Sunday, 27 July 2014

திருச்சி – பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்க கூட்டம் (JULY.2014)



ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் நலனை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்கம் (STATE BANK OF INDIA PENSIONERS’ ASSOCIATION) இயங்கி வருகிறது. மேலும் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்காக SBI ELDERS VOICE என்ற மாதப் பத்திரிகையும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் எனக்கு அழைப்பு வந்ததால் திருச்சியில் நேற்று (26 ஜூலை 2014) மாலை நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்கம் (STATE BANK OF INDIA PENSIONERS’ ASSOCIATION)  கூட்டத்திற்கு சென்று வந்தேன்.

கூட்டம் , ஸ்டேட் வங்கி, திருச்சிராப்பள்ளி கிளையில் நடைபெற்றது. திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். SBI  உதவி பொது மேலாளர் S. சீனிவாச ராகவன் தலைமை தாங்க, திருமதி சரஸ்வதி அவர்கள் இறை வணக்கம் பாட கூட்டம் இனிதே தொடங்கியது.

(படம் மேலே) SBI திருச்சிராப்பள்ளி கிளை

(படம் மேலே)  இறை வணக்கம்

முன்னதாக 80 வயது நிறைவடைந்த சங்க உறுப்பினர்களுக்கு பொன்னாடை போற்றி கவரவிக்கப் பட்டது. ( 80 வயது நிரம்பிய கூட்டத்திற்கு வர இயலாத உறுப்பினர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று பொன்னாடை போர்த்தியதாக திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார் ) திரு K.கோமதிநாயகம் (SBI CHIEF MANAGER (HR) , V.R.உதயசங்கர் (துணைத் தலைவர்), M. அசோக் (மண்டலச் செயலாளர், SBOA), திரு R. டேவிட் ஜெயகர் ராய் ( துணைப் பொதுச் செயலாளர், SBSU) ஆகியோர் உரையாற்றினார்கள். சங்க உறுப்பினர்கள் திருவாளர்கள்  சிவஞானம், பாலகிருஷ்ணன், வாசுதேவன், சங்கர், ஜெயசிங்கம், ஜம்புநாதன், ராமமூர்த்தி, ஆறுமுகம், மற்றும் முனுசாமி ஆகியோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பென்ஷன்தாரர்களின் பிரச்சினைகள் குறிப்பாக ஸ்டேட் வங்கி டிஸ்பென்சரியில் மருந்து, மாத்திரை இல்லாதது,  மெடிக்கல் பில்கள் தாமதம் ஆவது , MUTUAL WELFARE SCHEME இல் உள்ள சங்கடங்கள் பற்றி நிறைய கருத்துரைகள் சொன்னார்கள். முக்கியமாக 7-ஆவது ஊதிய ஒப்பந்த பென்சன்தாரர்களுக்கு மட்டும் அவர்களுக்குரிய பென்ஷன் தரப்படாதது குறித்து நிறையவே ஆதங்கப்பட்டார்கள். கூட்டத்தின் இறுதியில் சிறப்புரை ஆற்றிய பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் நலச் சங்க தலைவர் திரு H.கணபதி அவர்கள், சங்க உறுப்பினர்களின் சந்தேகங்கள் கேள்விகளுக்கான பதில்களையும், ஸ்டேட் வங்கியின் பென்ஷன் வரலாறு மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், கோர்ட்டில் வழக்குகள் இருக்கும் நிலைமை, வழக்குகள் போடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும் பேசினார்.  

கூட்டத்தின் ஆரம்பத்தில் துளசி பார்மசிஸ் A/C இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் இலவசமாக  இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் தந்தனர். மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, காரம் , காப்பி இவைகளோடு நினைவுப் பரிசாக சிறிய CELLO CRUNCH INSUILATED CARRIER  வழங்கப்பட்டது. திரு அண்ணாமலை அவர்கள் நன்றியுரை கூற தேசிய கீதத்துடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக செய்து இருந்தார்.

(படங்கள் மேலே) வரவேற்பாளர்கள்
  
(படம் மேலே) திருச்சி மண்டல செயலாளர்  திரு V கிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு

(படம் மேலே) சிறப்பு அழைப்பாளர்கள்










(படங்கள் - மேலே) கூட்டத்திற்கு வந்து இருந்தவர்கள்

(படங்கள் - மேலே) 80 வயது நிரம்பிய சங்க உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது)

(படம் மேலே) சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, காரம் , காப்பி இவைகளோடு நினைவுப் பரிசாக சிறிய CELLO CRUNCH INSUILATED CARRIER  வழங்கப்பட்டது.

(படம் மேலே) கூட்டத்தில் ஒரு காட்சி

(படம் மேலே) SBI  உதவி பொது மேலாளர் S. சீனிவாச ராகவன் அவர்கள் தலைமை உரை

(படம் மேலே) திரு K.கோமதிநாயகம் (SBI CHIEF MANAGER (HR)

(படம் மேலே) M. அசோக் (மண்டலச் செயலாளர், SBOA) அவர்கள் உரை

 
(படம் மேலே) திரு R. டேவிட் ஜெயகர் ராய் ( துணைப் பொதுச் செயலாளர், SBSU) அவர்கள் உரை

(படம் மேலே) V.R. உதயசங்கர் (துணைத் தலைவர்) அவர்கள் உரை

(படம் மேலே) சங்க தலைவர் திரு H.கணபதி அவர்கள் சிறப்புரை




20 comments:

  1. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  4. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. ஓய்வூதியல் நலச் சங்கம் வளரட்டும் இனிது
    நன்றி ஐயா
    தம 3

    ReplyDelete
  6. மிகச்சிறப்பான தகவல்களை அருமையான படங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளது மலரும் நினைவுகள் போல மகிழ்ச்சியளிக்கிறது.

    நானும் SBI ஊழியராக இருந்தவனே ஒரு காலத்தில். திருச்சியை விட்டு பணி மாற்றத்தில் வேறு இடங்களுக்கு / ஊர்களுக்குச் செல்ல விருப்பமில்லாததால் அந்த வேலையை ராஜிநாமா செய்துவிட்டு BHEL இல் சேர்ந்தவன்.

    அங்கேயே SBI யில் நான் ஒருவேளை CONTINUE செய்திருந்தால், இந்த நிகழ்ச்சியில் தங்களுடன் நானும் கலந்துகொண்டிருப்பேனோ என்னவோ ! ;)))))

    அன்புடன் VGK

    ReplyDelete
  7. இந்த மாதிரி கூட்டங்கள் ஏதாவது பலன் அளித்தால் சரி. உறுப்பினர் கட்டணம் எவ்வளவு.?

    ReplyDelete
  8. மூத்த குடிமக்களைப் பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
    அனைவரும் ஆண்டுகள் நூறு வாழ்வாங்கு வாழட்டும்!..

    ReplyDelete
  9. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

    சிறந்த பகிர்வு எனத் தொடரும் சகோதரர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரர் V.துளசிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரர் திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    ஓய்வூதிய நலச் சங்கம் வளரட்டும் இனிது என்று வாழ்த்திய ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // மிகச்சிறப்பான தகவல்களை அருமையான படங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளது மலரும் நினைவுகள் போல மகிழ்ச்சியளிக்கிறது. //

    நீண்ட கருத்துரை தந்த அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி!

    // நானும் SBI ஊழியராக இருந்தவனே ஒரு காலத்தில். திருச்சியை விட்டு பணி மாற்றத்தில் வேறு இடங்களுக்கு / ஊர்களுக்குச் செல்ல விருப்பமில்லாததால் அந்த வேலையை ராஜிநாமா செய்துவிட்டு BHEL இல் சேர்ந்தவன். அங்கேயே SBI யில் நான் ஒருவேளை CONTINUE செய்திருந்தால், இந்த நிகழ்ச்சியில் தங்களுடன் நானும் கலந்துகொண்டிருப்பேனோ என்னவோ ! ;))))) //

    நீங்கள் ஒருவேளை ஸ்டேட் வங்கியிலேயே உங்கள் பணியைத் தொடர்ந்து இருந்தால், உங்களுடைய முயற்சிக்கும் உழைப்பிற்கும் நீங்கள் ஒரு A.G.M அல்லது அதற்கு மேலும் உயர்ந்து இருப்பீர்கள் அய்யா!

    ReplyDelete
  15. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // இந்த மாதிரி கூட்டங்கள் ஏதாவது பலன் அளித்தால் சரி. உறுப்பினர் கட்டணம் எவ்வளவு.? //

    அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி! ஓய்வு பெற்றவர்கள் ஒன்று கூடுதல் என்பதே பெரிய விஷயம்தான். ஸ்டேட் வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவுடனேயே உறுப்பினராகும்போது ஆயுள் கட்டணமாக ஒருமுறை வாங்கப் படுகிறது. அப்போது எவ்வளவு கட்டினேன் என்று சரியாக ( 1200/= ? ) நினைவில் இல்லை. ஆனாலும் மாதாந்திரப் பத்திரிகையான SBI ELDERS VOICE இற்கு வருடம் 100 ரூபாய் கட்டுகிறேன்.

    ReplyDelete
  16. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    // மூத்த குடிமக்களைப் பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் ஆண்டுகள் நூறு வாழ்வாங்கு வாழட்டும்!.. //

    ஆமாம் அய்யா! நம்மைவிட மூத்தவர்களை இன்னும் ஆரோக்கியத்தோடு சுறுசுறுப்பாக பார்க்கும் போதும், அவர்களுடன் உரையாடும் போதும், நாமும் இன்னும் வாழலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. கருத்துரை தந்த சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete

  17. தங்கள் வங்கியின் பணி ஓய்வு பெற்றோரின் நலச்சங்கம் செம்மையாய் நடைபெறுவது அறிந்தும், அந்த சங்கத்தின் சமீபத்திய கூட்டம் சிறப்புற நடைபெற்றது அறிந்தும் மகிழ்ச்சி கொண்டேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // தங்கள் வங்கியின் பணி ஓய்வு பெற்றோரின் நலச்சங்கம் செம்மையாய் நடைபெறுவது அறிந்தும், அந்த சங்கத்தின் சமீபத்திய கூட்டம் சிறப்புற நடைபெற்றது அறிந்தும் மகிழ்ச்சி கொண்டேன். வாழ்த்துக்கள்! //

    சிண்டிகேட் வங்கியின் மூத்த அதிகாரி (ஓய்வு) அய்யா வே.நடனசபாபதி அவர்களின் அன்பான கருத்துரைக்கும், வாழ்த்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > மாதேவி said...

    // அனைவருக்கும் வாழ்த்துக்கள். //

    சகோதரியின் வாழ்த்துரைக்கு நன்றி!

    ReplyDelete