Wednesday, 30 May 2012

பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில்


பிளாஸ்டிக் பைகள் அவ்வளவாக அறிமுகம் ஆகாத சமயம். மளிகைக் கடைகள் முதல் சிறிய கடைகள் வரை பொருட்களை பேப்பரில்தான் கட்டி கொடுப்பார்கள். தள்ளு வண்டிக்காரரிடம் திராட்சைப் பழம் வாங்கச் சென்றால், பழைய பேப்பர் கடையில் வாங்கிய மிகவும் மெல்லிதான டைப்ரைட்டிங் பேப்பரில் எடை போட்டு நூலில் கட்டிக் கொடுப்பார். பெரும்பாலும் நூல் ரோஸ் கலரில்தான் இருக்கும். அதேபோல மளிகைக் கடைகளிலும் எண்ணெய்ப் பொருட்களைத் தவிர எல்லா பொருட்களையும் பழைய செய்தித்தாளில் பொட்டலம் போட்டு சணல் கயிற்றால் கட்டிக் கொடுப்பார்கள். பொருட்கள் வாங்குபவர் கூடையையோ அல்லது பையையோ எடுத்துச் சென்று வாங்கி வருவார். இது அப்போதைய நடைமுறை.

இந்தியாவிலேயே முதன் முறையாக, கடலூரைச் சேர்ந்த டாக்டர் C.K. ராஜ்குமார் என்பவர் வெல்வெட் ஷாம்பூ என்ற நிறுவனத்தை தொடங்கி, 1979 வாக்கில் தலைக்கு போடும் ஷாம்பூவை ஷாஷேயில் (சிறிய பிளாஸ்டிக் பையில்) விற்கத் தொடங்கினார்.. பெரிய கடை முதல் சாதாரண பெட்டிக் கடை வரை விற்பனை.  புதிய உத்தியின் காரணமாக நல்ல வியாபாரம். பெரிய பாட்டில்களில் அடைத்து வைக்கப் பட்ட விலை அதிகமான பிரபலமான நிறுவனங்களின் ஷாம்பூ வியாபாரம் தேங்க ஆரம்பித்தது. பார்த்தார்கள் பெரிய கம்பெனி முதலாளிகள், ஷாம்பூ, ஹேர்டை மட்டுமல்லாது எல்லா பொருட்களையுமே (எண்ணெய் உட்பட) பிளாஸ்டிக் பையில் கம்பெனி பெயரோடு விற்கத் தொடங்கினார்கள். கடைகளிலும் பிளாஸ்டிக் தூக்குப் பையை (Carry Bag) அவர்கள் பங்கிற்கு இலவசமாக கொடுத்தார்கள்.  இந்த நடைமுறை மக்களுக்கு வசதியாகவும் பிடித்தும் போயிற்று.


ஆனால் இப்போது இத்தனை ஆண்டிற்குப் பிறகு, திடீரென்று பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கொடி பிடிக்கிறார்கள். இவ்வளவு தூரம் பயன்பாட்டிற்கு வந்த பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள் ஏதேனும் கண்டு பிடித்தார்களா என்றால் இல்லை. பிளாஸ்டிக் பையில் இப்போதும் அடைத்து விற்கப்படும் பொருட்களை தடை செய்யவும் இல்லை. பிளாஸ்டிக் தூக்குப் பைகளையும் சின்ன குவளைகளையும் மட்டுமே தடை செய்கிறார்கள். பாதிக்கப்படுவது சிறுவியாபாரிகளும் பொதுமக்களும்தான். இதுதான் சாக்கென்று சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால் நடத்துபவர்களும் இதுவரை இலவசமாக கொடுத்து வந்த பிளாஸ்டிக் தூக்கு பைகளுக்கும் விலை வைத்து காசு பார்க்க ஆரம்பித்து விட்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு என்றால், காசுக்கு மட்டும் பிளாஸ்டிக் தூக்கு பையை விற்பது சரியா?  அதிகாரிகள் திடீர் ரெய்டு என்ற பெயரில் சிறு வியாபாரிகளை தொந்தரவு செய்வார்கள். பெரிய நிறுவனங்கள் பக்கம் எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. வழக்கம் போல பள்ளி மாணவர்களை வைத்து  பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம். பின்னர் போட்டோவுடன் செய்தி தருகிறார்கள்.

பிளாஸ்டிக் நல்லது இல்லை என்றால் அதற்கு மாற்று கண்டு பிடிக்க வேண்டும். அல்லது பயன்படுத்தப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாற்று சூழலுக்கு பயன்படுத்த வேண்டும். ஊராட்சி நகராட்சிகளில்  அள்ள வேண்டிய குப்பைகளை அள்ளி, துப்புரவு பணிகளை தினமும் ஒழுங்காகச் செய்தாலே போதும். அதை விட்டுவிட்டு பொதுமக்களுக்கு சமூக சேவை என்ற பெயரில் இம்சைதான் நடக்கிறது.
.

31 comments:

 1. இளங்கோ சார்,

  நீங்க வருத்தப்படுவது இத்தனை நாளா கிடைச்ச வசதிப்போச்சே என்ற ஆதங்கத்தில். ஆனால் அது சரியல்ல.

  சூப்பர் மார்க்கெட்டுகளில் இப்போது மறு சுழற்சி செய்யதக்க அதிக அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக் பைகள் பயன்ப்படுத்துவதால் அப்படி கேட்கிறார்கள்.

  மெல்லிய மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக்களுக்கு தான் தடை.

  ஒட்டு மொத்தமாக தடை செய்ய இயலாது என இந்நிலை.

  மாற்றாக காகித பைகள், சணல் பைகள் இருக்கு, விலை கொஞ்சம் கூட ஆனால் ,அதற்கும் சேர்த்து நம்மிடம் பணம் வாங்கிக்கொண்டு கொடுக்கலாம். எவ்வளோவோ அநாவசியமா செலவு செய்கிறோம், இதற்கு செய்ய கூடாதா?

  மேலும் இதனால் சிறு தொழில்களும் வளருமே.

  எங்க வீட்டுல எல்லாம் போத்தீஸ் போன்ற துணிக்கடைகளில் கொடுக்கும் "கட்டைப்பை"தூக்கிப்போயிடுவோம்.

  ReplyDelete
 2. அதிகாரிகள் திடீர் ரெய்டு என்ற பெயரில் சிறு வியாபாரிகளை தொந்தரவு செய்வார்கள். பெரிய நிறுவனங்கள் பக்கம் எட்டிப் பார்ப்பது கூட கிடையாது.// உண்மைதாங்க நடுத்தர வர்க்கத்தினர் தான் இதானால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் . சிந்திக்க வைக்கும் பதிவு .

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. Reply to வவ்வால் said.. 30 May 2012 13:30
  // இளங்கோ சார், நீங்க வருத்தப்படுவது இத்தனை நாளா கிடைச்ச வசதிப்போச்சே என்ற ஆதங்கத்தில். ஆனால் அது சரியல்ல. //
  வருத்தப்படுவது வசதிக்காக அல்ல. கோடிக் கணக்கில் TURN OVER - மற்றும் லாபம் பார்க்கும் இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தால் என்ன என்பதுதான்.

  ReplyDelete
 5. Reply to சசிகலா said..
  சகோதரி கவிஞர் சசிகலாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! .

  ReplyDelete
 6. Reply to …. வவ்வால் said... 30 May 2012 13:38

  இங்கு சிலரைப் பற்றிய அரசியல் பின்னணி தேவையில்லை என்பதாலும், சில விவகாரங்கள் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுத்தும் என்பதாலும் இந்த கருத்துரையை எடுத்து விட்டேன்! மன்னிக்கவும்!

  ReplyDelete
 7. அருமை! தேவையான, அனைவரும் அறிய வேண்டிய செய்திகள்! போலித்தனமான கூச்சல்கள்,போலி வேடம் போடும், அரசியல் வாதிகள் உணர்வார்களா?

  சா இராமாநுசம்

  ReplyDelete
 8. பயன்படுத்தப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாற்று சூழலுக்கு பயன்படுத்த வேண்டும்.

  ReplyDelete
 9. //பிளாஸ்டிக் ஒழிப்பு என்றால், காசுக்கு மட்டும் பிளாஸ்டிக் தூக்கு பையை விற்பது சரியா? //
  சரியான கேள்வி.
  நல்ல பகிர்வு

  ReplyDelete
 10. // //பிளாஸ்டிக் தூக்குப் பைகளையும் சின்ன குவளைகளையும் மட்டுமே தடை செய்கிறார்கள். பாதிக்கப்படுவது சிறுவியாபாரிகளும் பொதுமக்களும்தான். இதுதான் சாக்கென்று சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால் நடத்துபவர்களும் இதுவரை இலவசமாக கொடுத்து வந்த பிளாஸ்டிக் தூக்கு பைகளுக்கும் விலை வைத்து காசு பார்க்க ஆரம்பித்து விட்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு என்றால், காசுக்கு மட்டும் பிளாஸ்டிக் தூக்கு பையை விற்பது சரியா?// //

  மிக மெல்லிய பாலித்தீன் பைகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. மற்றபடி, பிளாஸ்டிக் பைகளுக்கு முழுதடை எதுவும் விதிக்கப்படவில்லை.

  பிலாஸ்டிக் பைகளை இலவசமாக அளிக்கக்கூடாது, காசுக்குதான் விற்க வேண்டும் என்பது அரசின் விதி. இலவசமாகக் கொடுக்காமல் காசுக்குதான் கொடுப்பேன் என்றால், கடைக்கு வருபவர்கள் கையோடு பை கொண்டு வருவார்கள் என்பதுதான் இதன் பின்னணி.

  மொத்தத்தில் அரசின் விதி நல்லதுதான்.

  // //பிளாஸ்டிக் நல்லது இல்லை என்றால் அதற்கு மாற்று கண்டு பிடிக்க வேண்டும்.// //

  பிளாஸ்டிக் பைக்கு மாற்று மிக நீண்ட காலமாக இருக்கிறது. சாதாரணத் துணிப்பைதான் அது!

  ReplyDelete
 11. தங்கள் கருத்து சிந்திக்கத்தக்கதாக உள்ளது நண்பரே..

  ReplyDelete
 12. இளங்கோ சார்,

  நீக்கியதில் வருத்தமில்லை, நான் பொதுவான மனதில் பட்டதை உடனே சொல்லிவிடுவேன். அதில் பெரிய அரசியல் இருப்பதாக எனக்கு தோன்றாததால் சொன்னேன்,அவை எல்லாம் வாரப்பத்திரிக்கையிலும் வந்த செய்தியே.

  மற்றப்படி அப்பின்னூட்டம் பதிவின் கருத்துக்கு சம்பந்தமில்லாத ஒன்றே ,நீக்கியதும் சரியே. நன்றி!

  ReplyDelete
 13. Reply to இராஜராஜேஸ்வரி

  சகோதரி இராஜராஜேஸ்வரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 14. Reply to … சென்னை பித்தன் said...
  மூத்த பதிவர் அவர்களின் மேலான கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 15. Reply to …… அருள் said...
  நல்ல விளக்கமான கருத்துரை தந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 16. Reply to மதன்மணி தமிழ் தேடல் அதை நாடல் கண் பாடல் said...

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 17. எதற்கெடுத்தாலும் மேலை நாடுகளுடனும் சிங்கப்பூர் மலேஷியாவுடன் ஒப்பிடுவார்களே. அங்கெல்லாம் ப்ளாஸ்டிக் பைகள் இல்லையா.? தெரிந்தவர்கள் கூறலாமே.

  ReplyDelete
 18. Reply to ……. G.M Balasubramaniam said...
  அய்யா GMB அவர்களின் வருகைக்கும் புதிய நோக்கில் அமைந்த கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 19. பிளாஸ்டிக் நல்லது இல்லை என்றால் அதற்கு மாற்று கண்டு பிடிக்க வேண்டும். அல்லது பயன்படுத்தப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாற்று சூழலுக்கு பயன்படுத்த வேண்டும். ஊராட்சி நகராட்சிகளில் அள்ள வேண்டிய குப்பைகளை அள்ளி, துப்புரவு பணிகளை தினமும் ஒழுங்காகச் செய்தாலே போதும். அதை விட்டுவிட்டு பொதுமக்களுக்கு சமூக சேவை என்ற பெயரில் இம்சைதான் நடக்கிறது.//

  மிகச் சரியான கருத்து
  நடை முறை வாழ்வில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல்
  முடியாது என்கிற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுவிட்டபின்
  திடுமென தடை எனச் சொன்னால் என்ன செய்வது ?
  பயனுள்ள பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. Reply to …. … // Ramani said...//

  நமது நாட்டில் பாதி காரியங்ளை திடுமெனத்தான் செய்யத் தொடங்குகிறார்கள். கேட்டால் ஏற்கனவே கெஜட்டில் போட்டாகி விட்டது என்பார்கள். கவிஞர் ரமணி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 21. பிளாஸ்டிக் பை பயன்படுத்துவது ஒரு படுபாதகச் செயல்!

  http://arulgreen.blogspot.com/2012/06/5.html

  ReplyDelete
 22. தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள எனது வலைப்பூவிற்கு தங்களை அழைக்கிறேன்!
  http://dewdropsofdreams.blogspot.in

  ReplyDelete
 23. Reply to…… யுவராணி தமிழரசன் said...

  அன்புள்ள சகோதரி யுவராணி தமிழரசன் அவர்களுக்கு வணக்கம்! ஏற்கனவே இதே விருதினை சகோதரி ”தென்றல்” சசிகலா எனக்கு வழங்கியுள்ளார். இரண்டாம் முறையாக நீங்கள் எனக்கு அன்புடன் தந்த இந்த விருதினையும் ஏற்றுக் கொள்கிறேன். நன்றி!
  விருது பெற்ற மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. ரொம்ப நாள் கழித்து உங்கள் தளத்திற்கு வருகிறேன் !

  நல்ல விழிப்புணர்வு பதிவு !

  தொடர்ந்து எழுதுங்கள் !

  Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !

  ReplyDelete
 25. சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! நன்றி !

  ReplyDelete
 26. Reply to … …திண்டுக்கல் தனபாலன் said..

  நீண்ட இடைவெளிக்குப் பின் எனது வலைப் பதிவிற்கு வந்து கருத்துரை சொன்னமைக்கு நன்றி! படைப்புகள் சம்பந்தப் பட்ட தங்கள் ஆலோசனையை
  யோசிக்கிறேன்.

  ReplyDelete
 27. மிகச் சரியாக பதிவு கொடுத்து ஒரு மாதம்
  ஆகப் போகிறதே.
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

  ReplyDelete
 28. REPLY TO …. …// Ramani said... //

  கவிஞர் ரமணி அவர்களின் அன்புக்கு நன்றி! விரைவில் மீண்டும் வலைப் பதிவு பக்கம் வருவேன்.

  ReplyDelete
 29. பிளாஸ்டிக்கை மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்று கூறி நாம் ஒதுங்கிவிடமுடியாது. அதை ஒதுக்கக் கூடிய ஆற்றல் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது என்பதை உணர்த்தியது உங்கள் பதிவு!.
  வாழ்த்துகள் ஐயா!.

  ReplyDelete
 30. REPLY TO ..//-தோழன் மபா, தமிழன் வீதி said...//
  கவிஞரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete