Tuesday 30 October 2012

இந்திரசித்து வேலைகள்!




மாண்டவன் மீண்டான்
இருப்பவன் மாண்டான்

ஆண் பெண் ஆனான்
பெண் ஆண் ஆனாள்

குமரன் கிழவன் ஆனான்
கிழவன் குமரன் ஆனான்

குமரி கிழவி ஆனாள்
கிழவி குமரி ஆனாள்

எல்லாமே அதிசயம்!
இந்திர சித்து வேலைகள்!

வேறு எங்கும் இல்லை!
வாக்காளர் பட்டியலில்தான்! 










  
( PHOTO THANKS TO  “ Northeast Today” )

 

18 comments:

  1. அருமை அருமை
    அதில்தான் அனைத்து இந்திரஜித் வேலைகளுக்கும் சாத்தியம்
    தலைப்பு மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எல்லா வேலைகளும் நடக்கும்...

    tm2

    ReplyDelete
  3. மறுமொழி> Ramani said... (1,2)

    //அதில்தான் அனைத்து இந்திரஜித் வேலைகளுக்கும் சாத்தியம்//

    கவிஞரின் கருத்துரை உண்மைதான். அரசியல்வாதியின் சித்து வேலைகளின் தொடக்கமே இங்குதான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  4. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

    // எல்லா வேலைகளும் நடக்கும்... tm2 //

    ஆம்! பார்த்து பார்த்து ஊமையராகி விட்டோம். சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  5. தலைப்புக்கேற்ப வரிகள் சிறப்பான கருத்து.

    ReplyDelete
  6. இது தெரியாமல் நடக்கிறதா அல்லது தெரிந்து நடக்கிறதா என்பதே குழப்பமாக இருக்கிறது. அருமையான பதிவு அய்யா!

    ReplyDelete
  7. ஆஹா! அருமை. ;)

    நகைச்சுவை மட்டுமல்ல உண்மையும் கூடவே.

    ஆக்கத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  8. மறுமொழி> Sasi Kala said...
    சகோதரி கவிஞர் தென்றல் சசிகலாவின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி> வே.சுப்ரமணியன். said..

    // இது தெரியாமல் நடக்கிறதா அல்லது தெரிந்து நடக்கிறதா என்பதே குழப்பமாக இருக்கிறது. //

    தெரிந்தும் தெரியாமலும் நடக்கும் கண்கட்டு வேலை இது. தண்ணீர்ப்ப்ந்தல் தம்பி வே.சுப்ரமணியன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!.


    ReplyDelete
  10. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ளம் கொண்ட VGK அவர்களின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  11. தலைப்பிலும் பதிவிலும் சொன்னது 100% உண்மை.

    ReplyDelete
  12. மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...

    தங்கள் பாராட்டிற்கு நன்றி!


    ReplyDelete
  13. மறுமொழி> ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    அய்யா தங்கள் பாராட்டை பெரும் பாக்கியமாக எண்ணுகிறேன். நன்றி!

    ReplyDelete
  14. ஆகா! இந்திரசித்துவேலைக்கு குறைவில்லை.:))

    ReplyDelete
  15. மறுமொழி> மாதேவி said...

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  16. சித்து வேலையை ரசித்தேன்.
    உங்கள் பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் செய்ய முடியுமா?

    ReplyDelete
  17. மறுமொழி> Ranjani Narayanan said...

    // சித்து வேலையை ரசித்தேன்.
    உங்கள் பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் செய்ய முடியுமா? //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! எனது பதிவுகளை மின்னஞ்சல் செய்வது எப்படி என்று தெரியவில்லை. திரு VGK ( கோபு சார்) அவர்களைத்தான் நான் கேட்க வேண்டும். அவர் தனது வலைப் பதிவிற்கு இம்மாதம் 11- ஆம் தேதி வரை லீவு விட்டுள்ளார். விரைவில் மின்னஞ்சல் செய்கிறேன்.

    ReplyDelete