சில மாதங்களுக்கு
முன்னர் “தமிழ் திரட்டிகளுக்கு என்ன ஆயிற்று? ” என்ற ஒரு
பதிவினை எழுதி இருந்தேன்.அதில்(http://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post_9869.html ) ”என்ன காரணம்
என்று தெரியவில்லை?
இப்போது சமீப காலமாக நன்கு பிரபலமாக
இருந்த தமிழ் தளங்கள் நின்று விட்டன. அல்லது செயல்படாமல் நிற்கின்றன” –
என்ற எனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தேன்.
இப்போது
வலைச்சரத்தில் 22.மார்ச்.2015 இற்குப் பிறகு புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்க யாரும்
வராதபடியினால் அப்படியே நிற்கிறது. வலைச்சரம் மீதுள்ள ஆதங்கத்தில் (அன்பர்கள்
மன்னிக்கவும்) எழுதிய கட்டுரை இது.
வலைச்சரம்:
தமிழ் வலையுலகில் தனி மணிமகுடமான் வலைச்சரம் 26.02.2007 இல் தொடங்கப் பட்டது வலைச்சரம். இங்கு வாரம் ஒரு வலைப் பதிவர் ஆசிரியராக இருப்பார். அவர் தனது மனங் கவர்ந்த அல்லது படித்த வலைப் பதிவர்களை அந்த வாரம் முழுக்க அறிமுகம் செய்ய வேண்டும். அப்போது வலைச்சரத்திற்கு வரும் பின்னூட்டங்களுக்கும் பதில் தர வேண்டும். இதுதான் வலைச்சரத்தின் நடைமுறை. இந்த வலைச்சரத்தில் வலைப்பதிவர் உதவிப்பக்கம் மற்றும் தமிழில் எழுத மென்பொருள் என்று ஆக்க பூர்வமான பதிவுகளும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் வலைச்சரத்தில் யார் யார் ஆசிரியர்களாக இருந்தார்கள் என்ற பட்டியலும் இருக்கின்றது வலைச்சரத்திற்கு ஒருவாரம் ஆசிரியர் பொறுப்பு என்பது பெருமிதமாகவும் அந்த வலைப் பதிவரையும் அறிமுக நண்பர்களையும் ஊக்குவிப்பதாகவும் இருக்கின்றது.
அன்பின் சீனா மற்றும்
தமிழ்வாசி பிரகாஷ்
அன்பின் சீனா அவர்கள்
வலைச்சர வரலாற்றை கீழ்க்கண்ட தனது பதிவுகளில் எழுதி இருக்கிறார். மேலும் அன்று
தொடங்கி இன்றுவரை பொறுப்பேற்ற வலைப்பதிவர் பெயர், வலைத்தள முகவரி, மின்னஞ்சல்
மற்றும் செல் போன் எண்கள் ஆகியவற்றை கொண்ட MS WORD XL கோப்பு (FILE) ஒன்றையும் தந்துள்ளார். வலைப் பதிவர்களோடு தொடர்பு
கொள்ள இந்த கோப்பு பயன்படும்.
வலைச்சரத்தில் அந்த
வார ஆசிரியரின் பணி நிறைவடைந்த ஒவ்வொரு ஞாயிறு அன்றும், அடுத்த வாரம் வரப் போகும் ஆசிரியரைப்
பற்றி அறிமுகம் செய்வது அன்பின் சீனாவின் வழக்கம்.
அன்பின் சீனா
அவர்களுக்கு வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் குழுவில் துணையாக இருந்து வருபவர்
தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள். இவர் "வலைச்சரம்" சீனா ஐயா சிறப்புப் பேட்டிhttp://www.tamilvaasi.com/2012/02/blog-post_27.html
என்ற பதிவினை மீள் பதிவாக வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவினில் வலைச்சரம் பற்றிய தகவல்கள், மற்றும் வலைப் பதிவர்களுக்கான பயனுள்ள
தகவல்களைக் காணலாம்.
எனது வேண்டுகோள்
கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து
இயங்கி வந்த வலைச்சரத்தில், கடந்த மாதங்களில் ஒரே ஆசிரியர் ஒருவாரம் ஆசிரியர்
பொறுப்பில் இருந்து விட்டு அடுத்த வாரமும் அவரே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
தனது அனுபவத்தை, விடாது கருப்பு – வலைச்சரத்தில்! என்றே தலைப்பிட்டு எழுதினார் திரு வெங்கட் நாகராஜ் அவர்கள்.
மூத்த வலைப்பதிவர்
அய்யா V.G.K (வை.கோபால கிருஷ்ணன்)
அவர்கள் என்னை ஒருவாரம் வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்க அழைத்தபோதும், இரண்டாவது
முறையாக அன்பின் சீனா அவர்கள் அழைத்தபோதும், அப்போது கண்ணில் ஏற்பட்ட கோளாறு
காரணமாக உடனடியாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இருந்த போதிலும் அப்போதிருந்தே,
வலைச்சரம் ஆசிரியர் பணிகளுக்காக வலைப்பதிவர்கள் பற்றிய குறிப்புகள் படங்கள்
ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொண்டேன். பின்பு அன்பின் சீனா அவர்கள் மறுபடியும் அழைத்தபோது,
தட்டாமல் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு பணி (18.பிப்ரவரி.2013
முதல் 24.பிப்ரவரி.2013 முடிய) செய்தபோது இவை உதவின. அவ்வப்போது பின்னூட்டங்கள்
இடும்போது மட்டும் கொஞ்சம் அதிகம் கம்ப்யூட்டரில் உட்கார வேண்டி இருந்தது. மேலும்
நான் பணி விருப்பஓய்வு பெற்று வீட்டில் இருந்தபடியினால் பணிச்சுமையோ அல்லது
அலுப்போ தெரியவில்லை.
அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள், வலைச்சரம் ஆசிரியர்
பொறுப்பில் இருந்தபோது எழுதியது இது.
// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,
அப்பாடா. பதிவர்களையும் அவர்களின்
பதிவுகளையும் தேடிப்பிடிச்சு, தினம்
ஒரு பதிவு
வீதம் போட்டு, வரும்
பின்னூட்டங்களுக்கு பதில் எழுதி, மூச்சு முட்டிப் போச்சுங்க. ஆச்சு, ஒரு மாதிரியாகத்தானே இந்த வலைச்சர ஆசிரியப் பொறுப்பு என்னும் இன்பமான சுமையை
இறக்கி வைக்கிறேன். //
( PICTURE
- COURTESY: “ GOOGLE IMAGES )
இப்போது வலைச்சரம்
கடந்த மூன்று வாரங்களாக அப்படியே நிற்கிறது. எனவே “வலைச்சரம்” அடுத்து என்ன
யுத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலைப்பதிவர்கள் யோசிக்க வேண்டிய தருணம் இது. என்னுடைய ஆலோசனை என்னவெனில், ஆசிரியர் பணிக்கு யாரும் இல்லாத போது வலைச்சரத்தின் அந்நாளைய பழைய பதிவுகளை மீள்
பதிவுகளாக வெளியிடலாம். இதில் ஒன்றும் தவறேதும் இல்லை. வாழ்க வலைச்சரம்!
அய்யா வணக்கம்.
ReplyDeleteஎன்னைப் போன்ற வலைச்சரம் பற்றிப் பெரிதாக அறிந்திராதவர்களுக்குத் தாங்கள் சொல்லியுள்ள செய்திகள் பயனுள்ளனவாய் இருந்தன.
நன்றி
த ம 2
//என்னுடைய ஆலோசனை என்னவெனில், ஆசிரியர் பணிக்கு யாரும் இல்லாத போது வலைச்சரத்தின் அந்நாளைய பழைய பதிவுகளை மீள் பதிவுகளாக வெளியிடலாம்.//
ReplyDeleteநல்லதொரு ஆலோசனை. வலைச்சரம் மீண்டும் புத்தொளி பெற்று, தொடர்ந்து வலைச்சர ஆசிரியர்கள் ஒவ்வொரு வாரமும் புதிதுபுதிதாக நியமிக்கப்பட்டு, நல்லபடியாக இதுவரை செயல்பட்டதுபோலவே வழக்கம்போல இயங்கினால் மகிழ்ச்சியே. அதுவே புதிய வலைப்பதிவர்களுக்கும், வலையுலகத்திற்கும் புதிய உற்சாகம் தரக்கூடியதாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றிகள்.
//ஆசிரியர் பணிக்கு யாரும் இல்லாத போது வலைச்சரத்தின் அந்நாளைய பழைய பதிவுகளை மீள் பதிவுகளாக வெளியிடலாம்.// ஆமாம் அண்ணா இது மிக அருமையான யோசனை ...
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பினை விருப்பத்துடனும் உற்சாகத்துடனும் ஏற்றுக்கொள்ள ஒரு புதிய ஆசிரியர் முன்வரும்போது, அவருக்கு ஒரு வாரம் மட்டுமே என்ற வாய்ப்பினை மாற்றி ஒரு முழு மாதம் என வழங்கலாம் என்பது எனது ஆலோசனை.
ReplyDeleteஇதனால் நடுநடுவே வலைச்சர ஆசிரியர் கிடைக்கவில்லை என்ற தொய்வு ஏற்படாமல் இருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.
அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் இதனையும் கருத்தில்கொண்டு பரிசீலித்து முடிவு செய்யலாம்.
வலைச்சரம் புதுப்பொழிலுடன் விளங்க பதிவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் தாங்கள் சொல்லுவதும் நல்ல ஜோசனை மீள் பதிவு போடுவதும்
ReplyDeleteதங்களது ஆலோசனையை ஏற்று பழைய பதிவுகளை மீள் பதிவுகளாக வலைச்சரத்தில் வெளியிடலாம்.
ReplyDeleteஉண்மையிலேயே கவலையான செய்தி ஐயா
ReplyDeleteதொடர்ந்து ஒரு வாரம் எழுதுவது என்பது மிகவும் கடினமாக செயல் என்பதும்
ஒரு காரணமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
மேலும் வலைப் பூ வில் எழுதுபவர்கள் பலரும்
முகநூல் பக்கம் செல்வதும் காரணமாக இருக்கலாம்
தாங்கள் கூறுவதுபோல் மீள் பதிவுகள் இடலாம்,
அல்லது அன்பின் சீனா ஐயாவும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும்
மற்ற பதிவர்களின் சிறந்தப் பதிவுகளை பதிவிட்டும் ஊக்கப் படுத்தலாம் என்று
எண்ணுகின்றேன்
நன்றி ஐயா
வலைச்சரம் மீண்டும் தன் பணியைத் தொடர வாழ்த்துவோம்
தம +1
அன்பின் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஎனது எண்ணங்களின் வெளிப்பாடாகவே இந்த பதிவினை காண்கிறேன்!
ஆசிரியர் குழு விளக்கம் சொல்ல கடமைபட்டுள்ளார்கள்!
அருள்கூர்ந்து அதை செய்ய வேண்டுகிறேன்.
ஒரு விடயம்
தமிழ் மணத்தின் மகுடத்தை தக்க வைக்க போராடும் முன்னணி வலைப் பதிவர்கள் முன்வந்து ஏன் இந்த பணியை செய்ய ஒத்துழைப்பு நல்குவது இல்லை!
அறிந்தவர்கள் அவர்களது கருத்தை இந்த பதிவின் மூலமாகவது பதில் தந்தால் சிறப்பு!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தங்களுடையது நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது நண்பரே ஏன் இப்பொழுது யாரும் முன் வரவில்லை நான் மீண்டும் முயயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது.
ReplyDeleteதமிழ் மணம் 6 மனமே 6
அனைவருக்கும் இந்த அறிய செய்தி சென்றடைய வேண்டும்!
ReplyDeleteத ம 6
நட்புடன்,
புதுவை வேலு
த ம 6
ReplyDeleteஆறாவது வாக்கினை யார் அறிவார்?
யாம் அறியோம் பராமரமே?
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நான் வலைப்பூவுற்கு புதிது. தங்கள் கருத்து சரியே, வலைச்சரம் மீண்டும் புது மிடுக்குடன் செயல்பட என் வாழ்த்துக்கள். குழுவில் உள்ளோர் மாற்று சிந்தனையுடன் புது முயற்சி செய்தால் நலம். வலைச்சரம் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் வலைப்பூவுற்கு புதிது. தங்கள் கருத்து சரியே, வலைச்சரம் மீண்டும் புது மிடுக்குடன் செயல்பட என் வாழ்த்துக்கள். குழுவில் உள்ளோர் மாற்று சிந்தனையுடன் புது முயற்சி செய்தால் நலம். வலைச்சரம் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
தங்களின் கருத்தை ஏற்கின்றேன் ஐயா. இதைப்போன்று பல திரட்டிகள் விலாசம் இல்லாம் உள்ளது அதைப்போல் இல்லாமல் மீண்டும் உயிர் பெற வேண்டும்... என்பதுவே எனது எண்ணமாகும்...அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கடந்த சில மாதங்களாகவே வலைச்சரத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வ்லைப்பதிவர்கள் இல்லாதிருப்பது அவ்வப்போது நடந்திருக்கிறது. இப்போது மூன்று வாரமாக இல்லை எனும் போது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது. மேலும் புதியதாய் வலைப்பதிவுகள் வருவதும் குறைந்து விட்டதோ எனத் தோன்றுகிறது.
ReplyDeleteமீண்டும் வலைச்சரம் தொடுக்க அனைவரும் தயாராக வேண்டும்.....
மீள் பதிவு - இதுவும் நல்ல யோசனை. ஆரம்ப காலத்தில் வெளியிட்ட பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுத்து மீண்டும் வெளியிடலாம்.....
கடந்த சில வாரங்களாக வலைச்சரத்தில் புதிய பதிவுகளைக் காணாதது - மிகவும் சங்கடமாகத் தான் இருக்கின்றது..
ReplyDeleteதாங்கள் கூறும் மீள் பதிவு என்பதும் நல்ல யோசனை தான்!..
வலைச்சரத்தில் - புதுப் பொலிவுடன் மீண்டும் பதிவுகள் மலர வேண்டும் என்பதே ஆவல்!..
#தமிழ் மணத்தின் மகுடத்தை தக்க வைக்க போராடும் முன்னணி வலைப் பதிவர்கள் முன்வந்து ஏன் இந்த பணியை செய்ய ஒத்துழைப்பு நல்குவது இல்லை! #
ReplyDeleteநம்பி ஜி ,உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது .நான் இன்னும் பணியில் இருந்து ஓய்வு பெறவில்லை , பண்ணிரண்டு மணி நேரம் பணி செய்யும் இடத்திலேயே போய்
விடுகிறது .தினசரி நான் இடுவதே சிறிய பதிவுதான் ,அதற்கே நேரம் சரியாக போய்விடுகிறது .வலைச்சர ஆசிரியர் பொறுப்பை நான் ஏற்காத காரணம் ,நேரமின்மைதான் !
மீள் பதிவு மட்டும் என்றால் அவ்வளவு வரவேற்பு இருக்காது என்றே நினைக்கிறேன் ,ஒரு வார ஆசிரியர் பணிக்கே பதிவர்கள் கிடைக்காத போது,ஒரு மாததிற்கு பதிவர்கள் கிடைப்பது அரிதே !
வலைசரக் கண்ணி அறுந்து போவதில் எனக்கும் வருத்தமே !
நல்லதொரு யோசனை... சீனா ஐயாவும், தமிழ்வாசி அவர்களும் செய்ய வேண்டும்...
ReplyDeleteபழைய பதிவுகளை மீள் பதிவு செய்யலாம். பிற வலைப்பதிவுகளிலிருந்து சிறப்பான அல்லது குறிப்பிடத்தக்க பதிவுகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடலாம். வலைச்சரக்குழுவினர் செய்துவந்துள்ள பணி சாதாரணமானதல்ல. அது ஒரு பெரு முயற்சியாகும். மறுபடியும் வலைச்சரம் புத்துணர்வு பெறட்டும்.
ReplyDeleteமறுமொழி > ஊமைக்கனவுகள். said...
ReplyDeleteஊமைக்கனவுகள் ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1)
ReplyDeleteஅன்புள்ள V.G.K.அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
ReplyDeleteமறுமொழி > Angelin said...
சகோதரி அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (2)
ReplyDelete// வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை விருப்பத்துடனும் உற்சாகத்துடனும் ஏற்றுக்கொள்ள ஒரு புதிய ஆசிரியர் முன்வரும்போது, அவருக்கு ஒரு வாரம் மட்டுமே என்ற வாய்ப்பினை மாற்றி ஒரு முழு மாதம் என வழங்கலாம் என்பது எனது ஆலோசனை. //
// இதனால் நடுநடுவே வலைச்சர ஆசிரியர் கிடைக்கவில்லை என்ற தொய்வு ஏற்படாமல் இருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன். //
V.G.K.அவர்களின் யோசனையும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஒருவாரம் ஆசிரியராக இருப்பதற்கே யோசிப்பவர்கள் மத்தியில் ஒருமாதம் என்பது மலைக்க வைக்கும் விஷயம்தான்.
மறுமொழி > தனிமரம் said...
ReplyDeleteதங்களின் வரவுக்கும் நல்ல கருத்துரைக்கும் நன்றி.
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteஅன்பு சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.
// உண்மையிலேயே கவலையான செய்தி ஐயா
தொடர்ந்து ஒரு வாரம் எழுதுவது என்பது மிகவும் கடினமாக செயல் என்பதும் ஒரு காரணமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். //
நான் தினமும் கருத்துரைகள் தந்தாலும் தராவிட்டாலும் தமிழ்மணம், வலைச்சரம் இரண்டினையும் தவறாமல் பார்ப்பவன். வலைச்சரம் பற்றி வலைப்பதிவர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்கினால் நல்லது என்று நினைக்கிறேன்.
// மேலும் வலைப் பூ வில் எழுதுபவர்கள் பலரும்
முகநூல் பக்கம் செல்வதும் காரணமாக இருக்கலாம்
தாங்கள் கூறுவதுபோல் மீள் பதிவுகள் இடலாம்,
அல்லது அன்பின் சீனா ஐயாவும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும்
மற்ற பதிவர்களின் சிறந்தப் பதிவுகளை பதிவிட்டும் ஊக்கப்படுத்தலாம் என்று எண்ணுகின்றேன் //
நீங்கள் சொல்வதுபோல FACEBOOK பற்றி ஒரு காரணமாக பலரும் நினைக்கிறார்கள். ஆனாலும் வலைப்பூவில் வலைப்பதிவராக இருக்கும் ஒரு கம்பீரம் FACEBOOK இல் இல்லை என்பதனை உணர்ந்து பலரும் மீண்டும் வலைப்பக்கம் எழுதுகிறார்கள். நேர மேலாண்மை (TIME MANAGEMENT) மட்டுமே இந்த தொய்வுக்கு காரணம் என்று எண்ணுகிறேன்.
// நன்றி ஐயா வலைச்சரம் மீண்டும் தன் பணியைத் தொடர வாழ்த்துவோம் தம +1 //
நன்றி ஆசிரியர் அவர்களே. உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.
மறுமொழி > yathavan nambi said... ( 1 )
ReplyDeleteஅன்பு சகோதரர் புதுவை வேலு அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நனறி.
// அன்பின் அய்யா அவர்களுக்கு, எனது எண்ணங்களின் வெளிப்பாடாகவே இந்த பதிவினை காண்கிறேன்! //
எல்லோருடைய ஆதங்கமும் இதுவேதான். அன்பின் சீனா மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் இருவரும் ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்று எண்ணியே இத்தனை நாள் இந்த பதிவினை எழுதி வைத்துவிட்டு, வெளியிடாமல் இருந்தேன்.
// ஆசிரியர் குழு விளக்கம் சொல்ல கடமைபட்டுள்ளார்கள்! அருள்கூர்ந்து அதை செய்ய வேண்டுகிறேன். //
ஆசிரியர் குழு என்ன செய்ய முடியும்? இது விஷயமாக அவர்கள் நிறையவே எழுதியும் பிறர் தளங்களிலும் பேட்டியும் கொடுத்துள்ளனர்.
// ஒரு விடயம் தமிழ் மணத்தின் மகுடத்தை தக்க வைக்க போராடும் முன்னணி வலைப் பதிவர்கள் முன்வந்து ஏன் இந்த பணியை செய்ய ஒத்துழைப்பு நல்குவது இல்லை! அறிந்தவர்கள் அவர்களது கருத்தை இந்த பதிவின் மூலமாகவது பதில் தந்தால் சிறப்பு! நன்றி! //
சகோதரர் பகவான்ஜி தனது கருத்தையும், நேரமின்மை பற்றியும் பதிலாக தந்துள்ளார்.
மறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDelete// தங்களுடையது நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது நண்பரே ஏன் இப்பொழுது யாரும் முன் வரவில்லை நான் மீண்டும் முயயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது. //
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் தன்னம்பிக்கையான கருத்துரைக்கு நன்றி. நீங்கள் மீண்டும் முயற்சி செய்யலாம். உங்களுக்குள் இருக்கும் அந்த WILL POWER என்னைப் போன்றவர்களுக்கும் வர வேண்டும். நன்றி.
மறுமொழி > yathavan nambi said... (2)
ReplyDelete// அனைவருக்கும் இந்த அறிய செய்தி சென்றடைய வேண்டும்!
//
தமிழ்மணம் மூலம் எல்லோருக்கும் இந்த செய்தி சென்றிருக்கும் என்று எண்ணுகிரேன்.
ReplyDelete// த ம 6 ஆறாவது வாக்கினை யார் அறிவார்?
யாம் அறியோம் பராமரமே? நன்றி! //
சிலசமயம் ஒரே நேரத்தில் இருவர் தமிழ்மணத்தில் வாக்களிக்கும் போது இது மாதிரியான குழப்பம் வந்து விடுகிறது. இது மாதிரியான அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.
மறுமொழி > mageswari balachandran said...
ReplyDelete// நான் வலைப்பூவுற்கு புதிது. தங்கள் கருத்து சரியே, வலைச்சரம் மீண்டும் புது மிடுக்குடன் செயல்பட என் வாழ்த்துக்கள். குழுவில் உள்ளோர் மாற்று சிந்தனையுடன் புது முயற்சி செய்தால் நலம். வலைச்சரம் வளர வாழ்த்துக்கள். //
சகோதரி அவர்களுக்கு நன்றி. இரண்டு முறை உங்கள் கருத்து வெளியாகி உள்ளது. நீங்களும் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பினில் வரலாம். உங்களது வலையுலக ஆசான் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் வழிகாட்டுவார். முயற்சி செய்யவும்.
மறுமொழி > ரூபன் said...
ReplyDelete// வணக்கம் ஐயா. தங்களின் கருத்தை ஏற்கின்றேன் ஐயா. இதைப்போன்று பல திரட்டிகள் விலாசம் இல்லாம் உள்ளது அதைப்போல் இல்லாமல் மீண்டும் உயிர் பெற வேண்டும்... என்பதுவே எனது எண்ணமாகும்...அருமையாக சொல்லியுள்ளீர்கள். த.ம 8 //
கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் ந்ல்லெண்ணம் பலிக்கட்டும்.
valaisarathil moondru murai aasiriyaraaka irunthen. athuvum moondram murai irandu vaaram thodarnthu. valaicharathai meendu kondu vara murarchipom.
ReplyDeleteவலைச்சரத்திற்கு ஆசிரியர் கிடைப்பது கடினமாக இருப்பது வருத்தமாக உள்ளது.நீங்கள் சொன்னதும் நல்ல யோசனை ஐயா. நீங்கள் சொல்வது போல் நேர மேலாண்மையும் காரணம். ஒரு வாரம் எழுதச் சொல்வதற்கு பதில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எழுதச் சொல்லலாம். மீதி நாட்களுக்கு மீள்பதிவிடலாம். வலைப்பூவில் எழுதுபவர்கள் புதியவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
ReplyDeleteவலைச் சர ஆசிரியர் ஆவதற்கு தகுதிகள் நிர்ணயித்திருக்கிறார்களோ. ?
ReplyDeleteமறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete.// கடந்த சில மாதங்களாகவே வலைச்சரத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வ்லைப்பதிவர்கள் இல்லாதிருப்பது அவ்வப்போது நடந்திருக்கிறது. இப்போது மூன்று வாரமாக இல்லை எனும் போது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது. மேலும் புதியதாய் வலைப்பதிவுகள் வருவதும் குறைந்து விட்டதோ எனத் தோன்றுகிறது. //
FACEBOOK மாயை என்று சொல்லுகிறார்கள். முழுமையான காரணம் தெரியவில்லை. FACEBOOK இல் குரூப்பிஸம்தான் முக்கிய பங்காற்றுகிறது.
// மீண்டும் வலைச்சரம் தொடுக்க அனைவரும் தயாராக வேண்டும்..... மீள் பதிவு - இதுவும் நல்ல யோசனை. ஆரம்ப காலத்தில் வெளியிட்ட பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுத்து மீண்டும் வெளியிடலாம்.....//
சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDelete// கடந்த சில வாரங்களாக வலைச்சரத்தில் புதிய பதிவுகளைக் காணாதது - மிகவும் சங்கடமாகத் தான் இருக்கின்றது..
தாங்கள் கூறும் மீள் பதிவு என்பதும் நல்ல யோசனை தான்!..
வலைச்சரத்தில் - புதுப் பொலிவுடன் மீண்டும் பதிவுகள் மலர வேண்டும் என்பதே ஆவல்!.. //
பொறுத்திருந்து பார்ப்போம். எழுத முடிந்த அன்பர்கள் வலைச்சரத்திற்கு தாங்களாகவே முன்வந்து எழுதலாம். கருத்துரை தந்த சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteமறுமொழி > Bagawanjee KA said...
மறுமொழி ஒன்றினையும், நீண்டதொரு கருத்துரையும் தந்திட்ட சகோதரர் கே.ஏ.பகவான்ஜி அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
// நல்லதொரு யோசனை... சீனா ஐயாவும், தமிழ்வாசி அவர்களும் செய்ய வேண்டும்... //
அன்பின் சீனா அவரிடம் நேரடியாகவே பேசுவதற்கு நீங்கள் உரிமை மிகுந்தவர். இதுபற்றி பேசும்படி உங்களிடம் கேட்டுக் கொள்கிரேன். அன்பின் சீனா அவர்களின் வலைத்தளத்தில் எனது இந்த பதிவினைப்பற்றி சுட்டிக் காட்டியுள்ளேன்.
மறுமொழி > Dr B Jambulingam said...
ReplyDeleteமுனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
// பழைய பதிவுகளை மீள் பதிவு செய்யலாம். பிற வலைப்பதிவுகளிலிருந்து சிறப்பான அல்லது குறிப்பிடத்தக்க பதிவுகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடலாம். வலைச்சரக்குழுவினர் செய்துவந்துள்ள பணி சாதாரணமானதல்ல. அது ஒரு பெரு முயற்சியாகும். மறுபடியும் வலைச்சரம் புத்துணர்வு பெறட்டும். //
தங்களது நல்ல ஆலோசனைகள் வலைச்சரத்திற்கு புத்துணர்வையும், ஒரு விடியலையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
வேறுதளத்தை நோக்கி நகர்வதற்கான யோசனைகளை பெறலாம்..! வாரம் என்பதனை குறைக்கலாம். வாரம் இருவர் என பங்கிட்டு கொடுக்கலாம். தயக்கம் குறைய வாய்ப்பு உண்டு.
ReplyDeleteதி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (2)
** வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை விருப்பத்துடனும் உற்சாகத்துடனும் ஏற்றுக்கொள்ள ஒரு புதிய ஆசிரியர் முன்வரும்போது, அவருக்கு ஒரு வாரம் மட்டுமே என்ற வாய்ப்பினை மாற்றி ஒரு முழு மாதம் என வழங்கலாம் என்பது எனது ஆலோசனை. இதனால் நடுநடுவே வலைச்சர ஆசிரியர் கிடைக்கவில்லை என்ற தொய்வு ஏற்படாமல் இருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன். ** - By VGK
//V.G.K.அவர்களின் யோசனையும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான்.//
- தி. தமிழ் இளங்கோ
மிக்க நன்றி.
//ஒருவாரம் ஆசிரியராக இருப்பதற்கே யோசிப்பவர்கள் மத்தியில் ஒருமாதம் என்பது மலைக்க வைக்கும் விஷயம்தான்.// - தி. தமிழ் இளங்கோ
ஒருவாரம் ஆசிரியராக இருப்பதற்கே யோசிப்பவர்களை, அவர்கள் யோசித்துக்கொண்டே இருக்கட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். ஆனால் யோசிக்காமல், இந்த வலைச்சர ஆசிரியர் பணியினை ஓர் சவாலாக ஏற்று உற்சாகமாகச் செய்ய நினைக்கும், பேரெழுச்சிமிக்கவர்களையும், அதற்கான பக்குவமும், ஆர்வமும், உற்சாகமும் உள்ளவர்களையும் தேடிக்கண்டுபிடித்து, அவர்களின் அரிய சேவையை தவற விட்டுவிடாமல், தொடர்ச்சியாக ஒருமாத வாய்ப்பளித்துப் பார்க்கவேண்டும் என்பதே என் ஆலோசனையாகும். - VGK
மறுமொழி > ADHI VENKAT said...
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைகு நன்றி.
// valaisarathil moondru murai aasiriyaraaka irunthen. athuvum moondram murai irandu vaaram thodarnthu. valaicharathai meendu kondu vara murarchipom. //
(வலைச்சரத்தில் மூன்றுமுறை ஆசிரியராக இருந்தேன். மூன்றாம்முறை இரண்டு வாரம் தொடர்ந்து. வலைச்சரத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிப்போம்)
பல்வேறு பணிகளுக்கு இடையிலும் மூன்றுமுறை, அதுவும் மூன்றாம்முறை தொடர்ந்து இரண்டு வாரம் – வலைச்சரத்தின் பொறுப்பசிரியாக இருந்து சிறப்பாக செய்தமைக்கு பாராட்டுக்களும் நன்றியும். நீங்கள் குறிப்பிடுவது போல, வலைச்சரத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிப்போம்
மறுமொழி > ezhil said...
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைகு நன்றி.
// வலைச்சரத்திற்கு ஆசிரியர் கிடைப்பது கடினமாக இருப்பது வருத்தமாக உள்ளது.நீங்கள் சொன்னதும் நல்ல யோசனை ஐயா. நீங்கள் சொல்வது போல் நேர மேலாண்மையும் காரணம். ஒரு வாரம் எழுதச் சொல்வதற்கு பதில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எழுதச் சொல்லலாம். மீதி நாட்களுக்கு மீள்பதிவிடலாம். வலைப்பூவில் எழுதுபவர்கள் புதியவர்களை ஊக்குவிக்க வேண்டும். //
நல்ல யோசனை ஒன்றை சொல்லி இருக்கிறீர்கள்.
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
// வலைச் சர ஆசிரியர் ஆவதற்கு தகுதிகள் நிர்ணயித்திருக்கிறார்களோ. ? //
கடுமையான நிபந்தனைகள் ஏதும் இல்லை. ஒரு பத்திரிகை ஆசிரியர் போன்று பொறுமையாக (ஒரு வாரம்) இருந்து பதிவுகளில் வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய வேண்டும். வந்த பின்னூட்டங்களுக்கு மறுமொழி இட வேண்டும். மறுமொழி தர இயலாவிட்டாலும் பரவாயில்லை. கட்டாயம் இல்லை. இந்த பதிவினில் நான் இணைத்துள்ள இணைப்புகளை நேரம் கிடைக்கும் போது பார்க்கும்படி அய்யாவை கேட்டுக் கொள்கிறேன்.
மறுமொழி > மதுரை சரவணன் said..
ReplyDelete.
// வேறுதளத்தை நோக்கி நகர்வதற்கான யோசனைகளை பெறலாம்..! வாரம் என்பதனை குறைக்கலாம். வாரம் இருவர் என பங்கிட்டு கொடுக்கலாம். தயக்கம் குறைய வாய்ப்பு உண்டு. //
அன்பு ஆசிரியர் மதுரை சரவணன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நீங்களும் அன்பின் சீனாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர். அவரிடம் பேசும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (3)
ReplyDeleteஅன்புள்ள மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் மூன்றாம் வருகை, அவருக்கு வலைச்சரத்தின் மீதுள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
// ஒருவாரம் ஆசிரியராக இருப்பதற்கே யோசிப்பவர்களை, அவர்கள் யோசித்துக்கொண்டே இருக்கட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். ஆனால் யோசிக்காமல், இந்த வலைச்சர ஆசிரியர் பணியினை ஓர் சவாலாக ஏற்று உற்சாகமாகச் செய்ய நினைக்கும், பேரெழுச்சிமிக்கவர்களையும், அதற்கான பக்குவமும், ஆர்வமும், உற்சாகமும் உள்ளவர்களையும் தேடிக்கண்டுபிடித்து, அவர்களின் அரிய சேவையை தவற விட்டுவிடாமல், தொடர்ச்சியாக ஒருமாத வாய்ப்பளித்துப் பார்க்கவேண்டும் என்பதே என் ஆலோசனையாகும். – VGK//
உங்கள் கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். பல பதிவர்களை வலைச்சரத்திற்கு ஆசிரியராக இருக்க (எனக்கும் நீங்கள்தான்) வழிகாட்டி உற்சாகப் படுத்தியவர் நீங்கள். பல பதிவர்கள் வலைச்சரம் முதல் நாளிலேயே சொல்லியும் இருக்கிறார்கள். வலைச்சரத்தில் வலைப்பதிவர்களால் பலமுறை (நூறு முறைக்கும் மேல் என்று நினைக்கிறேன்) அறிமுகப்படுத்தப் பட்டவரும் நீங்களே. இது குறித்து அண்மையில் கூட ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறீர்கள். எனவே, நீங்கள்தாம் இது விஷயமாக அன்பின் சீனா அவர்களுடன் செல்போனில் பேச வேண்டும்.
வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்த தாங்களே உடனடியாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம்....
ReplyDeleteஇதை உடனடியாக பரிசீலனை செய்யலாமே சார்.. என் அன்பான வேண்டுகோள் இது...:)
ADHI VENKAT said...
ReplyDeleteவாங்கோ, வணக்கம்.
//வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்த தாங்களே உடனடியாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம்....
இதை உடனடியாக பரிசீலனை செய்யலாமே சார்.. என் அன்பான வேண்டுகோள் இது...:)//
தங்களின் அன்பான வேண்டுகோள் மிகவும் நியாயமானதே. மிக்க மகிழ்ச்சி.
யார் மறந்தாலும் மறக்காவிட்டாலும், நான் இன்னும் நேரிடையாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை என்பதை தாங்கள் மட்டும் அவ்வப்போது மறக்காமல், எனக்கும் பிறருக்கும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். :)
//தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம்.... //
இன்றைய ஸ்ரீரங்கம் தேர்போல, நான் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட, மிகச்சிறந்த பதிவர்களை, வலைச்சர ஆசிரியர்களாகப் பொறுப்பேற்கச்சொல்லி மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து வந்துள்ளேன்.
என் உடல் நிலைக்கும், இங்குள்ள என் தற்போதைய குடும்ப சூழ்நிலைகளுக்கும், மற்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்காகவும், எனக்கு குறைந்த பட்சமாக அடுத்த மூன்று மாதங்களுக்காவது கட்டாய ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் மட்டுமே நான் என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் வெளியிடுவதையும் 01.04.2015 முதல் நிறுத்திக் கொண்டுள்ளேன்.
அதன்பிறகு, ஒருவேளை பிராப்தமும் இருந்து, எனக்கு அன்பின் திரு. சீனா ஐயா அவர்களால் வாய்ப்பும் அளிக்கப்பட்டால், உங்கள் ஒருவரின் அன்பான வேண்டுகோளுக்காகவாவது, ஒரு முழு மாதமும் நான் வலைச்சர ஆசிரியராக பணியாற்றுவேன் என்பதை மட்டும் இப்போது தங்களுக்கு மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது இப்போதைக்கு நமக்குள் மிகவும் இரகசியமாக இருக்கட்டும்.
வேறு யாருக்கும் அனாவஸ்யமாகத் தெரியவே வேண்டாம். :)
அன்புடன் VGK
சகோதரி அவர்களுக்கு நன்றி.
ReplyDelete// வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்த தாங்களே உடனடியாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம்.... இதை உடனடியாக பரிசீலனை செய்யலாமே சார்.. என் அன்பான வேண்டுகோள் இது...:) //
உங்கள் அன்பான வேண்டுகோளை V.G.K அவர்கள் விரைவில் ஏற்றுக் கொள்வார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (4)
ReplyDeleteஅன்பு V.G.K அவர்களின் நான்காம் வருகைக்கும் மற்றும் சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு தாங்கள் தந்த மறுமொழிக்கும் நன்றி. சகோதரி ஆதி வெங்கட் அவர்களது
// வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்த தாங்களே உடனடியாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம்.... இதை உடனடியாக பரிசீலனை செய்யலாமே சார்.. என் அன்பான வேண்டுகோள் இது //
என்ற வேண்டுகோளை அப்படியே நானும் வழி மொழிகின்றேன்.
ஆம் ஐயா! வலைச்சரம் வாடி இருப்பது கஷ்டமாகத்தான் இருக்கின்றது. நாம் எல்லோரும் சேர்ந்து நினைத்தால் மணக்க வைக்கலாமோ?!!!! தங்கள் பரிந்துரையும் சிறப்பானதே. ஆனால் மீள் பதிவுகளுக்கு வரவேற்பு இருக்குமா?
ReplyDeleteஉச்சத்தில் இருந்த வலைச்சரம் என் நினைவுக்கு வந்து போகின்றது. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் காரியம் பலிக்கும். புதிய நபர்கள் இங்கே ஏராளம் உண்டு.
ReplyDeleteஅஹா சீக்கிரம் வலைச்சரத்தில் போஸ்ட் போட ஆரம்பிங்க வைகோ சார். :) ஆதி வெங்கட் சொல்லியதை வழிமொழிகிறேன்.
ReplyDeleteஎல்லாக் கருத்துகளையும் படித்தேன். இந்த விஷயத்தை இளங்கோ சார் முன்னெடுத்துக் கூறியதற்கு நன்றி. வலைச்சரம் மீண்டும் ப்ரகாசிக்கட்டும். :)
This comment has been removed by the author.
ReplyDeleteThenammai Lakshmanan said...
ReplyDelete//ஆஹா .... சீக்கிரம் வலைச்சரத்தில் போஸ்ட் போட ஆரம்பிங்க வைகோ சார். :) ஆதி வெங்கட் சொல்லியதை வழிமொழிகிறேன். //
ஆஹா, தங்களின் வழிமொழிதல் மகிழ்ச்சியளிக்கிறது, ஊக்கமளிக்கிறது, உற்சாகம் அளிக்கிறது, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையையும், பேரெழுச்சியையும் ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி, ஹனி மேடம்.
முன்மொழிந்துள்ள திருமதி ஆதி வெங்கட் அவர்களுக்காகவும் வழிமொழிந்துள்ள திரு. தி. தமிழ் இளங்கோ + திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் ஆகிய தங்கள் இருவருக்காகவும், தங்கள் வழிப்படியே (விருப்பப்படியே) நானும் நடக்க சித்தமாகிக்கொண்டிருக்கிறேன்.
கூடிய சீக்கரம் நாம் அனைவரும் வலைச்சரத்தினில் மகிழ்ச்சியுடன் சந்திப்போம்.
அன்புடன் கோபு [VGK]
Thenammai Lakshmanan said...
ReplyDelete//எல்லாக் கருத்துகளையும் படித்தேன். இந்த விஷயத்தை இளங்கோ சார் முன்னெடுத்துக் கூறியதற்கு நன்றி. வலைச்சரம் மீண்டும் ப்ரகாசிக்கட்டும். :)//
ஆஹா, அப்படியே தங்கள் வாக்கு பலிக்கட்டும் ... வலைச்சரம் மீண்டும் ப்ரகாசிக்கட்டும்.
ததாஸ்து ! :) - VGK
மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...
ReplyDeleteமறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
மறுமொழி > Thenammai Lakshmanan said...
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said. ( 5, 6 , 7)
கருத்துரைகள் தந்த சகோதரர்கள், தில்லைக்கது V.துளசிதரன், திருப்பூர் ஜோதிஜி மற்றும் சகோதரி தேனம்மை லஷ்மணன் மற்றும் அய்யா வை.கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி. சூழ்நிலை காரணமாக, மேலே குறிப்பிட்ட யாருக்கும் என்னால் உடனே மறுமொழி தர இயலாமல் போய் விட்டது. என்ற போதும் அய்யா வை.கோபாலகிருஷ்ணன் கொடுத்த நல்ல தகவல்கள், எல்லோருக்கும் மகிழ்ச்சியானவை என்பதில் ஐயமில்லை. அவருக்கு மீண்டும் நன்றி.
வணக்கம் இளங்கோ சார்...
ReplyDeleteதங்களின் இப்பதிவை இன்று தான் வாசித்தேன். தாமதமான வாசிப்பிற்கு முதலில் மன்னிக்கவும்.
வலைச்சரம் தொடர்ந்து இயங்காமல் போனதற்கு துணை அட்மின் என்ற வகையில் நானும் பொறுப்பாகிறேன். காரணம், தொடர்ந்து பதிவர்களை தேடி வலைச்சர ஆசிரியராக நியமிக்க முயற்சி எடுக்கவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்கிறேன். அதற்கு காரணம் கடந்த சில வாரங்களுக்கு முன் சுமார் ஏழு பதிவர்களுக்கு ஆசிரியர் பொறுப்பேற்குமாறு (அடுத்தடுத்து) மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களில் ஒருவர் கூட பதில் அனுப்பவில்லை. அது என்னை மிகவும் பாதித்தது. முன்னரெல்லாம் சனி இரவு கூட பதிவரை தேடி ஆசிரியர் பொறுப்பேற்க வைத்த என்னால் அன்று ஒருவரிடமும் மின்னஞ்சல் பதில் வாங்க முடியாததால் எனது ஆர்வம் முற்றிலும் குறைந்தது.
அதன் பிறகும் தளராமல் தமிழ்மணம் திரட்டியில் பதிவர்களை தேடினேன். ஆனாலும் ஆசிரியராக நியமிக்கத் தகுதியான ஒருவரை கூட தேர்ந்தெடுக்க இயலவில்லை. காரணம் காப்பி பேஸ்ட் பதிவுகளாகவும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் பதிவுகள் எழுதியிருந்ததாலும், சிலருக்கு தொடர்பு கொள்ள எந்த முகவரியும் கிடைக்கதாததே...
நண்பர்கள் பலரும் வலைச்சரம் நின்று போனது குறிந்து என்னுடன் கலந்துரையாடி இருக்கிறார்கள். அவர்களாலும் பணிச் சுமையின் காரணமாக எழுத இயலவில்லை. இந்நிலையில் பதிவர் தேனம்மை அவர்கள் சாட்டர்டே ஸ்பெஷல் பதிவுக்காக வலைச்சரம் பற்றி எழுத சொல்லி அழைத்திருந்தார்கள். நானும் எழுதிக் கொடுத்து பதிவாக வெளியானது. அதில் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பேன். அப் பதிவின் மூலமாவது யாரேனும் அவர்களாக வலைச்சர ஆசிரியராக விருப்பம் தெரிவிக்க என்னைத் தொடர்பு கொள்வார்கள் என ஆசைப்பட்டேன். ஆனால் ஒருவரும் தொடர்பு கொள்ளவில்லை.
பதிவர்களை எங்கு பிடிப்பது என்றே தெரியாமல் தவிக்க வேண்டிய சூழ்நிலை. என்ன செய்ய? பதிவர்களும் குறைந்ததே காரணமாக இருக்கலாம்.
சீனா ஐயாவும் பதிவர்களை தேடி ஆசிரியராக நியமிக்குமாறு பலமுறை மின்னஞ்சல் அனுப்பினார். ஆனாலும் பணிச் சுமையின் காரணமாகவும், எனது கணினி மாற்றம் காரணமாகவும், முக்கியமாக மேற் குறிப்பிட்ட காரணங்களாலும் ஆசிரியரை நியமிக்க நான் கொஞ்சமும் முயற்சிக்கவில்லை.
இப்பதிவில் இளங்கோ சார் வலைச்சரம் பற்றி (கவலை/காப்பாற்ற) சில பத்திகள் எழுதியுள்ளார். பலரும் மறுமொழியும் பதிந்துள்ளார்கள். அவர்களில் பலர் புதுப்புது யோசனைகளையும் முன் மொழிந்திருக்கிறார்கள். அவையாவும் சீனா ஐயாவின் கவனத்திற்கு கொண்டு சென்று, வலைச்சரத்தை தொடர்ந்து இயக்கத்தில் இருக்குமாறு முயற்சி எடுக்கிறோம்.
வலைச்சரம் பற்றிய அனைவரது நல்லார்வத்திற்கு வலைச்சரம் குழுவினர் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..
வலைச்சரம் சம்பந்தமாக என்னுடன் நண்பர்கள் கலந்துரையாட விரும்பினால் மின்னஞ்சலிலோ அலைபேசியிலோ தொடர்பு கொள்ளுங்கள். வலைச்சரம் தொடுப்பதை தொடரலாம்...
நன்றி....
ஒரு வாரம் தொடர்ச்சியாக பதிவு இடுதல் என்பதை
ReplyDeleteஇரு நாட்களுக்கு ஒரு முறை என்றும்
ஒரு ஆசிரியருக்கு 7 நாட்கள் தருவதற்கு பதிலாக
15 நாட்கள் அதாவது இரண்டு வாரங்கள் தரலாம்.
ஆசிரியரும் 1,3,5,7, 9, 11, 13 தினங்களில் தான் பதிவு இடும் நிலை வருவதால்,
வரும் கருத்துக்களுக்கு பதில் கூறவும் அதே சமயம் அடுத்த பதிவுக்கான புதிய பதிவர்களின் இடுகைகளை அறிமுகப்படுத்துவதற்கும் போதிய அவகாசம் கிடைக்கும்.
இரண்டாவது யோசனை.
பொறுப்பு ஏற்று நடத்தும் ஒரு ஆசிரியர் தனது நண்பர் பதிவாளர் ஒருவரை அஞ்சல் மூலமோ அல்லது மின் அஞ்சல், அல்லது தொலை பேசி மூலமோ தொடர்பு கொண்டு அவரை அடுத்த ஆசிரியராக பணி புரிய வேண்டுகோள் இடலாம்.
இதன் மூலம், ஒருவர் நண்பர் , அந்த நண்பருடைய நண்பர் , அந்த நண்பருடைய நண்பர் என்று சுற்று ஒரு விரிந்துகொண்டு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
சுப்பு தாத்தா.
வலைச்சரம் பற்றிய பதிவில் உங்கள் ஆதங்கத்தை வெளியிட்டு அதனை மீண்டும் செயல்பட வைத்த பெருமை உங்களையே சாரும். உங்களுக்கு என் பணிவான வணக்கங்களும் நன்றியும்.
ReplyDeleteமறுமொழி > தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteபல்வேறு பணிகளுக்கு இடையிலும், நீண்ட கருத்துரை தந்த அன்பு சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி!
(காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, மருத்துவமனை மற்றும் சில அலுவல்கள் காரணமாக அலைச்சல். எனவே உடன் மறுமொழி தர இயலவில்லை.மன்னிக்கவும்.)
மறுமொழி > sury Siva said...
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட சுப்புத் தாத்தா அவர்களது கருத்துரைக்கு நன்றி.
// ஒரு வாரம் தொடர்ச்சியாக பதிவு இடுதல் என்பதை
இரு நாட்களுக்கு ஒரு முறை என்றும் , ஒரு ஆசிரியருக்கு 7 நாட்கள் தருவதற்கு பதிலாக 15 நாட்கள் அதாவது இரண்டு வாரங்கள் தரலாம்.
ஆசிரியரும் 1,3,5,7, 9, 11, 13 தினங்களில் தான் பதிவு இடும் நிலை வருவதால், வரும் கருத்துக்களுக்கு பதில் கூறவும் அதே சமயம் அடுத்த பதிவுக்கான புதிய பதிவர்களின் இடுகைகளை அறிமுகப்படுத்துவதற்கும் போதிய அவகாசம் கிடைக்கும். //
உங்களது இந்த ஆலோசனை சிறப்பானதாகவே தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் கால அவகாசத்தால், வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்க வரும் வலைப்பதிவர் பதற்றம் அடைய வேண்டியதில்லை.
மறுமொழி > Kalayarassy G said...
ReplyDelete// வலைச்சரம் பற்றிய பதிவில் உங்கள் ஆதங்கத்தை வெளியிட்டு அதனை மீண்டும் செயல்பட வைத்த பெருமை உங்களையே சாரும். உங்களுக்கு என் பணிவான வணக்கங்களும் நன்றியும் //
சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி. “சுடர்விளக்கே ஆயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்” என்பது பழமொழி. எளியேன் அந்த தூண்டுகோல் பணியை மட்டுமே செய்தேன்.
வணக்கம். ஒருமுறை வலைச்சரம் ஆசிரியராக இருந்துள்ளேன். மீண்டும் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொண்டு வலைச்சரத்தை தொடர்பு கொள்கிறேன்.
ReplyDeletehttp://newsigaram.blogspot.com/2015/06/oru-naadum-225-poiyuraignargalum.html#.VY65OEbSlm4