எனது நண்பர்கள் சிலர் 25
வருடங்களுக்கும் மேலாக ஆண்டுதோறும் ஆவணி
மாதத்தில் ஒருநாள் சமயபுரத்தில் அன்னதானம் செய்து வருகின்றனர். இதனை ஆரம்ப
காலத்தில் தனியாக தொடங்கி வைத்தவர் திரு A.கலைச் செல்வம் அவர்கள். இவர் திருமயம் அருகே உள்ள சிறுகூடல் பட்டி
அருகே உள்ள அரிபுரம் என்ற ஊர்க்காரர். நான் ஸ்டேட் வங்கியிலிருந்து, விருப்ப ஓய்வில் வந்த பின்னர் இந்த அன்னதானத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக
இணைந்துள்ளேன்.
ஆரம்பத்தில் சமயபுரத்தில் கடைத் தெருவில் உள்ள ஏதேனும் ஒரு சிறிய சத்திரத்தை
வாடகைக்கு எடுத்துக் கொண்டு இந்த அறப்பணி நடைபெற்றது. அந்த சத்திரத்துக்கு முதல்நாள்
மாலையிலேயெ சென்று விடுவோம். சத்திரம் என்றால் ஒவ்வொன்றும் ஒரு கல்யாண மண்டபம். ஒரு
விஷேச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது போன்று சமையல்காரர்களை வைத்து சமையல் வேலை
நடக்கும். பெரும்பாலும் புளி சாதம்தான். நண்பர்கள் எல்லோரும் ஒரு குழுவாக ஆளுக்கு
ஒரு வேலையாக புளிசாதத்தை 500 அல்லது 600 பொட்டலங்களாக போட்டுவிடுவோம்.
அடுத்தநாள் புளிசாதத்தோடு , இனிப்பு பன்,
தண்ணீர் பாக்கெட், சூடான பாதாம்பால் ஆகியவை அந்த சத்திரத்து வாசல் படியிலேயே
சமயபுரம் வரும் பக்தர்களுக்கு வழ்ங்கப்படும். ஆனால் சமீப காலமாக சுகாதாரத்தை
முன்னிறுத்தி அன்னதானம் செய்வதில் அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
சென்ற ஆண்டு ஸ்ரீரங்கத்தில்
நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்கள்
ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் –
// அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பதிவு செய்து, உரிமம் பெற்ற பின்பே உணவு வழங்குதல் வேண்டும். உணவு தயாரிக்கப்படும் இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்கப்பட வேண்டும்.
பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும்
சமைக்க பயன்படுத்தப்படும்
தண்ணீர் சுகாதாரமாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும்
இருக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மூடி வைத்து பாதுகாப்பாக பரிமாற
வேண்டும். சமையல்
செய்பவர்கள், உணவுப்
பொருட்களை பரிமாறி கையாள்பவர்கள் தொற்றுநோய் அற்றவர்களாக இருத்தல்
மற்றும் தன்சுத்தம்
பேணுபவர்களாக இருக்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் வழங்கும் உணவினால் ஏற்படும்
உபாதைகளுக்கு
தாங்களே பொறுப்பானவர்கள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள் //
என்று
குறிப்பிட்டு இருந்தார்.
எனவே சென்ற ஆண்டு முதல் முறைப்படி உணவுக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கோகுல
சமாஜம் அறக்கட்டளை தயார் செய்து கொண்டு வந்த உணவு வகைகளை காலை உணவாக பக்தர்களுக்கு
அளிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை தினசரி அன்னதானம், கல்வி, மருத்துவம் மற்றும்
கோசாலை சம்பந்தப்பட்ட தொண்டுகளை செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் 27 ஆவது வருடமாக சென்ற
ஆண்டைப் போலவே 18.08.14 – திங்கட் கிழமை அன்று காலை அன்னதானம் வழங்கப்பட்டது. சமயபுரம் கடைத் தெருவில்
உள்ள அருள்மிகு கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சாமி கோயில்கள் வாசல் அருகே இந்த அன்னதானம்
செய்யப்பட்டது. காலை இனிப்பு பன், இட்லி சாம்பார் மற்றும் காபி ஆகியவை சமயபுரம்
வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. (அப்போது
எடுக்கப்பட்ட படங்கள் கீழே)
மனம் மகிழத் தந்த அருமையான படைப்பிற்கு மிக்க நன்றி ஐயா !
ReplyDeleteநல்லபணி. அன்னதானத்தில் நாமும் பங்குகொண்டோம்.
ReplyDeleteஇந்த அறப் பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பான அறப்பணி ..வாழ்த்துகள்.!
ReplyDeleteவணக்கம் ஐயா.
ReplyDeleteசிறப்பான அறப்பணிகளை அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள். பதிவினிலேயே இது மூன்றாம் வருடம் என நினைக்கிறேன். தொடரட்டும். வாழ்த்துகள்.
சமயபுரம் கோயிலுக்கே நேரில் சென்று வந்ததுபோல அமர்க்களமாக உள்ளது இந்தப்பதிவு.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் VGK
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள்
ReplyDeleteபடங்களைக் கண்டு மனம் மகிழ்கிறது ஐயா
நன்றி
தம 2
ReplyDeleteஅன்னதானம் என்னும் மிகப்பெரிய அறப்பணி செய்து வரும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சார். . அது மென்மேலும் வளரவும் வாழ்த்துகிறேன்..
ReplyDeleteமறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...
ReplyDeleteபாராட்டிய சகோதரிக்கு நன்றி!
மறுமொழி > மாதேவி said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.
// வணக்கம் ஐயா. சிறப்பான அறப்பணிகளை அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள். பதிவினிலேயே இது மூன்றாம் வருடம் என நினைக்கிறேன். தொடரட்டும். வாழ்த்துகள். //
உங்கள் பின்னூட்டத்தினைப் படித்த பிறகுதான், எனது ப்ளாக்கர் PROFILE -ஐ சென்று பார்த்தேன். ஆமாம் அய்யா பதிவினில் இது மூன்றாவது வருடம்தான் ; மேலும் அடுத்த மாதம முதல் வலைப்பதிவினில் எனது நான்காவது ஆண்டும் தொடங்குகிறது. நினைவூட்டலுக்கு நன்றி!
// சமயபுரம் கோயிலுக்கே நேரில் சென்று வந்ததுபோல அமர்க்களமாக உள்ளது இந்தப்பதிவு.பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK //
உங்கள் அன்பிற்கு நன்றி!
மறுமொழி > rajalakshmi paramasivam said...
ReplyDeleteசகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
மிகச் சிறப்பான தொண்டு.. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்!..
ReplyDeleteசிறப்பான மனித நேய அறப்பணி தொடர நல்வாழ்த்துக்கள்!..
இந்த அறப்பணி காலமெல்லாம் தொடர்ந்து நிகழ அம்பாள் அருகிருப்பாளாக!..
நல்லதொரு செயலுக்கு இறைவன் தங்களது குழுவினர் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
ReplyDeleteஐயா எனது கவிதைப்போட்டிக்கு அனுப்பிய கவிதை காண்க...
மிக நல்லதொரு பணி. அதுவும் சுத்தத்துடனும், சகாதாரத்துடனும் செய்ய வேண்டும் என அரசு கட்டளை மிக நல்லதே! அன்னதானம் செய்யும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
நிகழ்வுகளை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
‘வயிற்றுக்கு சோறிடவேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்.’ என்றார் தேசியக்கவி பாரதியார். தினம் முடியாவிட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆவணித் திங்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியை ‘மக்கள் பணியே மகேசன் பணி’ என்றெண்ணி நடத்தும் உங்களுக்கும் உங்கள் நண்பர் குழாமிற்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
ReplyDeleteஎங்களை இவ்வாறு ஊக்குவித்தமைக்கு நன்றி.
ReplyDeleteகலைச் செல்வம்
மறுமொழி > துரை செல்வராஜூ said..
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
மறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDelete// நல்லதொரு செயலுக்கு இறைவன் தங்களது குழுவினர் அனைவருக்கும் அருள் புரியட்டும். ஐயா எனது கவிதைப்போட்டிக்கு அனுப்பிய கவிதை காண்க... //
தேவகோட்டை சகோதரர் கில்லர்ஜியின் கருத்துரைக்கு நன்றி! உங்கள் கவிதைகளைப் படித்து கருத்துரை எழுதியுள்ளேன்!
மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...
ReplyDeleteசகோதரர் துளசிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > ரூபன் said...
ReplyDeleteவணக்கம்! கவிஞர் ரூபன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅய்யா அவர்களின் வாழ்த்துதலுக்கு நன்றி!
மறுமொழி > Anand Babu said...
ReplyDelete// எங்களை இவ்வாறு ஊக்குவித்தமைக்கு நன்றி.
கலைச் செல்வம் //
கலைச்செல்வம் சார்பாக கருத்துரை தந்த ,.அன்புள்ளம் கொண்ட
ஆனந்த் பாபு அவர்களுக்கு நன்றி!
இதனைக் கோயில் பிரசாதம் என்று சொல்லலாம்.
ReplyDeleteதானம் என்பது தேவைப்பட்டவர்களுக்கு இலவசமாகக் கொடுப்பது என்று நினைக்கிறேன். தவறாகவும் இருக்கலாம்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் - அந்த
ReplyDeleteஅன்னதானமே இறைவனைக் காணவுதவும்
சிறந்த இறைதொண்டு!
கோயிலின் சந்நிதியில் இறைவன் முன் படைக்கப்பட்ட பொருளை சிறிய அளவில் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது பிரசாதம் ஆகும். பசித்தோருக்கு பசி நீங்கிட வயிறார அன்னத்தை எந்தவித எதிர்பார்ப்புமின்றி வழங்குதல் அன்னதானம் ஆகும்.
ReplyDeleteஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே
என்ற பாடலில் “பசித்தோர் முகம் பார்” என்கிறார் பட்டினத்தார்.
மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...
ReplyDelete// தானத்தில் சிறந்தது அன்னதானம் - அந்த
அன்னதானமே இறைவனைக் காணவுதவும்
சிறந்த இறைதொண்டு! //
அருமையான கருத்துரை தந்த சகோதரருக்கு நன்றி!