புதுக்கோட்டையில் வரும் 11.10.2015 (ஞாயிறு) அன்று நடக்க இருக்கும் வலைப்பதிவர் மாநாட்டிற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. நம்ம வீட்டுக் கல்யாணத்தில் நாம்தான் தோரணம் கட்ட வேண்டும் என்று, புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் முழு உற்சாகத்தோடு மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
விழாக்குழு பதிவர்கள்
பாவலர் பொன்.கருப்பையா பொன்னையா(
pudugaimanimandram
விதைக்’கலாம்’ -புதுகை நண்பர்களால்
மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் துவக்கப்பட்ட
அமைப்பு. ( விதைக்KALAM
http://vithaikkalam.blogspot.in)
மேலும் திண்டுக்கல் தனபாலன் ( http://dindiguldhanabalan.blogspot.com
) அவர்கள் இந்த விழாவிற்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக இருந்து பெரும் பங்காற்றி
வருகிறார். அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
கையேடு
இன்றைய தேதியில் தமிழ்மணம் தமிழ் வலைப்பதிவுகளின்
தர வரிசை (Traffic Rank) பட்டியலில்
1 முதல் 664 வலைப்பதிவர்கள் உள்ளனர். எனினும் தமிழ் வலைப்பதிவர்கள் எத்தனை பேர்
என்று துல்லியமாக சொல்ல இயலாது. அதிலும் எத்தனை வலைப்பதிவர்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள்
என்றும் கணக்கெடுக்க இயலாது. எனினும் இந்த மாநாட்டில் புதிய முயற்சியாக வலைப்பதிவர்கள்
பற்றிய கையேடு (HANDBOOK) ஒன்றை வெளியிட இருக்கிறார்கள். எனவே அன்பான வலைப்பதிவர்கள்
அனைவரும்( நீங்கள் விழாவுக்கு வராவிடினும்) தம்மைப் பற்றிய விவரங்களை bloggersmeet2015205@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.09.2015 இற்குள்
அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும்
விவரங்களுக்கு ”வலைப்பதிவர் சந்திப்பு – 2015
புதுக்கோட்டை
http://bloggersmeet2015.blogspot.com என்ற வலைத்தளம் சென்று
பார்வையிடவும். ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் தமது வலைத்தளத்தில்
தந்த குறிப்பு இங்கே கீழே.
கையேட்டிற்காக பதிவர்கள் தாம் வெளியிட்ட நூல்கள் குறும்படங்கள் பெற்ற விருதுகள்,
சிறப்புகள் விவரங்களைத் தர விரும்பினால் தரலாம்.
கையேட்டில்
வெளியிட விரும்பினால் பதிவர்கள் தமது செல்பேசி எண், புகைப்படத்தை அனுப்பலாம். அல்லது ப்ரொஃபைல் லோகோ இருந்தாலும் இணைத்து அனுப்பலாம்.
விழாவிற்கு வரவிரும்பாதவர் யாரும் இருக்கப் போவதில்லை. எனினும், வர இயலாதவர்களும் அந்த விவரத்துடன் தமது வலைப்பக்க விவரங்களைத் தரலாம். அவர்களின் வலைப்பக்க விவரம் இலவசக் கையேட்டில் சேர்க்கப்படும்.
நம்ம வீட்டு கல்யாணம்:
அன்னக்கிளி 1976 இல் வெளிவந்த சிவக்குமார் – சுஜாதா நடித்த கறுப்பு
வெள்ளை படம். இந்த படத்தில் வரும் பஞ்சு அருணாசலம் பாடல் ஒன்று (இசை: இளையராஜா - பாடியவர் ஜானகி ) இப்போது
நினைவுக்கு வருகிறது. அந்த பாடல் இதுதான்.
அடி ராக்காயி மூக்காயி குப்பாயி
செவப்பாயி கஸ்தூரி மீனாக்ஷி
தங்கப்பல் கரையா தங்கமகளுக்கும்
வாத்யாரையாவுக்கும் தை மாசம் கல்யாணம்
நெல்லு குத்த வாங்கடியோ
செவப்பாயி கஸ்தூரி மீனாக்ஷி
தங்கப்பல் கரையா தங்கமகளுக்கும்
வாத்யாரையாவுக்கும் தை மாசம் கல்யாணம்
நெல்லு குத்த வாங்கடியோ
சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா
வேணும்
முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்
பத்தோடு ஒண்ணு பலகாரம் பன்ன
சத்தாக மாவிடிங்க ஓ ஒய்யா
கல்லோடு உமியும் சேராம பாத்து பக்குவமா இடிங்க
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
இதுதானே கல்யாண விருந்தென்று
ஊரே பாரட்ட வேணும்
முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்
பத்தோடு ஒண்ணு பலகாரம் பன்ன
சத்தாக மாவிடிங்க ஓ ஒய்யா
கல்லோடு உமியும் சேராம பாத்து பக்குவமா இடிங்க
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
இதுதானே கல்யாண விருந்தென்று
ஊரே பாரட்ட வேணும்
- பாடல்: பஞ்சு அருணாசலம்
முழு பாடலையும் கண்டு கேட்டு மகிழ்ந்திட பின்வரும் இணையதள முகவரியினை
(CLICK) சொடுக்குங்கள்.
நம்ம வீட்டுக் கல்யாணத்தில் ஒன்றுகூடுவோம்.
ReplyDeleteமுனைவர் அய்யா அவர்களின் ஊக்கமான கருத்துரைக்கு நன்றி.
Deleteஒரு தகவல் வேண்டுகிறேன் திருச்சியிலிருந்து புதுக் கோட்டை எவ்வளவு தூரம். திருச்சியில் தங்கி புதுக்கோட்டைக்கு பதிவர் விழாவில் கலந்து கொள்ள முடியுமா. நன்றி.
ReplyDelete56 KM - 1 மணி நேர பயணம் தான் ஐயா... முதல் நாளே வருவதனால் அறை ஏற்பாடுகள் புதுக்கோட்டையிலே உண்டு... நன்றி...
Deleteஅய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம். திருச்சி to புதுக்கோட்டை 55 கி.மீ. பயண நேரம் : டாக்சியில் சென்றால் 1 மணி நேரம் ஆகும் ; பஸ்ஸில் சென்றால் 1½ முதல் 1¾ மணி நேரம் ஆகலாம்.
Deleteதிருச்சியில் மாநாட்டிற்கு முதல்நாள் (சனிக்கிழமை) வந்து தங்கிக் கொண்டு , மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் 5 அல்லது 6 மணிக்கு கிளம்பி புதுக்கோட்டைக்கு ஒரு மணி நேரத்தில் (டாக்சியில்) சென்று விடலாம். N.H சாலைப் பயணம்தான்.
http://distancebetween.info
நாம் பயணம் செய்ய வேண்டிய ஊர் எவ்வளவு தொலைவில் உள்ளது, பயண நேரம், பஸ் கட்டணம், சாலை வழியே பயணம் செய்யும் போது எது நேர்வழி – முதலான விவரங்களை மேலே சொன்ன இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
புதுக்கோட்டையிலும் நல்ல தங்கும் விடுதிகள் உண்டு. உங்களைப் போன்றவர்கள் மாநாடு நடக்கும் மண்டபம் (புது பஸ் ஸ்டாண்ட் ) அருகில் உள்ள விடுதி ஒன்றில் தங்கிக் கொள்ளலாம்.
புதுக்கோட்டையில் வந்து தங்கும் வலைப்பதிவர்களுக்கும், ஊர் சுற்றி பார்க்க விரும்புபவர்களுக்கும் புதுக்கோட்டை நண்பர்களே வழிகாட்டுதல் செய்து உதவுவார்கள் என்று கேள்விப்பட்டேன். இது பற்றி புதுக்கோட்டை நண்பர்களிடம்தான் கேட்க வேண்டும்.
1.இந்த தங்கும் ஏற்பாடுகள் பற்றிய விபரங்கள் இது வரை எங்கும் வெளியாகவில்லை. இது வெளியூர்ப் பதிவர்களுக்கு மிகவும் அவசிய, அவசரத்தேவை. உடனே விபரங்கள் தெரிந்தார் நன்றாக இருக்கும்.
Delete2. நான் கையேட்டிற்கான குறிப்பை வெகு நாட்களுக்கு முன்பே அளித்து விட்டேன். இதுவரை இக்குறிப்புகள் அளித்தவர்களின் பட்டியல் ஒன்று வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_7.html
Deleteமேலே உள்ள பதிவில் வருகையை உறுதி செய்தவர்களின் பட்டியல் (1) உள்ளது... அவர்கள் வருகைப் பதிவு படிவம் மூலமாக அனைத்து விவரங்களையும் எடுத்துக் கொள்கிறோம்... தன்னைப் பற்றியோ அல்லது தன் தளத்தைப் பற்றியோ படிவத்தில் சரியாக நிரப்பாதவர்கள் மீண்டும் அனுப்புகிறார்கள்... மேலும்...
பதிவர் விழாவிற்கு வருகைக்கு வாய்ப்பே இல்லதவர்கள் மின்னஞ்சலில் தனது விவரங்களை அனுப்புகிறார்கள்...அவர்களின் பட்டியலும் (2) தனியாக மேலே உள்ள பதிவில் உள்ளது... அவ்வாறு அனுப்பியவர்களின் தகவல்கள் 99% முழுமையாக உள்ளன எனபதையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு : நீங்கள் படிவத்தில் "கையேட்டில் வர வேண்டிய குறிப்புகள்" என்பதில் கொடுத்துள்ள விவரங்கள் படி அல்லது மின்னஞ்சலில் அனுப்பிய விவரங்கள் படி கையேட்டில் வரும்... நன்றி...
விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி. இது விஷயமாக விழாக்குழுவினருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தேன். மேலே உள்ளது அவர்களிடமிருந்து வந்த உங்களுக்கான மறுமொழி. இது விஷயமாக மேல் விவரம் வேண்டின் அவர்களோடு தொடர்பு கொள்ளவும்.
Deleteஆஹா அருமையாக பகிர்ந்துள்ளீர்,
ReplyDeleteநன்றி.
சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteரசிக்க வைக்கும் பாடலுடன் விழாக்குழு பதிவர்களின் தள இணைப்புகளுக்கும் நன்றி ஐயா...
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteவிழாக்குழுவினர் பம்பரம் போல் சுற்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என அறிந்து மகிழ்ச்சி. பதிவர் திருநாளில் எனக்கு வேறு முக்கியமான வேலை இருப்பதால் கலந்துகொள்ள இயலாது. அதனாலென்ன.தங்களைப் போன்ற நண்பர்களின் பதிவில் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்வுகளை படித்து இன்புறுவேன். எனது பதிவு பற்றிய விவரங்களை அனுப்பிவிட்டேன்.
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சென்ற ஆண்டு மதுரையில் நடைபெற்ற விழாவில் உங்களை எதிர்பார்த்தேன். இப்போது புதுக்கோட்டைக்கும் உங்களால் வர இயலாத சூழ்நிலை.
Deleteமிக்க நன்றி சார்.....விழாவினை சிறப்பாக நடத்துவோம்...ஒன்றிணைந்து...
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி.
Deleteதகவல்கள் நன்று நண்பரே
ReplyDeleteதமிழ் மணம் 3
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. (கடந்த ஒரு வாரமாக வலைப்பக்கம் தொடர்ந்து என்னால் வர இயலவில்லை.)
Deleteநம்ம வீட்டு கல்யாணத்தில் வந்து ,தாலி எடுத்து கொடுக்கப் போவதே நான்தான் :)
ReplyDeleteஆஹா!! உங்களுக்குள ஒரு சுப்ரமணிய சுவாமி ஒளிந்திருப்பது இன்றுதான் தெரிகிறது பாஸ்!!!
Deleteநான் சொல்ல இருந்த கருத்தை சகோதரி அவர்களே சொல்லி விட்டார்.
Deleteஅண்ணா!
ReplyDeleteஉண்மையாகே அந்த பாடல் மூடில் தான் புதுகை இப்போ இருக்கு!! நச்சுன்னு காட்ச் பண்ணிடீங்களே!! தங்கள் மேலான அன்பிற்கு புதுகை விழாக்குழுவின் சார்பாக நன்றி அண்ணா!
புதுக்கோட்டை வலைப்பதிவு நண்பர்கள் அனைவருமே வலைப்பதிவில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் என்பது தெரிந்த விஷயம். அதிலும் அவர்கள் ஊரிலேயே வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றால் அவர்களது உற்சாகம் பற்றி சொல்லவும் வேண்டியதில்லை. சகோதரி அவர்களது கருத்துரைக்கு நன்றி.
Deleteஅருமையாக தொகுத்து கூறிய விதம் அழகாக இருந்தது. பதிவர் சந்திப்புக்காக அனைவரும் பாடுபடுவது எங்கும் காணமுடியாத சிறப்பு.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
த ம 6
பத்திரிக்கையாளர் எஸ்.பி.செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி.
Deleteபதிவர் திருவிழாவிற்குப் பொருத்தமான பாடல்தான் ஐயா
ReplyDeleteநன்றி
தம +1
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
Deleteஅருமையான தொகுப்பு......
ReplyDeleteவிழா சிறக்க எனது வாழ்த்துகளும்.
சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
தகவலை மிகவும் அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி சில நாட்களாக நான் வலைப்பக்கம் வர முடியவில்லை. ஏன் என்றால் எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்... இப்போது தகவலை அனுப்புகிறேன் ஐயா த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி. என்னாலும் கடந்த ஒரு வாரமாக வலைப்பக்கம் தொடர்ந்து வர இயலவில்லை.
Deleteஅய்யா தங்களின் இனிய தகவல் தொகுப்பு அருமை.
ReplyDeleteஅதில் நந்தலாலா என்பது நபரல்ல. கவிதைக்கான இணைய இதழ் அதன் ஆசிரியர் அதேவரிசையில் பின்பகுதியில் குறிப்பிட்டுள்ள கவிஞர் வைகைறை அவர்கள்.
(நந்தலாலா உங்கள் ஊரைச் சேர்ந்த பிரபல பேச்சாளர்)
அப்புறம் ஆசிரியை என்று பெண் ஆசிரியர்களைக் குறிப்பிட வேண்டாம். அது பெண்பால் எனில் அதற்கான ஆண்பால் ஆசிரியன் தானே? அப்படி நாம் எழுதும் வழக்கமில்லை அல்லவா? எனவே இருபாலருக்கும் பொதுவான மரியாதைக்குரிய “ஆசிரியர்“ எனும் பலர்பாலையே குறிப்பிடலாம் என்பது என் கருத்து. அதே போல பெயர்களின் முன்எழுத்தை - தாங்கள் சரியாக வைத்திருப்பது போல எங்களில் பெரும்பாலார் -தமிழில்தான் வைத்துள்ளனர் அவர்களின் ஆங்கில முன்னெழுத்து (இனிஷியல்)களை மாற்றி அவர்கள் வைத்துள்ளபடியே தமிழில் இட்டுவிடுங்கள். இதெலலாம் சின்ன விடயங்கள்தாம் எனினும் இயலும்வரை எல்லாவற்றிலும் சரியாக இருக்க முயல்வதும், அதில் பிழையேற்படடால் திருத்திக்கொள்வதும் சரியானதுதானே? தங்களின் பொறுப்பான பதிவிற்கு விழாக்குழுவின் சார்பில் நன்றி.
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. தாங்கள் சுட்டிக் காட்டிய பிழையை (நந்தலாலா) சரி செய்து விட்டேன்.
Deleteஆசிரியை என்று சொல்லக் கூடாது ; ஆசிரியர் பணியில் இருப்பவர்களை ஆண்,பெண் இருவரையும் ‘ஆசிரியர்’ என்றுதான் குறிப்பிட வேண்டும் என்று நீஙகள் உங்கள் நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளது நினைவுக்கு வருகிறது. பொதுவாக ஆங்கில மரபில் TEACHER என்று குறிப்பிடுகிறார்கள்; நம் நாட்டில் டீச்சர் என்றால் ஆசிரியையை மட்டுமே குறிக்கும் சொல்லாக பயன்படுத்துகிறார்கள் அதன்படி எழுதினேன். ஆசிரியைகளிடம்தான் கேட்க வேண்டும்.
வலைப்பதிவர் பெயர்களை எழுதும்போது, அவரவர் வலைப் பதிவினில் Poted by என்ற இடத்தில் குறிப்பிட்டு இருந்ததையே இங்கும் குறிப்பிட்டுள்ளேன். இனி தமிழில் எழுதும்போது நீங்கள் சொன்னபடியே செய்கிறேன் அய்யா.
ஆசிரியர் அவர்களின் நீண்ட கருத்துரைக்கும், எனது தவறுகளை சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி.
அன்புள்ள அய்யா,
ReplyDeleteவலைப்பதிவர் கையேடு பற்றி விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்.
‘அன்னக்கிளி‘ இளையராஜாவிற்கு முதல் படம். அடி வெளுத்து வாங்கியிருப்பார். அருமையான பாடல் துரிதகதியில் அமைந்திருக்கும் பொருத்தமான பாடலைத் தந்தது பாராட்டுகள்.
நன்றி.
த.ம.10
Deleteஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. வலைப்பதிவர் சந்திப்பிற்கு முன் உங்களை நேரில் சந்திக்கலாம் என்று இருக்கிறேன்.
Delete