Thursday 21 July 2016

மகாத்மா காந்தியைக் கொன்றது யார்?




நேற்று (20.07.16) காலை வழக்கம் போல தினசரிகளைப் படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு அரசியல் செய்தி எனது கவனத்தை ஈர்த்தது. 

// ‘மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்.’ என அவதூறாக பேசிய விவகாரத்தில், வருத்தம் தெரிவிக்காவிட்டால், வழக்கு விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று ராகுல் காந்தியை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்தது. ….. …. நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘பஞ்சாப்–அரியானா ஐகோர்ட்டு ஆவணத்தில் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தியை கோட்சே கொலை செய்தார் என்பதற்கும், காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொலை செய்தது என்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. நீங்கள் (ராகுல் காந்தி) ஒருபடி மேலே போய்விட்டீர்கள். நீங்கள் பொத்தாம்பொதுவாக கூறக்கூடாது’’ என கண்டித்தார்.//
-    (நன்றி : தினத்தந்தி 20.07.2016)

கோர்ட் நடவடிக்கையைப் பற்றி விமர்சனம் செய்வது கூடாது என்பதால், இங்கு இதுபற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. எனினும் மகாத்மா காந்தி கொலை சம்பந்தமாக அன்று வந்த செய்திகளையும், இன்றைய நாட்டு நடப்பையும் ஒப்பிட்டு பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

அன்றைய செய்திகள்:

மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டபோது வந்த செய்திகள் இவை.
                                                                                                                                                         

// இருபதாம் நூற்றாண்டில் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும், சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, சதித்திட்டம் தீட்டிய ஆப்தே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர் //

மேலும் விவரங்களுக்கு படிக்கவும்- கீழே உள்ள இணையதள முகவரியை சொடுக்கவும் :மகாத்மா - கொல்லப்பட்ட வரலாறு- http://kannalattuthingaasaiya.blogspot.in/2012/02/blog-post_222.html 
.
காந்தி தேசமே காவல் இல்லையா?

இன்றைய காலகட்டத்தில், எல்லாவற்றையும் பார்க்கும்போது, நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் வரும் ’காந்தி தேசமே காவல் இல்லையா?; என்று தொடங்கும் பாடல்தான் நினைவுக்கு வந்தது.
                                                                                                                                                  
1985 இல் வெளிவந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் – அம்பிகா சத்தியராஜ் ஆகியோர் நடித்து. இருக்கிற்றர்கள். டைரக்‌ஷன் – எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இசை – இளையராஜா. பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியன் குழுவினர்.கீழே பாடல் வரிகள்.

காந்தி தேசமே காவல் இல்லையா
நீதிமன்றமே நியாயம் இல்லையா
பதவியின் சிறைகளில் –
பாரதமாதா பரிதவிக்கிறாள்

சுதந்திரதேவி சுயநலப் புலிகளின்
துணி துவைக்கிறாள்
துணி துவைக்கிறாள்
தாயை மீட்க வா! தர்மம் காக்க வா!

காந்தியும் நேருவும் வாங்கிய சுதந்திரம்
ஒருசிலர் உரிமையில்லை
வளமிங்கு குறைவில்லை
ஏழைக்கு நிறைவில்லை
வறுமைக்கு வறுமையில்லை
வறுமைக்கு வறுமையில்லை

சாலையில் தனிமையில்
அழகிய இளமையில்
நடக்கவும் முடியவில்லை
நடக்கவும் முடியவில்லை
இளமையும் கலைந்தது
இருபுறம் நரைத்தது
வேலையும் கிடைக்கவில்லை
வேலையும் கிடைக்கவில்லை

ஜாதி என்கின்ற
மாயப் பேயொன்று
ரத்தம் கேட்கின்றதே
தர்மம் தப்பித்துக்
கள்வர் கோட்டைக்குள்
தஞ்சம் கேட்கின்றதே

இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள்
எல்லையில் நிறைந்திருப்பார்
எல்லையில் நிறைந்திருப்பார்
நாட்டினைக் காசுக்கு
காட்டியே கொடுப்பவர்
ஊருக்குள் ஒளிந்திருப்பார்
ஊருக்குள் ஒளிந்திருப்பார்

அகிம்சையைப் போதித்த தேசத்தில்
ரத்தத்தின் ஆறுகள் ஓடுதடா
ஆறுகள் ஓடுதடா
ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல்
வான்வரை ஏறுதடா வான்வரை ஏறுதடா

விடுதலை வாங்க – அன்று நாம் தந்த
விலைகள்தான் கொஞ்சமா?
வேலியே இங்கு பயிரை மேய்கின்ற
நிலைமைதான் மாறுமா?

(பாடலில் உள்ள வரிகளுக்காகவே இந்த பாடலை இங்கு மேற்கோளாகக் காட்டி உள்ளேன். பாடலைக் கண்டு கேட்க கீழே உள்ள திரையை சொடுக்குங்கள். வீடியோ நன்றி SEPL)
                                  
                            (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

28 comments:

  1. ராகுல் காந்தியின் கருத்தை ஏற்கிறீர்களா எதிர்க்கிறீர்களா. இதைக் கூறினால் தவறேதும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் மேலே பதிவினில் சொன்ன

      // கோர்ட் நடவடிக்கையைப் பற்றி விமர்சனம் செய்வது கூடாது என்பதால், இங்கு இதுபற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை//

      என்ற கருத்தினையே மீண்டும் இங்கும் சொல்ல விரும்புகிறேன்.

      Delete
    2. ராகுல் காந்தி கூறியது பற்றிக் கருத்தை ஏற்கிறீர்களா எதிர்க்கிறீர்களா எனக் கூறுவது கோர்ட் நடவட்க்கையை விமர்சனம் செய்வதாகாது என்றே நினைக்கிறேன்

      Delete
    3. மரியாதைக்குரிய ஜீ.எம்.பி அவர்களின் மீள் வருகைக்குக்கும், தொடர் வினாவிற்கும் நன்றி. இங்கு இதுபற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றாலும் விட மாட்டீர்கள் போலிருக்கிறது.

      பேச்சு வழக்கில் உருவகமான சில வார்த்தைகள், சில சமயம், தனிநபர், பொது அமைப்பு என்று இரண்டையும் குறிப்பனவாகும். ( உதாரணம் அமெரிக்கா எச்சரிக்கை ; பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டிப்பு ; பாகிஸ்தான் மிரட்டல் : இந்தியாவுக்கு சீனா பூச்சாண்டி ; தமிழக அரசு அறிவிப்பு – போன்றவை )

      அந்த வகையில், காந்தியின் கொலைக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ். என்று ஒரு பொதுவான கருத்து நிலவுவதால் ராகுல் அவ்வாறு சொல்லி இருக்கலாம். எனவே நான் இதனை ஆதரிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதனை மட்டும் எதிர்பார்ப்போம்.

      Delete
  2. நேர்த்தியாக அன்றைய நிலையினையும்
    இன்றைய சூழலையும்
    அதற்கேற்றார்ப்போல காணொளியினையும்
    இணைத்த விதம் மனம் கவர்ந்தது

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் எஸ்.ரமணி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  3. //மகாத்மா காந்தியைக் கொன்றது யார்?//

    நான் இல்லை. எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் அப்போது பிறக்கவே இல்லை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள, மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் சிலேடையான கருத்துரைக்கு நன்றி. காந்தி கொல்லப்பட்ட சமயம் நானும் பிறந்து இருக்கவில்லை. இருந்தாலும் நமது நாட்டில் நடந்த முக்கியமான சம்பவம் என்பதால், அதுபற்றி அறிந்து கொள்ள எனக்கு ஒரு ஆர்வம்.

      Delete
    2. என்னங்கய்யா இது, அப்ப நீங்க பொறக்கவே இல்லைனா, நீங்க எல்லாம் சின்னப்பசங்க, என்னைப் போல பெரியவங்க எல்லாம் இருக்கறப்ப நீங்க எல்லாம் வாயைத் தெறக்கப்படாது.

      Delete
    3. முனைவர் அவர்களே, உண்மைதான். வாயைத் திறந்ததால் பெரியவர் ஜீ.எம்.பி அவர்களிடம் மாட்டிக் கொண்டேன்.

      Delete
  4. //மகாத்மா காந்தியைக் கொன்றது யார்?//

    நான் இல்லை. எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் அப்போது பிறக்கவே இல்லை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ​திரு வைகோ அவர்களை பின்தொடர்கிறேன். நானும் அப்போது பிறக்கவில்லை.

    ஐயா முனைவர் பழனி ​கந்தசாமி அவர்களுக்கு ஏதாவது தெரியக்கூடும்.. ஐயா GMB அவர்களும் ஏதாவது கூறலாம்.

    மற்றவர்களைப் பற்றி நாளுக்கு நாற்பது கீச்சு எழுதும் சாமியை யாரும் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. யாரோ சொல்லித்தந்ததை ஒப்புவித்த ராகுல் படும் பாடு?

    ஜெயக்குமார்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜே.கே எனப்படும் ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
    2. அப்போது நான் தேர்ட் பாரம் அதாவது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கோட்சே ஆர் எஸ் எஸ் ஐச் சேர்ந்தவர் என்று அப்போது பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன. அன்றைய அரசு ஆர் எஸ் எஸ் இயக்கத்தைத் தடை செய்ததாக நினைவு.

      இந்த கொலை பற்றிய விசாரணைச் செய்திகள் பல வருடங்கள் பிரசிரிக்கப்பட்டன. அப்போது எல்லோருக்கும் இது ஒரு பெரிய சோகமாக இருந்தது. காங்கிரஸ்காரர்கள் இந்த அனுதாபத்தை வைத்து கொஞ்ச காலம் பிழைத்தார்க்ள.

      Delete
    3. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  5. காந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று கூட வரலாறு திருத்தப்படலாம் ,ஏனென்றால் ,கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோஷத்துக்கு சொந்தக்காரகளின் ஆட்சியாச்சே இது !
    இதை சொல்ல நீங்களும் ஏன் அஞ்சுகிறீர்கள் என்றுதான் புரியவில்லை?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பகவான்ஜீயின் கருத்துரைக்கு நன்றி. ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ என்றுகூட ஒரு திரைப்படம் வந்ததாக நினைவு.

      Delete
  6. அருவாளில் அவரே வெட்டிக்கொண்டு இறந்து விட்டார் என்று சொன்னால் கூட நம்புவோம்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  7. இப்போதைய ஆட்சிக்கு கோர்ட்டும் படியுமா என்ன? ஆட்சி தனி நீதி தனிதானே! ஆனால் நம்மூரில் பல சமயங்களில் ஆட்சியும் நீதியும் ஒருமித்துப் பயணிக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தில்லைக்கது V துளசிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. வரலாற்றின் சில நிகழ்வுகளுக்கு முடிவு காண்பது என்பது சிரமமே. நல்ல சிந்தனையைத் தூண்டி விட்டதோடு, அன்றைய நாளிதழ்களின் பக்கங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. மகாத்மாவைக் கொன்றது, அவர் நம்பிய சகோதரத்துவத்தில் நம்பிக்கையில்லாதவர்கள். காந்தி, தன் கருத்தைத் தனது ஆகர்ஷண சக்தியால் திணிப்பதாகக் கருதியவர்கள், அப்படித் திணிப்பதால், பாகிஸ்தானிடம் தாம் (இந்துக்கள்) இழப்பதாகக் கருதியதனால் அவர் மௌனிக்கப்பட்டார். நாதுராம் அவர்களது சகோதரர், அதைப்பற்றிக் கிஞ்சித்தும் வருத்தப்படாமல் கொடுத்த காணொளி (சமீபத்தில்..அதாவது 10-20 வருடங்களுக்கு முன்) இருக்கிறது. கொலைச்சதியில் பங்குபற்றியவர்களுக்கு ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் தொடர்பு இருந்தது.

    நீதிமன்றம் சொல்வதன் கருத்து, "கொலைச்சதியில் ஈடுபடுபவனுடைய தொடர்பை/அடையாளத்தை வைத்து, மற்றவர்களைக் கொலைச்சதியில் இழுக்க முடியாது" என்பது. இது புரிந்துகொள்ளக்கூடியதே. செம்மரக் கடத்தலில் 20 தமிழர்களை ஆந்திரா போலீஸ் சுட்டுக்கொன்றது என்று வைத்துக்கொண்டால், ஆந்திரா போலீஸ் தெலுங்குமொழி பேசுபவர்கள். ஆகவே தெலுங்கர்கள் எல்லோரும் சேர்ந்து 20 தமிழர்களைக் கொன்றார்கள் என்று அனுமானிப்பது போன்றது ராகுல் சொன்னது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாறுபட்ட கோணத்தில் கருத்துரை தந்த நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  10. இப்பொழுது எதற்காக அரசியல்வாதிகள் இந்தப்பிரச்சினையை கையில் எடுத்தார்கள் என்பது யோசிக்கப்பட வேண்டிய விசயம்
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவ்ர்களின் கருத்துரைக்கு நன்றி. வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலின் எதிரொலியாக இருக்கலாம்.

      Delete
  11. காந்தியை கொன்றது யார்? என்பது இருக்கட்டும். காந்தியத்தை கொன்றது நாம் எல்லோருமே என்பது சரிதானே!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். காந்தியத்தைக் கொன்றவர்கள் நாம்தான். விமர்சனம் என்ற பெயரில் நிறையவே நடக்கிறது.

      Delete