இந்த ஆண்டு, ஜனவரியில், பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு
http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html
என்ற தலைப்பில் எழுதி இருந்தேன். அதில்,
//முன்பெல்லாம் பணியில் இருக்கும்போது அடிக்கடி மேப்பை வைத்துக்
கொண்டு, திருச்சியிலிருந்து எந்தெந்த மார்க்கத்தில், எந்தெந்த ஊர் வரை சென்று இருக்கிறோம்,
பார்த்து இருக்கிறோம் என்று பார்ப்பது வழக்கம் //
என்று சொல்லி இருந்தேன். இது சம்பந்தமாக பதிவின் நீளத்தினைக் கருத்தில்
கொண்டு சொல்லாமல் விட்ட பகுதி இங்கே.
ரெயில்வே கால அட்டவணை:
எங்கள் வீட்டில் அவ்வப்போது ரெயில்வே கால அட்டவணையை முன்பு, தமிழில் வாங்குவது வழக்கம். அந்த அட்டவணையில் ஒவ்வொரு
ரெயில் மார்க்கம் வழியாகவும் ரெயில்கள் கடந்து செல்லும் ஸ்டேஷன்கள் பெயரை வரிசையாகக்
குறிப்பிட்டு இருப்பார்கள்.. சின்ன வயதில் நான் சென்ற ரெயில் மார்க்க ஊர்களை அடிக்கடி
சத்தம் போட்டு படிப்பேன். அதில் ஒரு மகிழ்ச்சி. இப்போது ரெயில்வே கால அட்டவணை வாங்குவதை
நிறுத்தி விட்டோம்.
பயணக் கட்டுரைகள்:
பழைய தீபாவளி மலர்களில் பயணக் கட்டுரைகள் என்றால் விரும்பிப் படிப்பேன்.
இன்னும் நான் படித்தவைகளில் மார்க்கோபோலோவின் பயணக்குறிப்புகள், சிந்துபாதின் பயணங்கள்,
கலிவரின் யாத்திரை, ஏ.கே.செட்டியாரின் பயணக் கட்டுரைகள், பிலோஇருதயநாத்தின் பயண அனுபவங்கள்,
எஸ்.எஸ்.மணியனின் பயணக் கட்டுரைகள் படிப்பதில் ஆர்வம் காட்டி இருக்கிறேன்.
இப்போதும் வலைப்பதிவினில் பயணக் கட்டுரைகளை எழுதிவரும், துளசி டீச்சர்
(துளசி கோபால் ‘துளசி தளம்’) , வெங்கட் நாகராஜ் ஆகியோரது பயணக் கட்டுரைகளை (அழகிய வண்ணப்
படங்களுடன்) ரசிப்பவன் நான். மேலும் மூத்த வலைப்பதிவர்கள், G.M.B. எனப்படும்
ஜீ.எம்.பாலசுப்ரமணியம், V.G.K (வை.கோபாலகிருஷ்ணன் ) மற்றும் V.N.S. எனப்படும் V. நடனசபாபதி
ஆகியோரது பழைய பதிவுகளில் வந்த பயணக் கட்டுரைகள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியது
அவசியம். இவர்களில் துளசி டீச்சர் (துளசி கோபால்) அவர்களது நகைச்சுவையுடன் கூடிய பயண
எழுத்து நடையை ரொம்பவே ரசிப்பதுண்டு. நானும் ஒரு சில, சிறு பயணங்கள் குறித்து வலைப்பதிவில் எழுதி இருக்கிறேன்.
.
இதுவரை சென்றுள்ள ஊர்கள்:
கீழே சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்காகவோ
அல்லது உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்காகவோ பஸ்ஸிலோ ,ரெயிலிலோ, வாடகைக் காரிலோ அல்லது
வேனிலோ சென்று இருக்கிறேன். (இங்கு சொன்னவற்றுள், பல ஊர்கள் விட்டுப் போயிருக்கலாம்) இந்த ஊர்களுக்கு செல்லும் போதெல்லாம், வழித்தடத்தில் உள்ள மற்ற ஊர்களை பயணத்தின் போது பார்த்ததோடு சரி.
திருச்சி To சென்னை மார்க்கம் > திருவானைக் கோவில், ஸ்ரீரங்கம்,
சமயபுரம், (சமயபுரத்திலிருந்து ஆதி சமயபுரம், புதூர் உத்தமனூர், புரத்தாகுடி, சங்கேந்தி,
வெள்ளனூர்) சிறுவாச்சூர், பெரம்பலூர், உளுந்தூர்
பேட்டை, விழுப்புரம், தாம்பரம், சென்னை, மீஞ்சூர் (மேலும் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர்
மற்றும் விழுப்புரத்திலிருந்து > வேலூர், திருப்பதி ) (மேலும் லால்குடி, புள்ளம்பாடி,
(டால்மியாபுரம், மேல அரசூர், கீழ அரசூர்) ,(விரகாலூர், திண்ணாகுளம், செம்பியக்குடி) இலந்தைக் கூடம், கண்டீரா தீர்த்தம்) திருமழபாடி, திருமானூர், அரியலூர், கல்லங்குறிச்சி) (மேலும் லப்பைக்குடிகாடு, திட்டக்குடி, விருத்தாசலம்,
கடலூர், நெய்வேலி, பாண்டிச்சேரி)
திருச்சி To நாகப்பட்டினம் மார்க்கம் > திருவெறும்பூர், (கல்லணை,
கோயிலடி, திருக்காட்டுப்பள்ளி, பூண்டி மாதா கோவில், கூத்தூர், புதகிரி, மகாராஜபுரம்,
வைத்தியனாதன் பேட்டை, திருவையாறு, விளாங்குடி, காருகுடி, திருக்கருகாவூர், ) செங்கிப்பட்டி, (பூதலூர், சித்திரக்குடி, கள்ளபெரம்பூர்) வல்லம், தஞ்சாவூர், அம்மாபேட்டை,
நீடாமங்கலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், காரைக்கால், திருநள்ளார் (கந்தர்வ கோட்டை) (பட்டுக்கோட்டை,
மனோரா) (கபிஸ்தலம், சுவாமிமலை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம்,வைத்தீஸ்வரன்
கோயில், தென்னிலை, பூம்புகார்,)
திருச்சி To பெங்களூர் மார்க்கம் > முசிறி, (மேலும் மண்ணச்ச
நல்லூர், துறையூர், புளியஞ்சோலை) நாமக்கல், (கொல்லிமலை, திருச்செங்கோடு, எடப்பாடி)
சேலம், (மேட்டூர் டாம்) தர்மபுரி, பெங்களூர் (மேலும் பெங்களூரிலிருந்து பெல்காம், கோவா)
திருச்சி To கோவை மார்க்கம் > குளித்தலை, கரூர், (ஈரோடு) கோயம்புத்தூர், மருதமலை.
திருச்சி To திருநெல்வேலி மார்க்கம் > விராலிமலை, துவரங்குறிச்சி,
மதுரை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
திருச்சி To தனுஷ்கோடி மார்க்கம் > கீரனூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,
மண்டபம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி( மேலும் புதுக்கோட்டையிலிருந்து > (பொன்னமராவதி) (ஆலங்குடி,அறந்தாங்கி)
செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, திருவாடனை, தொண்டி)
திருச்சி To திண்டுக்கல் மார்க்கம் > மணப்பாறை, வையம்பட்டி,
(பொன்னணியாறு டாம்), திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், (பழனி, கொடைக்கானல்) செம்பட்டி, தேனி, வீரபாண்டி,
போடிநாயக்கனூர், காமநாயக்கன்பட்டி
பயணம் எங்கே?
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அனுபவம். இப்போதும் வாய்ப்பு அமையும் போதெல்லாம்
, வெளியூர் பயணம் செல்கிறேன். ஆனால் தொலைதூர பயணங்கள் இல்லை. இது ஒரு பெரிய விஷயமா?
இதைப் போய் ஒரு பதிவாக எழுத வேண்டுமா என்று நண்பர்கள் நினைக்கலாம். ஆனால் அடிக்கடி
பயணம் என்பதில் உள்ள சுவாரஸ்யமும் , பொறுப்புகளும், கஷ்டமும் அவரவர்களுக்கு மட்டுமே
தெரியும் என்பதாலும், இப்போதைக்கு எழுத வேறு தலைப்பு இல்லாத படியினாலும், ஏற்கனவே எழுதி வைத்த இந்த பதிவு.
(PICTURES COURTESY: GOOGLE IMAGES)
(PICTURES COURTESY: GOOGLE IMAGES)
தங்களது பயண அனுபவங்களை விவரித்த விதம் -
ReplyDeleteநானும் உங்களுடன் பயணம் செய்ததைப் போலிருந்தது!..
பயணங்கள் வாழ்க!..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteஆஹா, மிகவும் அருமையான பதிவு.
ReplyDeleteநானும் முன்பெல்லாம் ரெயில்வே கால அட்டவணை வாங்கி வைத்துக்கொண்டு அலசி ஆராய்வது உண்டு. அதெல்லாம் ஒரு பொழுதுபோகாத பொற்காலம்.
இப்போது அதற்கெல்லாம் தேவையே இல்லாமல் போய் விட்டது :)
என் பயணப்பதிவுகள் பற்றியும் http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html தாங்கள் இங்கு குறிப்பிட்டுச் சொல்லியுள்ளதற்கு மிக்க நன்றி, சார்.
அன்புடன் VGK
அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி. இப்போது ரெயில்வே கால அட்டவணை தமிழில் வருகிறதா என்று தெரியவில்லை.
Deleteஆகா! சென்ற ஊர்கள் அனைத்தையும் நினைவில் வைத்து எழுதியிருக்கிறீர்களே! பாராட்டுக்கள்! அங்கு ஏற்பட்ட சுவையான அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளலாமே?
ReplyDeleteஎனது பதிவு பற்றி குறிப்பிட்டமைக்கும் நன்றி!
அய்யா VNS அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. உங்கள் பயணப் பதிவு என்றாலே, எனக்கு நினைவுக்கு வருவது அந்த கொல்லம் (ரெயில் விபத்து) பதிவும், அதில் நீங்கள் தப்பிய தகவலும்தான்.
Delete
Deleteஅது கொல்லம் ரயில் விபத்து அல்ல. கோழிக்கோடுக்கு அருகே உள்ள கடலுண்டி என்ற இரயில் நிலையம் அருகே உள்ள ஆற்றுப் பாலத்தில் மங்களூர்- சென்னை விரைவு வண்டிக்கு 2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து.
பலருக்கும் பயனுள்ள பதிவு நண்பரே நன்றி
ReplyDeleteதமிழ் மணம் 2
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்தினுக்கு நன்றி. இந்த பதிவின் ஆரம்பத்திற்கு (முந்தைய பதிவிற்கு) ஆரம்பகர்த்தாவே நீங்கள்தான்.
Deleteஏனோ எனக்கு அதிக பயண அனுபவம் வாய்த்ததில்லை!
ReplyDeleteநண்பரே, உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதால் நீங்கள் சொல்லுவது சரியா என்று சொல்லத் தோன்றவில்லை.
Deleteதமிழ் நாட்டுக்கு உள்ளேயே என்றாலும் பயணம் பயணமே . ரிட்டயர்டு வாழ்கையை மகிழ்வோடு கழிக்கவும்
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி. வெளி மாநில பயணங்கள் செல்ல வாய்ப்புகள் வந்தும் நான் பயன்படுத்திக் கொள்ள இயலாமல் போயிற்று.
Deleteபயணம் என்பதே மிகிழ்வான செயலே!
ReplyDeleteபுலவர் அய்யாவிற்கு நன்றி. அண்மையில் , வயதையும் பொருட்படுத்தாது, வெளிநாடு சுற்றுலா சென்று வந்த இளைஞர் நீங்கள்.
Deleteஇனிமையான பயண அனுபவம்.
ReplyDeleteத ம 4
நன்றி அய்யா!
Deleteபயணங்கள் என்றுமேஇனிமையானவைதான் ஐயா
ReplyDeleteதங்களின் பயணங்கள் தொடரட்டும்
நன்றி
தம +1
ஆசிரியருக்கு நன்றி.
Deleteடால்மியாபுரம், கல்லக்குடி ஆகிவிட்டதல்லவா?
ReplyDeleteஎழுத்தாளர் ஜீவி அவர்களுக்கு நன்றி. எனக்கென்னவோ திருச்சி என்றால் மலைக்கோட்டையும், ஸ்ரீரங்கம் என்றால் அந்த ராஜகோபுரமும், நினைவுக்கு வருவது போல் - டால்மியாபுரம் என்றால்தான் அந்த சிமெண்ட் ஆலையின் வெண்புகை வரும் புகைக்குழாய்களும், அந்த ஊர்மக்களும் நினைவுக்கு வருகிறார்கள். இன்னொரு விஷயம். கல்லக்குடி என்ற கிராமத்தைவிட, இதன் அருகில் இருக்கும் இந்த ஆலை நகரம் (டால்மியாபுரம்) வளர்ச்சி அதிகம்.
Deleteதங்களின் பயணக்குறிப்புகள் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவே இருந்தன. நானும் முன்பெல்லாம் ரயில்வே கைடு ஒவ்வொரு வருடமும் வாங்குவதுண்டு. இப்போது எல்லாவற்றுக்கும் ஆன்லைன் வந்து விட்டதால் பழைய சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய மறைந்து விட்டன!!
ReplyDeleteமேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். நாம் ரசித்த பல சுவாரஸ்யமான விஷயங்கள் இப்போதைய தலைமுறையினரின் இயந்திர (கம்ப்யூட்டர்) மயமாகி விட்டது.
Deleteஇரயில் பயணங்களில் புத்தகம் படிப்பது ஒரு சுகமான அனுபவம்.
ReplyDeleteஆனால் இன்னும் சுவாரசியமானது சுற்றியிருப்பவர்களைக் கவனிப்பதும் ,பாதையில் கடந்து செல்லும் பகுதிகளை வேடிக்கைப் பார்ப்பதும்...
டால்மியாபுரம் என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது திமுகவின் ரயில்மறிப்பு போராட்டமும், கலைஞரும் தான்.
சகோதரரின் கருத்துரைக்கு நன்றி. இப்போது கல்லக்குடி பழங்காநத்தம் என்பது, கல்லக்குடி, டால்மியாபுரம் என்று இரண்டு ஊர்களாக பிரிந்து விட்டன.’கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ - சரியா?
Deleteதற்போது இரயில் பயணங்ளில் ஊர் பெயர், தொலைவு, சராசரி கால தாமதம் கடல் மட்டத்திலிருந்து தொலைவு இவை இணையத்தில் கிடைக்கிறது இதனை பிரிண்ட் எடுத்து செல்வது வழக்கம். இப்போது ஜி பி எஸ் மூலம் சரியான திசைகளை அறிவது சுவாரசியம்
ReplyDeleteஇணையத்தில் கிடைக்கும் தகவல் பற்றி சொன்ன,’மூங்கில் காற்று’ முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபயணங்கள் தொடரட்டும் ஐயா....
ReplyDeleteஅருமையான பதிவு....
வாழ்க்கையில் பயணங்களில் மட்டுமே
சுவாரசியங்கள் அதிகமாக கலந்திருக்கும்....
கவிஞர் அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteவழியில் வரும் ஊர்களை எல்லாம் ,மனதில் ஒரு பிம்பத்தை வடித்து பயணித்தது பொற்காலம் ,பயணிக்க முடியாமல் இப்போதிருப்பது போதாத காலம் :)
ReplyDeleteதோழர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே.
Deleteஅடிக்கடி பயணம் என்பதில் உள்ள சுவாரஸ்யமும் , பொறுப்புகளும், கஷ்டமும் அவரவர்களுக்கு மட்டுமே தெரியும் //
ReplyDeleteஉண்மை அடிக்கடி பயணக்கள் செய்யும் எங்களுக்கு அந்த அனுபவங்கள் உண்டு.
ரெயில்வே கால அட்டவணையை வாங்கி விடுவார் என் கணவர் இப்போதும்.(ஆங்கிலத்தில்)
மேடம் அவர்களுக்கு நன்றி. ரொம்பவும் பழைய ரெயில்வே கால அட்டவணையை எடைக்கு போட்டு விடாதீர்கள். ஒன்றிரண்டையாவது வைத்து இருங்கள். பின்னாளில் அவை வரலாற்றை விளக்கும் ஒரு பொக்கிஷமாக மாற வாய்ப்புண்டு. அதன் அருமையை இப்போது உணருகிறேன்.
Deleteபயணங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. பஸ்களில் காரில் செல்லும்போதும் சரி, அல்லது ரயிலில் பயணம் செய்யும்போதும் சரி ஜன்னல்வழியாக வெளியில் தெரியும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே போவதில்தான் விருப்பம். அதனாலேயே பகலில் பஸ், கார், ரயில் எதில் போனாலும் தூங்குவதில்லை. படங்களும் பார்ப்பதில்லை, புத்தகமும் படிப்பதில்லை. சதா சர்வ காலமும் வெளியில் பார்த்துக்கொண்டே போவதுதான் வழக்கம். ரயிலில் சென்றாலும் விடிவதற்கு முன்பேயே எழுந்து புலரும் காலை இருட்டில் வயல்வெளிகளை, ஊர்களைப் பார்த்துக்கொண்டே செல்வதில் ஒரு இன்பம் இருக்கிறது.
ReplyDeleteஅதுமட்டுமல்ல, ஒவ்வொரு ஊரின் பெயரையும், கிராமத்தின் பெயரையும் பார்த்துக்கொண்டே போவதிலும் ஒரு சுகம். தவிர எத்தனையோ ஊர்களுக்குப் போகிறோம். வழியில் வரும் பெயர்களையெல்லாம் கேட்கிறோம். எந்த ஊரின் பெயருமே தமிழ்ப்பெயர்களைப் போல் இத்தனை அழகாக, இத்தனைக் காரணங்களுடன் அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. இப்படிப் பயணம் செய்து இந்த ஊர்களின் பெயர்க்காரணங்களை மட்டும் தொகுத்து ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதலே உண்டு( இந்தப் பாணியில் ஓரிரு புத்தகங்களும் வந்திருக்கின்றன என்றும் நினைக்கிறேன்) நானும் டாக்டர் மூலிகை மணி வெங்கடேசனும் வெளியூர்களுக்குக் காரில் செல்லும்போது இம்மாதிரி ஊர்களின் பெயர்களை ரசித்துக்கொண்டும் நினைவுபடுத்திக்கொண்டும் பேசிக்கொண்டே செல்வோம்.
இந்த எண்ணங்களை எல்லாம் உங்கள் கட்டுரை ஏற்படுத்திற்று. நன்றி.
மரியாதைக்குரிய எழுத்தாளர் அமுதவன் அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Delete// எந்த ஊரின் பெயருமே தமிழ்ப்பெயர்களைப் போல் இத்தனை அழகாக, இத்தனைக் காரணங்களுடன் அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. இப்படிப் பயணம் செய்து இந்த ஊர்களின் பெயர்க்காரணங்களை மட்டும் தொகுத்து ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதலே உண்டு //
என்ற தங்களின் எண்ணப்படி, தாங்கள் அவசியம் எழுத வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழறிஞர் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற நூலிற்குப் பிறகு வேறு யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. சென்ற ஆண்டு ஒரு தொலைக்காட்சியில், புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் , ஊர்களின் காரணப் பெயர்கள் குறித்து, ஒரு தொடர் நிகழ்ச்சியை நடத்தியதாக நினைவு.
எங்கள் வடைந்தியப் பயணம் அகில இந்திய ரெயில்வே அட்டவணையைப் பார்த்துதான் திட்ட மிடப்பட்டதுஎங்கிருந்து எங்கு போவது எந்த ரயிலில் பயணிப்பது போன்றவைஏதுமே தெரியாமல் இருந்த எனக்கு ஒரு படிப்பினையாக இருந்தது. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ரெயில்வே கால அட்டவணை என்பது ஒரு தகவல் களஞ்சியம்.
Deleteஇப்போதும் நாங்கள் ரயில்வே அட்டவணையை வாங்கி வைத்துக் கொண்டுள்ளோம். புதியது வரும்போது வாங்கிவிடுவோம்.
ReplyDeleteஅட போகும் வழியில் உள்ள ஊர்களெல்லாம் சொல்லிசுவாரஸ்யம்..நாங்களும் நோட் செய்து வைத்திருக்கிறோம்
...//அடிக்கடி பயணம் என்பதில் உள்ள சுவாரஸ்யமும் , பொறுப்புகளும், கஷ்டமும் அவரவர்களுக்கு மட்டுமே தெரியும் // இதுவும் உண்மைதான்...எவ்வளவுக்கெவ்வளவு சுவாரஸ்யமோ அவ்வளவுக்கவ்வளவு பொறுப்பும் கூடும்...
ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete//இப்போதைக்கு எழுத வேறு தலைப்பு இல்லாத படியினாலும்//
ReplyDeleteஇதுதான் இப்போது பதிவுலகைப் பீடித்துள்ள மிகப் பெரும் நோய்.
முனைவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. இந்த நோயை நீக்க வலைப் பதிவர்கள், ஆங்காங்கே கலந்துரையாடல் செய்ய வேண்டும்.
Deleteசிறு வயதில் ரயில் பயணத்தின் போது ஸ்டேஷன் பெயர்களை வரிசையாக வாய் விட்டுப் படித்தது நினைவுக்கு வருகிறது. ஆனால் நினைவில் வைத்துக்கொண்டதில்லை. இணையத்தில் எல்லா விபரங்களும் கிடைப்பதால் இப்போது ரயில் அட்டவணை வாங்குவதில்லை. பழைய நினைவுகளை அசை போட்ட பதிவு.நான் ஐரோப்பா போய் வந்ததைக் கட்டுரையாக எழுதியுள்ளேன். நேரமிருப்பின் படித்துக் கருத்துக் கூறுங்கள். நன்றி. http://unjal.blogspot.com/2011/12/blog-post_27.html
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கும், தங்கள் ஐரோப்பிய சுற்றுலா கட்டுரை பற்றிய தகவலுக்கும் நன்றி. உங்கள் பதிவினைப் படித்து முடித்து கருத்துரையும் எழுதி உள்ளேன்.
Delete