சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், நமது தூர்தர்ஷனில் மகாபாரதம்
ஒளிபரப்பானது. அப்போதுதான் தமிழ்நாட்டில்
டெலிவிஷன் என்பது புழக்கத்தில் வந்த சமயம். தூர்தர்ஷனைத் தவிர வேறு சேனல்கள்
இல்லை. எனவே பலருடைய வீடுகளில் அப்போது தூர்தர்ஷனை மட்டுமே விரும்பி பார்த்துக்
கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒவ்வொரு
வாரமும் ஞாயிறுதோறும் காலையில் 10 மணி அளவில் முக்கால்
மணி நேரம் பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் ( அக்டோபர், 2, 1988 – 24 ஜூன் 1990) என்ற பிரம்மாண்டமான தொடர் ஹிந்தியில்
ஒளிபரப்பானது. (தயாரிப்பு: பி.ஆர்.சோப்ரா டைரக்ஷன்: ரவி சோப்ரா) அந்த தொடர்
ஒளிபரப்பாகும் சமயம் ஊரே அமைதியாக இருக்கும். சாலையில் அவ்வளவாக போக்குவரத்து
குறிப்பாக இருசக்கர வாகனங்கள் கூட இருக்காது. அதன் தலைப்பு பாடலோடு கண்ணனின் சங்கு
முழக்கமும் கேட்டால் மகாபாரதம் டீவியில் ஒளிபரப்பு தொடங்கி விட்டது என்று
அர்த்தம்.
மகாபாரதம் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை என்பதால் அந்த தொடரை
பார்த்தவர்கள் அனைவருமே ரசித்தனர். கதை தெரியாதவர்களுக்கு மற்றவர்கள் தெரிந்து
கொள்ள உதவி செய்தனர். கதையின் பிரமாண்டத்திலும் அதன் பிரமிக்கத்தக்க காட்சி
அமைப்புகளிலும் மக்கள் மனதைப் பறி கொடுத்தனர். எனக்கு ஆங்கிலத்தில் வெளிவந்த
பிரமாண்டமான பத்துக் கட்டளைகள் ( TEN
COMMANTMENTS) மற்றும் பென்ஹர் (BENHAR) திரைப்பங்களை
நினைவூட்டின.
தொடரில் நடித்த நடிகர்களும் நடிகைகளும் மகாபாரத கதைப் பாத்திரங்களுக்கு
உயிரூட்டினர்.
(படம் – மேலே) கதையின் தொடக்கத்தில் வரும் மன்னன் சந்தனு வேடத்தில் ரிஷப் சுக்லா (Rishabh
Shukla) மற்றும் தனது முதல் ஏழு குழந்தைகளைக் கங்கையில்
கொல்லும் கங்காதேவியாக நடித்த கிரோன் ஜுனேஜா (Kiron Juneja)
(படம் – மேலே) சக்திமான் தொடரில் சக்திமானாக நடித்தவர்
முகேஷ் கன்னா.( Mukesh Khanna ). அவர் இந்த தொடரில்
பிதாமகர் பீஷ்மராக நடித்து இருந்தார். நல்ல உயரம். நல்ல குரல்
(படம்
– மேலே) பிறவிக் குருடனாகப் பிறந்த
ஹஸ்தினாபுரத்து அரசன திருதிராஷ்டிரன் வேடத்தில் வந்து மனங் கவர்ந்தவர் கிரிஜா
சங்கர் (GIRIJA SHANKAR)
(படம் – மேலே) கிருஷ்ணர் வேடத்தில் நிதிஷ் பரத்வாஜ்
என்.டி ராமராவ் என்றால் அவர் திரைப்படங்களில் ஏற்று நடித்த கிருஷ்ணர்
வேடம்தான் எனக்கு நினைவுக்கு வரும். ஆந்திர ரசிகர்களும் அவரை கிருஷ்ணராகவே
தரிசித்தனர். பி.ஆர். சோப்ராவின் மகாபாரதத்தில் நிதிஷ் பரத்வாஜ் (Nitish
Bharadwaj)
கிருஷ்ணனாக காட்சி அளித்தார். அவர் தனது கதாபாத்திரத்தை திறம்படவே செய்தார்.
(படம் – மேலே) கைகளில் தாயக் கட்டைகளை வைத்து உருட்டிக் கொண்டே இருப்பவர்
சகுனிமாமா. அவர் மூன்று, ஐந்து என்று சொல்லி தாயக் கட்டைகளை வீசுவார்.
நினைத்தபடியே தாயக் கட்டைகள் விழும். அந்த அழுத்தமான சகுனி வேடத்தில் நடித்தவர் கூஃபி பெயிண்டால் (Gufi Paintal). ( கொசுறு செய்தி கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் பவித்ரேஸ்வரம் என்னுமிடத்தில்
சகுனிக்கு கோயில் உண்டு. தகவல் உபயம் - விக்கிபீடியா)
(படம் - மேலே) பஞ்ச பாண்டவர்களோடு கிருஷ்ணர் மற்றும் திரௌபதி.
(யுதிஷ்ட்ரன் வேடத்தில், கஜேந்த்ர சவுகான் (Gajendra Chouhan ), அர்ச்சுனன் வேடத்தில்
அர்ச்சுன் (Arjun) , பீமன் வேடத்தில் ப்ரவீன் குமார் (Praveen Kumar ) , நகுலன் வேடத்தில் சமீர்(Sameer
), சகாதேவன்
வேடத்தில் சஞ்சீவ் (Sanjeev) மற்றும் திரௌபதி வேடத்தில் ரூபா கங்கூலி (Roopa
Ganguly) – ஆகியோர் நடித்தனர்.
.பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் தூர்தர்ஷனில் இந்தியில் தொடராக ஒளி பரப்பப்பட்ட
போது, எங்கள் வீட்டில் எனது அப்பா
அம்மா என்று எல்லோரும் தொடர்ந்து பார்த்தனர். என்னால் தொடர்ந்து பார்க்க
இயலாவிட்டாலும், அவ்வப்போது பார்த்து இருக்கிறேன் இப்போது அதன் தமிழ்
வடிவத்தை (94 EPISODES (அத்தியாயங்கள்) YOUTUBE – இல் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது. விக்ரம்
கிருஷ்ணா (VIKRAM KRISHNAN) என்பவர் 94
அத்தியாயங்களையும் யூடியூப்பில் ஏற்றி வைத்துள்ளார். இதுவரை 25 அத்தியாயங்கள் (EPISODES) பார்த்து விட்டேன். தொடர்ந்து பார்க்க வேண்டும்.
தமிழ் வடிவத்தில் ஆரம்ப காட்சியாக ஒலிக்கும் பாடலின் வரிகள் இவை .
(சங்கு ஒலிக்கிறது)
மகாபாரதம் ....
மகாபாரதம் ....
மகாபாரதம்
அ... ஆ... அ.. ஆ...
இதுதான் மகாபாரதக் கதை
இதுதான் மகாபாரதக் கதை
ஆ ... ஆ ..
மகாபாரதக் கதை
மகாபாரதக் கதை
ஒரு கதைக்குள் பல கதை
பல கதைகளின் ஒரு விதை
கடவுளே ஒரு மனிதனாய்
வந்தவரித்த
திருக்கதை!
தர்மம் என்றும் வெல்லுமே ...
என்றே உணர்த்தும் பெருங்கதை!
தர்மம் என்றும் வெல்லுமே ...
(சங்கு ஒலிக்கிறது)
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பரித்ராணாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
சம்பவாமி யுகே யுகே …. சம்பவாமி யுகே யுகே
(இதன் பொருள்: எப்பொழுதெல்லாம் தர்மத்துக்கு தலைகுனிவு
ஏற்படுகிறதோ, எப்பொழுதெல்லாம்
அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம்
நான் இந்த பூமியில் அவதரிக்கிறேன். சாதுக்களை இரட்சிப்பது, தர்ம வழியில் நில்லாத தீயவர்களை சித்திரவதமான முறையில் அழிப்பது, தர்மத்தை நிலை நிறுத்துவது
ஆகிய இம்மூன்று பயன்களுக்காகவே
இந்த பூமியில் நான் அவதரிக்கிறேன்.)
பி.ஆர். சோப்ராவின் மகாபாரதத்தின் மேலே சொன்ன ஆரம்ப காட்சி (TITLE SONG) பாடலையும்
மற்றும் 94 அத்தியாயங்களையும் (94 EPISODES ) தமிழில்
கண்டும கேட்டும் ரசிக்க கீழே உள்ள வலைத்தளம் செல்லவும்.*****.
முதல் அத்தியாயம் முடிந்தவுடன் தொடர்ந்து அனைத்து 94 அத்தியாயங்களும் அவைகளாகவே
ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்துவிடும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
( PICTURES AND YOUTUBE - THANKS TO “ GOOGLE “ )
( PICTURES AND YOUTUBE - THANKS TO “ GOOGLE “ )
***** ( திருத்தம்:28.12.18)
ஒரு முக்கிய தகவல் :
மேலே உள்ள இணைப்பில் (Link) - Video unavailable This video is no longer available because
the YouTube account associated with this video has been terminated. - என்ற செய்தி வருவதால்
கீழே உள்ள யூடியூப் இணைய
முகவரிக்கு செல்லுங்கள்.
அருமையான ஆக்கம் நானும் இத் தொடரைத் தொடர்ந்து பார்த்து வருகின்றேன்
ReplyDeleteஐயா ! பகிர்வுக்கு மிக்க நன்றி மேலும் தொடர என் இனிய வாழ்த்துக்கள் .
ஹிந்தி மகாபாரதம் முதலில் காலை 10 மணிக்கு ஒளி பரப்பானதாக நினைவு. நான் இந்த தொடரின் தமிழாக்கத்தை டவுன்லோடு செய்து 10 சிடிக் களாக வைத்திருக்கிறேன். பல முறை பார்த்து ரசித்தாயிற்று. ஆனாலும் மீண்டும் பார்க்கும்போதும் அதன் சுவை மங்கவில்லை.
ReplyDeleteநீண்ட காலத்திற்கு முன் மகாபாரதம் பார்த்த நினைவுகள் மீண்டும் நெஞ்சில் வலம் வருகின்றன ஐயா
ReplyDeleteநன்றி
தம2
முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் சொன்னது போல இந்த தொடர் தொலைக்காட்சியில் காலையில் தான் ஒளிபரப்பாயிற்று என எண்ணுகிறேன். நீங்கள் சொன்னது போல அனைவரும் விரும்பிப் பார்த்த தொடர் இது. தமிழாக்கம் செய்யப்பட்ட தொடரைப் பார்க்க இணைப்பைத் தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteமகாபாரதம் எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக ஒன்று இருப்பதாகத் தோன்றும். பார்த்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள் அதில் சொல்லப் படாத கிளைக் கதையை சொல்வது சுவாரசியமாக இருக்கும். பாத்திரங்களைப் பற்றிய சூடான விவாதங்களும் நடப்பது உண்டு. உலகில் பிரம்மாண்டமான கதை என்றால் அது மகாபாரதம்தான் .
ReplyDeleteதற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மகாபாரதத் தொடரோடு பழையதை ஒப்பிட்டுப் பேசுவதும் சுவாரசியம்.
ராமாயணமும் இதற்கு முன்னால் ஒளி பரப்பானதல்லவா?அவற்றை எல்லாம் தொடர்ந்து அப்போது பார்க்க முடியவில்லை.
பி.ஆர். சோப்ராவின் மகாபாரத லிங்க் அளித்தமைக்கு நன்றிகள்.!
ReplyDelete//மகாபாரதம் ஒளிபரப்பாகும் சமயம் ஊரே அமைதியாக இருக்கும். சாலையில் அவ்வளவாக போக்குவரத்து குறிப்பாக இருசக்கர வாகனங்கள் கூட இருக்காது. அதன் தலைப்பு பாடலோடு கண்ணனின் சங்கு முழக்கமும் கேட்டால் மகாபாரதம் டீவியில் ஒளிபரப்பு தொடங்கி விட்டது என்று அர்த்தம்.//
ReplyDeleteமனம் வெகுவேகமாக பின்னோக்கிச் செல்கின்றது!..
மீண்டும் நினைவுபடுத்தி மறுபடியும் பார்ப்பதற்கு இணைப்பும் வழங்கியமைக்கு மகிழ்ச்சி!..
அந்த காலகட்டத்தில் ,வாரம் ஒருமுறை வரும் சித்ரஹார் ,ஒளியும் ஒலியும் பாடல் காட்சிகளுக்காக காத்துக்கிடந்ததும் நினைவுக்கு வருகிறது !
ReplyDeleteஉங்களின் லிங்கை புக்மார்க் பண்ணியாச்சு,நேரம் கிடைக்கையில் பார்க்கணும் !
த ம 4
மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...
ReplyDeleteசகோதரியின் இனிய கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
மறுமொழி > பழனி. கந்தசாமி said...
ReplyDeleteஅய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// ஹிந்தி மகாபாரதம் முதலில் காலை 10 மணிக்கு ஒளி பரப்பானதாக நினைவு. //
ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வது சரிதான். இந்த தொடர் அப்பொழுது ஞாயிற்றுக் கிழமைகளில் காலை வேளைதான் ஒளிபரப்பாயிற்று. நான் தொடர்ந்து முழுமையும் பார்க்காததால் ஏற்பட்ட குழப்பம். இதனைத் தொடர்ந்து பார்த்த எனது அப்பா – அம்மாவிடமும் இன்று காலை சென்று கேட்டு உறுதி செய்து கொண்டேன். வலைப்பதிவிலும் திருத்தி விட்டேன். தவற்றினை சுட்டி காட்டியமைக்கு நன்றி!
// நான் இந்த தொடரின் தமிழாக்கத்தை டவுன்லோடு செய்து 10 சிடிக் களாக வைத்திருக்கிறேன். பல முறை பார்த்து ரசித்தாயிற்று. ஆனாலும் மீண்டும் பார்க்கும்போதும் அதன் சுவை மங்கவில்லை //
மகாபாரதத்தை முழுதும் ( தமிழில் அ.லெ.நடராஜன்) படித்து இருக்கிறேன். டீவி தொடர்களைப் பார்த்தது இல்லை. மேலே சொன்ன யூடியூப் பதிவின் மூலம் இப்போதுதான் பார்க்கத் தொடங்கி இருக்கிறேன்.
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் சொன்னது போல இந்த தொடர் தொலைக்காட்சியில் காலையில் தான் ஒளிபரப்பாயிற்று என எண்ணுகிறேன்.//
அய்யா பழனி கந்தசாமி அவர்களுக்கு தந்த மறுமொழியையே இங்கும் தர விரும்புகிறேன். - ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வது சரிதான். இந்த தொடர் அப்பொழுது ஞாயிற்றுக் கிழமைகளில் காலை வேளைதான் ஒளிபரப்பாயிற்று. நான் தொடர்ந்து முழுமையும் பார்க்காததால் ஏற்பட்ட குழப்பம். இதனைத் தொடர்ந்து பார்த்த எனது அப்பா – அம்மாவிடமும் இன்று காலை சென்று கேட்டு உறுதி செய்து கொண்டேன். வலைப்பதிவிலும் திருத்தி விட்டேன். தவற்றினை சுட்டி காட்டியமைக்கு நன்றி!
// நீங்கள் சொன்னது போல அனைவரும் விரும்பிப் பார்த்த தொடர் இது. தமிழாக்கம் செய்யப்பட்ட தொடரைப் பார்க்க இணைப்பைத் தந்தமைக்கு நன்றி! //
அன்று ஹிந்தியில் வந்த தொடரை தொடர்ந்து பார்க்க இயலாமல் போய் விட்டது. மேலே சொன்ன இணைப்பின் மூலம் தமிழில் இப்போதுதான் பார்க்கத் தொடங்கி உள்ளேன்.
மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said..
ReplyDeleteசகோதரர் மூங்கிற்காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் நீண்ட அன்பான கருத்துரைக்கு நன்றி!.
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete// பி.ஆர். சோப்ராவின் மகாபாரத லிங்க் அளித்தமைக்கு நன்றிகள்.! //
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// மீண்டும் நினைவுபடுத்தி மறுபடியும் பார்ப்பதற்கு இணைப்பும் வழங்கியமைக்கு மகிழ்ச்சி!.. //
மீண்டும் பார்த்திட எனது பதிவும் ஒரு காரணம் எனும்போது மனது மிக்க மகிழ்ச்சியடைகிறது.
மறுமொழி > Bagawanjee KA said...
ReplyDeleteகே.ஏ. பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// உங்களின் லிங்கை புக்மார்க் பண்ணியாச்சு,நேரம் கிடைக்கையில் பார்க்கணும் ! த ம 4 //
அவசியம் பாருங்கள்.
மஹாபாரதக்கதை பல முறை படித்தாலும் சுவை குறையாது. தற்சமயம் இரண்டு மஹாபாரதக் கதைகள் சினத் திரையில் ஒளிப்பரப்பாகிறது.. பி.ஆர். சோப்ராவின் மஹாபாரதக் கதையின் யூ ட்யூப் சுட்டி கொடுத்ததற்கு நன்றி. மீண்டும் பார்ப்பேன். ஒப்பிடவும் செய்யலாம் அல்லவா.?
ReplyDeleteமுதலில் இராமாயணம் சீரியல் வந்தபொழுது, அதைப்போன்று இன்னொரு சீரியல் எடுப்பது கடினம் என்று விமர்சனம் வந்தது. அதைத் தொடர்ந்து மகாபாரதம் வந்து, இராமாயணத்தை மறக்கடிக்க வைத்துவிட்டது. தமிழில் மொழி பெயர்ப்பும், உச்சரிப்புகளும் அருமை. அவசியம் பார்க்கவேண்டிய இதிகாசம். நாம் அனைத்து ஒரிஜினல் DVD-களையும் வாங்கியுள்ளேன்.
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு. படங்களும் அவற்றை தாங்கள் விளக்கிச்சொன்னவிதமும் மிகவும் அருமை.
ReplyDeleteபி.ஆர். சோப்ராவின் மகாபாரத லிங்க் அளித்தமைக்கு நன்றிகள், ஐயா !
அன்புடன் VGK
இணைப்பு பற்றித் தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஐயா.எத்தநிமுரைப் பார்ஹ்த்தாலும், படித்தாலும் திகட்டாத கதைகள் நம் இதிகாசங்கள். திரு. சோ எழுதிய மஹாபாரதம் படித்திருக்கிறேன். நீகள் சொல்லியுள்ள திரு, நடராசன் அவர்கலுதிஅய் மகாபாரதம் படித்ததில்லை. வாய்ப்பு கிடைக்கும் பொது படிக்க வேண்டும்.
ReplyDeleteநன்றி அருமையான தகவல் அடங்கியப் பகிர்வு
அந்த நாள் ஞாபகம் ! வந்ததே! நன்றி!
ReplyDeleteலிங்க் கொடுத்த நல்லகாரியத்திற்க்கு நன்றி ஐயா.
ReplyDeleteமுன்பு ஞாயிற்று கிழமையில் தொடர்ந்து கண்டு வந்தேன். இப்போது விஜய் டிவியில் வருகிறது ஆனால் முன்பு பார்த்த முகங்கள் அப்படியே மனதில் பதிந்து விட்டது. ஆகையால் இதை பார்க்க மனமில்லை. பார்க்க வேண்டும். இப்போது பார்த்தால் நன்றாக புரியும் என நினைத்துக் கொண்டு இருந்தேன். தாங்கள் பார்க்க வசதியாக பதிவு செய்துவிட்டீர்கள். நன்றி.
ReplyDeleteத.ம.5
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > Packirisamy N said...
ReplyDeleteசகோதரர் என்.பக்கிரிசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்புள்ள V.G.K அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > rajalakshmi paramasivam said...
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மகாபாரதக்கதை தமிழில் நிறைய வெளிவந்துள்ளன. ராஜாஜி எழுதியது ஒரு அறிமுகமே. அ.லெ.நடராஜனின் தமிழாக்கம் (பாரதி பதிப்பகம்) இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. இப்போது வர்த்தமானன் பதிப்பகத்தார் முன்வெளியீட்டு முறைப்படி சலுகை விலையில் “ வியாசர் பாரதம் “ வெளியிட விளம்பரம் செய்து இருக்கிறார்கள். நானும் பதிவு செய்துள்ளேன்.
மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
ReplyDeleteபுலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDeleteசகோதரர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > R.Umayal Gayathri said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
முன்பு பார்த்த சோப்ராவின் மஹாபாரதம் போன்று இல்லை தற்போது வருவது! மஹாபாரதம் பல கிளைக்கதைகள் கொண்டது அவை எல்லாமே வாழ்வியல் த்த்துவங்களோடு எத்தனை முறை படித்தாலும், பார்த்தாலும் பல தத்துவங்களைச் சொல்லும் ஒரு பாடம் எனலாம். அதில் வரு விதுர நீதி எல்லா காலத்து அரசியலுக்கும் பொருந்தும் ஒன்று.
ReplyDeleteஅதே போன்றுதான் ராமாயணமும் முன்பு வந்தது தான் நன்றாக உள்ளது. இப்போது வருவது ..ஸோ ஸோ தான்....
மிக நல்ல தரவு.
ReplyDeleteஎங்கே நேரம் தேடுவது.
நேரமிருந்தால் பார்க்கலாம் .
மிக்க நன்றி ஐயா.
வேதா. இலங்காதிலகம்.
(வாருங்கள் புற்றுநோய் பற்றி எழுதியுள்ளேன்.)
மறுமொழி >Thulasidharan V Thillaiakathu said...
ReplyDeleteசகோதரர் V துளசிதரன் அவர்களுக்கு நன்றி! அன்று ஹிந்தியில் வந்த தொடரை தொடர்ந்து பார்க்க இயலாமல் போய் விட்டது. மற்ற தொடர்களையும் பார்க்கவில்லை. மேலே சொன்ன இணைப்பின் மூலம் தமிழில் இப்போதுதான் பார்க்கத் தொடங்கி உள்ளேன்.
மறுமொழி > kovaikkavi said...
ReplyDeleteசகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்றி! காலையிலேயே நீங்கள் எழுதிய புற்றுநோய் பற்றிய கவிதையைப் படித்து விட்டேன். புற்று நோயால் இறந்த எங்கள் உறவினர்கள் பற்றிய நினைவு வந்து மனதில் வந்து நிழலாடியது. எனவே கருத்துரை இன்னும் எழுதவில்லை.
நல்ல தகவல் தொகுப்பு ...
ReplyDeleteமறுமொழி >Mathu S said...
ReplyDeleteசகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் பவித்ரேஸ்வரம் என்னுமிடத்தில் சகுனிக்கு கோயில் உண்டு.//
ReplyDeleteபுதிய தகவல்.
பி.ஆர். சோப்ராவின் மகாபாரத லிங்க் கொடுத்தமைக்கு நன்றி.
பாடல் பகிர்வு மிக அருமை. அந்த பாடல் மிகவும் பிடிக்கும் எனக்கு.
Attestation is required, process on the certificate when candidate going to overseas for job, study, medical treatment. Also required for the family member wife, children's marriage certificate, Birth date certificate, and transfer certificate, etc. if they willing to staying with the candidate.
ReplyDeletehttps://www.embassyattestation.co.in