ஒரு உரையாடலின் போதோ அல்லது ஒரு
கவிதையைப் படைக்கும் போதோ அல்லது கட்டுரையை எழுதும்போதோ சில
சொல்லாடல்கள் சுவாரஸ்யமாக வந்து விழுவதுண்டு. அவற்றை இலக்கியத்தில் காணலாம். தற்கால
மொழி நடையில் இவற்றை சிறந்த மேற்கோள்கள் (QUOTES) எனலாம்.
குறுஞ்செய்திகள்:
உண்மையில் சொல்லாடல் என்பது வார்த்தைப் பிரயோகம்தான் சினிமாவில் சொல்லப்படும் பஞ்ச்
டயாலாக்குகளையும், தற்போது செல்போனில் அனுப்பும் குறுஞ்செய்திகளையும் (SMS) இந்த வகையில் சேர்க்கலாம். தமிழ் அறிஞர் தி.க.சி அவர்களோடு உரையாடும்போது சுவாரஸ்யமான
சொற்களைச் சொல்லுவார் என்று சொல்லுவார்கள். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தனது எழுத்துக்களில் ‘சொலவடை’ என்ற பெயரில்
நிறைய பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.. இதனை ஒரு பொருள் குறித்த ஒரு சொல், பல
பொருள் குறித்த ஒரு சொல், ஒரு பொருள் குறித்த பல சொற்கள்,என்ற அடிப்படையில் நாம்
ரசிக்கலாம்.
அந்த காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும் சுவடிகளாக, கட்டு
கட்டாக பனை ஓலையில் இருந்தவைதாம். பனை ஓலையில் எழுத்தாணியால் எழுத நிரம்ப பயிற்சி
வேண்டும். கொஞ்சம் அழுத்தினாலும் ஓலை கிழிந்துவிடும். எனவே ஓலையில் எழுதுவதற்கு
வசதியாகவும், மனப்பாடம் செய்வதற்கு எளிதாகவும் சொல்வதைச் சுருங்கச் சொல்லி விளங்க
வைத்தார்கள். இதற்கு செய்யுள் எனப்படும் கவிதை வடிவம் உதவியது..
சங்க இலக்கியங்கள்:
சங்க இலக்கியத்தில் காலம் கடந்தும் இன்றும் நிற்கும் பல
சொல்லாடல்களைக் காணலாம். உதாரணத்திற்கு சில
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
தீதும் நன்றும் பிறர்தர வாரா
- (கணியன் பூங்குன்றனார், புறநானூறு.192)
இதில் முதல் வரியில் ” எல்லா ஊரும் நம்
ஊரே; எல்லோரும் நம் உறவினரே ” என்ற அர்த்தத்தை
மறந்து, “எல்லாம் ஊருதான். எல்லோரும் இதனைக் கேளுங்கள் “ என்று சிலர் எடுத்துக் கொள்கிறார்கள்.
.
வான் பொய்ப்பினும், தான்
பொய்யா,
மலைத் தலைய கடல் காவிரி - பட்டினப்
பாலை
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரத்தில்
, கோவலனிடம் இருந்த
யாழை வாங்கி, மாதவி, கானல் வரி பாடத் தொடங்குகிறாள். அப்போது
அப்பாடலில் காவிரியை வாழ்த்தி பாடும் போது
” நடந்தாய் வாழி காவேரி “ – (புகார்க் காண்டம்)
என்று காவிரியை வாழ்த்தி பாடுகிறாள். இன்றளவும் ஒலிக்கும்
இந்த சொற்றொடரை மறக்க முடியுமா?
கம்பர்:
இராமாயணக்கதை அனைவரும் அறிந்ததுதான். இராவணன் சீதையைத்
தூக்கிச் சென்று விடுகிறான். அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்றே
தெரியவில்லை. இராம தூதனாக நம்பிக்கைக்குரியவனாக அனுமன் செல்கிறான். பல்வேறு இடர்களுக்கிடையில்
இலங்கையில் அசோகவனத்தில் சீதை இருப்பதைக் காண்கிறான். முன்பின் தன்னைக் கண்டறியாத்
சீதையிடம் தான் யாரென்று சொல்லும்போது சுருக்கமாக “அண்டர் நாயகன் அருள் தூதன் யான்” என்று சுருக்கமாகச் சொல்லுகின்றான்.
இங்கே திரும்பி வந்த அனுமன், இராமனிடம் தான் வந்து போன
அனுபவங்களையெல்லாம் கதைக்காமல் நேரிடையாகவே “கண்டேன் சீதையை” என்று
சொல்லுகிறான். பல நண்பர்கள் இந்த வார்த்தையை கம்பன் கையாண்டதாக நினைத்துக் கொண்டு
இருக்கிறார்கள். இது தவறு. கம்பன் சொல்லவில்லை. இந்த சொல்லாடல் ராமாயண கதை இலக்கிய சொற்பொழிவாளர்கள் உருவாக்கியது
(குறிப்பாக வாரியார் சுவாமிகள் என்று நினைக்கிறேன்). கம்பன் சொன்னது “கண்டேன் என் கற்பினுக்கு அணியை, கண்களால்” என்பதே
கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’என்று, அனுமன் பன்னுவான்
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’என்று, அனுமன் பன்னுவான்
- கம்பன்.6031
(கம்பராமாயணம்/சுந்தர
காண்டம்/திருவடி தொழுத படலம்)
கம்பர் இதுபோல தனது நூலில் பல இடங்களில் இந்த
குறுஞ்செய்திகளைப் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.
திருவள்ளுவர்:
திருவள்ளுவர் எழுதிய ஒவ்வொரு குறட்பாவுமே ஒரு
குறுஞ்செய்தியை உள்ளடக்கி நிற்கின்றன. சில குறட்பாக்களை இரண்டாக ஒடித்து
பிரித்தாலும் குறுஞ்செய்தியாக நின்று பொருள் தரும்.
நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு - திருக்குறள் 336
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? – குறள் 71
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் – குறள் 595
அவ்வையார்:
தமிழ் மூதாட்டி அவ்வையார் இயற்றிய ஆத்திசூடி நூலில் உள்ள
ஒவ்வொரு வரியும் ஒரு குறுஞ்செய்தி எனலாம். ( சங்ககால அவ்வையார் வேறு பிற்கால
அவ்வையார் வேறு)
அறம் செய விரும்பு.
ஆறுவது சினம்.
ஆறுவது சினம்.
கண்டொன்று சொல்லேல்
நன்றி மறவேல்
இளமையில் கல்
சேரிடம் அறிந்து சேர்
நூல் பல கல்
வைகறைத் துயில் எழு
இவ்வாறாக இலக்கியத்திலிருந்து மட்டுமன்றி, பழமொழிகள்,
திரையிசைப் பாடல்கள் என்று பலவற்றிலிருந்தும் சொல்லிக் கொண்டே போகலாம்.
சொல்லாடல்களைப் பற்றிய உங்களது உரையாடலும் விளக்கமும் அருமை. கண்டேன் சீதையைப் பற்றிய செய்தியைத் தங்களின் மூலமாக தற்போதுதான் அறிகிறேன். நன்றி.
ReplyDeleteமுனைவர் அவர்களது கருத்துரைக்கு நன்றி.
Deleteசொல்லாடல் குறித்து
ReplyDeleteஅருமையான எளிமையான விளக்கம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கவிஞரின் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
Deleteசொலவடை என்றால் பழமொழி என்று படித்திருக்கிறேன். சொலவடையும் சொல்லாடலும் ஒன்றா என்பதை விளக்கவும்.
ReplyDeleteபதிவை இரசித்தேன். வாழ்த்துக்கள்!
அய்யா V.N.S அவர்களின் வருகைக்கு நன்றி. எனக்குத் தெரிந்து சொலவடை என்பது அந்தந்த வட்டாரத்தில் மட்டும் பேசப்படும் வட்டார வழக்காகும்; பழமொழி என்பது ஒவ்வொரு மொழியிலும் பரவலாக அல்லது பொதுவானதாக சொல்லப்படுவதாகும். சொல்லாடல் என்பது ஒரு பொதுவான சொல். பயன்படுத்தும் முறை (வழக்காடல் என்பது போல ஒரு வார்த்தைப் பிரயோகம்)
Deleteஅய்யா. தாங்கள் NCBH வெளியிட்ட கி.ராஜநாராயணன் தொகுத்த “தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள்” என்ற நூல் கிடைத்தால் அவசியம் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன் இந்த நூலில் பல வட்டார வழக்குகளை (சொலவடைகளை) தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கமும் அருமை ஐயா... நன்றி...
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
Deleteபல நூறு வருடங்கள் கடந்தும் இந்த சொல்லாடல்கள் நிலைத்து நிற்கின்றன என்பதே அதனை இயற்றியவருக்கு பெருமை சேர்க்கிறது. அருமையான சொல்லாடல்கள்.!
ReplyDeleteத ம 3
ReplyDeleteபத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி.செந்தில் குமார் அவர்களுக்கு நன்றி.
Delete
ReplyDeleteஇனிய இலக்கிய பதிவைப் படித்த
பட்டறிவைப் பெற்றேன்!
இலக்கியத்தில்
சுவையான சொல்லாடல்கள்
மீண்டும் மீண்டும்
படிக்கத் தூண்டும் ஐயா!
http://www.ypvnpubs.com/
சகோதரர் கவிஞர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களுக்கு நன்றி.
Deleteசொல்லாடல் பற்றிய இந்த பதிவின் சொல்லாடல்களும் அருமை அண்ணா!
ReplyDeleteசகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteஇலக்கிய சொல்லாடல்கள் என்றும் இனிப்பவை என்பதை அழகான தங்களின் இந்த பகிர்வு உணர்த்தியது.
ReplyDeleteநான் உங்கள் வலைத்தளம் பக்கம் வந்து அடிக்கடி கருத்துரை தராவிடினும், மறக்காமல் என்னை ஊக்குவிக்கும் சகோதரி தென்றல் சசிகலா அவர்களின் பாராட்டிற்கு நன்றி
Deleteஅருமையான பதிவு அய்யா
ReplyDeleteஅன்புத் தம்பிக்கு நன்றி.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete‘இலக்கியத்தில் சொல்லாடல்கள்’ குறித்து சுவையாகச் சொன்னீர்கள்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ - ’கேளிர்’ உறவினர்...நண்பர் என்பதை
‘கேளீர்’ - கேளுங்கள் என்று தவறாகப் புரிந்து கொள்கின்றனர்.
காவிரியைப் பட்டினப் பாலையிலும், சிலப்பதிகாரத்தில் ” நடந்தாய் வாழி காவேரி“ அழகாகக் குறிப்பிட்டுக் காட்டினீர்கள். ” நடந்தாய் வாழி காவேரி “ -என்று இலட்சுமி நாவலுக்கு தலைப்பே வைத்திருந்தார்கள். கம்பர், திருவள்ளுவர், அவ்வையார் போன்ற புலவர்களின் சொல்லாடல்களும் அருமை.
நன்றி.
த.ம. 5
நண்பர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களே உடலும் உள்ளமும் நலந்தானா? தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteசிலசொல்லாடல்கள் உபயோகத்தால் பெருமை படுத்தப் படுகின்றன. நல்ல ஆராய்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஅருமையான பதிவு! சொல்லாடல்கள் எத்தனை அருமையாக! உங்கள் விளக்கங்களும் சிறப்பாக இருக்கின்றது ஐயா....நிறைய தெரிந்து கொண்டோம் ஐயா...மிக்க நன்றி!
ReplyDeleteஇளங்கோ ஐயா பதிவுகள் போட வில்லையா என்று வியப்பாய் இருந்தது. அப்டேட் ஆனது மிகவும் கீழே சென்றிருந்தது போலும்..கவனியாமல் விட்டிருக்கின்றோம்..ஐயா ஒரு தாழ்மையான வேண்டுகோள். மின் அஞ்சல் சப்ஸ்க்ரிப்ஷன் உங்கள் தளத்தில் கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் பதிந்துவிடுவோம் எங்கள் மின் அஞ்சல் பெட்டியில் வந்துவிடுமே நீங்கள் பதிவிடும்போது...
நண்பர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொன்ன யோசனையை யோசிக்கிறேன்.
Deleteசொல்லாடல்களைப் பற்றிய
ReplyDeleteதங்களின் சொல்லாடல்
அருமை ஐயா
படிக்கப் படிக்கஇனிக்கிறது
நன்றி ஐயா
தம +1
சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.
Deleteநம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால். நண்பர் ஜெயதேவ் தாஸ் அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteநல்லதொரு அலசல் நண்பரே...
ReplyDeleteதமிழ் மணம் 10
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி
Deleteவாவ்.. தமிழ் அலசல் ரொம்பவே ரசித்து படித்தேன்..
ReplyDeleteஅன்புத் தம்பி ஆனந்தராஜா விஜயராகவன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஆய்வு நன்று! எடுத்துக் கூறிய சொல்லாடல் நன்று!
ReplyDeleteபுலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஇலக்கிய சொல்லாடல்களை ரசிக்கும் வகையில் இனிமையாக பகிர்ந்தமை நன்று!
ReplyDeleteசகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteகாலத்துக்கும் நிலைத்துள்ள சொல்லாடல்களை சிறப்பாக தொகுத்துள்ளீர்கள் ஐயா
ReplyDeleteகம்பனின் "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்", இன்று போய் (போர்க்கு) நாளை வா வும் இன்றும் பயன்படுத்தப் படுவது அந்த சொல்லின் வலிமை அல்லவா
கம்பன் தமிழில் நிறையவே உண்டு. ரசிக்கலாம். சகோதரர் டி.என்.முரளிதரன் - மூங்கில் காற்று அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteகாலத்தை வென்று நிற்கும் சொல்லாடல்களை படித்து ரசித்தேன் :)
ReplyDeleteசகோதரர் கே ஏ பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி
Deleteஅருமை ஐயா
ReplyDelete