Thursday 22 May 2014

தமிழ் திரட்டிகளுக்கு என்ன ஆயிற்று?



சுமார் ஏழு வருடங்களுக்கு முன்னர் வலைப்பக்கம் வந்தபோது இண்டர்நெட்டில் நிறைய திரட்டிகளைத் தமிழில் கண்டபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது நான் பணியில் இருந்தபடியினால் அவற்றைப் படிப்பதோடு சரி. அப்போது நான் வலைப்பதிவராகவும் இல்லை. வாசகராக மட்டுமே இருந்தேன். பின்பு தமிழ்மணம் வழிகாட்டுதலில் நானும் ஒரு பதிவரானேன்.

திரட்டிகள்:

பொதுவாக வேறு ஒரு பத்திரிகையில் வந்த கட்டுரையையோ, கதையையோ, கவிதையையோ இன்னொரு பத்திரிகையில் வெளியிட மாட்டார்கள். ஒவ்வொன்றிலும் புதுப்புது படைப்புகள். இதனால் எல்லா பத்திரிகைகளையும் படிக்கவும் வாங்கவும் ஆர்வம் வந்தது. ஆனால் திரட்டிகள் இதற்கு நேர்மாறாக இருக்கின்றன. ஒரு வலைப்பதிவர் தனது படைப்பை அனைத்து திரட்டிகளிலும் இணைக்கின்றார். அல்லது அவை தாமாகவே திரட்டிக் கொள்கின்றன. எனவே ஒரு தமிழ் திரட்டியில் வந்த பதிவுகளையே மற்றவற்றிலும் பார்க்கும்போது ஒருவித சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதில் ஒரு சின்ன மகிழ்ச்சி, நம்முடைய படைப்புகள் நமது பெயர் தாங்கி எல்லா திரட்டிகளிலும் வருவதுதான்.

என்ன ஆயிற்று?

என்ன காரணம் என்று தெரியவில்லை? இப்போது சமீப காலமாக நன்கு பிரபலமாக இருந்த தமிழ் தளங்கள் நின்று விட்டன. அல்லது செயல்படாமல் நிற்கின்றன இதற்கான காரணம் குறித்து நின்றுபோன மாற்று (MAATRU) இணைய இதழ் பற்றி சொல்லும்போது ரவிஷஙகர் என்பவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

// மாற்று! அடுத்து?  2007இல் மாற்று! தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன. பெரும்பாலும் தமிழ்த் திரட்டிகளைச் சார்ந்திருந்த காலம் போய் இப்போது டுவிட்டர், பேசுபுக், கூகுள் பிளசு என வாசிப்புப் பரிந்துரைகளுக்கான களம் மாறி விட்டது. மாற்றிலேயே கூட கட்டுரைகளைப் பரிந்துரைத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. இந்நிலையில், மாற்று! இதே வடிவத்தில் தொடர்வதில் பயன் இல்லை. அடுத்த இதனை எவ்வாறு எடுத்துச் செல்லலாம் என்பதற்கான ஆலோசனைகளும் தொழில்நுட்பப் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. போதிய பங்களிப்பு இல்லா நிலையில் மாற்று! திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதும் ஒரு தெரிவு. நன்றி.//

நின்று போனவை:

ஹாரம் www.haaram.com

சங்கமம் http://isangamam.com

தமிழ் சிட்டி www.tamilchetee.com


உலவு www.ulavu.com

வலைப் பூக்கள் www.valaipookkal.com

தமிழ் ராஜா www.tamilraja.com
பூங்கா www.poongaa.com

தமிழ் ப்ளாக்ஸ் http://tamilblogs./com 

மரத்தடி www.maraththadi.com

தமிழ் நாதம் www.tamilnaatham.com

தோழி www.thozhi.com

கில்லி http://gilli.com

தமிழ் ப்ளாக்கர்ஸ் http://tamilbloggers.org

வல்லினம் http://vallinam.com

போகி www.bogy.in

மாற்று www.maatru.net

மேலே குறிப்பிடப்பட்ட தமிழ் இணைய தளங்கள் ஒருகாலத்தில் ஓகோ என்று இருந்தன. சில பெயர்கள் விட்டு போயிருக்கலாம். ஆனால் இன்று அவை நடைமுறையில் இல்லை என்பது வருத்தமான விஷயம்.

மாற்று www.maatru.net 2007 இல் தொடங்கப்பட்ட இந்த தளமானது 2009 இல் அப்படியே நின்று விட்டது. பின்னர் அவர்களது அழைப்பை ஏற்று,  புதிய பங்களிப்பாளர்களாக இணைந்த சுந்தர், சந்தோசு, வினையூக்கி, சங்கர் கணேசு, வெங்கட்ரமணன், சேது,  யாத்ரீகன்,  பாலச்சந்தர் ஆகிய நண்பர்களைக் கொண்டு நடத்த முயற்சித்துள்ளனர். பின்னர் மேலே ரவிஷங்கர் சொன்ன  காரணங்களால்  நின்று விட்டது.. மேலும் இந்த இணையத்தை தமிழர்கள் மட்டுமே பங்கேற்கும் ஆங்கிலம் - தமிழ் வலைப் பதிவுகளைக் கொண்டு தொடர்ந்து நடத்தவும் முயற்சி செய்துள்ளனர்.

இதேனீ www.etheni.com
இந்த இணையத்தைப் பற்றி கூகிளில் தேடினால் கிடைக்கும் செய்தி

// பல நாட்களுக்கு பிறகு மீண்டும் நேரமும் ஆர்வமும் கிடைத்துள்ளது. விரைவில் இந்த தளம் பல புதிய பகுதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவை நாடும்....இதேனீ குழு July 2013 //

களஞ்சியம் www.kalanjiam.com
இதுவும் அப்படியே நின்று கொண்டு இருக்கிறது.

நின்று மீண்டும் இயங்குவன:

கீற்று www.keetru.com

தமிழ்வெளி www.tamilveli.com

திரட்டி www.thiratti.com


மேலே சொல்லப்பட்ட இணையதளங்கள்  இடையில் சிறிது நாட்கள் நின்று போயின. இப்போது இவை மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கின்றன. 
 
செய்ய வேண்டியது என்ன?

இப்போது பல்வேறு சோதனைகளுக்கு இடையிலும் பல இணைய தளங்கள் வலைப் பதிவர்களின் பதிவுகளை தாமாகவே திரட்டியும் அல்லது வலைப் பதிவர்களால் இணைக்கப்பட்டும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

தமிழ் மணம் www.tamilmanam.net

வலையகம் www.valaiyakam.com

தமிழோவியம் www.tamiloviam.com

நிலாசாரல் www.nilacharal.com

புது திண்ணை http://puthu.thinnai.com

முத்தமிழ் ம்ன்றம் www.muthamilmantram.com

இண்ட்லி http://ta.indli.net

தமிழ் 10 www.tamil10.com

தமிழ் நண்பர்கள் http://tamilnanbargal.com

வல்லமை www.vallamai.com
தமிழ் களஞ்சியம் www.tamilkalanjiyam.com  
தேன்கூடு www.thenkoodu.in 
இண்டிப்ளாக்கர் www.indiblogger.in/languagesearch.php?lang=tamil 

நின்று போன திரட்டிகளை நினைத்தும், இருக்கின்ற திரட்டிகளின் சேவையை ஆதரித்தும் “தமிழ்மணம் சேவை - வலையுலகிற்கு தேவை ( http://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post_3363.html ) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் உள்ள பின்னூட்டங்கள் இன்றைய திரட்டிகளின் தற்காலச் சூழலைச் சொல்லும்.

அடிக்கடி தமிழில் பதிவுகளை எழுதுவது, அவற்றை இன்றுள்ள திரட்டிகளில் இணைப்பது, புதிய தமிழ் வலைப் பதிவர்களை உருவாக்குவது, (பேஸ்புக், ட்விட்டர் போன்ற) பிற சமூக தளங்களுக்கு சென்றவர்களை வலைப்பதிவில் எழுதச் சொல்லி அழைப்பது, எழுதிக் கொண்டே இருந்து நின்று விட்ட பழைய வலைப் பதிவர்களையும் எழுதச் சொல்லி அழைப்பது  போன்றவை தமிழ் வலையுலகில் ஒரு மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகம் இல்லை.

மூத்த வலைப் பதிவர் வை. கோபாலகிருஷ்ணன், கவிஞர் ரூபன், மணவை அ.பாண்டியன் போன்றவர்கள் போட்டிகள் நடத்தி தமிழ் வலைப் பதிவர்களை ஊக்குவித்து வருகிறார்கள். இந்த மூன்று வலைப்பதிவர்களோடு  கவிஞர் S.ரமணி, திண்டுக்கல் தனபாலன், மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் போன்ற வலைப் பதிவர்களும் தங்களது ஊக்கமூட்டும் பின்னூட்டங்கள் மூலம் வலைப் பதிவர்களை மேலும் தொடர்ந்து எழுத ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

மேலும் புதுக்கோட்டையில் இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறை ஒன்றை ஆசிரியரும் வலைப்பதிவரும் ஆன கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தி வருகிறார்.. புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழ் இணையப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற பணிகள் நாடெங்கும் பரவலாக்கப் பட வேண்டும்.

காலப்போக்கில் பிரபலமான தமிழ்ப் பத்திரிகைகளே வலைப் பதிவர்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளை விதித்து விட்டு தமிழ் திரட்டிகளைத் தனியே தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

(PICTURE : THANKS TO GOOGLE)







56 comments:

  1. திரட்டிகள் பற்றிய தகவலுக்கு நன்றி! தமிழ் களஞ்சியம் இப்போதும் இயங்கிக்கொண்டு இருக்கிறது என எண்ணுகிறேன்.

    ReplyDelete
  2. ஆக்கபூர்வமான பதிவு.
    தமிழ் வலையுலகில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும்.
    பதிவர்களை பின்னூட்டங்கள் மூலம் ஊக்கப்படுத்தும் - நண்பர்களைத் தாங்கள் குறிப்பிட்டது சிறப்பு.

    ReplyDelete
  3. அன்புள்ள ஐயா,

    வணக்கம். திரட்டிகளைப்பற்றி பல்வேறு தகவல்களைத் திரட்டி அளித்துள்ளீர்கள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    என் வலைத்தளத்தை எந்தத் திரட்டியிலும் நானாக இதுவரை இணைத்தது இல்லை.

    >>>>>

    ReplyDelete
  4. தமிழ்மணத்திலும், இன்ட்லியிலும் சிலகாலம் மட்டும் [2011] வேறு சில பதிவர்கள் அவர்களாகவே முன்வந்து என் வலைத்தளத்தினை எனக்காக இணைத்துக் கொடுத்திருந்தார்கள். பிறகு நாளடைவில் அவற்றின் பட்டைகள் என் வலைத்தளத்திலிருந்து எங்கோ காணாமல் போய் விட்டன, நானும் அதைப்பற்றி இன்றுவரை கவலையே படவில்லை.

    >>>>>

    ReplyDelete
  5. அவ்வாறு இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்த சுமார் 6 மாதங்களுக்குள், தமிழ்மணத்தில் என்னை நட்சத்திரப்பதிவர் ஆக்கி [November 2011] கெளரவித்து, அந்த வாரத்தின் TOP 20 LIST இல் எனக்கு முதலிடம் அளித்து மேலும் மகிழ்ச்சியூட்டியிருந்தார்கள்.

    >>>>>

    ReplyDelete
  6. என் வலைத்தளத்தில் இந்த ஆண்டு முழுவதும் வாராவாரம் நடைபெற்று வரும் போட்டியைப்பற்றியும் கூறி, இவ்வாறு அவ்வப்போது எப்போதாவது போட்டி நடத்தும் சிலர் பெயர்களையும் என்னுடன் சேர்த்து ஒப்பிட்டு அறிவித்துள்ளீர்கள், ஐயா.

    நான் என் வலைத்தளத்தினில் நடத்திவரும் போட்டியின் அடிப்படை நோக்கமே வேறு, பிறர் நடத்தும் போட்டிகளின் நோக்கமே வேறு என்பதை இங்கு மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் ஐயா.

    >>>>>

    ReplyDelete
  7. ஒருவரின் படைப்பினை ஆழ்ந்து மனதில் வாங்கிக்கொண்டு முழுமையாகப் படிக்காமல், கமெண்ட்ஸ் கொடுப்பவர்களைக்கண்டால், எனக்கு அடியோடு பிடிக்காது. அவர்களை நான் வெறுப்பவனும் கூட.

    அவ்வாறு யாரும் செய்யக்கூடாது என்பதும் நான் நடத்தும் போட்டியின் மிக முக்கியமான முதல் நோக்கமாகும்.

    >>>>>

    ReplyDelete
  8. அதாவது எதையும் ஊன்றிப் படிக்க வேண்டும். நேரமில்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டும். சும்மாவாவது பல பதிவுகளுக்கு ஓடிஓடிச்சென்று, ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கமெண்ட்ஸ்களில் ஒருசிலவற்றைப் பார்த்து Copy அடித்தோ, அல்லது ஏதாவது எழுதனுமே என்றோ எழுதிவிட்டு வருவதில் என்ன பிரயோசனம்?

    >>>>>

    ReplyDelete

  9. அடுத்ததாக பாராட்டியோ திட்டியோ நாம் எழுதும் கருத்துக்கள் பிறரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் படிக்க சுவையானதாக இருக்க வேண்டும் என்பதும் என் போட்டியின் அடிப்படை நோக்கங்களின் இரண்டாவதாகும்.

    >>>>>

    ReplyDelete
  10. எழுதுவோரின் கற்பனையையும், எழுத்துத் திறமைகளையும் வளர்ப்பதாகவும் அவற்றை அவ்வப்போது பிறர் அறிய வெளிக்கொணர்வதாகவும் செய்வதே என் போட்டியின் மூன்றாவது நோக்கமாகும்.

    >>>>>

    ReplyDelete
  11. நான் நடத்திவரும் போட்டி இந்த ஆண்டு முழுவதும் சுமார் 40 வாரங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள போட்டியாகும். இதுவரை இடைவிடாமல் 18 வாரங்களாக வெற்றிகரமாக சொன்ன நேரத்தில் சொன்னபடி நடைபெற்று வருவதாகும்.

    வாய்தா வாங்கும் வழக்கமே இங்கு இதுவரை நடைபெற்றது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு 10 கதைகள் முடிந்ததும் அவரவர்களுக்கான பரிசுத்தொகை அவரவர்களின் வங்கிக்கணக்கினில் நேரிடையாக செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த என் போட்டியின் சிறப்பு அம்சமாகும்.

    >>>>>

    ReplyDelete
  12. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த என் போட்டி 10th STD. [SSLC] and +2 தேர்வுகளில் வினா-விடைத்தாள்கள் திருத்தப்படுவது போல நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    விமர்சனதாரர்களை நடுவருக்கோ, நடுவரை விமர்சனதாரர்களுக்கோ தெரியாமல் போட்டி படு சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது என்பதனையும் மிகப்பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  13. என் பெயரினையும், நான் நடத்திவரும் போட்டியினையும், தாங்கள் பிறருடன் ஒப்பிட்டு ஒரு பத்தியில் எழுதியிருப்பதால் மட்டுமே, இந்த என் கருத்துக்களை இங்கு நான் பதிவு செய்யும்படி ஆகிவிட்டது. இதில் ஏதும் தவறாக இருப்பின் மன்னிக்கணும் ஐயா.

    என்றும் அன்புடன் VGK

    oooooo

    ReplyDelete
  14. திரட்டிகள் குறித்த முழுத் தகவல்களை
    முழுமையாகத் திரட்டித் தந்தது அருமை
    அறியாதன அறிந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. புதிய பதிர்வகள் தெரிந்துகொள்ளவேண்டிய தேவையான பதிவை அழகாகத் தொகுத்து வழங்கினீர்கள் நண்பரே.

    உண்மைதான் இப்போது மக்கள் முகநூல், டிவைட்டர், வாட்சாப் என மாறிவிட்டதும் ஒரு காரணம் தான்..

    ReplyDelete
  16. திரட்டிகள் குறித்து ஆக்கபூர்வமான
    சிந்தனைப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  17. Thamizh ilango sir,

    //இந்த மூன்று வலைப்பதிவர்களோடு கவிஞர் S.ரமணி, திண்டுக்கல் தனபாலன், மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் போன்ற வலைப் பதிவர்களும் தங்களது ஊக்கமூட்டும் பின்னூட்டங்கள் மூலம் வலைப் பதிவர்களை மேலும் தொடர்ந்து எழுத ஊக்கம் அளித்து வருகிறார்கள்.//

    ஹி..ஹி ஹி. அப்போ தமிழ்பதிவுலகம் புத்துணர்ச்சி பெற்றிடும் -))
    ------------

    //காலப்போக்கில் பிரபலமான தமிழ்ப் பத்திரிகைகளே வலைப் பதிவர்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளை விதித்து விட்டு தமிழ் திரட்டிகளைத் தனியே தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.//

    தினமணியில் ரெண்டு மூனு வருசமாவே பதிவு செய்துக்கொண்டால் "தமிழலைப்பதிவுகளை" திரட்டி எளியிடுறாங்க.

    பல ஆங்கிலப்பத்திரிக்கைகளில் வலைப்பதிவுகளை திரட்டுறாங்க ,அல்லது அவங்களே டப் டொமைனாக வலைப்பதிவு அக்கவுண்டும் தறாங்க.
    ----------------
    வை.கோ சார்,

    //ஒருவரின் படைப்பினை ஆழ்ந்து மனதில் வாங்கிக்கொண்டு முழுமையாகப் படிக்காமல், கமெண்ட்ஸ் கொடுப்பவர்களைக்கண்டால், எனக்கு அடியோடு பிடிக்காது. அவர்களை நான் வெறுப்பவனும் கூட. //

    //அதாவது எதையும் ஊன்றிப் படிக்க வேண்டும். நேரமில்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டும். சும்மாவாவது பல பதிவுகளுக்கு ஓடிஓடிச்சென்று, ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கமெண்ட்ஸ்களில் ஒருசிலவற்றைப் பார்த்து Copy அடித்தோ, அல்லது ஏதாவது எழுதனுமே என்றோ எழுதிவிட்டு வருவதில் என்ன பிரயோசனம்?//

    என்ன சார் இது நான் பேச நினைப்பதெல்லாம் நீங்களே பேசிட்டிங்க, இப்ப நான் என்னத்த சொல்வது அவ்வ்!

    நல்ல வேளை இத நீங்க சொன்னீங்க, நான் சொல்லி இருந்தால் பின்னூட்டமே குப்பை தொட்டிக்கு போயிருக்கும் ,அம்புட்டு தான் நம்ம ஊரு கருத்து சுதந்திரம் அவ்வ்!

    உண்மையிலே நல்ல பாலிசி , சிறப்பாக வலைப்பதிவுகள் இயங்க நேர்மையான ,உண்மையான விமர்சனங்களே தேவை ,ஜால்ரா பின்னூட்டங்களோ ,த.ம.1 பின்னூட்டங்களோ அல்ல.உங்க பாலிசிய அப்படியே மெயிண்டையின் செய்யுங்க, நாலுப்பேர் விமர்சிப்பாங்க தான் அதை எல்லாம் கண்டுக்க கூடாது.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. திரட்டிகளின் தற்சமய ஊசலாட்ட நிலையை தெளிவாக தந்தீர்கள். நன்றி!

    ReplyDelete
  19. வாசகர்கள் திரட்டிகளின் மூலம் ஒரே இடத்தில் எல்லோருடையும் படித்துக் கொள்ளலாம் என்பது தவிர திரட்டிகளால் வேறு என்ன பெரிதாக பலன் காணுகிறீர்கள் என்று தெரியவில்லையே!

    இணையப் பதிவுகளின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வேறு எத்தனையோ
    வழிகள் இருக்கின்றன.

    ReplyDelete
  20. திரட்டிகள் பற்றி நல்லதோர் அலசல்.

    பொதுவாகவே இத்தனை திரட்டிகளிலும் இணைப்பதில்லை. இத்தனை திரட்டிகள் இருப்பதும் ஒரு செய்தி தான் எனக்கு...

    ReplyDelete


  21. தமிழ் இளங்கோ சார்,

    தமிழ் திரட்டிகளுக்கு என்ன ஆயிற்று? என தலைப்பை வச்சிட்டு,
    திரட்டிகள், இணையதளங்கள், குழுமப்பதிவுகள் என எல்லாவற்றையும் ஒன்னா கலக்கி போட்டு வச்சிருக்கிங்க.

    # தமிழ் ப்ளாக்கர்ஸ் http://tamilbloggers.org

    இது 2007 இல் முதல் தமிழ் வலைப்பதிவர் மாநாட்டிற்காக துவக்கப்பட்ட தளம். அதன் செயல்ப்படவில்லை ,அதனை திரட்டியில் சேர்த்துட்டின்க.

    # பூங்கா www.poongaa.com

    தமிழ்மணத்தில் வரும் சில நல்லப்பதிவுகளை மட்டும் தொகுத்து வழங்கிய இணைய இதழ். தமிழ் மணத்தால் நடத்தப்பட்டது,பின்னர் நிறுத்தப்பட்டது.

    # மாற்று www.maatru.net

    குழும தளம், செய்திகள்,பதிவுகள் இன்னப்பிற என தொகுத்து வழங்கும்.திரட்டியல்ல.

    தனித்தனியாக குறிப்பிட்டு எழுதியிருக்கலாம்.

    ReplyDelete
  22. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // திரட்டிகள் பற்றிய தகவலுக்கு நன்றி! தமிழ் களஞ்சியம் இப்போதும் இயங்கிக்கொண்டு இருக்கிறது என எண்ணுகிறேன். //

    அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! www.tamilkalanjiyam,com என்ற இணைய முகவரியை தேடினால்

    // Oops! www.tamilkalanjiyam,com seems to be having issues. //

    என்ற பதில்தான் கிடைக்கிறது. வேறு டொமைனில் தொடங்கி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  23. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    // ஆக்கபூர்வமான பதிவு. தமிழ் வலையுலகில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். பதிவர்களை பின்னூட்டங்கள் மூலம் ஊக்கப்படுத்தும் - நண்பர்களைத் தாங்கள் குறிப்பிட்டது சிறப்பு. //

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 to 11)

    அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.! எனது ஒரு சின்ன கருத்துரைக்கு நீண்ட பேருரையையே பதிலாகத் தந்து விட்டீர்கள்.

    // நான் என் வலைத்தளத்தினில் நடத்திவரும் போட்டியின் அடிப்படை நோக்கமே வேறு, பிறர் நடத்தும் போட்டிகளின் நோக்கமே வேறு என்பதை இங்கு மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் ஐயா.//

    நான் எனது பதிவில் நீங்களும் மற்றவர்களும் நடத்தும் போட்டிகளின் அடிப்படை நோக்கத்தை ஒப்பிட்டு எழுதவில்லை. இரண்டும் வெவ்வேறானவைதான். நான் ஒப்பிட்டது பதிவர்களை ஊக்கப்படுத்தும் நல்ல குணத்தைத்தான்.

    திரட்டிகளைப் பற்றிய உங்கள் அனுபவம், நீங்கள் நடத்தும் போட்டிகளின் சாராம்சம், கமெண்ட்ஸ்களைப் பற்றிய உண்மை விவரம் – முதலான அனைது விவரங்களையும் இங்கு பின்னூட்டமாகத் தந்ததற்கு நன்றி! இவற்றையே ஒரு பதிவாக எழுதலாம்.

    // என் பெயரினையும், நான் நடத்திவரும் போட்டியினையும், தாங்கள் பிறருடன் ஒப்பிட்டு ஒரு பத்தியில் எழுதியிருப்பதால் மட்டுமே, இந்த என் கருத்துக்களை இங்கு நான் பதிவு செய்யும்படி ஆகிவிட்டது. இதில் ஏதும் தவறாக இருப்பின் மன்னிக்கணும் ஐயா.//

    மூத்த வலைப் பதிவரான உங்களைத் தவறாக நினைப்பதற்கு ஏதும் இல்லை. உங்களைப் போன்றவர்கள் தரும் ஆசீர்வாதம், எனக்கு எல்லாமே நல்ல விதமாகப் போய்க் கொண்டு இருக்கிறது.



    ReplyDelete
  25. மறுமொழி > Ramani S said... ( 1 , 2 )

    // திரட்டிகள் குறித்த முழுத் தகவல்களை முழுமையாகத் திரட்டித் தந்தது அருமை அறியாதன அறிந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் //

    கவிஞர் எஸ்.ரமணி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > முனைவர் இரா.குணசீலன் said...

    // புதிய பதிர்வகள் தெரிந்துகொள்ளவேண்டிய தேவையான பதிவை அழகாகத் தொகுத்து வழங்கினீர்கள் நண்பரே. உண்மைதான் இப்போது மக்கள் முகநூல், டிவைட்டர், வாட்சாப் என மாறிவிட்டதும் ஒரு காரணம் தான்.. //

    பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    // திரட்டிகள் குறித்து ஆக்கபூர்வமான சிந்தனைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.! //

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  28. விரைவில் : எனது திரட்டி(டு)...!

    ReplyDelete
  29. மறுமொழி > வவ்வால் said... ( 1 )

    வவ்வால் சாரின் வருகைக்கு நன்றி!

    --------
    //இந்த மூன்று வலைப்பதிவர்களோடு கவிஞர் S.ரமணி, திண்டுக்கல் தனபாலன், மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் போன்ற வலைப் பதிவர்களும் தங்களது ஊக்கமூட்டும் பின்னூட்டங்கள் மூலம் வலைப் பதிவர்களை மேலும் தொடர்ந்து எழுத ஊக்கம் அளித்து வருகிறார்கள்.//

    ஹி..ஹி ஹி. அப்போ தமிழ்பதிவுலகம் புத்துணர்ச்சி பெற்றிடும் -))
    ------------

    தி.தமிழ் இளங்கோ said... > நிச்சயமாக. தமிழ்பதிவுலகம் புத்துணர்ச்சி பெற்றிடும் இதில் என்ன சந்தேகம்? நான் வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில் எனக்காக உற்சாகம் ஊட்டும் பின்னூட்டத்தை அளித்தவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நான் மறந்துவிடவில்லை.
    ----
    //காலப்போக்கில் பிரபலமான தமிழ்ப் பத்திரிகைகளே வலைப் பதிவர்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளை விதித்து விட்டு தமிழ் திரட்டிகளைத் தனியே தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.//

    தினமணியில் ரெண்டு மூனு வருசமாவே பதிவு செய்துக்கொண்டால் "தமிழலைப்பதிவுகளை" திரட்டி எளியிடுறாங்க.

    பல ஆங்கிலப்பத்திரிக்கைகளில் வலைப்பதிவுகளை திரட்டுறாங்க ,அல்லது அவங்களே டப் டொமைனாக வலைப்பதிவு அக்கவுண்டும் தறாங்க.
    ----------------

    தி.தமிழ் இளங்கோ said... > வவ்வாலின் சிறப்புத் தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி > அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    // திரட்டிகளின் தற்சமய ஊசலாட்ட நிலையை தெளிவாக தந்தீர்கள். நன்றி! //

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  31. மறுமொழி > ஜீவி said...

    ஜீவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // வாசகர்கள் திரட்டிகளின் மூலம் ஒரே இடத்தில் எல்லோருடையும் படித்துக் கொள்ளலாம் என்பது தவிர திரட்டிகளால் வேறு என்ன பெரிதாக பலன் காணுகிறீர்கள் என்று தெரியவில்லையே! //

    அய்யா திரட்டிகள் மூலம்தானே பதிவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுக ஆக முடிகிறது. நட்பு வட்டங்களை இணைக்க முடிகிறது.

    // இணையப் பதிவுகளின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. //

    நான் எனக்குத் தெரிந்தவற்றை சுருக்கமாக எழுதினேன். உங்களுக்குத் தெரிந்த மற்றைய வழிகளை நீங்கள் உங்கள் பதிவில் சொல்லலாம்.

    ReplyDelete
  32. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // திரட்டிகள் பற்றி நல்லதோர் அலசல். பொதுவாகவே இத்தனை திரட்டிகளிலும் இணைப்பதில்லை. இத்தனை திரட்டிகள் இருப்பதும் ஒரு செய்தி தான் எனக்கு...//

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நான் உங்கள் வலைப்பக்கம் வந்து கொஞ்ச நாட்களாகி விட்டன..

    ReplyDelete
  33. மறுமொழி > வவ்வால் said... ( 2 )

    வவ்வால் சாரின் இரண்டாம் வருகைக்கு நன்றி!

    // தமிழ் இளங்கோ சார், தமிழ் திரட்டிகளுக்கு என்ன ஆயிற்று? என தலைப்பை வச்சிட்டு, திரட்டிகள், இணையதளங்கள், குழுமப்பதிவுகள் என எல்லாவற்றையும் ஒன்னா கலக்கி போட்டு வச்சிருக்கிங்க. //

    மன்னிக்கவும்! நீங்கள் சொல்வது சரிதான். நான் இவற்றை தனித் தனியே குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

    ReplyDelete
  34. //திரட்டிகள் மூலம்தானே பதிவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுக ஆக முடிகிறது. நட்பு வட்டங்களை இணைக்க முடிகிறது. //

    திரட்டிகளை ஒரு பத்து வினாடிகள் எனக்காக மறந்து விடுங்கள்.

    இதற்கு சுலபமான ஒரு வழி இருக்கிறது.

    உங்களுக்கு விருப்பமானவைகள், வேண்டியவைகள், தெரிந்து கொள்ள வேண்டியவை,
    தகவல் தெரியவேண்டியவை இவைகளை கூகுள் தேடலில் தேடினால் குறிப்பிட்ட அந்த தலைப்பில் நிறைய பதிவுகள் காணக்கிடைக்கின்றன.

    பத்து வருஷத்திற்கு முன்னால் அந்த குறிப்பிட்ட தலைப்பு பற்றி எழுதியவரிலிருந்து நேற்று எழுதியவர் வரை.

    இவற்றில் ஒதுக்க வேண்டிவற்றை ஒதுக்கி தேர்ந்து படித்தால் பரந்து பட்ட ஒரு அறிவார்ந்த வட்டத்தில் நீங்களே விரும்பி உங்களையும் ஒருவராக இணைத்துக் கொள்ளுதல் தவிர்க்க முடியாத செயலாய் தானே நிகழ்கிறது.

    அவர்களின் தள முகவரிகளைக் குறித்துக் கொண்டு தவறாமல் குறித்துக் கொண்ட முகவரிகளை அடிக்கடி பார்க்கத் தலைப்படுவீர்கள். பின்னூட்டம் அப்படியான தளங்களில் போடும் பொழுது கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டு கருத்துக்களில் விலாசமான வெளிச்சம் கிட்டுகிறது.

    திரட்டிகளால் ஒரு குறிப்பிட்ட கால அல்லது வட்ட எண்ணங்கள் தான் தெரியமுடியும்.

    ஆனால் கூகுள் தேடுதலில் அப்படியில்லை. ஒரு குறிப்பட்ட தலைப்பின் அடி முதல் நுனி வரையான ஒரு கால கட்ட வரையறைக்குள் அடைக்கப்படாத அத்தனையும் வாசிக்க வாய்ப்பேற்படுகிறது.

    திரட்டிகளில் ஆழும் பொழுது உங்களுக்கு தேவையில்லாவற்றையும் அப்பொழுதிய ஆர்வத்தின் அடிப்படையில் படித்து அனாவசியமாக ஒன்று விட்டு ஒன்று பல விஷயங்களில் ஒரே நேரத்தில் அலைக்கழிக்கப்படுகிறீர்கள்.

    கூகுள் தேடுதலில் இந்த கால விரயம் தடுக்கப்படுகிறது.

    உங்களுக்குத் தேவையானவற்றையே படித்து ஆராய்ச்சியாளன் போல் புதுசு புதுசாக பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறீர்கள். தெரிந்து கொண்டவரிடம் நம் தொடர்பு வலுப்படுகிறது. அதன் மூலம் அவர் நம்மைத் தெரிந்து கொள்கிறார். தெரிந்து கொண்ட கிட்டத் தட்ட ஒரே விஷயத்தில் ஈடுபாடு கொண்ட இருவரின் நட்பும் இறுகிறது. இந்த இரண்டு இரண்டான நட்பின் விரிதல் நமக்கு மலைப்பேற்படுத்தும். ஈடுபாடு கொண்டிருக்கும் விஷயத்தில் இலட்சிய பிடிப்பே ஏற்படும்.

    புதிது புதிதாகத் தெரிந்து கொண்ட விசாலப்பட்ட அறிவு சும்மா இருக்காது.

    நம் தளத்தில் அதையெல்லாம் எழுதச் சொல்லும். நம் அலைவரிசை சிந்தனை பலப்படும். ஒத்த கருத்துள்ள நட்பு வட்டாரம் இன்னும் இன்னும் பலப்படும். இது தான் இதன் முக்கியமான பலன்.

    பின்னூட்டங்களில் ஒருவர் கருத்தை ஒருவர் புரிந்து கொண்ட அல்லது கொள்வதற்கான பின்னூட்டங்கள் தாம் இருக்குமே தவிர அனாவசிய வம்பெல்லாம் இருக்காது.

    இதனால் நபர்கள் மறந்து போய் கருத்துப் பரிமாற்றம் முக்கியம் பெறுகிறது.
    சிந்தனை வலுப்படுகிறது. உங்களைப் போலவான பலரை-- சரியாகச் சொல்ல வேண்டுமானால்-- பலரின் கருத்துச் செறிவை அறிந்து கொள்ளும் பாக்கியம் கிட்டுகிறது.

    இன்றைய கணினியுகம் அள்ளி அள்ளி கொடுத்த வரப்பிரசாதம் இது. இது வாழ்க்கை முறையே ஆனால் நமக்கு பிடித்தவற்றில் நாம் விசாலமான ஞானம் பெற்று
    வானம் வசப்பட்ட நிலை அடையலாம்.

    நமது தேவையும் அது தானே?..

    சொல்லுங்கள்.


    ReplyDelete
  35. அருமையான நற் கருத்துக்கள் நிறைந்த ஆக்கம் இதற்குத் தலை
    வணகுகின்றேன் ஐயா .வலைத்(blogger ) தளங்களில் இதுவரை காலமும்
    மிகச் சிறப்பான ஆக்கங்களை எழுதிவந்த எண்ணற்ற பதிவர்கள்
    பலரும் இன்று முகநூலில் தத்தம் ஆக்கங்களை வெளியிடுவதோடு
    வலைத் தளப் பக்கம் என்று ஒன்று உள்ளது என்பதையே மறந்து
    போனவர்களாகத் தென்படுகின்றனர் இவர்களை ஊக்குவித்து
    மீண்டும் அவரவர் வலைத் தளங்களில் ஆக்கங்களை எழுத
    வைப்பதென்பது அவசியமான தொரு செயல் இதனைக் கருத்தில்
    கொண்டு செயல்படும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும்
    வாழ்த்தினையும் தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றேன் .மிக்க
    நன்றி ஐயா சிறப்பான இப் பகிர்வுக்கு .

    ReplyDelete
  36. அருமையான அவசியமான பதிவு ஐயா
    நிச்சயம் திரட்டிகள் மீண்டும் புத்தணர்வு பெறும்
    அல்லது தாங்கள் சொல்வதுபோல் இன்றைய நாளிதழ்களே
    திரட்டிகளைத் தொடங்கலர்ம்
    நன்றி ஐயா

    ReplyDelete
  37. //www.tamilkalanjiyam,com என்ற இணைய முகவரியை தேடினால்

    // Oops! www.tamilkalanjiyam,com seems to be having issues. //

    என்ற பதில்தான் கிடைக்கிறது. வேறு டொமைனில் தொடங்கி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.//

    www.tamilkalanjiyam,com என்ற இணைய முகவ்ரியிலேயே அது இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது. நீங்கள் தேடியபோது ஏதேனும் பிரச்சினைகள் இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  38. மிகவும் விரிவான பதிவு ,கமெண்ட்களும் விரிவாக அலசியுள்ளது மகிழ்ச்சி தருகிறது !
    த ம 5

    ReplyDelete
  39. நல்ல அலசல். எனக்கு இவ்வளவு இருப்பது தெரியாது. தெரியாது என்பதைவிட தெரிந்துகொள்ள முயன்றதில்லை என்று சொல்லலாம். பின்னூட்டங்கள் இந்தமுறை அற்புதம். நன்றி.

    ReplyDelete
  40. மறுமொழி >ஜீவி said...

    சகோதரர் ஜீவி அவர்களின் இரண்டாம் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி! உங்கள் கருத்துரையில் பயனுள்ள நல்ல கருத்துக்கள்.

    ReplyDelete
  41. மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said..

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!.

    ReplyDelete
  42. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  43. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    ------------ -------- ------- -----------
    //www.tamilkalanjiyam,com என்ற இணைய முகவரியை தேடினால்
    // Oops! www.tamilkalanjiyam,com seems to be having issues. //
    என்ற பதில்தான் கிடைக்கிறது. வேறு டொமைனில் தொடங்கி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.//
    www.tamilkalanjiyam,com என்ற இணைய முகவ்ரியிலேயே அது இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது. நீங்கள் தேடியபோது ஏதேனும் பிரச்சினைகள் இருந்திருக்கலாம்.
    -------------------------------- ----

    அய்யா! நீங்கள் சொன்னது சரிதான்! தவறு என்னுடையதுதான். தமிழ்க் களஞ்சியம் – இணைய முகவரியை நான் டைப் செய்யும்போது புள்ளிக்கு பதிலாக கமா போட்டதுதான் காரணம். தவற்றினை சரி செய்து விட்டேன். எனது தவறை சுட்டிக் காட்டிய அய்யா வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  44. மறுமொழி > Bagawanjee KA said...

    சகோதரர் பகவான்ஜீ கே.ஏ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  45. மறுமொழி > Packirisamy N said...

    சகோதரர் என். பக்கிரிசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  46. இது அவசர யுகம். பத்திரிகைகளில் சிறு, குறு கதைகள் எல்லாம் போய் ஒரு பக்க கதைகள் பக்கங்களை பிடித்துக்கொள்ளவில்லையா? அதுபோலத்தான். மூழு நீள பதிவுகளைப் எழுதவும் படிக்கவும் இக்கால இளைஞர்களுக்கு பொறுமையில்லை. ஓரிரு வரிகளில் ட்விட்டரிலோ முகநூலிலோ எழுதிவிட்டு சென்றுவிடுவதுதான் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. சிலருடைய முகநூல் பதிவுகளுக்கு (status updates)நூற்றுக்கணக்கில் கருத்துரைகள் வருவதைப் பார்க்கும்போது இதுதான் இன்றைய டிரென்ட் என்பது புரிகிறது. பதிவர்களுடைய ஆதரவு இல்லாமல் எத்தனைக் காலம்தான் இந்த திரட்டிகள் காலம் தள்ள முடியும். அதனால்தான் ஒவ்வொருவராக மூடிக்கொண்டிருக்கிறார்கள். இது இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. பெண்கள் முழ நீள கைகளிலிருந்து அரைக் கையாகி பிறகு குட்டைக் கையாகி பிறகு sleevelessவரையிலும் சென்று பிறகு மீண்டும் முழுக்கை சட்டைக்கு (jacket) திரும்பவில்லையா? அதுபோன்று இதுவும் மீண்டு வரலாம் :)

    ReplyDelete
  47. வணக்கம் ஐயா. மேலே சொல்லப்பட்டுள்ள திரட்டிகள் பலவும் எனக்கு பரிச்சியமில்லாதவை. தங்களின் பதிவு நல்வழிகாட்டியாக அமைந்தது. சில நாட்களாகவே சிரமம் கொடுத்த தேன்கூடு திரட்டி, தற்போது முழுமூச்சில் இயங்கத் தொடங்கிவிட்டது ஐயா.

    ReplyDelete
  48. இத்துறையில் பல தொடர்புடைய செய்திகளைத் தொகுத்து தந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது. பல நாள்கள் அமர்ந்து பார்த்தாலும், படித்தாலும் இவை போன்ற செய்திகளைத் திரட்டுவது என்பது மிகவும் சிரமமானது. தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. நன்றி.

    ReplyDelete
  49. கலக்கல் பதிவு அய்யா..

    தங்கள் நீண்ட அனுபவத்தை உணரமுடிகிறது..

    வாழ்த்துக்கள்..

    முகநூளில் பகிர்ந்துள்ளேன்..

    ReplyDelete
  50. இன்றும் என் வலையில் ஒரு சோகப் பாடல் தங்கள் வரவிற்காகவும்
    காத்திருக்கின்றது முடிந்தால் வாருங்கள் ஐயா .
    http://rupika-rupika.blogspot.com/2014/05/blog-post_9392.html

    ReplyDelete
  51. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    பேஸ் புக், ட்விட்டர் போன்ற தளஙளுக்கு ஏன் இளைஞர்கள் சென்று விடுகிறார்கள் என்பதை காரணத்தோடு விளக்கிய அய்யா டி.பி.ஆர்.ஜோசப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.!

    ReplyDelete
  52. மறுமொழி > இல. விக்னேஷ் said...

    // வணக்கம் ஐயா. மேலே சொல்லப்பட்டுள்ள திரட்டிகள் பலவும் எனக்கு பரிச்சியமில்லாதவை. தங்களின் பதிவு நல்வழிகாட்டியாக அமைந்தது.//
    தம்பி இல.விக்னேஷ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // சில நாட்களாகவே சிரமம் கொடுத்த தேன்கூடு திரட்டி, தற்போது முழுமூச்சில் இயங்கத் தொடங்கிவிட்டது ஐயா. //

    தம்பியின் தகவலுக்கு நன்றி! பதிவினில் திருத்தம் செய்து விட்டேன். நானும் எனது வலைபதிவு தளத்தினை மீண்டும் “தேன்கூடு” திரட்டியில் இணைத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  53. மறுமொழி >Dr B Jambulingam said...

    // இத்துறையில் பல தொடர்புடைய செய்திகளைத் தொகுத்து தந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது. பல நாள்கள் அமர்ந்து பார்த்தாலும், படித்தாலும் இவை போன்ற செய்திகளைத் திரட்டுவது என்பது மிகவும் சிரமமானது. தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. நன்றி. //

    பலநாள் வலையுலக அனுபவத்தை மட்டுமே சொல்லி இருக்கிறேன். முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  54. மறுமொழி > Mathu S said...

    // கலக்கல் பதிவு அய்யா.. தங்கள் நீண்ட அனுபவத்தை உணரமுடிகிறது..வாழ்த்துக்கள்..//

    சகோதரர் மலர்த்தரு - S.மது அவர்களின் பாராட்டிற்கு நன்றி.!

    // முகநூளில் பகிர்ந்துள்ளேன்.. //

    மீண்டும் நன்றி!


    ReplyDelete
  55. திரட்டிகள் பற்றிய விவரங்கள் அறிந்தேன்
    மிக்க நன்றி ஐயா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  56. வவ்வால் said...
    ........................ ................... ....................

    //வை.கோ சார்,

    *ஒருவரின் படைப்பினை ஆழ்ந்து மனதில் வாங்கிக்கொண்டு முழுமையாகப் படிக்காமல், கமெண்ட்ஸ் கொடுப்பவர்களைக்கண்டால், எனக்கு அடியோடு பிடிக்காது. அவர்களை நான் வெறுப்பவனும் கூட.*

    **அதாவது எதையும் ஊன்றிப் படிக்க வேண்டும். நேரமில்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டும். சும்மாவாவது பல பதிவுகளுக்கு ஓடிஓடிச்சென்று, ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கமெண்ட்ஸ்களில் ஒருசிலவற்றைப் பார்த்து Copy அடித்தோ, அல்லது ஏதாவது எழுதனுமே என்றோ எழுதிவிட்டு வருவதில் என்ன பிரயோசனம்?** - VGK

    //என்ன சார் இது நான் பேச நினைப்பதெல்லாம் நீங்களே பேசிட்டிங்க, இப்ப நான் என்னத்த சொல்வது அவ்வ்!

    நல்ல வேளை இத நீங்க சொன்னீங்க, நான் சொல்லி இருந்தால் பின்னூட்டமே குப்பை தொட்டிக்கு போயிருக்கும் ,அம்புட்டு தான் நம்ம ஊரு கருத்து சுதந்திரம் அவ்வ்!

    உண்மையிலே நல்ல பாலிசி , சிறப்பாக வலைப்பதிவுகள் இயங்க நேர்மையான, உண்மையான விமர்சனங்களே தேவை, ஜால்ரா பின்னூட்டங்களோ, த.ம.1 பின்னூட்டங்களோ அல்ல.உங்க பாலிசிய அப்படியே மெயிண்டையின் செய்யுங்க, நாலுப்பேர் விமர்சிப்பாங்க தான் அதை எல்லாம் கண்டுக்க கூடாது.

    வாழ்த்துக்கள்!//

    தங்களின் புரிதலுக்கும், எனக்கு சற்றே ஆதரவான + ஆறுதலான கருத்துக்களுக்கும் என் நன்றிகள். - VGK

    ReplyDelete