நான் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த நேரம். அரசு பள்ளி ஹாஸ்டலில்
தங்கி படித்து வந்த எனது நண்பன் ஒருவனைக் காண சென்று இருந்தேன். அவனிடம் பேசிக் கொண்டு
இருந்தபோது, இடையில் கழிவறை செல்ல வேண்டி இருந்தது. அங்கே சுவற்றில் முதன்முதலாக சில
கிறுக்கல்களைக் காண முடிந்தது. பெரும்பாலும் ஒரே ஆபாசம். சிலவற்றை அழித்து இருந்தார்கள்.
வார்டனை மறைமுகமாக திட்டியும், நடிகர் நடிகைகளைப் பற்றியும் கிறுக்கி இருந்தார்கள்.
அங்கிருந்து வந்தவுடன் நண்பனிடம் இதுபற்றி கேட்டேன். ”இதெல்லாம் இங்கு சகஜம்; வார்டனால்
ஒன்றும் செய்ய முடியவில்லை; இப்போது யாரும் கண்டு கொள்வதில்லை” என்றான்.
கவிதை ஒன்று:
ஆசிரியர் மதுரை சரவணன் அவர்கள் மாணவர்களின் இந்த கிறுக்கல்கள் பற்றி
http://veeluthukal.blogspot.in/2012/02/blog-post.html
என்ற தனது பதிவினில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அதிலிருந்து சில வரிகள்.
கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
இன்னும் மாறாமல் அதே
விதம்..
எத்தனை முறை வெள்ளையடித்தாலும்
கழிப்பறை சுவர்கள்
ஏதோ ஒரு மாணவனின்
மனக்குமுறலுக்கான
கிறுக்கலுக்காக
காத்துக்கிடக்கின்றன….
கல்லூரிக்கு சென்ற போதும் அங்கும் இப்படித்தான். கழிவறைகளில் ஆபாச
கிறுக்கல்கள். பேராசிரியர்கள் – பேராசிரியைகள், நடிகர்-நடிகைகள், அரசியல்வாதிகள் என்று
இஷ்டத்திற்கு அவர்களைப் பற்றி எழுதி இருப்பதைக் காணமுடிந்தது.
கழிவறைக் கிறுக்கல்கள்
(Latrinalia)
இந்த கிறுக்கல்களை பொதுவாக பொதுக் கழிவறைகளில் அல்லது பொது குளியல்
அறைகளில் மட்டுமே காணலாம். இவ்வாறு எழுதுவதை கழிவறைக் கிறுக்கல்கள் (Latrinalia) என்று
சொல்கிறார்கள். உடம்பில் அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்வதைப் போல, மனதில் உண்டாகும்
அரிப்பை போக்கிக் கொள்ள அல்லது தன்னுடைய இயலாமைக்கு வடிகாலாக சிலர் எழுதும் கிறுக்கல்கள்தான்
இவை. சிலரின் மனக்குமுறல்களாகவும் இருக்கும். சிலரின் குறுங்கவிதைகளையும் இங்கே காணலாம்.
பெரும்பாலும் அவசரம் அவசரமாக சாக்பீசாலோ, கரித்துண்டினாலோ, அல்லது ஸ்கெட்ச் பென்சிலாலோ
எழுதப்பட்ட குறுஞ்செய்திகள் (SMS என இவற்றை சொல்லலாம். சிலசமயம் சிறிய படங்களாகவும்
இருக்கலாம். எழுதுபவரின் மனநிலையைப் பொறுத்தது.
லட்சுமிகாந்தன்:
இதே பாணியில்தான் அந்நாளில் சினிமா நடிகர் நடிகைகளின் அந்தரங்கத்தைப்
பற்றி பொய்யாகவும், இருப்பதை மிகைப் படுத்தி எழுதியும் ஒரு பத்திரிகை வந்தது. பத்திரிகையின்
பெயர் ‘இந்துநேசன்’. இதனை மஞ்சள் பத்திரிகை என்று சொன்னார்கள். இதன் ஆசிரியர் லட்சுமிகாந்தன்.
இதற்கும் வாசகர் கூட்டம் இருந்தது. பத்திரிகையை வாங்கியதும் மறைத்து வைத்துக் கொள்வார்கள்;
மறைத்தே படிப்பார்கள். ஒருநாள் இந்த லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தமிழ் சினிமா
பிரபலங்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு
ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு அந்நாளில் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’
என்று பிரபலமாக பேசப்பட்டது.
பொது இடங்களில்:
தினமலர் தரும் செய்தி இது:
திருச்சி: திருச்சி
கலெக்டர் அலுவலக கழிவறை கதவுகளில் ஆபாச படங்கள், வாசகங்களை சிலர் கிறுக்கி வைத்துள்ளதால்,
அங்கு செல்பவர்கள் முகத்தை சுளிக்கும் நிலை உள்ளது. … … … இந்த கழிவறை கதவுகளின் உள்புறம்
சிலர், ஆபாச படங்கள் வரைந்தும், வாசகங்கள் எழுதியும் வைத்துள்ளனர். முகம் சுளிக்க வைக்கும்
இந்த செயல், கழிவறை செல்வோருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.ஆர்.ஓ., அலுவலகம்
அருகே உள்ள ஆண்கள் கழிவறை கதவுகளில், ஆபாச படங்கள், வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும்,
மொபைல்ஃபோன் எண்களை எழுதி வைத்து, அதன் கீழ் பெண்களின் பெயரை எழுதி வைத்துள்ளனர். இதுபோன்ற
செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரசு
அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். - (நன்றி: தினமலர்
– 27 பிப்ரவரி 2012)
இப்போதும் ஒவ்வொரு ஊர் பஸ் ஸ்டாண்டிலும், பொதுக் கழிவறைகளில் (கட்டணக்
கழிப்பிடங்களிலும்) இந்த மாதிரியான கிறுக்கல்களைக் காண முடியாவிட்டாலும் சிறுசிறு பிட்டு
நோட்டீசுகளை ஒட்டி இருப்பதைக் காணலாம். எல்லாம் மூல பவுத்திரம், எரனியா, ஆண்மைக்குறைவு
சிகிச்சை பற்றியவை. டாக்டரின் பெயர், செல்போன் எண்களோடு இருக்கும். இவர்கள் உண்மையிலேயே
டாக்டர்கள்தானா என்று சொல்ல முடியாது. இது ஒருவகை உளவியல் தந்திரம். காசு பார்க்கும்
யுக்தி எனலாம்.
( PICTURE COURTESY: GOOGLE IMAGES)
வக்கிர புத்தி உடையவர்களும் ஏதோ மன நோய்க்கு ஆளானவர்களின் செயல்கள்.
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் உளவியல் ரீதியான கருத்துரைக்கு நன்றி.
Deleteஉடல் கழிவுகளை மட்டுமல்ல
ReplyDeleteசிலரது மனக் கழிவுகளையும் கொட்டும் இடமாக
பொதுக் கழிவறைகள் மாறிவிட்டன ஐயா
தம 1
ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஇப்படியும்
ReplyDeleteசிலரது
மனநிலை!
மயிலாடுதுறை சகோதரரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஎன்ன திடீர்னு இந்த தகவல்கள் எல்லாம்? அது எப்பவும் இருக்கிறதுதானே!
ReplyDeleteசென்றவாரம் கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டு பெரிய காரியம் சென்று வந்தேன். வழியில் தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் பஸ் மாறவேண்டி இருந்தது. அப்போது அங்கு இருந்த கட்டணக் கழிப்பிடத்தில் கண்ட சில விளம்பரங்கள் இந்த கட்டுரையை எழுத வைத்து விட்டன. சகோதரர் கவிப்ரியன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஇரயில் பெட்டிகளில் உள்ள கழிவறையிலும் இது போன்ற கிறுக்கல்கள் இருக்கும். அவைகள் எல்லாம் கிறுக்கர்களின் பேத்தல்கள் என எண்ணி ஒதுக்குவதே நலம்
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ரெயில் பெட்டிகளை மறந்தே போய் விட்டேன். நினைவு படுத்தியமைக்கு நன்றி.
Deleteஆமாம் நானும் பேருந்து மற்றும் ரயல் பெட்டிகளில் பார்ப்பது உண்டு. தன் வீட்டில் இது போன்ற செயல்களை செய்வார்களா? என்பதை அவர்கள் யோசிக்க நினைத்தால் இப்படி கிறுக்க மாட்டார்கள்.
ReplyDeleteசகோதரி கவிஞர் ’தென்றல்’ சசிகலா அவர்களின் கருத்துரைக்கு நன்றி
Deleteஇந்திய விடுதலை வேண்டி
ReplyDeleteபாரதி தெருவழியே
கரித்துண்டால் கிறுக்கியது போல
கழிவறைக் கிறுக்கல்கள் இருந்தால்
பரவாயில்லை...
படுபாவிகள், பாழாய்ப் போனவங்க
கழிவறைக் கிறுக்கல்களென
கெட்டதையெல்லோ
எழுதிக்கொட்டுறாங்கோ
கழிவறைக் கிறுக்கல்காரர்களை
கொன்றொழிக்க வேண்டுமே!
http://www.ypvnpubs.com/
கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் உணர்ச்சிகரமான கருத்துரைக்கு நன்றி!
Deleteரயில் பெட்டிகளில் இப்படி நிறைய உண்டு. மனக்குமுறல்களும், வக்கிர எண்ணங்களும் வெளிப்பட்டு இருக்கும். இவை இல்லாத கழிவறைகளே இல்லை என்று சொல்லி விடலாம்!
ReplyDeleteசில அலுவலகங்களில் இப்படி எழுதி வைக்க, சில நாட்களில் வெள்ளை அடிக்க, மீண்டும் மீண்டும் இது மாற்றி மாற்றி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது....
சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteதங்களது இப்பதிவு மூலமாக Latrinalia எனப்படும் புதிய ஆங்கிலச் சொல்லை அறிந்தேன். உளவியல் அடிப்படையில் சில கூறுகள் இவ்வாறான கிறுக்கல்களில் உள்ளதைக் காணமுடியும். நன்றி.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. Youtube இல் latrinalia என்ற தலைப்பில் குறும்படங்களும் உள்ளன.
Deleteநம் நண்பர்கள் தமிழ் வளர்க்கிறார்கள்
ReplyDeleteஅன்பேசிவம் அவர்களே! நாம் இச்சைத் தமிழை வளர்க்க நினைக்கிறோம். இவர்களோ கொச்சைத் தமிழை வளர்க்கிறார்கள்.
DeleteThanks for the word Latrinalia. Looks like a pshicological disorder..............
ReplyDeleteநல்லவேளை நீங்கள் வேறு ஒன்றும் சொல்லவில்லை. நன்றி.
Deleteரயில் பெட்டிகளிலும் மற்ற பொதுக்கழிப்பிடங்களிலும் இம்மாதிரியான கிறுக்கல்களைக் காணும்போது எனக்குத் தோன்றும் ஒரே கேள்வி; 'இதற்காகவே இம்மாதிரியான நபர்கள் எப்போதும் தங்கள் பாக்கெட்டுகளில் பென்சில்களை வைத்திருப்பார்களா?'
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஅமுதவன் அய்யா அவர்களுக்கு நன்றி. பெரும்பாலும் இரண்டும் கெட்டான் வயசு மாணவர்கள்தான் இவ்வாறு எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எழுது பொருட்கள் ஒரு தடை இல்லை. எப்படியும் எடுத்துச் செல்வார்கள்.
Deleteஐயா இரண்டும் கெட்டான் வயசு என்றில்லை ஐயா, பெரியவர்கள் கூட....எழுதுகின்றார்கள்.
Deleteஅதனால் தான் எனக்குத் தோன்றுவது ஏதோ ஒரு வகையில் இவர்கள் எல்லாம் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள்...பார்ப்பதற்கு சாதாரணமானவர்களாகத் தெரிந்தாலும்...சிலருக்கு இது ஒரு வழக்கமாகவே இருந்து வருகின்றது. தொலைபேசி, அலை பேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதே பென்சிலாலோ, பேனாவாலோ அருகில் இருக்கும் எந்த ஒரு காகிதம் இல்லை புத்தகத்தில் ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருப்பார்கள், வரைந்து கொண்டிருப்பார்கள். சில சமயம் அதில் அவர்களது மன அலைகள் வெளிப்படுவதும் உண்டு. இப்படி அவர்கள் கிறுக்குவதை பல சமயங்களில் விட்டு விட்டுப் போய்விடுவதால் அப்படி எனக்குக் கிடைத்த பல கிறுக்கல்களில் சில நல்ல வகை முடிவுகள், சிலரது மன நிலைகள் தெரிய வாய்ப்பும் கிடைத்தது உண்டு...இப்போது உங்கள் இந்தப் பதிவை வாசித்த போதுதான் தோன்றுகின்றது...அட நாம் பார்த்தவற்றை அதில் கிடைத்த சில சுவாரஸ்ய தகவல்கள் என் அனுபவத்தைப் பதிவிடலாம் போல என்று...
மிக்க நன்றி ஐயா.....இந்தப் பதிவு ஒரு பதிவிற்கு ஒரு நல்ல கருத்தைக் கொடுத்தமைக்கு...
கீதா
இது பொது இடங்களில், புகைவண்டிகள், பேருந்துகளில் கூட....அலை பேசி எண்ணெல்லாம் குறிப்பிட்டு வக்கிரமான எண்ணங்களைக் கிறுக்கி வைத்திருப்பார்கள். ஏன் பள்ளிகளில் கூட இப்போது சகஜமாகி வருகின்றது.....அலுவலகங்களில், அலுவலகக் கழிப்பறகளில் என்று....
ReplyDeleteஏதோ ஒரு கூரான ஆயுதம், ஊசியோ, இல்லை கத்தியோ, ப்ளேடோ கொண்டுதான் எழுதுகின்றார்கள். கிராமப்புறங்களில், செங்கல், கரித்துண்டு கொண்டு ஆபாசமான அதாவது அந்தக் கிராமத்தில் ஏதேனும் பெண்ணோ, ஆணோ பழகினால், நட்புடன் உடன் அவர்களைக் குறித்து ஆபாசமாக வரைந்து வாசகங்கள் எழுதி ஊரெல்லாம் செய்தி பரவும் வகையில் செய்யும் விஷக் கிருமிகள் இருக்கின்றார்கள்...
எனக்குத் தோன்றும் இவர்கள் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு வகையில் மன நிலை சரியில்லை என்றே...மனம் நல்ல நிலையில் இல்லை என்றே தோன்றும்....
கீதா