Saturday, 3 October 2015

வலைப்பதிவர் பயணம் - சரிபார்ப்பு பட்டியல்





தமிழ்மணத்தில் நுழைந்தால், வலைத்தளத்தை திறந்தால் ”புதுக்கோட்டை வாங்க, புதுக்கோட்டை வாங்க” – என்று ஏகப்பட்ட அழைப்புகள். அடுத்த வாரம் 11.10.2015 - ஞாயிறு அன்று அங்கே ஆஜராகி விட வேண்டியதுதான். இருந்தாலும் புதுக்கோட்டையை நம்மால் வாங்க முடியாது. 

வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றாலே சுவாரஸ்யம்தான். மகிழ்ச்சிதான். இங்கு இப்படி என்றால் மேலைநாட்டு வலைப்பதிவர்கள், இதுபோன்ற விழா பயணத்திற்கு என்னென்ன எடுத்துச் செல்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை. அங்கெல்லாம் இரண்டு நாட்கள் தொடர்ந்து  வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறுவதால், மூன்று நாட்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் சரிபார்ப்பு பட்டியல் (Checklist) தேவைப் படுகிறது. இங்கும் பலர் ஒருநாள் திருவிழாவிற்கு முதல்நாளே வரவேண்டி இருக்கும். வழக்கம் போல கூகிளில் வலம் வந்தேன். கிடைத்த தகவல்கள்.  

சகோதரி செல்ஸியா (Chelsea) அவர்கள் ஆங்கிலத்தில் ‘TWO TWENTY ONE’ என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். அவர் தனது அனுபவத்தில், வலைப்பதிவர் சந்திப்பிற்கு செல்லும் போது ஒரு வலைப்பதிவர் என்ற முறையில், என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் “ What to Take to a Blog Conference + Printable Checklist “ என்ற தனது பதிவினில் ஒரு சரிபார்ப்பு பட்டியல் (Checklist) தருகிறார்.

                          Picture Courtesy: www.twotwentyone.net/what-to-take-to-a-blog-conference  

நாம் நமது சவுகரியங்களுக்கு ஏற்ப ஒரு சரிபார்ப்பு பட்டியல் தயார் செய்து கொண்டு பயணப்பட வேண்டியதுதான். இது போன்ற ஒரு பட்டியலை நாமே தயார் செய்து நிரந்தரமாக நமது கம்ப்யூட்டரில் வைத்துக் கொண்டால் எல்லா சமயங்களிலும் உதவும். நமது வலைப்பதிவர் சந்திப்பு விழாக்குழு நண்பர்களும், இதுபோல சரிபார்ப்பு பட்டியல் (Checklist) வைத்துக் கொண்டால் பணிகள் எளிதாகவும் ’டென்ஷன்’ இல்லாமலும் முடியும்.


   வலைப்பதிவர்கள் அனைவரையும் புதுக்கோட்டைக்கு வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறேன்.!