இப்போது நாடெங்கும் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள்
தங்களையும் (தாழ்த்தப்பட்ட இந்துக்களைப்
போலவே) பட்டியல் இனத்தில் (SCHEDULED
CASTE) சேர்க்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இந்திய உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது. கீழே சொல்லப்பட்ட ”செருப்பு தைக்கும் சூசை வழக்கு” பலருக்கு தெரியாது.
சில வருடங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட அந்த வழக்கின் தீர்ப்பைப் பற்றி
அப்போது ” தினகரன்” ( 02, டிசம்பர், 1995 ) நாளிதழில் வந்த செய்தி இது. (அப்படியே டைப் செய்துள்ளேன்)
செருப்பு தைக்கும் சூசை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை சாதியில்
இணைக்கலாமா? கூடாதா என்னும் பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு
வைக்கப்பட்டது 1982-ம் வருடத்தில்! இந்த வழக்கு நமது மாநிலமான தமிழ்நாட்டைச்
சார்ந்தது என்பதால் தமிழர்களாகிய நாம் இதனைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
1982-ம் வருடம் மே மாதம் தமிழ்நாடு கதர் மற்றும்
கிராம தொழில் வாரியத்தார் சென்னை நகரத்தின் தெருவோரங்களில் அமர்ந்து செருப்பு
தைக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தொழில் பற்றிய சர்வே ஒன்றை மேற்கொண்டது. அப்படி
சர்வே செய்யப்பட்டபோது அதில் பதிவானவர்கள்
பலருள் சூசை என்பவரும் ஒருவர். இவர் பூர்வீகத்தில் இந்து மதத்தை
சார்ந்தவர். ஆனால் பின்னர் கிறிஸ்தவராக மதம் மாறியவர்.
1982 ஜூலை மாதம் இவர்களுக்கெல்லாம் ‘பங்க்’ எனப்படும் பெட்டிக்கடைகளை இலவசமாக வழங்கினார்கள். இந்திய
அரசின் பணத்தில் இந்த பெட்டி கடைகள் செய்யப்பட்டு மாநில அரசால் வழங்கப்பட்டது.
சூசை தவிர பிற செருப்பு தைப்போர் அனைவருக்கும் கடைகள் வழங்கப்பட்டன. சூசைக்கு
மட்டும் இல்லை. ஏன்? சூசை கிறிஸ்தவர் என்பதால் அட்டவணை சாதியினர் நல்வாழ்வுக்காக
அமுல் நடத்தப்படும் திட்டத்தின் கீழ் அட்டவணை சாதி அல்லாத சூசைக்கு எப்படி உதவி
செய்ய முடியும் என்பது அரசின் நிலை.
இதுகுறித்து சூசை சார்பில் உச்சநீதிமன்றத்தில்
வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீடித்துக்கொண்டே போய் 1985-ம் வருடம்
செப்டம்பர் மாதம் 30-ந்தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது. சூசையின் கோரிக்கை
உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதற்கு
காரணமாக உச்சநீதிமன்றம் கூறிய காரணம் என்ன?
” சாதி அமைப்பு என்பது இந்து
சமய அமைப்பில் ஓர் அம்சம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. சாதி அமைப்பு என்பது
இந்து சமயத்துக்கு மட்டுமே உரிய ஒரு வினோதமான ஒரு சமூக விசித்திரம் “ ( ” …. IT CANNOT BE DISPUTED THAT THE CASTE SYSTEM IS A
FEATURE OF THE HINDU SOCIAL STRUCTURE. IT IS A SOCIAL PHNOMENON PECULIAR TO
HINDU SOCIETY “ )
இப்படி சொல்லியதோடு நில்லாமல் இன்னொரு
கருத்தையும் கூறியது. அதாவது, “ இந்து மதத்தில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட
வகுப்பினர் ஒருவர், இந்து மதத்திலுள்ள பிறரால் இழிவாக நடத்தப்படுவது போல அவரே
கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறிய பிறகும் அவரை அவரது புதிய சமயத்தவர்களான
கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்களா? “ – இது உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து - கேட்ட கேள்வி. இதற்கு
இன்னமும் சரியான பதில் உச்சநீதிமன்றம் வாயிலாக இன்னமும் கூறப்படவில்லை. இது ஒரு
பெரிய தடைக்கல்லாக உள்ளது என்று சில சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நன்றி: தினகரன் (திருச்சி பதிப்பு) தேதி- 02,
டிசம்பர், 1995.
இன்னொரு கோணம்:
மதத்தின் அடிப்படையில் அல்லாது இன்றைய நிலை என்ற கோணத்தில்
பார்க்கும்போது, கிறிஸ்தவ மதத்தினை தழுவினாலும் அவர்கள் நிலைமை அப்படியேதான்
இருக்கிறது என்கிறார்கள்.
இன்னும் படித்த பலர் இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பிற்காக
வேண்டி கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிக் கொள்கிறார்கள். பெயர்
மாற்றம செய்து கொள்ளும்போது கூட கிறிஸ்தவத்திற்கும் இந்து மதத்திற்கும் பொதுவான
ஒரு பெயரை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அவர்களும் அவர்கள்
குடும்பத்தினரும் கிறிஸ்தவர்களாகவே இருந்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இதனை
எதிர்த்த கிறிஸ்தவ மெஷினரிகள் இதனை இப்போது கண்டு கொள்வதில்லை.
நாட்டின் பல இடங்களிலும் முக்கிய நகரங்களிலும் கிறிஸ்தவ
மெஷினரிகள் மற்றும் பணக்கார கிறிஸ்தவர்கள் நடத்தும் பல கல்வி நிறுவனங்களில்
தொழிற்சாலைகளில் தலித் கிறிஸ்தவர்களுக்கு
சரியான வாய்ப்புகள் தரப் படுவதில்லை. இதற்காகவும் அவர்கள் போராடி வருகிறார்கள்.
கல்லறையில் குறுக்குச்சுவர்:
திருச்சியில் ஒரு கிறிஸ்தவ கல்லறையில் தலித்
கிறிஸ்தவர்களையும் மற்ற கிறிஸ்தவர்களையும் ஒரு குறுக்குச்சுவர் வைத்து பிரித்து
வைத்து இருக்கிறார்கள். அதை உடைக்கவும் போராடுகிறார்கள். ஆனால் இவைகள் எதனையும்
யாரும் கண்டு கொள்வது கிடையாது. இந்த குறுக்குச்
சுவரைக் கட்டிக் காக்கும் கல்லறைக் கமிட்டியின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலர் அரசியல்
கட்சிகளில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்.
இதற்கு யார் காரணம்? இந்த நிலைமையை நீக்க வேண்டியது பல்வேறு
தொண்டு நிறுவனங்களையும், பல கல்வி நிறுவனங்களையும் வைத்துள்ள கிறிஸ்தவ சமூகம்தான்
இதனை நீக்க பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அந்த நிறுவனங்களில் தலித்
கிறிஸ்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை சரியாக கொடுக்க வேண்டும்.
எனவே பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீட்டிற்காக ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தால்தான் தலித்
கிறிஸ்தவர்களின் கோரிக்கை நிறைவேறும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பார்களா
என்று தெரியவில்லை. அதிலும் இப்போது நடக்கும் பி.ஜே.பி ஆட்சியில் எந்த அளவிற்கு இது சாத்தியம் என்று
சொல்ல முடியாது. மேலும், காங்கிரஸ்
ஆட்சிக் காலத்தில் இருந்தே, எல்லா மட்டத்திலும் வெளியாள் முறை (OUTSOURCING)
மற்றும் ஒப்பந்தமுறை (CONTRACT) நுழைந்து விட்டபடியினால், இடஒதுக்கீடு என்பது
பெயரளவில்தான் இருக்கிறது.
கட்டுரை எழுத துணை நின்றவை:
1. தினகரன் (திருச்சி பதிப்பு) தேதி- 02,
டிசம்பர், 1995
3. Google search : writ of petition No. 9596 of 1983
SOOSAI THE COBBLER AGAINST THE SUPREME COURT OF INDIA
அன்புள்ள அய்யா,
ReplyDelete‘தலித் கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீடு’
”செருப்பு தைக்கும் சூசை வழக்கு” வைத்து நாட்டுக்கு நல்ல கருத்தைப் பகிர்ந்தீர்கள்.
\\\\இந்து மதத்தில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவர், இந்து மதத்திலுள்ள பிறரால் இழிவாக நடத்தப்படுவது போல அவரே கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறிய பிறகும் அவரை அவரது புதிய சமயத்தவர்களான கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்களா? “ – இது உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து - கேட்ட கேள்வி. இதற்கு இன்னமும் சரியான பதில் உச்சநீதிமன்றம் வாயிலாக இன்னமும் கூறப்படவில்லை\\\\\
இதற்கான பதில் உள்ளங்கை நெல்லிக்ககி போல...
திருச்சியில் மேலப்புதூரில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் தலித் கிறிஸ்தவர்களையும் மற்ற கிறிஸ்தவர்களையும் ஒரு குறுக்குச்சுவர் வைத்து பிரித்து வைத்து இருக்கிறார்கள். அதை உடைக்க மறைந்த வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் முதல் பலர் போராடினார்கள். ஆனால் இவைகள் எதனையும் யாரும் கண்டு கொள்வது கிடையாது.
வேலை வாய்ப்பிற்காக வேண்டி கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிக் கொள்கிறார்கள் என்பதும் முன்பெல்லலாம் அதிகமாக இருந்தது முற்றிலும் உண்மையே.
நன்றி.
த.ம. 1.
-
முதல் கருத்துரை தந்த நண்பர் ஆசிரியர் ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி. நிறைய பேருக்கு இந்த ”செருப்பு தைக்கும் சூசை வழக்கு” தெரியாது என்பதாலும், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும் என்பதாலும் இந்த கட்டுரையை எழுதியுள்ளேன். மற்றபடி ஒன்றும் இல்லை,
DeleteIt is against Bible and Jesus ...
DeleteThey have just crucified Jesus again...
thats it ...
ஆசிரியர் எஸ். மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete//மதம் மாறிய பிறகும் அவரை அவரது புதிய சமயத்தவர்களான கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்களா? – இது உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து //
ReplyDeleteகாலம் காலமாக சிறுமைப்படுத்தப்பட்டு வாழ்ந்து வரும் மக்களை சம நிலைக்கு கொண்டுவருவதற்காக இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. வேறு மதத்துக்கு மாறிவிட்டால் இட ஒதுக்கீடு கிடையாது என்பது சரியாகப்படவில்லை. கோர்ட்டின் உத்தரவு இன்னும் சிறுமைப்பட்டு வாழ்ந்தால்தான் இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்பதுபோல் உள்ளது.
சகோதரர் என்.பக்கிரிசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன் (மன்னிக்கவும்) தீண்டாமை அடிப்படையில்தான் (பொருளாதார அடிப்படை இல்லை) இந்துமதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப் பட்டுள்ளது.
Delete/// இந்து மதத்தில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவர், இந்து மதத்திலுள்ள பிறரால் இழிவாக நடத்தப்படுவது போல அவரே கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறிய பிறகும் அவரை அவரது புதிய சமயத்தவர்களான கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்களா? ///
என்பதுதான் கேள்வி. ”ஆம் எங்கள் கிறிஸ்தவ சமயத்திலும், இந்து மதத்தில் உள்ளது போலவே தீண்டாமை உள்ளது” என்று பொறுப்பானவர்களால் பதில் சொல்ல இயலவில்லை என்பதுதான் உண்மை. அப்படி ஒத்துக் கொண்டால் , அவர்கள் தாங்கள் நடத்தும் நிறுவனங்களில், இந்த இடஒதுக்கீட்டை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டி வரும். இதற்குப் பின்னால் பக்கம் பக்கமாக எழுத வேண்டிய அரசியல் நிறைய உண்டு.
உண்மைதான்!
Deleteவணக்கம் அய்யா
ReplyDeleteபல வருத்தங்களை தந்த பதிவு ...
தம +
ஆசிரியர் எஸ். மது அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Delete---///சாதி அமைப்பு என்பது இந்து சமயத்துக்கு மட்டுமே உரிய ஒரு வினோதமான ஒரு சமூக விசித்திரம் “ ////
ReplyDeleteஉண்மைதானே ஐயா, சாதியையும் சாதி என்ற வார்த்தையையும் கண்டுபிடித்தவர்களே இந்துக்கள்தானே,
இடுகாட்டில் கூட தடுப்புச் சுவர் வேதனை அளிக்கிறது ஐயா
நன்றி
தம +1
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteகல்லறையில் குறுக்குச்சுவர்... வேதனை தருகிறது ஐயா...
ReplyDeleteநண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. உங்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் … …
Deleteகடவுள் செய்த பாவம் – இங்கு
காணும் துன்பம் யாவும்.
….. …… …
படைத்தவன் பெயரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப் போன இந்த பூமியிலே
நேற்றே - பதிவு வெளியானதும் முதல் ஆளாகப் படித்து விட்டேன்.. ஆனாலும் என்ன சொல்வது!..
ReplyDeleteதஞ்சையில் - வடக்கு வாசல் பகுதியில் வாழ்கின்ற (சமயம் மாறிய) கிறிஸ்தவர்கள் - இதே தஞ்சையில் மிஷன் தெருவிலுள்ள தேவாலயங்களுக்குச் செல்லமுடியாது!..
கல்லறைத் தோட்டங்களும் வேறு.. வேறு!..
இங்கே - குவைத்தில் கூட - மரபு வழிப் பிரிவினைகள்.. இவனுக்கு அவன் மரியாதை செய்வதே வேறு விதமாக இருக்கும்.. . சென்ற மாதம் வரலாற்றில் முதல் முறையாக மசூதிக்குள் குண்டு வெடிப்பு.. பலி.. இரத்தக் களறி!..
அவரவர் மதத்திற்குள்ளேயே சம்மதம் இல்லை..
இதிலே - நல்லிணக்க கூச்சல்.. எம்மதமும் சம்மதம் என்று வீண் பிதற்றல்..
தெய்வமே வந்து கதறி அழுதாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்!..
சகோதரர் தஞ்சையம்பதி துரை. செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனித இதயமே (நீங்க நல்லாயிருக்கணும் பாடல் ) என்பதுதான் உண்மை.
Deleteவணக்கம்,
ReplyDeleteஅங்கு படிக்கும் வரை எனக்கு சாதி என்றால் என்ன என்றே தெரியாது,
இன்று சாதி மட்டும் தான் தெரிகிறது,
பணம் பன்னும் மனிதனுக்கு எல்லாம் ஒன்று தான்,
மாறும் என்ற நம்பிக்கையில்லா நிலையில்,,,,,,,
நன்றி ஐயா பகிர்வுக்கு,,,
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபல புத்தர்களும், பல காந்திகளும் வந்தாலும் மாற்றமுடியாது என்று கூறுமளவுக்கு ஆகிவிட்ட நிலையை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. காலம் வரலாற்றில் மாற்றத்தை உண்டாக்கும் என நம்புவோம்.
ReplyDeleteமுனைவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.
Deleteமதம் மாறுவதால் ஜாதி மறையாதே என்றே தோன்றுகின்றது. இந்து மதத்தில் உள்ள ஆதிக்க ஜாதியினர் மதம் மாறி போய் அங்கும் ஆதிக்கமே செலுத்துகின்றனர். அதனால் மதம் மாறுவதால் ஜாதி பேதம் போகும் என்பதெல்லாம் நிகழ்வில் நடக்காத ஒன்று. கல்லறைகள் கூட தனித் தனி என்பது எல்லாம் உச்சக்கட்ட கொடுமை. இதற்கு எல்லாம் ஒரே வழி ஜின்னா முஸ்லிம்களுக்கு தனி நாடு கோரியது போல, அம்பேத்காரும் தலித்களுக்கு தனி நாடு கோரி இருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் மட்டுமே பிரச்சனை தீர்ந்திருக்கும். இன்று இந்தியா முழுவதுமே OC/OBC ஒரு பக்கமும் ST/SC மறுபக்கமும் பிரிந்து போய் கிடக்கின்றது. ஆதிக்க சாதிகள் அரசியல், சமூக அதிகாரங்கள் அனைத்தையும் தமதாக்கிக் கொண்டுள்ளனர். காரணம் அவர்களிடம் நிலம் இருக்கின்றது, நிலங்களை வைத்து பணம் பண்ணுகின்றனர், பணத்தை வைத்து கல்வியைப் பெறுகின்றனர், கல்வியை வைத்துக் கொண்டு உத்தியோகங்களைப் பெறுகின்றனர், உத்தியோகங்களை வைத்துக் கொண்டு அதிகாரம் பண்ணுகின்றனர், அந்த அதிகாரங்கள் மூலம் அரசியலில் நிலைத்திருக்கின்றனர். எல்லா ஊர்களிலும் காவல்துறை, ஊராட்சி, நகராட்சி, அரசு அலுவலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், தேவாலயங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்திலும் ஆதிக்க சாதியினரது கையே ஓங்கி இருக்கின்றது. இந்த இடங்களில் எல்லாம் ஆதிக்கமற்ற சாதியினரது கை ஓங்க விடுவதில்லை. இயன்றவரை தாழ்த்தியே வைத்திருக்க விரும்புகின்றனர். முதலில் தலித்கள் தமக்குள் ஒற்றுமையை வளர்க்க வேண்டும். அடுத்து கல்வியை வளர்க்க வேண்டும். அடுத்து செல்வத்தை வளர்க்க வேண்டும். அதன் பின் தலித்கள் பேசாமல் இந்தியாவில் ஒரு பகுதியை தனி நாடாக்கி பிரிய வேண்டும், அல்லது ஆஸ்திரேலியா, நியுசீலாந்து என குடியேறினால் தான் இங்குள்ள ஆதிக்க சாதியின் வெறி அடங்கும் எனலாம்.
ReplyDeleteஅனானிமஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ( தங்கள் பெயரை மட்டுமாவது சொல்லி இருக்கலாம்)
Deleteஅற்புதம். இதுவே இன்றைய உண்மை நிலை என்று தோன்றுகிறது. வேதனை.
Deleteஎன்று தான் தீருமே இந்த சாதி வெறி. இதை செய்பவர் எதற்கு கல்வி அறிவு பெற்று உள்ளனர் ?
Anonymous அவர்களின் கருத்தினுக்கு நன்றி.
Deleteஏதோ ஆதாயத்துக்காக மதம் மாறுபவர்கள் வேற்று மதத்திலும் அதே குறையை அனுபவிக்கின்றனர்.
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஜாதியின் கொடுமை. மதம் மாறினாலும் இறந்தாலும் விடுவதேயில்லை. நாமும் இங்கே வாழ்கிறோம் என்பதே கேவலம்
ReplyDeleteதமிழானவன் ( தமிழ்வினை ) அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஎம்மதமாக இருந்தாலும் அதிலும் பிரிவினைகள்..... வருத்தம் தரும் விஷயம்.
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபுகைப்படம் வேதனையான விடயம் நானும் இந்த படத்தை முன்பு எனது பதிவுக்கு பயன் படுத்தினேன்
ReplyDeleteதமிழ் மணம் 9
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. நீங்களும் இதே புகைப்படத்தை பயன்படுத்தி இருப்பதால், அந்த பதிவை நான் மீண்டும் உங்கள் வலைத்தளத்தில் பின்னோக்கி சென்று பார்க்க வேண்டும்.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
நல்ல கருத்து நிறைந்தவையாக எழுதியுள்ளீர்கள் பிரிவினை என்பது வருத்தமான விடயம்.த.ம 10
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி
Deleteமதம் மாறுவது என்பது மனதளவில் ஒருவர் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வது. ஆனால் சாதி பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுவதால் அதை யாரும் மாற்றிக் கொள்ள முடியாது. எவ்வளவு கல்வி, செல்வம், நல்ல பண்புகள், பதவி வாய்க்க பெற்றாலும் மதம் மாறினாலும் ஒருவர் தனது பிறந்த சாதியை மாற்றிக் கொள்ள இந்திய சமூக அமைப்பு அனுமதிக்காது என்பது நடை முறை உண்மை. எனவே மதம் மாறிய தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம்.
ReplyDeleteஅனானிமஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ( ஒரு அடையாளத்திற்காக தங்கள் பெயரை சொல்லி இருக்கலாம்)
Deleteமண்ணில் பிறக்கும் போதுதான் சாதி, இழிகுலத்தோர் என்றால், மண்ணுக்குள் புதைந்து மக்கிப் போகும் போதும் கூட தடுப்புச் சுவர்...வேதனைதான். எந்த மதமானாலும் இட ஒதுக்கீடு செல்லுபடியாக வேண்டும். மற்ற மதங்களிலும் இந்தப் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அது வெளியில் பேசப்படுவதில்லை..
ReplyDeleteகேரளத்தில் ஒரு காலத்தில் உயர்சாதிக்காரர்களின் கொடுமை தாங்காத காரணத்தால் மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறினார்கள்.
இங்கு போல் அங்கு அவ்வளவாக சாதி பார்ப்பதாகத் தெரியவில்லை....வெளியில் பேசப்படுவதில்லை...
சகோதரர் தில்லைக்கது வி. துளசிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. கேரளாவில் எப்படி என்று தெரியவில்லை. இங்கு தமிழ்நாட்டில் எந்த விஷயம் ஆனாலும் ஜாதி கண்ணோட்டம் பார்க்கப் படுகிறது. கிறிஸ்தவத்திலும் அப்படியே கடை பிடிக்கிறார்கள்.
Deleteஇடுகாட்டிலும் சுவர்! வேதனைதான்
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteகல்லறை தோட்ட தடுப்பு சுவர் வேதனை அளிக்கிறது :(
ReplyDeleteஅன்பு மட்டுமே பிரதானம் என்ற நற்போதனையை படித்தோர் இப்படி செய்ய மாட்டார்
:( .
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
DeleteSo SC/St christians can not be a SC/ ST
ReplyDeleteAnd cannot get benifits from government
They should be poor till death