நமது வலைப்பதிவர்களின் சந்திப்பு, இந்த மாதம் ( 11.10.2015 ஞாயிறு) அன்று
புதுக்கோட்டையில் நடக்கவிருக்கிறது. இது முழுக்க முழுக்க தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு
எனலாம். அந்த வகையில் நமக்கு மிக்க மகிழ்ச்சி. அத்தோடு இந்த முறை தமிழக அரசின் “ தமிழ் இணையக் கல்விக் கழகம்” இந்த விழாவில் கலந்து கொள்வது என்பதால்
இரட்டிப்பு மகிழ்ச்சி. கூகிள் வந்த பிறகு ஆங்கிலத்தில் மட்டுமல்லாது பிறமொழியில்
எழுதும் வலைப்பதிவர்களும் நிறையபேர் உருவாகி விட்டனர். அங்கங்கே வலைப்பதிவர்கள்
மாநாடுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும்
கூகிள் துணை கொண்டு நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. அவற்றுள் சிலவற்றை இங்கு
காணலாம்..
ஹைதரபாத் வலைப்பதிவர்கள்:
ஐ.டிசி. காகதீயா ஹோட்டலில் (ITC Kakatiya Hotel ) 2013 இல் ஜனவரி
20 அன்று நடைபெற்ற “Hyderabad bloggers Meet 2013”
பற்றி சில தகவல்கள்.
படம் – மேலே - வலைப்பதிவர்கள்
படம் – மேலே – வலைப்பதிவர்களுக்கான பரிசுகள்.
(Photo Courtesy - http://subhorup.blogspot.in/2013/01/hyderabad-bloggers-meet-2013.html
)
பூடானில்:
Photo & News - courtesy: www.southasiatoday.org/2015/01/fourth-international-bloggers.html
இந்த வருடம் ஆரம்பத்தில் (16 ஜனவரி 2015) அன்று பூடான்
(BHUTAN) தலைநகரான திம்பு (THIMPU) என்னுமிடத்தில் ”Fourth International Bloggers
Conference” எனப்படும் வலைப்பதிவர்கள் மாநாடு நடந்து இருக்கிறது. இங்கு இவர்கள் தங்களை உலக வலைப்பதிவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் முழுக்க
முழுக்க இந்தி மொழி வலைப்பதிவர்களின் சங்கமம் எனலாம்.
ஆதரவாளர்கள்
(SPONSORS):
இங்கு நாம் வலைப்பதிவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு “ நிதி மிகுந்தவர்
பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் “ - என்று சொல்லி நன்கொடை திரட்டிக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் பல இடங்களில் பெரும்பாலும் ’ஸ்பான்சர்ஸ்’ (SPONSORS) எனப்படும் ஆதரவாளர்கள் வலைப்பதிவர்கள்
மாநாட்டிற்கான செலவை ஏற்றுக் கொள்கின்றனர். அல்லது இந்த சந்திப்பினை அவர்களது நிறுவனம்
பெயரில் நடத்துகின்றனர். குறிப்பாக உணவு (Food), ஒப்பனை (Life Style ), நலம்
(Health) மற்றும் வடிவமைப்பு (Design) போன்ற பதிவுகளை எழுதும் வலைப்பதிவர் சந்திப்புகளைப்
பற்றி அதிகம் காண முடிகிறது. இந்தியாவில் இண்டி ப்ளாக்கர்ஸ் (Indi Bloggers) நடத்தும் பெரும்பாலான சந்திப்புகள்
இவ்விதமே நடைபெறுவதையும் காணலாம்.
பெங்களூரு:
பெங்களூருவில் ஆகஸ்ட் 2014 இல் 1 & 2 ஆகிய இரண்டு தினங்கள்
நடைபெற்ற Indian Food Bloggers Meet – 2014 இல் சந்தித்துக் கொண்டவர்கள்.
அட்லாண்டா:
அட்லாண்டாவில் the Grand Hyatt-Buckhead என்னுமிடத்தில் நடைபெற்ற Design Bloggers Conference 2015 இல் ‘ “ 450 இற்கும் மேற்பட்ட டிஸைன்
வலைப்பதிவர்கள் வருகை தந்ததாகவும், 70 ஆதரவு நிறுவனங்கள் (SPONSORS) நடத்திக்
கொடுத்ததாகவும் Mountain Living” என்ற பத்திரிக்கை தகவல் தருகிறது.
Photo & News –
பர்மிங்ஹாமில்:
ரெபெக்கா என்பவர் பிறப்பால் கனடியன்; 2014 இலிருந்து UK இல் வசித்து
வருகிறார். அவர் முதன்முதலாக பர்மிங்ஹாமில் தான் கலந்து கொண்ட ஒரு வலைப்பதிவர் சந்திப்பை பற்றி பரவசத்துடன், அப்போது
அவருக்கு கிடைத்த பரிசுப் பொருட்களையும், ருசித்து உண்ட உணவுகளைப் பற்றியும் தனது வலைத்தளத்தில்
விவரித்துள்ளார்.
Photos courtesy - http://dashofcheeky.blogspot.in/2014/09/birmingham-blogger-meet-up.html
(படங்கள் – மேலே – வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பீர் ப்ளாக்கர்ஸ்
சந்திப்பு
லண்டனில்:
லண்டனில் இந்த ஆண்டு 22.ஆகஸ்ட்.2015 அன்று ஹோட்டேல் ரஸ்ஸலில்
(Hotel Russell) நடைபெற்ற வலைப்பதிவர் மாநாட்டினைப் யூடியூப்பில் கண்டு கேட்டு களித்திட
கீழே உள்ள இணையதள முகவரியை சொடுக்கவும் ( CLICK )
THANKS TO “GOOGLE ”
xxxxx xxxxx









