திட்டம் போட்டு பொது மக்களுக்கு தொல்லைகள் தருவதற்கு என்றே ஒரு குழு இருக்கிறது. அதற்குப் பெயர் திட்டக் குழு. அவர்கள் எதனை அறிவித்தாலும் மக்களுக்கு அதனால் குழப்பம்தான் மிஞ்சும். முன்பு வறுமைக் கோடு எது என்பதற்கு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு யோசித்தார்கள். அதில் ஏகப்பட்ட பல்டிகள்.
இப்போது எல்பிஜி மானியம் எனப்படும் சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம். ஏற்கனவே ஆதர் அட்டை ஒரு
குழப்பமாகவே இருந்து வருகிறது. நிறையபேர் இன்னும் பதிவே செய்யவில்லை. பதிவு செய்த
பலபேருக்கு அட்டைகள் வந்தபாடில்லை. இந்த நிலையில் எல்பிஜி மானியம் வங்கிகள் மூலம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு.
இதற்கு ஆதர் அட்டை எண் அவசியம் என்று அறிவித்து இருக்கிறார்கள். இந்த அட்டையை
வாங்கி, இதில் உள்ள எண்ணை ஒரு மனுவில் பூர்த்தி செய்து நமக்கு சேமிப்பு கணக்கு
உள்ள வங்கியில் கொடுக்க வேண்டும். அவர்கள் அதை சரிபார்த்த பின்னர் நமக்கு கேஸ்
வழங்கும் ஏஜென்சியிடம் கொடுக்க வேண்டும். பின்னர் அவர்கள் இந்தியாவில் உள்ள கோடான
கோடி மக்களுக்கு ஒவ்வொரு சிலிண்டருக்குமான மான்யத்தை கணக்கில் வரவு வைப்பார்கள். இதெல்லாம் உடனே
நடக்கக் கூடிய காரியமா என்பதை யாரும் யோசிக்கவில்லை தலையைச் சுற்றி மூக்கை தொடும்
கதைதான்.
இதுநாள் வரை சிலிண்டர் வந்ததா பணத்தை கொடுத்தோமா என்று இருந்தது. அதாவது கையில
காசு வாயில தோசை. இனிமேல் எப்போது பார்த்தாலும் இந்தியா முழுக்க ஆதர் அட்டைக்கு
பெரிய க்யூ, வங்கியில் ஒரு பெரிய க்யூ என்று இருந்து கொண்டே இருக்கும் மானியத்தை வங்கிக்கு
அனுப்பி விட்டதாக இவர்கள் சொல்வார்கள். அங்கே போனால் இன்னும் வரவில்லை என்பார்கள்.
நாளுக்கு நாள் ஏறும் சிலிண்டரில் பழைய மான்யமா புதிய மான்யமா என்று அவ்வப்போது
குழப்பம் ஏற்படும். வெட்டி வேலையை நாள் முழுக்க அரசு ஊழியர்கள் பார்த்துக் கொண்டு இருப்பாரகள்.
இவர்கள் செய்யும் காரியத்தைப் பார்க்கும் போது திரைப்படம் ஒன்றில் வடிவேலு
நடித்த நகைச்சுவை காட்சிதான் ஞாபகத்திற்கு வருகிறது. அதில் தெருவில் வடிவேலுவின்
வியாபாரம் நடக்கிறது. மூட்டைப் பூச்சியை
கொல்லும் நவீன மெஷின் என்று சின்ன பிள்ளைகள் தங்கள் விளையாட்டில் வைத்து
விளையாடும் மாவுக்கல் போன்ற ஒன்றையும் குழவி ஒன்றையும் விற்பனை செய்கிறார்.
வாங்கிச் சென்ற சிங்கமுத்து திரும்ப வருகிறார். இந்த எந்திரத்தை வைத்து எப்படி
மூட்டைப் பூச்சியைக் கொல்லுவது என்று கேட்பார். அதற்கு வடிவேலு, ஒவ்வொரு மூட்டைப்
பூச்சியாக பிடித்து அந்த எந்திரத்தில் போட்டு, அந்த சின்ன குழவியால் குத்தினால்
மூட்டைப் பூச்சி காலி என்பார். சிங்கமுத்து வெறியாகி வடிவேலுவை உதைப்பார்.
இப்படியாகத்தான் உள்ளது இவர்களது கேஸ் சிலிண்டர் மானிய விவகாரம்.
வீடியோவில் இந்த நகைச்சுவையைக் காண இங்கே “க்ளிக்” செய்யுங்கள்.
இப்போது சுப்ரீம் கோர்ட் ” ஆதார் அடையாள அட்டை வாங்க வேண்டும் என, நாட்டின் குடிமக்கள் யாரையும் கட்டாயப்படுத்தக்
கூடாது. அத்தியாவசிய சேவைகள் வழங்குவதற்கு, அந்த அடையாள அட்டை அவசியம் என, நிர்பந்திக்கக் கூடாது. மேலும், பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக
ஊடுருவியவர்களுக்கு, கட்டாயம்,
இந்த அடையாள அட்டை வழங்கப்படக்
கூடாது. ” என்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இனி என்ன நடக்கிறது
என்பதைப் பார்ப்போம்.
PICTURES & VIDEO:
THANKS TO GOOGLE
ReplyDeleteஆதார் அட்டை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளை சொல்ல தங்களின் ஒரு பதிவு போதாது. ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.’ என்ற பழமொழி இதற்குத்தான் பொருந்தும். நல்ல வேளை. உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு தந்துவிட்டது.
ReplyDeleteபார்ப்போம் . போகப் போக என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
குழப்பவாதிகள் அதிகாரத்தில் இருந்தால்
ReplyDeleteஎன்ன என்ன அவஸ்தைகள் உண்டோ
அத்தனையும் அனுபவித்துக் கொண்டு
வருகிறோம்
ஆதார் அட்டை அதில் உச்சக் கட்டம்
தெளிவான பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
சரியான நேரத்தில் ஒரு பதிவு... அசத்தல்....
ReplyDeleteமறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDelete// ஆதார் அட்டை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளை சொல்ல தங்களின் ஒரு பதிவு போதாது. //
இன்னும் கொஞ்சம் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் படிப்பவர்களுக்கு சலிப்பு தோன்றும் என்பதால் முடித்த்கு விட்டேன்.
//.நல்ல வேளை.உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு தந்துவிட்டது //
முற்றிலுமாக நீக்கி விட்டால் நல்லது. வங்கி வேளாண் அதிகாரி அவர்களது கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDelete// பார்ப்போம் . போகப் போக என்ன நடக்கிறது என்று பார்ப்போம். //
GMB அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
கஷ்டப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நேற்றுதான் முடித்தேன். ஆனால் இன்றைய செய்தி //இப்போது சுப்ரீம் கோர்ட் ” ஆதார் அடையாள அட்டை வாங்க வேண்டும் என, நாட்டின் குடிமக்கள் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அத்தியாவசிய சேவைகள் வழங்குவதற்கு, அந்த அடையாள அட்டை அவசியம் என, நிர்பந்திக்கக் கூடாது. மேலும், பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களுக்கு, கட்டாயம், இந்த அடையாள அட்டை வழங்கப்படக் கூடாது. ” என்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. //
ReplyDeleteஇதுதான் நம் இந்தியா.
//இனி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.//
எது வேண்டுமானாலும் நடக்கும். ஏனெனில் நீங்க ஆரம்பத்திலேயே சொல்லிட்டீங்க:
//திட்டம் போட்டு பொது மக்களுக்கு தொல்லைகள் தருவதற்கு என்றே ஒரு குழு இருக்கிறது. அதற்குப் பெயர் திட்டக் குழு. அவர்கள் எதனை அறிவித்தாலும் மக்களுக்கு அதனால் குழப்பம்தான் மிஞ்சும். முன்பு வறுமைக் கோடு எது என்பதற்கு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு யோசித்தார்கள். அதில் ஏகப்பட்ட பல்டிகள். //
நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
மறுமொழி > Ramani S said... (1, 2 )
ReplyDelete// குழப்பவாதிகள் அதிகாரத்தில் இருந்தால என்ன என்ன அவஸ்தைகள் உண்டோ அத்தனையும் அனுபவித்துக் கொண்டு
வருகிறோம் ஆதார் அட்டை அதில் உச்சக் கட்டம் தெளிவான பதிவு //
பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன குழப்பங்கள் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
// பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் //
கவிஞரின் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
மறுமொழி >ஸ்கூல் பையன் said...
ReplyDelete// சரியான நேரத்தில் ஒரு பதிவு... அசத்தல்.... //
சகோதரருக்கு நன்றி! பத்து நாட்களுக்கு முன்னரே தட்டச்சில் எழுதி வைத்து விட்டேன். சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தவுடன் உடனே வெளியிட்டேன்.
"ஆதர் அட்டைக்கு பெரிய க்யூ, வங்கியில் ஒரு பெரிய க்யூ.............
ReplyDeleteஉங்கள் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
இவனுங்க தொல்லை தாங்கல நம்மள யாரு தான் காப்பாத்துறதோ
ReplyDeleteதெளிவான பதிவு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஒருவன் இறந்து போய் விடின் அவனை தகனம் செய்வதற்கு ஆதார் அட்டை வேண்டும் என்ற லெவெலுக்கு போனாலும் ஆச்சரியம் வேண்டாம்..
ReplyDeleteசுப்பு தாத்தா.
நீதிமன்றம் இப்போது ஆதார் அட்டையே தேவையில்லை என்கிறது!
ReplyDelete"ஒரே குஷ்டமடா.....சாரி குழப்பமடா " என்ற கவுண்டர் காமெடிதான் நினைவுக்கு வருகிறது!
இருக்கும் அட்டைகள் எல்லாவற்றையும் வைத்து குழப்பம் விளைவிப்பதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.... :(
ReplyDeleteதிட்டம் போட்டு பொது மக்களுக்கு தொல்லைகள் தருவதற்கு என்றே ஒரு குழு இருக்கிறது. அதற்குப் பெயர் திட்டக் குழு. அவர்கள் எதனை அறிவித்தாலும் மக்களுக்கு அதனால் குழப்பம்தான் மிஞ்சும்.
ReplyDeleteநம் அரசாங்கத்தின் நடைமுறையை தெளிவாகப்படம் பிடித்துக் காட்டிய அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
நீதிமன்றம் கூட உத்தரவு பிறப்பிக்கவில்லை. மத்திய அரசின் வக்கீலிடம் நீதிபதிகள் கேட்கின்றனர். "ஆதார் அட்டை கட்டாயம்னு சொல்றீங்களாமே". அதற்கு அவர் "இல்லீங்கய்யா..". அப்புறம் என்ன வெளக்கெண்ணைக்கு முந்தா நாள் பேப்பர்ல விளம்பரம் குடுத்தானுங்கன்னு தெரியல. ஒரு பக்க விவரங்களை தனியா கட் பண்ணி ஜெராக்ஸ் எடுக்கறதுக்காக வச்சிருக்கேன்.
ReplyDeleteபைத்தியகாரத் தனங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
ReplyDeleteமக்களுக்கும் அரசிற்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வதுதான் இதற்குக் காரணம் என எண்ணுகின்றேன்,
ReplyDeleteமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//கஷ்டப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நேற்றுதான் முடித்தேன். ஆனால் இன்றைய செய்தி
//இப்போது சுப்ரீம் கோர்ட் ” ஆதார் அடையாள அட்டை வாங்க வேண்டும் என, நாட்டின் குடிமக்கள் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. ... ... // இதுதான் நம் இந்தியா. //
அன்பு VGK அவர்களின் வருகைக்கு நன்றி!
நமது உடல் உழைப்பும், நேரமும், பணமும் இப்படி அட்டைகள் வாங்குவதிலேயே செலவழிந்து போகின்றன.
// எது வேண்டுமானாலும் நடக்கும். ஏனெனில் நீங்க ஆரம்பத்திலேயே சொல்லிட்டீங்க: //
ஆமாம் சார்! நாளைக்கே இந்த அட்டை வேண்டும் என்றும் தீர்ப்பு வரலாம். நீங்கள் வாங்கிய வரை சரி! நான் இன்னும் வாங்கவில்லை.
// நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. //
தங்கள் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > மாதேவி said...
ReplyDelete// "ஆதர் அட்டைக்கு பெரிய க்யூ, வங்கியில் ஒரு பெரிய க்யூ........ உங்கள் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! ஆனாலும் இந்தியர்கள் ரொம்பவும் பொறுமைசாலிகள்.
மறுமொழி > சக்கர கட்டி said...
ReplyDelete// இவனுங்க தொல்லை தாங்கல நம்மள யாரு தான் காப்பாத்துறதோ //
சக்கரகட்டி கருத்துரைக்கு நன்றி! நமக்கு நாமே துணையாக இருந்து கொள்ள வேண்டியதுதான்.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... (1, 2 )
ReplyDelete// தெளிவான பதிவு... வாழ்த்துக்கள்... // //http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Success-is-our-choice.html //
சகோதரரின் கருத்துரைக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளம் சென்று பார்க்கிறேன்.
மறுமொழி > sury Siva said...
ReplyDelete// ஒருவன் இறந்து போய் விடின் அவனை தகனம் செய்வதற்கு ஆதார் அட்டை வேண்டும் என்ற லெவெலுக்கு போனாலும் ஆச்சரியம் வேண்டாம்.. - சுப்பு தாத்தா. //
உங்கள் கருத்தினைப் படித்தேன், கற்பனையில் நீங்கள் சொன்ன கருத்தினை நினைத்துப் பார்த்தேன். வாய்விட்டு சிரித்து விட்டேன். ” செத்தவன் கையில் வெற்றிலை “ - அந்த லெவெலுக்கும் சென்றாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
மறுமொழி > -தோழன் மபா, தமிழன் வீதி said...
ReplyDelete// நீதிமன்றம் இப்போது ஆதார் அட்டையே தேவையில்லை என்கிறது! "ஒரே குஷ்டமடா.....சாரி குழப்பமடா " என்ற கவுண்டர் காமெடிதான் நினைவுக்கு வருகிறது! //
தோழனின் வருகைக்கு நன்றி!
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete// இருக்கும் அட்டைகள் எல்லாவற்றையும் வைத்து குழப்பம் விளைவிப்பதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.... :( //
சகோதரின் கருத்துக்கு நன்றி!
மறுமொழி >இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete// நம் அரசாங்கத்தின் நடைமுறையை தெளிவாகப்படம் பிடித்துக் காட்டிய அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..! //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > ரிஷி said...
ReplyDelete// நீதிமன்றம் கூட உத்தரவு பிறப்பிக்கவில்லை. மத்திய அரசின் வக்கீலிடம் நீதிபதிகள் கேட்கின்றனர். "ஆதார் அட்டை கட்டாயம்னு சொல்றீங்களாமே". அதற்கு அவர் "இல்லீங்கய்யா..". அப்புறம் என்ன வெளக்கெண்ணைக்கு முந்தா நாள் பேப்பர்ல விளம்பரம் குடுத்தானுங்கன்னு தெரியல. ஒரு பக்க விவரங்களை தனியா கட் பண்ணி ஜெராக்ஸ் எடுக்கறதுக்காக வச்சிருக்கேன். //
கோர்ட்டில் பல்டி அடிப்பதில் வண்டு முருகனை மிஞ்சி விடுவார்கள்.
மறுமொழி > T.N.MURALIDHARAN said...
ReplyDelete// பைத்தியகாரத் தனங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. //
சகோதரரின் கருத்துரைக்கு நன்றி! ” மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட் ஆட்சி மக்களாட்சி” என்று எம்ஜிஆர் ஒரு வசனம் சொன்னார்.
கொடுப்பது மாதிரி கொடுத்து கடைசியில் கும்மாங்குத்து கொடுக்கும் கலையின் விலை இதுவரையிலும் 50 ஆயிரம் கோடி செலவாகியுள்ளதாம். ஆதார் என்பதன் அவசரத்திற்கு.
ReplyDeleteநல்ல விழிப்புணர்வுப் பதிவு.
ReplyDeleteஆதார் அட்டை வரவில்லையே என்று இன்னும் கவலையாகத் தானிருக்கிறது. என்றைக்கு மீண்டும் அது அவசியம் என்று சொல்வார்களோ தெரியவில்லையே!
இன்றைய பத்திரிகைச் செய்தி : உச்சநீதிமன்றத்தில் ஆதார் அட்டை தொடர்பாக தீர்ப்பில் திருத்தம் கேட்க இருக்கிறோம். எப்போதும்போல் கேஸ் மானியத்திற்கு ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியமே! அதில் எவ்வித மாற்றமுமில்லை - பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.
ReplyDeleteஇந்திய பிரஜை என்பதற்கே ஆதாரம் ஆதார்அட்டைதான் என்று பல கோடி செலவு செய்தபின் ,இது வாங்கிக் கொள்ளவேண்டுமென கட்டாயம் ஏதும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்கிறது !
ReplyDeleteஎன்னைய்யா ,என்ன நடக்குது இங்கே ?
சூப்பர். அரசின் எல்லா கொள்கைகளுமே இப்படி தலையை சுற்றி மூக்கை தொடுவதாகத்தா அமைந்துள்ளது. ஆதார் அட்டை நல்ல விஷயம்தான். பல மேலை நாடுகளிலும் இந்த முறை உள்ளது. துவக்கத்தில் அதை பெறுவது சற்று சிரமமாக இருந்தாலும் காலப் போக்கில் நடைமுறைக்கு இலகுவாகிவிடும். ஆனால் இந்த அரசு மான்யத்தை நேரடியாக நுகர்வோரிடம் வழங்குவது என்பது இந்தியா போன்ற மக்கள் தொகை உள்ள நாட்டில் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதை ஏன் அரசு புரிந்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்பதுதான் புரியவில்லை. வடிவேலுவின் மூட்டைப் பூச்சி மிஷினை மிக சரியாக ஒப்பிட்டுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஆமாங்க... இரண்டூ மூன்று நாள் நேரம் விரயம் செய்து விட்டு கடைசியாய் ஒரு வழியாய் 4 மணி நேர காத்திருத்தலுக்குப் பின் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்துத் திரும்புகிறோம்....காலை செய்தியில் ஆதார் அட்டை அவசியமில்லை என்பதாக .... துக்ளக் ஆட்சி நடைபெறுகிறதோ... ஏதானாலும் நம் பணம் தானே வீணாக்கப் படுகிறது....
ReplyDeleteதிட்டம் போட்டு பொது மக்களுக்கு தொல்லைகள் தருவதற்கு என்றே ஒரு குழு இருக்கிறது. அதற்குப் பெயர் திட்டக் குழு. //
ReplyDeleteமுற்றிலும் உண்மை!
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDelete// மக்களுக்கும் அரசிற்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வதுதான் இதற்குக் காரணம் என எண்ணுகின்றேன், //
இடைவெளிக்குக் காரணமே இவர்களின் மனோபாவமே. சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDelete//கொடுப்பது மாதிரி கொடுத்து கடைசியில் கும்மாங்குத்து கொடுக்கும் கலையின் விலை இதுவரையிலும் 50 ஆயிரம் கோடி செலவாகியுள்ளதாம். ஆதார் என்பதன் அவசரத்திற்கு.//
50 ஆயிரம் கோடியும் கடலில் கரைத்த பெருங்காயம். சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > rajalakshmi paramasivam said...
ReplyDelete// நல்ல விழிப்புணர்வுப் பதிவு.//
சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!
//ஆதார் அட்டை வரவில்லையே என்று இன்னும் கவலையாகத் தானிருக்கிறது. என்றைக்கு மீண்டும் அது அவசியம் என்று சொல்வார்களோ தெரியவில்லையே! //
ஆதார் அட்டை! வரும் ஆனா .... வராது கதையாகத்தான் இருக்கிறது.
மறுமொழி > ரிஷி said...
ReplyDelete// இன்றைய பத்திரிகைச் செய்தி : உச்சநீதிமன்றத்தில் ஆதார் அட்டை தொடர்பாக தீர்ப்பில் திருத்தம் கேட்க இருக்கிறோம். எப்போதும்போல் கேஸ் மானியத்திற்கு ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியமே! அதில் எவ்வித மாற்றமுமில்லை - பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி. //
நானும் படித்தேன். எந்த குறவை மீனைப் பிடிப்பதற்காக இந்த குட்டையை இப்படிக் குழப்புகிறார்கள் என்று தெரியவில்லை. சகோதரர் ரிஷியின் வருகைக்கு நன்றி!
மறுமொழி > Bagawanjee KA said...
ReplyDelete// இந்திய பிரஜை என்பதற்கே ஆதாரம் ஆதார்அட்டைதான் என்று பல கோடி செலவு செய்தபின் ,இது வாங்கிக் கொள்ளவேண்டுமென கட்டாயம் ஏதும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்கிறது !
என்னைய்யா ,என்ன நடக்குது இங்கே ? //
ஒன்றுமே நடக்கவில்லை. இதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம். சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
ReplyDelete// சூப்பர். அரசின் எல்லா கொள்கைகளுமே இப்படி தலையை சுற்றி மூக்கை தொடுவதாகத்தா அமைந்துள்ளது. ஆதார் அட்டை நல்ல விஷயம்தான். பல மேலை நாடுகளிலும் இந்த முறை உள்ளது. துவக்கத்தில் அதை பெறுவது சற்று சிரமமாக இருந்தாலும் காலப் போக்கில் நடைமுறைக்கு இலகுவாகிவிடும். ஆனால் இந்த அரசு மான்யத்தை நேரடியாக நுகர்வோரிடம் வழங்குவது என்பது இந்தியா போன்ற மக்கள் தொகை உள்ள நாட்டில் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதை ஏன் அரசு புரிந்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்பதுதான் புரியவில்லை. வடிவேலுவின் மூட்டைப் பூச்சி மிஷினை மிக சரியாக ஒப்பிட்டுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி. //
மரியாதைக்குரிய டிபிஆர்ஜோ அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்கள் ஒருவர்தான் இந்த பதிவில் உள்ள வடிவேலு ஜோக்கை ஒப்பிட்டதை பாராட்டி எழுதியுள்ளீர்கள். நன்றி!
மறுமொழி > மறுமொழி > ezhil said...
ReplyDelete//ஆமாங்க... இரண்டூ மூன்று நாள் நேரம் விரயம் செய்து விட்டு கடைசியாய் ஒரு வழியாய் 4 மணி நேர காத்திருத்தலுக்குப் பின் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்துத் திரும்புகிறோம்....காலை செய்தியில் ஆதார் அட்டை அவசியமில்லை என்பதாக .... துக்ளக் ஆட்சி நடைபெறுகிறதோ... ஏதானாலும் நம் பணம் தானே வீணாக்கப் படுகிறது.... //
இன்னும் என்னவெல்லாம் சொல்லி அலைகழிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
ReplyDelete// முற்றிலும் உண்மை! //
புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி1
குழப்பத்திலிருந்து விடுதலையடைய உங்கள் பதிவு உள்ளது
ReplyDeleteமறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteகவிஞரின் கருத்துரைக்கு நன்றி!
இந்த மானியம் வழங்குவதில் மறைமுகமாக தில்லுமுல்லும் நடக்கிறது...நமக்குத் தெரியாமலே சிலிண்டர் விலையை ஏற்றத்தான் இந்த தந்திரமெல்லாம்...மொத்த விலையிலிருந்து மானியத் தொகையைக் கழித்துப் பார்த்தால் சிலிண்டரின் உண்மையான விலை என்னவென்றே தெரியவில்லை..
ReplyDeleteமறுமொழி > kaliaperumalpuducherry said...
ReplyDeleteசகோதரர் கலியபெருமாள், புதுச்சேரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > kaliaperumalpuducherry said...
ReplyDeleteசகோதரர் கலியபெருமாள், புதுச்சேரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!