Saturday, 12 July 2014

அதிசய புத்தகம் – A WONDER – BOOK FOR GIRLS AND BOYS



பள்ளி பருவத்தில் நத்தானியல் ஹத்தான் உலக அற்புதக் கதைகள்  என்று ஒரு புத்தகம் படித்தேன். தமிழில் எழுதியவர் பெயரும் நூலை வெளியிட்ட பதிப்பகத்தாரின் பெயரும் நினைவில் இல்லை. அதில் உள்ள கதைகள் அனைத்தும் கிரேக்க பழங்கதைகள். படிக்கப் படிக்க சுவாரஸ்யம். பிற்பாடு அந்த நூலை விலைக்கு வாங்க முயற்சி செய்தும் பழைய புத்தக கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை. அதன் பிறகு அந்த நூலின் கதைகளை ஆங்கிலத்தில் படிக்க  நேர்ந்தது. அந்த நூலின் பெயர் A Wonder-Book for Girls and Boys.

எழுத்தாளர் நதானியேல் ஹாதோர்ன்

ந்த நூலின் மூல ஆசிரியர் நதானியேல் ஹாதோர்ன் (NATHANIEL HAWTHORNE – பிறப்பு 4 ஜூலை 1804 இறப்பு 19 மே 1864) இவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர். நாவல்களும சிறுகதைகளும் எழுதி உள்ளார்.

அதிசய புத்தகம் (A Wonder-Book for Girls and Boys) என்ற இந்த நூலில் ஆறு கதைகள் உள்ளன.

The Gorgon's Head
The Golden Touch
The Paradise of Children
The Three Golden Apples
The Miraculous Pitcher
The Chimæra

மெடூஸாவின் தலை (THE GORGON’S HEAD )

இந்த உலகத்திற்கு அப்பால் ஒரு இருண்ட கடல். கடல் நடுவே ஒரு தீவு. அந்த தீவில் மூன்று பெண் பூதங்கள்(GORGONS). அவர்களில் ஒருத்திக்கு மட்டும் தலையில் தலைமுடிகளுக்குப் பதில் பாம்புகள். எனவே தலை முழுக்க பாம்புகள் தொங்குகின்றன. அவள் முகம் அழகாக இருந்தாலும் அவளது உடல் அருவருப்பான இறக்கைகளால் மூடப்பட்டு இருந்தன.. அவளை நேருக்கு நேர் பார்த்தவர்கள் கல்லாக சமைந்து விடுவார்கள். அந்த பூதத்தின் பெயர் மெடூஸா (MEDUSA). அவளது தலையை வெட்டி எடுத்து வரவேண்டும். பெர்ஸியஸ் (PERSEUS) என்ற வீரன் எப்படி அந்த அரக்கியின் தலையைக் கொய்தான், தன் தாயை மீட்டான், தன் காதலியை அடைந்தான் என்பது கதை.

தொட்டால் தங்கம் (THE GOLDEN TOUCH )

மிடாஸ் (KING MIDAS) என்ற மன்னனுக்கு தங்கத்தின் மீது பேராசை. ஒரு தேவதையை சந்தித்த போது தான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று வரம் கேட்டான். தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்தது. ஆசை ஆசையாய் ஒவ்வொரு பொருளையும் தொட்டான். எல்லாம் பொன்னாக மாறின.. கடைசியில் அவன் தனது ஒரே மகளை அன்புடன் தொடும்போது அவளும் தங்கப் பதுமையாகி விடுகிறாள். பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்கும் கதை. எல்லோருக்கும் தெரிந்த சிறு வயதில் நாம் படித்த கதைதான் இது.

குழந்தைகளின் சொர்க்கம் (THE PARADISE OF CHILDREN)

ரொம்ப ரொம்ப நாளைக்கு முன்னர் ஒரு சிறிய வீட்டில் எபீமத்தியாஸ் (EPIMETHEUS) என்ற அநாதைச் சிறுவன் வசித்து வந்தான். பல குழந்தைகள் வசித்த போதிலும் அவனுக்குத் துணையாக இன்னொரு அநாதை சிறுமியும் அங்கு வந்து சேர்ந்தாள். அந்த பெண்ணின் பெயர் பண்டோரா (PANDORA ).அந்த வீட்டில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். யாருக்கும் எந்த வேலையும் இல்லை. எந்த பயமும் தொல்லையும் இல்லை. உண்ணத் தேவையான அனைத்தும் கிடைத்தன. ஆடல் பாடல் என்று ஒரே மகிழ்ச்சி.அந்த இடம் குழந்தைகளின் சொர்க்கமாக விளங்கியது.

அந்த பெண் பண்டோரா வந்த நாளிலிலிருந்து அந்த வீட்டில் ஒரு பெரிய பழைய பெட்டி திறக்கப்படாமல் மூடியே இருப்பதைக் கண்டாள். எனவே அவள் எபீமத்தியாஸிடம் அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று தினமும் கேட்டுக் கொண்டே இருந்தாள். ஆனால் அவனோ அது ஒரு ரகசியம், வேண்டாம் என்று தடுத்துக் கொண்டே இருந்தான். ஆனால் அவளோ,  ஒருநாள் ஆவலின் காரணமாக அந்த பெட்டியை திறந்து விடுகிறாள். பெட்டியில் இருந்த எல்லா நல்ல (குணங்களும்) ஆவிகளும் வெளியேறி விடுகின்றன. ஒரு நல்ல ஆவி மட்டும் பெட்டியை விட்டு வெளியேறவில்லை. அதன் பெயர் நம்பிக்கை ( HOPE ) என்பதாகும். அந்த பெண்ணின் பெயராலேயே. அவள் திறந்த அந்த பெட்டியும் பண்டோரா பெட்டி ( PANDORA BOX) என அழைக்கப்பட்டது.

எல்லா நல்ல குணங்களும் வெளியேறி விட்டதால் சொர்க்கமாக இருந்த  அந்த இடம் துன்பங்களின் இருப்பிடமாகிவிட்டது. ஆனாலும் நம்பிக்கை அந்த பெட்டியிலேயே தங்கி விட்ட படியினால், யாரும் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

(அதனால்தான் மனிதர்கள் எல்லாவற்றையும் இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் வாழ்கிறார்கள் போலிருக்கிறது)

மூன்று தங்க ஆப்பிள்கள் (THE THREE GOLDEN APPLES)

ஹெர்குலிஸ் (HERCULES) அட்லஸ் (ATLAS ) கதைகளை இங்கு படிக்கலாம். மூன்று தங்க ஆப்பிள்களுக்காக ஹெஸ்பெரடீஸ் (Hesperides) என்ற தோட்டத்தை தேடிச் செல்லுகிறான் ஹெர்குலிஸ். வழியில் தென்படுவோரிடம் வழிகேட்டு இறுதியில் அட்லஸ் இருக்கும்  இடம் வருகிறான். அங்கு அட்லஸ் தனது தலைக்கு மேலே விண்ணைச் சுமந்தபடி நிற்பதைக் காண்கிறான். அவனிடம் ஹெஸ்பெரட்ஸ் தோட்டத்தைப் பற்றியும், தங்க ஆப்பிள்களைப் பற்றியும் வினவுகிறான். அட்லஸ் நானே உனக்கு அவற்றை கொண்டு வருகிறேன் அதுவரை இந்த விண்ணைச் சுமந்து இரு என்று சொல்லிவிட்டு ஹெர்குலிஸ் தோளுக்கு அதனை மாற்றி விட்டு செல்லுகிறான். மூன்று தங்க ஆப்பிள்களோடு திரும்பவரும் அட்லஸுக்கு திரும்பவும் விண்ணை சுமந்து இருக்க விரும்பவில்லை. அட்லஸின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ஹெர்குலிஸ் அவனிடம் தந்திரமாகப் பேசி மீண்டும் அட்லஸையே விண்ணைச் சுமந்து இருக்கும்படி செய்து விட்டு , அவனிடமிருந்த மூன்று தங்க ஆப்பிள்களை எடுத்துக் கொண்டு தப்புகிறான்.

அதிசய ஜாடி (THE MIRACULOUS PITCHER)

இரண்டு புதிய வழிப்போக்கர்கள் ஒரு ஊருக்கு வருகின்றனர். அவர்களது தோற்றத்தைக் கண்டு அந்த ஊர் மக்கள் அவர்களை விரட்டுகின்றனர். சிறுவர்கள் அவர்கள் மீது கல்லெறிகின்றனர். தெரு நாய்கள் குரைத்தபடியே துரத்தி வருகின்றன. இவர்களது நிலை கண்டு இரக்கப்பட்ட பிலேமான் (PHILEMON) பாயுசிஸ் (BAUCIS) என்ற முதிய தம்பதியினர் அவர்களுக்கு தங்கள் வீட்டில் தங்க இடம் தருகின்றனர். போதிய ரொட்டியும் பழங்களும் இல்லாத போதும் தங்களுக்கு என்று இருந்ததை கொடுத்து உபசரிக்கின்றனர். இதனால் மகிழந்த அந்த வழிப்போக்கர்கள் அங்கிருந்த ஜாடியை அற்புத ஜாடியாக மாற்றுகின்றனர். இதனால் முதிய தம்பதியினர் வீட்டு ஜாடியில் பால் எடுக்க எடுக்கக் குறையாமல் வருகிறது. மேலும் அவர்களது சிறிய வீட்டையும் ஒரு பெரிய மாளிகையாக  மாற்றி விடுகின்றனர். 

அந்த முதிய தம்பதியினர் அதன் பின்னர் பல ஆண்டுகாலம் அந்த மாளிகையில் வாழ்ந்தனர். வரும் விருந்தினர்களுக்கு தங்களிடமிருந்த அற்புதச் ஜாடி மூலம் பசியாற்றினர். ஒருநாள் இருவரும் அங்கேயே மரங்களாக மாறிவிடுகின்றனர். ஆனாலும்  “ நல்வரவு! நல்வரவு! வழிப்போக்கர்களே! நல்வரவு என்று வரவேற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்..
 
சிமேரா (THE CHIMAERA )

பறக்கும் குதிரை என்ற சுவாரஸ்யமான கதையோடு சம்பந்தப்பட்ட கதை. ஆட்டின் உடலும் பாம்பின் வாலும் சிங்கத்தின் தலை.யும் கொண்ட ஒரு கொடிய விலங்கின் பெயர் சிமேரா (CHIMAERA).  இந்த விலங்கினை பெல்லெரோபோன் (BELLEROPHON) என்ற வீரன் தனது பறக்கும் குதிரை உதவியுடன்  எவ்வாறு கொன்றான் என்பதனையும், அவனது வீரச் செயல்களையும் சொல்லும் கதை இது.

ஓவியர் வால்டேர் கிரேன்

இந்த நூலில் உள்ள கதைகள் அனைத்திற்கும் விளக்கப் படங்களை வரைந்தவர்  ஓவியர் வால்டேர் கிரேன் ( WALTER CRANE - பிறப்பு 15 ஆகஸ்ட் 1845 இறப்பு 14 மார்ச் 1915) இவர் அந்த காலத்து ஆங்கில இலக்கியத்தில் உள்ள பல நூல்களுக்கு (குறிப்பாக சிறுவர் இலக்கியத்திற்கு) கதை அல்லது நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப அற்புதமான வண்ண ஓவியங்களைத் தீட்டிய மிகவும் பிரபலமான ஓவியர். இந்த நூலுக்கு மட்டும் 60 படங்களை வரைந்துள்ளார்.


MY THANKS TO  
A WONDER – BOOK FOR GIRLS AND BOYS BY NATHANIEL HAWTHORNE WITH 60 DESIGNS BY WALTER CRANE


 

40 comments:

  1. வணக்கம்
    ஐயா
    மிக அருமையான வரலாற்றுக்கதை எங்களுக்கும் படிக்க தந்தமைக்கும் தங்களின் தேடலுக்கும் எனது பாராட்டுக்கள் ஐயா ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது இதுவரை அறியாத கதை .. இது.பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ''தான்பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற'' என்பதுபோல் பிறருக்கு உபயோகமாய் கொடுத்த தகவலுக்கு நன்றி ஐயா.
    தற்போதைய எனது ''ஹிந்தமிழ்'' காண....

    ReplyDelete
  3. அமெரிக்க எழுத்தாளர் நதானியேல் ஹாதோர்ன் என்பவர் எழுதிய புத்தகம் + அதில் உள்ள ஆறு கதைகள் பற்றிய படங்களுடன் கூடிய தங்களின் அலசல் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. இதுவரை அறியாத கதைப்புத்தகம்
    சுருக்கமாக அருமையாக கதை சொல்லியது
    அதிக ஆவலத் தூண்டிப்போகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஒரு புதிய நூலினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா
    புத்தகம் எங்காவது கிடைக்கின்றதா என்று பார்க்கிறேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு ஐயா! இரண்டு "தொட்டால் தங்கம்", ஹெர்குலிஸ், அட்லஸ் கதைகள் வாசித்திருக்கின்றோம். எல்லாமே வாசிக்க வேண்டும். முயற்சி செய்கின்றோம் ஐயா. அதிசய ஜோடி கிட்டத்தட்ட அலாவுதீனும் அற்புத விளக்கும் போல உள்ளது இல்லையா ஐயா?

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. வணக்கம் தோழர்,

    எனது தந்தை சிறிய வயதில் எனக்குச் சொன்ன கதைகள்.
    அவரது நினைவை கிளறிவிட்டது பதிவு.
    கூடுதல் தகவல்கள்
    பெல்லரோபோன், கைமீரா என்று வைரசுகளுக்கு பெயர் வைத்து வசூலில் பட்டயைக்கிளம்பிபிய மிஷன் இம்பாசிபிள் பாகம் இரண்டை பார்திருகிரீர்களா?

    இன்று வரை படைப்பாளிகளுக்கு பெயர் தானம் தருவது கிரேக்க இலக்கியங்கள்தான் என்பது ஒரு ஆச்யர்யம்.

    நல்ல பதிவு தோழர்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. தம நான்கு
    www.malartharu.org

    ReplyDelete
  9. கதைகளை அறிந்திருந்தாலும் இந்தப் புத்தகம் பற்றி அறிந்திருக்கவில்லை. நல்ல பகிர்வு. ஓவியரைப் பாராட்டத்தான் வேண்டும். கண்கவர் ஓவியங்கள்.

    ReplyDelete
  10. புகழ் பெற்ற மிடாசின் கதையை எழுதியவர் நதானியேல் ஹாதோர்ன் என்று இந்த பதிவு மூலம் அறியத் தந்தமைக்கு நன்றி !
    மிடாஸ் பேராசையின் பிடியில் இருந்து விலகி திருந்தி விட்டான்,நம்மாளுங்க டாஸ்மாக் மிடாஸின் பிடியில் இருந்து விடுபடுவது எந்தக் காலமோ ?
    த ம 6

    ReplyDelete
  11. ஒவ்வொரு சுருக்கமான கதையே சுவாரஸ்யமாக உள்ளது ஐயா...

    ஓவியங்கள் அற்புதம்...!

    ReplyDelete
  12. இந்தக் கதைகளை வியப்புடன் படித்த நினைவு பசுமையாக இருக்கிறது..

    அருமையாய் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  13. மறுமொழி > ரூபன் said...

    // வணக்கம்! ஐயா! மிக அருமையான வரலாற்றுக்கதை எங்களுக்கும் படிக்க தந்தமைக்கும் தங்களின் தேடலுக்கும் எனது பாராட்டுக்கள் ஐயா ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது இதுவரை அறியாத கதை .. இது.பகிர்வுக்கு நன்றி//

    வணக்கம் கவிஞர் ரூபன்! எனது மாணவப் பருவத்தின் போது தமிழிலும், ஆங்கிலத்திலும் கிரேகக கதைகளைப் படித்து இருக்கிறேன். அதன் தாக்கம்தான் இந்த பதிவு. தங்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள V.G.K அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > Ramani S said... ( 1 , 2 )

    // இதுவரை அறியாத கதைப்புத்தகம் சுருக்கமாக அருமையாக கதை சொல்லியது அதிக ஆவலத் தூண்டிப்போகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் //

    அன்றுமுதல் இன்றுவரை என்னை ஊக்கப்படுத்தி வரும் கவிஞருக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // ஒரு புதிய நூலினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா
    புத்தகம் எங்காவது கிடைக்கின்றதா என்று பார்க்கிறேன்
    நன்றி ஐயா //

    நான் தமிழில் படித்த அந்த புத்தகம் இப்போது எங்கும் கிடைக்கவில்லை. ஆனால் இக் கதைகளை தமிழில் வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு பெயர்களில் எழுதி இருப்பதாகத் தெரிகிறது. ஆங்கில நூல் நூலகங்களிலும் பெரிய புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.

    ReplyDelete
  18. இரண்டு கதைகள் மட்டும் முன்பே அறிந்தவை. தங்கள் பதிவு இந்த கதைகளை படிக்கத் தூண்டுகிறது. குழந்தைகள் நிச்சயம் விரும்பும் கதைகள். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  19. சிறு வயதில் மைதாஸ் கதையும் அட்லஸ் ஹெர்குலிஸ் கதையும் பண்டோரா கதையும் படித்த சந்தோஷம் - தங்கள் பதிவினால் மீண்டும் அடைந்தேன்.
    புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு பக்கங்களைப் புரட்டும் மகிழ்ச்சியே தனி தான்!.. இனிய பதிவு!.. வாழ்க நலம்!..

    ReplyDelete
  20. இந்த கதைகள் எல்லாம் அருமை கதைகள் படித்து இருக்கிறேன். ஆனால் இந்த புத்தகத்தைப்பற்றி அறிந்து இருக்க வில்லை.
    மிக அழகாய் கதையை பகிர்ந்து கொண்டீர்கள், குழந்தைகள் படிக்க வேண்டிய கதை.
    ஆறு கதைகளும் போதிக்கும் நல்ல கருத்துக்கள் அனைவரும் ஏற்க தக்கதே.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  21. அருமையானதொரு புத்தக அறிமுகம். இதிலிருக்கும் முதல் கதையின் கதாபாத்திரங்களை சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் கண்டேன். கடைசி இரண்டு கதைகள் இதுவரை அறிந்திராதவை. புத்தகம் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  22. இதுவரை தெரிந்திராத கதைகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! Pandora Box என்று ஏன் அழைக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள உதவியமைக்கும் நன்றி!

    ReplyDelete
  23. இவை
    கதைச் சுருக்கம் அல்ல
    கதைத் தெளிவு!
    பயனுள்ள பகிர்வு
    நன்றி

    ReplyDelete
  24. இந்தக் கதைச் சுருக்கங்களைப் படிக்கும்போது மனசின் ஏதோ ஒரு மூலை ‘இதைப்படித்திருக்கிறோமே என்று கூறுகிறது. நம் புராணக் கதைகளுக்கு கிரேக்கக் கதைகள் நன்றாகவே சவால் கொடுக்கின்றன. பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  25. மறுமொழி > ஸ்ரீராம். said...

    சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > Bagawanjee KA said...

    சகோதரர் கே.ஏ. பகவான்ஜீ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி >இராஜராஜேஸ்வரி said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    சகோதரர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  31. மறுமொழி > கோமதி அரசு said...

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  32. மறுமொழி > கீத மஞ்சரி said...

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  33. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

    சகோதரர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  35. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி!



    ReplyDelete
  36. கதையைப் படிப்பதைவிட, படித்த கதையைப் பற்றி பிறருடன் பகிர்ந்துகொள்வதில் உள்ள சுகம் அதிகம். நல்லதொரு பகிர்வைத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  37. நதானியேல் ஹாதோர்ன் கதைகளில் ஒரு வாழ்வியல் தத்துவம் அடங்கி இருக்கும் ஆனால் போதனை போல் தெரியாது ...நல்ல பதிவு நன்றி அய்யா....

    ReplyDelete
  38. மறுமொழி > Dr B Jambulingam said...

    கருத்துரை தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி!

    // கதையைப் படிப்பதைவிட, படித்த கதையைப் பற்றி பிறருடன் பகிர்ந்துகொள்வதில் உள்ள சுகம் அதிகம். நல்லதொரு பகிர்வைத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி. //

    ஆமாம் அய்யா! கதையைப் படிப்பதில் உள்ள ஆர்வம் அதனை இன்னொருவருக்கு சொல்லும் போது, யான் பெற்ற இன்பம்1 பெறுக இவ் வையகம் என்ற உணர்வைத் தருகிறது..

    ReplyDelete
  39. மறுமொழி > PARITHI MUTHURASAN said...

    // நதானியேல் ஹாதோர்ன் கதைகளில் ஒரு வாழ்வியல் தத்துவம் அடங்கி இருக்கும் ஆனால் போதனை போல் தெரியாது ...நல்ல பதிவு நன்றி அய்யா.... //

    கருத்துரை தந்த சகோதரருக்கு நன்றி! எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றவர் அல்லவா நீங்கள்? நதானியேல் ஹாதோர்ன் கதைகளுக்கான கருப்பொருளைச் சரியாகவே சொன்னீர்கள்.

    ReplyDelete