றி!
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி.
Deleteஉங்கள் தொலை பேசி எண் எங்கோ காணாமல் போக்கிவிட்டேன் அஞ்சலில் அனுப்ப முடியுமா? நன்றி.
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் வருகைக்கு நன்றி. எனது செல் எண் மற்றும் சில நண்பர்களது எண்களையும் மின்னஞசல் வழியே அனுப்பி வைத்துள்ளேன்
Deleteஒரே வேளை உண்மையான விபரங்கள் கொடுத்தால், பதிவர்களை அமுக்குவான் பேய் வந்து ஒரே அமுக்கா அமுக்கி விடும் என்ற பேப்பயம் இருக்கலாம். புதுக்கோட்டையில் அமுக்குவான் பேய் இருப்பதாக ஐதீகம். அமுக்குவான் பேயைப்பற்றி தெரிந்து கொள்ள:
ReplyDeletehttp://senthilmsp.blogspot.com/2015/09/blog-post_19.html
அமுக்குவான் பேயின் சேட்டையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. அனானிமஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அமுக்குவான் பேய் பதிவையும் இன்னும் பல நண்பர்களது பதிவுகளையும் இனிமேல்தான் படிக்க வேண்டும்
ReplyDeleteஉபயோகமான பதிவு!
ReplyDeleteஎழுத்தாளர் ஆரண்ய நிவாஸ் ஆர், ராமமூர்த்தி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete