தலைப்பைப் பார்த்ததும் உலகில் உள்ள எல்லாமே அசெம்ப்ள்டுதானே – உருவாக்கப்
பட்டவைதானே – இது என்ன என்று திட்டி விடாதீர்கள். நீங்கள் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கும்போது,
ஆலோசனை கேட்டால் அசெம்ப்ள்டா அல்லது கம்பெனியா
என்று கேட்பார்கள். இதில் கம்பெனி என்றால் ப்ராண்டேடு (BRANDED) என்று அர்த்தம். அசெம்ப்ள்டு
(ASSEMBLED) என்றால் தனிநபர் ஒருவர் வெவ்வேறு கம்பெனி பாகங்களை ஒன்றாக இணைத்து (அவை
புதிதா? அல்லது பழையதா?) ஒரு செட் உருவாக்கி தருவார். கம்பெனி செட்டைவிட நன்றாக இருக்கும்;
விலை குறைவு என்பார். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ரேடியோ விற்பனைக் கடைகளில், அசெம்ப்ள்டு
ரேடியோ செட்தான் விற்பனை அதிகம். அப்புறம் டிரான்சிஸ்டர்களில் ‘டெல்லி செட்’ வந்து
அந்த பெயரையே வைத்து விட்டார்கள்.
முதல் கம்ப்யூட்டர்:
ஏழு வருடங்களுக்கு முன்னர், முதன் முதல் ஒரு கம்ப்யூட்டர் வாங்குவதற்காக,
எல்லோரையும் போல தெரிந்தவர்களிடமும், அனுபவஸ்தர்களிடமும் ஆலோசனை கேட்டேன். வழக்கம்
போல ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கூறினார்கள். நான் பணி புரிந்த இடத்திற்கு வரும் கம்ப்யூட்டர்
பாடம் படித்த டிப்ளோமோ என்ஜீனியர்கள் தாங்களே ஒரு நல்ல செட் அமைத்துக் கொடுப்பதாகச்
சொன்னார்கள். யாருடைய பதிலிலும் திருப்தியில்லை. எனவே தூர்தர்ஷனில் அப்போது பணிபுரிந்து
கொண்டு இருந்த எனது நண்பரிடம் விவரம் சொன்னேன். அவரும், என்னைப் போலவே, ஒவ்வொருவரிடமும்
ஆலோசனை கேட்டுவிட்டு, அண்மையில் தான் வாங்கிய கம்ப்யூட்டர் பற்றிய விவரத்தைச் சொன்னார்.
தான் இப்போது கொடைக்கானல் பக்கம் இருப்பதாகவும் திருச்சிக்கு வந்தவுடன், அவரது வீட்டிற்கு
வரச் சொன்னார். அப்படியே சென்றேன். அவர் வாங்கிய கம்பெனி ப்ராண்டேடு கம்ப்யூட்டர் பிடித்து இருந்தது.
அவர் வாங்கிய இடத்திலேயே ‘COMPAQ‘ டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை வாங்கினேன்.
விலையும் எனது பட்ஜெட்டிற்குள்ளேயே வந்தது. windows xp யை கம்ப்யூட்டரில் நிறுவியதோடு
வேண்டிய மற்றைய நிரல்களையும் இணைத்துக் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இந்த
கம்யூட்டர் நன்றாகவே உழைத்தது. அவர்கள் அவ்வப்போது கொடுத்த சர்வீஸ்சும் நன்றாகவே இருந்தது.
அசெம்ப்ள்டு செட்:
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நான் கம்ப்யூட்டர் வாங்கிய ஏஜென்சிக்காரர்கள்
வேறு ஒரு மார்க்கெட்டிங்கிற்கு போய் விட்ட படியினால், வேறு ஒரு சர்வீஸ் என்ஜீனியருக்கு
மாற வேண்டியதாயிற்று. அவர் அவ்வப்போது வருவார். என்னோடு பணிபுரிந்த ஒருவர் வழியாக அறிமுகம்.
சென்ற வருடம் மானிட்டரில் வர்ணங்களாக வர ஆரம்பித்ததால் அதனை அவரிடம் சொல்லி அதனை மட்டும்
(டெல்) மாற்றினேன். இப்போது CPU வில் பிரச்சினை. நான் பேசாமல் கம்பெனி தயாரிப்பையே நேரிடையாக
(மானிட்டர் டெல் என்பதனால் ) வாங்கி இருக்கலாம். விதி வலியது. அவரிடமிருந்து அசெம்ப்ள்டு CPU ஒன்றை வாங்கினேன்.. வாங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. சண்டிமாடு போல் அடிக்கடி படுத்துகிறது. ஒரு சில சாப்ட்வேர் பிரச்சினைகளை, அனுபவம் காரணமாக நானே சரி செய்து விடுவேன்.
ஆனால் ஹார்டுவேர்தான் உதைக்கிறது. கம்பெனி தயாரிப்பிற்கும், அசெம்ப்ள்டு செட்டுக்கும்
அப்படி ஒன்றும் விலை வித்தியாசம் அதிகம் இல்லை. பேசாமல் கம்பெனி (ப்ராண்டேட்) தயாரிப்பையே
வாங்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதில் வாரண்டி உண்டு. அசெம்ப்ள்டு பி.சி இல்
இல்லை.
என்ன நண்பர்களே உங்கள் அனுபவம் எப்படி.? வலையுலகில் நிறையபேர் கம்ப்யூட்டர்
படிப்பு படித்தவர்கள் மற்றும் அனுபவஸ்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்லுகிறீர்கள்.?
என் வோட்டு ,கம்பெனி தயாரிப்புக்குத்தான் :)
ReplyDeleteதோழர் கே.ஏ.பவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete2009 +2 mudithathum naan assemble computerthaan vaangkuvenu mudivu seythu enakku thevaiyaana hardware parts kondu confiner seythu payanpaduthi varukiren. avvappothu ethaavathu hardware problem vanthal antha oru part mattum maatrivittu vandi otikkondirukkiren.
ReplyDeleteintha suthanthiram branded computer la irukkaathu.
koncham computer patri vivaram therinthavarkal irunthaal samaalithuvidalam ilaiyel branded thaan saripattu varum sir.
அன்புள்ள திருப்பதி மகேஷ் அவர்களுக்கு நன்றி. தாங்கள் ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் கருத்துரையை எல்லோரும் உடனே புரிந்து கொள்ளும் வண்ணம் தமிழில் கீழே எழுதி இருக்கிறேன்.
Delete// 2009 +2 முடித்ததும் நான் அசெம்ப்ள் கம்ப்யூட்டர்தான் வாங்கவேண்டுமென்று முடிவு செய்து, எனக்கு தேவையான ஹார்டுவேர் பார்ட்ஸ் கொண்டு இணைத்து பயன்படுத்தி வருகிறேன். . அவ்வப்போது ஏதாவது ஹார்டுவேர் பிரச்சினை வந்தால் அந்த ஒரு பாகத்தை மட்டும் மாற்றிவிட்டு வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். இந்த சுதந்திரம் ப்ராண்டேட் கம்ப்யூட்டர்லே இருக்காது.
கொஞ்சம் கம்ப்யூட்டர் பற்றி விவரம் தெரிந்தவர்கள் இருந்தால் சமாளித்து விடலாம். இல்லையேல் ப்ராண்டேட் தான் சரிப்பட்டு வரும் சார். //
அன்பு திருப்பதி மகேஷ் அவர்களுக்கு, தங்களது அனுபவ மொழிகள், பின்னாளில் கம்ப்யூட்டர் சம்பந்தமாக எனக்கு உதவும்.
Deleteநான் DTP Center ஆரம்பித்தபோது - Assemble Computer தான்..
ReplyDeleteஅவ்வப்போது வைரஸ் தொல்லைகளைத் தவிர எந்த பிரச்னையும் இல்லை..
இங்கே, குவைத்தில் - என்னுடன் இருப்பதும் Assemble Computer தான்..
கருத்துரை தந்த தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.
Deleteநல்ல நம்பிக்கையான டெக்னீசியன் கிடைத்தால் அசெம்பிள்டு கம்ப்யூட்டர் வாங்கலாம். தவறில்லை.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.பிரச்சினையே நல்ல நம்பிக்கையான டெக்னீசியன் கிடைக்க வேண்டும் என்பதுதான்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகொஞ்சம் கணினி தெரிந்திருந்தால் அசெம்ப்ள்டு சிறந்தது. கம்பெனி தயாரிப்புகளிம் அனைத்து பாகங்களுக்கும் சேர்த்து ஒரே உத்தரவாதம்தான். அசெம்பிள் செய்யப்பட்டதில் ஒவ்வொரு தனித்தனி பாகங்களுக்கும் உத்தரவாதம் பெற முடியும். ஒரிஜினல் உதிரி பாகங்களையும் வாங்க முடியும் உதாரணமாக இன்டெல் மதர் போடுக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டி உண்டு. கம்பனியில் பெரும்பாலும் ஒரு ஆண்டு மட்டுமே உத்தரவாதம் இருக்கும். மேலும் ஏ.எம்.சி போட்டுக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்துவார்கள்.அதற்கு தனி கட்டணம் உண்டு. எனது கணினி அச்செம்பள் செய்யப் பட்டதுதான். சீகேட் ஹார்ட் டிஸ்க் இரண்டு முறை வாரண்டி காலத்திற்குள் மாற்றி இருக்கறேன்.முன்பெல்லாம் கணினி ஏழெட்டு ஆண்டுகள் உழைக்கும் காரணம் அப்போது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு பயன்படுத்துவது அரிது. இப்போது ஒரு நாளைக்கு கணினி பத்து மணி நேரத்திற்கு மேல் இயங்குகிறது. இயல்பாக் அதன் ஆயுட்காலம் குறைந்து விடுகிறது.கணினி பாகங்கள் பற்றி அதிகம் அறியாதவர்களுக்கு கம்பனி செட்டே சிறந்தது. என்ன கம்பனி செட்டில் ஒரிஜினல் விண்டோஸ் பதிந்து தருவார்கள்.
ReplyDelete. சீகேட் இன்டெல் போன்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் பழுது ஏற்பட்டால் மாற்றாக வேறொன்றை கொடுத்து விடுகின்றன. மேலும் சீரியல் எண்ணை வைத்து அதன் உத்தரவாதத்தையும் கணினியில் அறிந்து கொள்ள முடியும்.இது தொடர்பாக கட்டுரை ஒன்று எனது ட்ராப்டில் இருக்கிறது முழுமைப் படுத்த வேண்டும்
சகோதரர் மூங்கில் காற்று - டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் பின்னூட்டம் வழியே எல்லோருக்கும் பயன்படும் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
Deleteதம 3
ReplyDeleteகம்பெனி கம்பியூட்டர் தான் உபயோகிறேன். மற்றவை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது ஐயா.
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கிட்டத்தட்ட பல பேருடைய அனுபவமும் இதேதான்.
Deleteநான் ஹெச். பி விண்டோஸ் 10 வைத்திருக்கிறேன் நண்பரே மேலும் எனக்கு கணினி அறிவு குறைவே பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதமிழ் மணம் 5
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
Deleteமிகவும் பயனுள்ள பதிவு. பலரின் பலவித அனுபவங்களை இதன்மூலம் அறியலாம்.
ReplyDeleteநான் தற்சமயம் சுமார் இரண்டு ஆண்டுகளாக உபயோகித்து வருவது DESK TOP - NEW ASSEMBLED SET தான். 20” நீளமும் 12” அகலமும் உள்ள MONITOR இல் SAMSUNG என்று போட்டுள்ளது. ரூபாய் 36,000 + ஆனது. இதுவரை மேஜராக ஒன்றும் பிரச்சனைகள் ஒன்றும் எனக்கு வரவில்லை.
இதற்கு முன்பு 2-3 ஆண்டுகள் மட்டும் BRANDED 'ACER' LAPTOP வைத்திருந்தேன். அது ஏனோ ஒருநாள் திடீரென வேலை செய்யவில்லை. போய்க்கேட்டதற்கு, இது பழைய மாடலாகிவிட்டது சார்; இதனை சரி செய்வதற்கு புதிதே வாங்கிக்கொள்ளலாம் என்று என்னைக் குழப்பி விட்டார்கள். அதனால் இந்த தற்போது உபயோகித்துவரும் DESK TOP ASSEMBLED SET வாங்கிவரும்படி ஆனது.
நான் வாங்கியுள்ள ASSEMBLED SET மேஜை கணினியின் திரை மிகப்பெரியது. அதில் SAMSUNG என பொறிக்கப்பட்டுள்ளது.
DeleteCPU வில்: ZEBRONICS - ALWAYS AHEAD எனப் போட்டுள்ளது. மேலே DVD Multi Recorder - Company Disc Rewritable - Ultra Speed எனப் போட்டுள்ளது. நடுவில் Intel Inside Core i3 என பளபளப்பான எழுத்துக்களில் ஓர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. CPU க்குக் கீழே Defender என எழுதப்பட்டுள்ளது.
UBS இல் V-GUARD SESTO Dx600 என போடப்பட்டுள்ளது.
Key Board இல் Logitech K200 என எழுதப்பட்டுள்ளது.
தங்களின் இந்தப்பதிவினால் இவற்றையெல்லாம் இன்று என்னால் கூர்ந்து கவனிக்க முடிந்தது. நாளைக்குக் கேட்டால் எனக்கு இதெல்லாம் மறந்தே போய்விடும். :)
UBS இல் V-GUARD SESTO Dx600 என போடப்பட்டுள்ளது =
DeleteUPS இல் V-GUARD SESTO Dx600 என போடப்பட்டுள்ளது
என்று இருக்க வேண்டும். (B / P) எழுத்துப்பிழையாகியுள்ளது.
திரு V.G.K. அவர்களின் அன்பான கருத்துரைகளுக்கு நன்றி.
Deleteஇந்தக் குழப்பம் எனக்கும் இருக்கிறது. அசெம்பெள்டு செய்பவர்கள் அதைத்தான் பெஸ்ட் என்கிறார்கள். பிராண்டட் விற்பனை செய்பவர்கள் அதுதான் நல்லது என்கிறார்கள். பின்னூட்டங்களை வைத்துதான் முடிவுக்கு வரப்போகிறேன். எதை வாங்குவது என்று..?
ReplyDeleteத ம 6
பதிரிக்கைத் துறை நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி!
Deleteஎன் வாக்கு அசெம்பிள்டுவுக்கே.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! ஆனால் எனக்கு கம்பெனி பொருள் வாங்கியதில் இருந்த திருப்தி, அசெம்பிள்டு வாங்கியதில் ஏற்படவில்லை.
Deleteநானும் முதலில் கோர்க்கப்பட்ட கணினியைத்தான் வாங்கினேன். அதில அடிக்கடி virus தொல்லைகள் ஏற்பட்டதால் Dell நிறுவனத்தின் மடிக்கணினியை வாங்கிவிட்டேன். திரு T.N.முரளிதரன் அவர்கள் சொல்வது போல் கணினி பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தாலும், முனைவர் பழனி. கந்தசாமி அய்யா அவர்கள் சொல்வது போல் ஒரு நல்ல தொழில் நுட்ப வல்லுனர் உதவி இருப்பின் கோர்க்கப்பட்ட கணினியை வாங்கலாம்.
ReplyDeleteஅய்யா V.N.S. அவர்களின் அன்பான யோசனைக்கு நன்றி!
Deleteஐயா
ReplyDeleteஒன்னு பார்த்தீர்களா. கணினி மட்டும்தான் அசெம்பில்ட் அல்லது கம்பனி என்று உண்டு. ஒரு பிரிஜ் அல்லது வாஷிங் மெசின் போன்றவை அசெம்பிள் செய்யமுடியாது. அந்தக்காலததில் நமது அவசியம் என்ன என்று சொன்னால் கம்பனிக் காரர்களே அதற்கு ஏற்ப அசெம்பிள் செய்து தருவார்கள். (உ-ம்) மானிடர்.
ஆமாம் அது என்ன UBS. UPS (uninterupted power supply) என்பதை அப்படி கூறினீர்களா? அல்லது Universal Serial Bus எனப்படும் USB பற்றி கூறினீர்களா?
தற்போது 10000 ரூபாய்க்கு எல்லாம் அச்செம்பில்ட் கம்ப்யூட்டர் கிடைக்கிறது. ஒரு நெட்வொர்கில் front end ஆக அது போதும்.cloud computing மூலம் எல்லா வேலைகளையும் அதிலேயே செய்யலாம். பழுதானால் குப்பையில் போட்டு விட்டு வேறு ஒன்றில் வேலை செய்யலாம்.
--
Jayakumar
Writer A Muthulingam has written a very good short story on Computer. amuttu.com
நண்பர் J.K. அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! வெளியூர் சென்றுவிட்டு இப்போதுதான் திரும்பினேன்.தங்களுடைய கருத்துரை கண்டேன்.
Delete// ஆமாம் அது என்ன UBS. UPS (uninterupted power supply) என்பதை அப்படி கூறினீர்களா? அல்லது Universal Serial Bus எனப்படும் USB பற்றி கூறினீர்களா?//
அவசரத்தில் CPU என்பதற்குப் பதிலாக UBS என்று குறிப்பிட்டு விட்டேன். பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. மேலே பதிவினில் திருத்தம் செய்து விட்டேன்.
Sorry it is amuttu.net
ReplyDeleteSorry it is amuttu.net
ReplyDeleteஎன்னிடம் இருப்பது Laptop தான். அதில் Assembled Set கிடைப்பதில்லை!
ReplyDeleteஇரண்டில் எதுவாக இருந்தாலும், அதை சீராக்கும் Technician நல்லவராக கிடைத்துவிட்டால் தான் நமக்கு சரியாக இருக்கும். நாமும் கொஞ்சமாவது இதன் நுணுக்கங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! இப்போது service செய்யும் எல்லோருமே பணம் ஒன்றையே பிரதானமாக நினைப்பதால், நல்ல டெக்னீசியன்கள் யார் என்று அறிய முடிவதில்லை.
Delete2006-ம் ஆண்டு என் மகன் ஒரு அசெம்பில்ட் கணினியை வாங்கினான் அதை 2010-ம் ஆண்டு எனக்குக் கொடுத்தான் அதுவும் சிறப்பாகவே செயலாற்றி வந்தது. 2013 வாக்கில் மானிடரை மாற்றினேன் அதுவும் ஒரு மெக்கானிக்கிடம் வாங்கியது மீண்டும் மானிடரை மாற்றுவதற்குப் பதிலாக ஒரு புது அசெம்பில்ட் கணினியை அதே மெக்கானிக்கிடம் வாங்கினேன் அதில் மனிடர் மட்டும் led display monitor Dell கம்பனியுடையது கீ போர்டும் ப்ராசெசரும் zebronics மேக் எனக்கு எந்த பிரச்சனையும் இதுவரை இல்லை. என் வோட் நம்பிக்கைய்யனவரிடமிருந்து வாங்கும் அசெம்பில்ட் கணினிக்கே. என் மகன் ஜெனித் கம்ப்யூடர் கம்பனியில் விற்பனை மேலாளனாக இருந்தவன்
ReplyDeleteமேலே சில தட்டச்சுப் பிழைகள் உள்ளன பொறுத்துக் கொள்ளவும்
ReplyDeleteஅய்யா G.M.B. அவர்களின் அன்பான கருத்துரைகளுக்கு நன்றி! உங்களுக்கு அமைந்தது போல் எல்லோருக்கும் அமைய வேண்டும்.
Deleteஏழு வருடங்களுக்கு முன் அசெம்பிள்டு கணினிதான் வாங்கினேன் ஐயா
ReplyDeleteஆறு வருடங்கள் ஒன்றும் பிரச்சினையேஇல்லை
நன்றாகத்தான் இருந்தது
இப்பொழுது சி.பி.யூ கூண்டு மட்டும்தான்
பழையது மற்றபடி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மாற்றி விட்டேன்
நன்றி ஐயா
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அனுபவ மொழிகளுக்கு நன்றி.
Deleteசின்ன சின்ன பிரச்சனைகளைத் தானே சரிசெய்துகொள்ளும் திறன் இருந்தால், அசெம்பிள்டு கணிணிதான் சிறந்தது. இயக்க மட்டுமே தெரிந்தவர்களுக்கு 'ப்ராண்டட்"தான் சிறந்தது. எதற்கெடுத்தாலும் கம்பெனி சர்வீசை நாடலாம் !
ReplyDeleteஇளங் கவிஞர் பி.பிரசாத் அவர்களுக்கு நன்றி.
Deleteஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், அனைத்துமே அசெம்ப்ள்ட் கணினி தான். ஏனெனில், நீங்கள் வாங்குவது பிராண்ட் கணினியாக இருந்தாலும், அதன் பாகங்கள் அனைத்தையும் அந்தந்த கம்பனிகளே தயாரிப்பதில்லை. எல்லாமே வேறு வேறு கம்பனிகளின் கூட்டு தயாரிப்பு தான். உதாரணமாக
ReplyDelete1. அதில் பயன்படுத்தப்படும் ப்ராசரர் (Processor) Dual core , i3, i5 முதலியவை intel மட்டுமே தயாரிக்கிறது, Athlon, Sempron, FX போன்ற ப்ராசரர் (Processor) வகைகளை AMD நிறுவனம் மட்டுமே தயாரிக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றைதான் அந்த குறிப்பிட்ட பிராண்டட் மற்றும் அசெம்ப்ள்ட் கணினிகள் பயன்படுத்தியாகவேண்டும்
2. அதில் பயன்படுத்தப்படும் வன்தட்டு (Hard Disk) Seagate, Western Digital, Toshiba போன்ற சில கம்பனிகள் மட்டுமே தயாரிக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றைதான் அந்த குறிப்பிட்ட பிராண்டட் மற்றும் அசெம்ப்ள்ட் கணினிகள் பயன்படுத்தியாகவேண்டும்
3. அதில் பயன்படுத்தப்படும் Graphics Card ஐ NVidia, ATI போன்ற சில கம்பனிகள் மட்டுமே தயாரிக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றைதான் அந்த குறிப்பிட்ட பிராண்டட் மற்றும் அசெம்ப்ள்ட் கணினிகள் பயன்படுத்தியாகவேண்டும்.
இவை போன்றே பிராண்டட் கணினிகளில் Mother Board தவிர பிற பாகங்கள் அனைத்தும் பெரும்பாலும் வெவ்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளே.
So, கணினிகளில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களின் பிராண்டை நாம் தேர்ந்தெடுத்தால் அது அசெம்ப்ள்ட் கணினி, அந்தந்த நிறுவனம் தேர்ந்தெடுத்தால் அது பிராண்டட் கணினி.
நண்பர்கள் பலர் முன் குறிப்பிட்டதை போல, இரண்டில் எதுவாக இருந்தாலும், அதை யாரிடம் வாங்குகிறோம் என்பதை பொறுத்தே நமக்கு நன்மை தரும். அனுபவம் இல்லாதவர்கள் பிராண்டட் கணினி-ஐ தேர்ந்தெடுக்கலாம், ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள், சிறந்த technician கிடைக்கப்பட்டவர்கள் அசெம்ப்ள்ட் கணினி-ஐ தேர்ந்தெடுக்கலாம்.
மேலே அய்யா, வே.நடனசபாபதி சொன்னது போல virus தொல்லைகளால் பிராண்டட் கணினிகளை நாட வேண்டியதில்லை. வைரஸ் தொல்லைகள் இரண்டிலுமே இருக்கும்தான். அதற்கு தீர்வு சரியான Antivirus மென்பொருள் நிறுவுவது மட்டுமே.
சகோதரர் சஹா அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி. நிறைய விஷயங்களை உங்கள் பின்னூட்டம் வழியே தெரிந்து கொண்டேன்.
Deleteஎனக்கு எதுவும் தெரியாது!
ReplyDeleteபுலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
எப்போதும் அனைத்து பாகங்களும் பூட்டிய படி விற்பனைக்கு தயாராக இருக்கும் கணனியை வேண்டுவது நல்லதல்ல நாம் HP என்ற விரண்டு இருக்கும் நாம் பார்ப்பதற்கு ஆனால் அதனுள் இருக்கும் பாகங்கள் சிலகாலந்தான் பாவிக்கமுடியும்
பாகங்கலாக நாம் வேண்டி கணனியை உருவாக்கினால் விலை குறைவு தரமானதாக இருக்கும்.எப்போதும் ஒரு கணனியை வேண்டும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம்.
processor-
Installed Memory(RAM)
Systeme Type
Pen and Touch
இந்த நான்கையும் கவனிக்க வேண்டும் இதில் processor இதுக்குத்தான் சந்தையில் அதிக விலை.. processor அதிகமாக இருந்தால் நாம் பாவிக்கும் கணனி வேகமாக இயங்கும். விளக்கம் இன்னும் எழுதலாம் சுருக்கமாக முடிக்கின்றேன்.
விற்பனைக்கு தயாராகஇருக்கம் கணனியை விட பாகங்கலாக வேண்டி அசெம்பில் செய்து பாவிப்பது நல்லது நல்லது....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபன் அவர்களின் அன்பான ஆலோசனைகளுக்கும், நீண்ட கருத்துரைக்கும் நன்றி.
Deleteநான் கூட முதலில் (2004) கம்பெனி செட் தான் வாங்கினேன். கம்பெனி வாரண்டி காலம் முடிந்த உடன், அவ்வப்போது அதன் பாகங்களை நானே தெரிந்த டெக்னிசியன் மூலம் நினைவகத்தை அப்கிரேட் செய்வது, வி சி டியை டிவிடியாக மாற்றுவது அவ்வப்போது தேவைப்படும் சமயங்களில் எஸ் எம் பி எஸ் மாற்றுவது என்று செய்து கொண்டேன். அப்புறம் எல் இ டி மானிட்டர் வாங்கினேன். 2013 இல் என்று நினைவு, அப்போதைக்கு லேட்டஸ்ட் மாடலாக ஒரு சி பி யு அசெம்பிள் செய்து வாங்கி விட்டேன்.
ReplyDeleteஇப்போதும் சில சில்லறை ரிப்பெர்கள் வரும். ராம் அட்ஜஸ்ட் செய்வது போன்ற ரிப்பெர்களை நான் செய்து விடுவேன். எஸ் எம் பி எஸ், மௌஸ் மாற்றுவது, போன்றவைகளுக்குச் சொல்லி விட்டால் அவர் வந்து மாற்றி விடுவார்.எனக்கு கணினி ஆஸ்தான கணினி மருத்துவர் உண்டு. அதுவும் இருவர். ஒருவர் எப்போதேனும். இன்னொருவர் எப்போதும். நண்பர் முரளிதரன் மற்றும் வெங்கட் கருத்துகளை ஆதரிக்கிறேன்.
சகோதரர் ‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Delete