ஆரம்பத்தில்
கல்லூரியில் பி.ஏ முடிக்கும் வரை சான்றொப்பம் (ATTESTATION) என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது.
ஏனெனில் ஒரு பள்ளியை விட்டு இன்னொரு பள்ளிக்கு சென்றபோதோ அல்லது பள்ளியை விட்டு சென்றபோதோ
இது பற்றி யாரும் கேட்டதில்லை. விண்ணப்ப பாரங்களில் கேட்டு இருக்கும் விவரங்களை
பூர்த்தி செய்வதோடு சரி. நேரில் செல்லும்போது ஒரிஜனல் சான்றிதழ்களை கொண்டுவரச் சொல்லுவார்கள். அவ்வாறு எடுத்துச் செல்லும்போது
சரி பார்ப்பார்கள். அப்புறம் ஒரு கல்லூரியை விட்டு இன்னொரு கல்லூரி சேரும் போதும் இந்த.
சான்றொப்பம்
(ATTESTATION) சமாச்சாரம் இல்லை.
பின்னர் இன்னொரு
கல்லூரிக்கு எம்.ஏ சேரும்போது ஆரம்பமானது இந்த சான்றொப்பம் (ATTESTATION) தொல்லை. அப்போதெல்லாம் ZEROX சமாச்சாரம்
எல்லாம் இல்லை. எனவே எல்லா சர்ட்டிபிகேட்டுகளையும் அதில் உள்ளவைகள் போல நகல்
எடுக்க (டைப் செய்ய) வேண்டும். பல்கலைக் கழகம் தரும் பட்டம் அல்லது புரொவிஷனல்
சர்டிபிகேட் வர நாள் ஆகும். அவை என்றால் எல்லாம் ஒரே பக்கத்தில் அடங்கி விடும்
எனவே பியூசி, பி.ஏ – மேஜர்
மற்றும் ஆன்சிலரி என்று அனைத்தையும் ஜாப் டைப்பிங் செய்தவரிடம் கொடுத்து நகல்
எடுத்துக் கொண்டு பச்சை இங்க்கில் கையெழுத்து போடும் அதிகாரியைத் தேடினேன்.
எனக்கென்று அப்போது தெரிந்தவர்கள் யாரும் இல்லாததால் முனிசிபல் டாக்டரிடம்
சென்றேன். அவரோ எனக்கு இதில் எல்லாம் நேரம் இல்லை என்றார். அதே போல வீட்டுக்கு
அருகில் இருந்த ஒரு பள்ளியில் இருந்த என்,சி.சி. ஆபிஸரும் சொல்லி விட்டார்.
பின்னர் ஒருவர் “நீங்கள் படித்த அரசு கல்லூரி ஆசிரியரிடமே சான்றொப்பம் (ATTESTATION) வாங்கலாமே “ என்றார்.
எனக்குப் பழக்கமான நான் படித்த அரசு கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் வீட்டிற்கு
மாலையில் சென்றேன். அவரோ வெளியூர் சென்று விட்டார். இரண்டு தடவை அலைந்து அவரிடம் ”பச்சை இங்க்” கையெழுத்து வாங்கினேன். பின்பு எம்.ஏ முடித்த பிறகு
வேலைக்கு சேரும்போதும் அவர்தான் எனக்கு ”பச்சை
இங்க்”கில் உதவினார்.
வேலைக்கு சேர்ந்த
பிறகுதான் எனக்கு இந்த சான்றொப்பம் (ATTESTATION) முறை பற்றியும், யார் யார் கையெழுத்து போடலாம், யார்
யார் தொண்டுள்ளத்தோடு இலவசமாக இந்த சேவையைச் செய்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். (மத்திய,மாநில அரசுப் பணியில் இருக்கும் குரூப் – 1 மற்றும் 2 அதிகாரிகள் ( Class I
and II (Gazetted) public servants.) மட்டுமே சான்றொப்பம் (ATTESTATION) அளிக்க முடியும்) மேலும் இப்போது ZEROX முறை
வந்துவிட்டதால் டைப் செய்யும் தொல்லை இல்லை. அதன் பிறகு இந்த விஷயத்துக்கெல்லாம்
அலைவது கிடையாது. யாரேனும் ஒரு நோட்டரி பப்ளிக்கிடம் ஒரு சர்டிபிகேட்டிற்கு சான்றொப்பம்
(ATTESTATION) செய்ய இவ்வளவு
என்று பணம் கொடுத்து ”பச்சை இங்க்”கில் வாங்கிக் கொண்டேன்.. எனது மகள் படிப்பு, வேலை
விஷயமாகவும் மற்றும் மகன் படிப்பு
சம்பந்தமாகவும் நிறைய கொடுத்து இருப்பேன் காசு இல்லாதவர்களுக்கு எனது பழைய கதைபோல
அலைச்சல்தான். அதிலும் நமது கிராமத்து மக்கள் மஞ்சள் பையோடு, தனது பிள்ளைகளுக்காக
இந்த சான்றொப்பம் (ATTESTATION)
முறையினால் எவ்வளவு அலைந்து இருப்பார்கள் என்பதை நான் நேரிலேயே பார்த்து
இருக்கிறேன்.
இப்போது ஆட்சிக்கு
பிரதமராக வந்துள்ள நரேந்திர மோடி அரசில் ஒரு உத்தரவு வந்துள்ளது.
புதுடில்லி:'விண்ணப்பங்களுடன் சான்றிதழ் நகல்களை இணைக்கும்போது, விண்ணப்பதாரர் சுய ஒப்புதல்
அளித்து கையெழுத்திட்டால் போதும்; இறுதியில் வேண்டுமானால், ஒரிஜினல் சான்றிதழ்களை சரி
பார்த்துக் கொள்ளலாம்; இந்த முறையை, அனைத்து அலுவலகங்களி லும்
பின்பற்ற வேண்டும்' என, மத்திய நிர்வாக சீரமைப்பு மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, உத்தரவிட்டுள்ளது. ( நன்றி : தினமலர் )
இந்த சட்டத்தினால்
இனிமேல் பண விரயம் மற்றும் நேர விரயம் இருக்காது. குறிப்பாக நடுத்தர,ஏழை மாணவர்களுக்கு இதிலிருந்து
விடுதலை. இந்த முறையைக் கொணர்ந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு நன்றி!
REFERENCE:
SELF-CERTIFICATION OF
DOCUMENTS INSTEAD OF ATTESTATION OF DOCUMENTS BY GAZETTED OFFICERS – DEPARTMENT
OF ADMINISTRATIVE REFORMS RECOMMENDS SELF-CERTIFICATION OF DOCUMENTS IN LIEU OF
GAZETTED OFFICER’S ATTESTATION.
No.K-11022/67/2012-AR
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Administrative Reforms & Public Grievances
Sardar Patel Bhavan, Sansad Marg,
New Delhi-110001. Dated the 10th May, 2013
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Administrative Reforms & Public Grievances
Sardar Patel Bhavan, Sansad Marg,
New Delhi-110001. Dated the 10th May, 2013
OFFICE
MEMORANDUM
Subject: Self-certification
The Second Administrative Reforms Commission in its 12th Report titled “Citizen Centric Administration – The Heart of Governance”, has recommended, adoption of self-certification provision for simplifying procedures. (www:darpg.gov.in)
2. Taking a cue from this some Ministries/State Governments have adopted the provision of self-certification of documents like marksheet, birth certificate etc. by the applicants/stakeholders instead of asking for an attested copy of the documents by a Gazetted Officer or filing of affidavits. Under the self attestation method, the original documents are required,to be produced at the final stage.
3. You will appreciate that the above method is citizen friendly and obtaining either an attested copy or affidavit not only cost money but also involves wastage of time of the citizens and the Government officials.
3. It is requested to kindly review the existing requirements of attested copy or affidavit in various application forms in a phased manner and wherever possible make provision for self-certification of documents, after obtaining the approval of the competent authority.
Sd/-
(Sanjay Kothari)
Secretary to the Government of India
(Sanjay Kothari)
Secretary to the Government of India
எத்தனை எத்தனை அலைச்சல்கள். அலைக்கழிப்புகள்..
ReplyDeleteஎனக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் இந்த சான்றொப்பம் பெறுவதற்கு அலைந்த நாட்கள் கண் முன் வருகின்றன. கிராம மக்கள் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.
விவரம் அறியாத மக்கள் பட்ட கஷ்டங்களை நினைவூட்டுகின்றது - இன்றைய பதிவு.
நடுத்தர, ஏழை மாணவர்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைத்து விட்டது.
பிரதமர் அவர்களுக்கு நன்றி!..
வணக்கம்
ReplyDeleteஐயா.
முன்புபட்ட துன்பத்தை மிக அழகாகசொல்லியுள்ளீர்கள்... நாட்டு பிரதமருக்கு நன்றி கூற வேண்டும்
இதைத்தான் சொல்வார்கள்(மாணவர் விடுகைப்பத்திரம்.)..இந்த பத்திரம் இருந்தால்தான் மற்ற பாடசாலையில் சேர்க்கமுடியும்... கல்வி கற்க முடியும் பகிர்வுக்கு நன்றி. ஐயா
த.ம1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களோடு சேர்ந்து நாங்களும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
ReplyDeleteஐயா ! இது போன்ற மாற்றங்கள் இன்னும் நிறையவே வர வேண்டும் .சிறப்பான
பகிர்வு !வாழ்த்துக்கள் ஐயா .
இதில் இன்னொரு தமாஷும் உண்டு. சில இடங்களில் நாமின்னும் உயிரோடு இருக்கிறோம் என்பதையும் ATTEST செய்யவேண்டி இருக்கிறது.(எல்லாப் பெயரும் மோடிக்கே--வா?)
ReplyDeleteதங்களின் பதிவுக்கும் விளக்கவுரைக்கும், எனது சார்பாகவும் பிரமருக்கு(ம்) நன்றி.
ReplyDeleteஅலைந்தது நினைவு வருகிறது. பணம் இல்லாமல் அல்லாடும் ஏழை மக்களைக் காணும் போது இவ்வளவு பணம் மற்றவர்களிடம் வாங்குகிறார்களே...சிலருக்காவது இலவசமாக கையெப்பம் இடக்கூடாதா என நினைப்பதுண்டு. அரசுக்கு நன்றி. நல்ல பதிவு ஐயா.
ReplyDeleteமிகவும் அலைய வைக்கும் ஒரு விடயம் இன்று புதிய அரசால் எளிதாக்கப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்வான ஒரு செய்தி! இது போன்றுனிறைய மாற்றங்கள் மக்களுக்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட வேண்டும்!
ReplyDeleteநல்ல ஒரு செய்தியைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!
அவர் பதவிக்கு வருவதற்கு முன்னரே இந்த ஆணை கையொப்பம் ஆகிவிட்டது.
ReplyDeleteஆனாலும் மிகவும் நல்ல விஷயம் இது. தில்லி போன்ற இடங்களில் பல Gazetted Officers இருப்பதால் தொல்லை இல்லை. ஆனால் தமிழகத்தில் ஒரு கையெழுத்திற்கு ஐம்பது ரூபாய், 100 ரூபாய் கேட்கும் ஆட்களையும் சந்தித்ததுண்டு...... :(
உங்கள் தளம் மூலம் Self Attestation போதும் என்ற செய்தி பலருக்கும் தெரியும் என்பதில் மகிழ்ச்சி.
வரவேற்க வேண்டிய இன்பமளிக்கும் இனிய செய்தி பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
ReplyDeleteநாம் அன்று பட்ட கஷ்டங்கள் நம் வாரிசுகளுக்கு இல்லாமல் இருப்பதில் மகிழ்வோம்.
அன்புடன் VGK
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// எத்தனை எத்தனை அலைச்சல்கள். அலைக்கழிப்புகள்..
எனக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் இந்த சான்றொப்பம் பெறுவதற்கு அலைந்த நாட்கள் கண் முன் வருகின்றன. கிராம மக்கள் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.
விவரம் அறியாத மக்கள் பட்ட கஷ்டங்களை நினைவூட்டுகின்றது //
எனக்கும் அந்தநாட்கள் நினைவுக்கு வருகின்றன. வீட்டில் அப்பொழுது சொந்தமாக சைக்கிள் எதுவும் கிடையாது. டவுனுக்குள் எங்கேனும் செல்ல வேண்டுமானால் டவுன் பஸ்சில்தான் செல்ல வேண்டும். அதிகம் பஸ்சும் கிடையாது. அட்டெஸ்டேஷன் வாங்கும் அவசரத்தில், பஸ்ஸுக்கு காத்திருக்கும் நேரம் நடந்து விடலாம் என்று நடந்த தூரம்தான் அதிகம்.
மறுமொழி > ரூபன் said...
ReplyDeleteகவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! தங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி!
// ஐயா. முன்புபட்ட துன்பத்தை மிக அழகாகசொல்லியுள்ளீர்கள்... நாட்டு பிரதமருக்கு நன்றி கூற வேண்டும் இதைத்தான் சொல்வார்கள்(மாணவர் விடுகைப்பத்திரம்.)..இந்த பத்திரம் இருந்தால்தான் மற்ற பாடசாலையில் சேர்க்கமுடியும்... கல்வி கற்க முடியும் பகிர்வுக்கு நன்றி. ஐயா த.ம1வது வாக்கும் //
தாங்கள் “ மாணாவர் விடுகைப் பத்திரம் ” என்பதை இங்கு நாங்கள் நடைமுறையில் “ SCHOOL TRANSFER CERTIFICATE ” என்றே சொல்கிறோம். தமிழ்நாட்டில் பல இட்ஙகளில் ஆங்கிலம்தான்.
மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் நகைச்சுவையை ரசித்தேன். கருத்துரைக்கு நன்றி!
// இதில் இன்னொரு தமாஷும் உண்டு. சில இடங்களில் நாமின்னும் உயிரோடு இருக்கிறோம் என்பதையும் ATTEST செய்யவேண்டி இருக்கிறது.(எல்லாப் பெயரும் மோடிக்கே--வா?) //
இந்த விதி முறையை வைத்துக் கொண்டு , பென்ஷன்தாரகள் LIFE CERTIFICATE கொடுக்கும் போது என்னவெல்லாம் பேசுவார்கள், செய்வார்கள் என்று தெரியவில்லை.
மறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDeleteசகோதரரின் கருத்துரைக்கு நன்றி1
மறுமொழி > R.Umayal Gayathri said...
ReplyDelete// அலைந்தது நினைவு வருகிறது. பணம் இல்லாமல் அல்லாடும் ஏழை மக்களைக் காணும் போது இவ்வளவு பணம் மற்றவர்களிடம் வாங்குகிறார்களே...சிலருக்காவது இலவசமாக கையெப்பம் இடக்கூடாதா என நினைப்பதுண்டு. அரசுக்கு நன்றி. நல்ல பதிவு ஐயா. //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை. மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை.
மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...
ReplyDeleteசகோதரர் V துளசிதரன் அவர்களுக்கு நன்றி! நீங்கள் சொல்வது போல ” இது போன்று நிறைய மாற்றங்கள் மக்களுக்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட வேண்டும்! ”
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said..
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
.
// அவர் பதவிக்கு வருவதற்கு முன்னரே இந்த ஆணை கையொப்பம் ஆகிவிட்டது. ஆனாலும் மிகவும் நல்ல விஷயம் இது. //
நீங்கள் சொல்வது சரிதான். ஒரு சில மாநில அரசுகள் மோடி பிரதமராக வருவதற்கு முன்னரே இந்த நடைமுறையைக் கடை பிடித்துள்ளன. ஆனால் கட்டாயமாகாவில்லை. நிறையபேருக்கு தெரியவும் இல்லை. அதனால்தான் The Second Administrative Reforms Commission செய்த சிபாரிசினை ( 10th May, 2013 ) இப்போதுள்ள மத்திய அரசு கட்டாயப்படுத்தி ஆணையை வெளியிட்டுள்ளது. அரசு ஆணை கிடைக்காததால் மேற்பார்வையாக Ministry of Personnel Department அனுப்பிய கடிதத்தை மட்டும் இங்கு இணைத்துள்ளேன்.
// தில்லி போன்ற இடங்களில் பல Gazetted Officers இருப்பதால் தொல்லை இல்லை. ஆனால் தமிழகத்தில் ஒரு கையெழுத்திற்கு ஐம்பது ரூபாய், 100 ரூபாய் கேட்கும் ஆட்களையும சந்தித்ததுண்டு...... :( //
தமிழ்நாடு நல்ல தமிழ்நாடு!
// உங்கள் தளம் மூலம் Self Attestation போதும் என்ற செய்தி பலருக்கும் தெரியும் என்பதில் மகிழ்ச்சி. //
இது மாதிரி ஒரு அறிவிப்பு வந்ததைப் பற்றி பல கல்லூரி மாணவர்களுக்கு தெரியுமா என்றே தெரியவில்லை. எனவேதான் எனது பழைய அலைச்சல் அனுபவங்களோடு இந்த கட்டுரை.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்புள்ள V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// நாம் அன்று பட்ட கஷ்டங்கள் நம் வாரிசுகளுக்கு இல்லாமல் இருப்பதில் மகிழ்வோம்.//
ஆமாம் அய்யா! நமது கஷ்டங்கள் நம்மோடு போகட்டும். வாரிசுகளுக்கு வரவேண்டாம்.
இந்த அறிவிப்பு பல் பேருக்கு பெரிய நிம்மதியைக் கொடுக்கும்.சான்றொப்பம் வாங்க என்று அலையும் அலைச்சல் மிச்சம். . நானும் நமது பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஉண்மையிலேயே மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்வினைக் கொடுக்கும் உத்தரவுதான்
ReplyDeleteபிரதமரைப் போற்றுவோம்
தம 4
ReplyDeleteமறுமொழி > rajalakshmi paramasivam said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...
ReplyDeleteசகோதரரின் கருத்துரைக்கு நன்றி!
ReplyDeleteமறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1. 2 )
சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!
இந்த சான்றொப்பம் வாங்க நானும் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். நான் வங்கியில் மேலாளராக ஆன பிறகு என்னிடம் வந்து சான்றொப்பம் கேட்பவர்களிடம்
ReplyDelete‘நான் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அல்ல என சொல்லி திருப்பி அனுப்பியிருக்கிறேன். என்று தொலையும் இந்த தொல்லை என எண்ணியிருந்தபோது இப்போது மய்ய அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை போற்றப்படக்கூடியதே. பகிர்ந்தமைக்கு நன்றி!