Monday, 7 October 2013

அன்பின் சீனா – மெய்யம்மை ஆச்சி தம்பதியினருடன் ஒரு சந்திப்பு




வலைச்சரம்“ பொறுப்பாசிரியரான சீனா அவர்களின் முழுப்பெயர் சிதம்பரம் காசிவிஸ்வநாதன் என்பதாகும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் முதன்மை அதிகாரியாக (CHIEF MANAGER) பணி புரிந்தவர். (நன்றி www.facebook.com/Cheenakay ) தனது வங்கிக்குத் தேவைப்படும் மென்பொருட்களை  (SOFTWARE) வெளியில் வாங்காமல் அவர்கள் வங்கியிலேயே உருவாக்குவது என்ற குழுவில் முக்கிய பங்கினை வகுத்தவர். அசை போடுவது “ http://cheenakay.blogspot.in என்ற வலைப் பதிவில் எழுதி வருகிறார். அன்பின் சீனா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவர்.

// தஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிக்கிறேன். இளமைக் கால நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து பதிவு செய்ய ஆசை. தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்//

// எனக்கு எழுதியதில் இருந்த இன்பத்தை விட பதிவுகளைப் படித்ததிலும், பொருள் பொதிந்த மறு மொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன். அதிக நண்பர்களைப் பெற்றேன். //

என்று சொல்லும் இவர் இப்போது அதிகம் எழுதுவதில்லை. வலைச்சரம் பொறுப்பாசிரியராக இருந்து பதிவர்களை ஊக்குவிப்பதிலும், உற்சாகமூட்டும் பின்னூட்டக் கருத்துக்களைத் தருவதிலும் ஆர்வமாக இருந்து வருகிறார்.

நமது அன்பின் சீனா அய்யாவின் மனைவி மெய்யம்மை ஆச்சி அவர்களும் சிறந்த வலைப்பதிவர். தமிழ் ஆர்வம் கொண்ட இவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் புலவர் பட்டம் பெற்று ஆசிரியையாக பணி புரிந்தவர். பட்டறிவும் பாடமும்  http://pattarivumpaadamum.blogspot.in மற்றும் எண்ணச் சிறகுகள் வள்ளுவம் “ http://ennassiraku.blogspot.in என்ற இரு வலைப் பதிவுகள் இவருடையது. இரண்டாவது வலைப்பதிவில் திருக்குறளைப் பற்றி பேசுகிறார்.

// ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன்! ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது! என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன்! இது தான் நான்! இது - மெய்! இதைத் தவிர வேறில்லை எனக்கு! //


என்று சொல்லுகிறார் இவர்.

அன்பின் சீனா- மெய்யம்மை ஆச்சி தம்பதியினர் நேற்று, ஞாயிறு அன்று  (06. 10.2013) திருச்சி வந்து பெமினா ஹோட்டலில் தங்கி இருந்தனர். அவர்கள் வரும் செய்தியை மூத்த வலைப் பதிவர் திருச்சி வை கோபாலகிருஷ்ணன்  http://gopu1949.blogspot.in   அவர்கள் எனக்கு முன்னரே தெரிவித்து இருந்தார். அவர்களை நேற்று மாலை இருவரும் சந்தித்து உரையாடினோம். VGK அவர்கள் அன்பின் சீனாவுக்கு பொன்னாடை போர்த்தி தான் எழுதிய நூல்களை இருவருக்கும் வழங்கி கௌரவம் செய்தார். நான் கவிஞர் கண்ணதாசன் எழுதிய “அர்த்தமுள்ள இந்துமதம்  என்ற முழுத் தொகுதி (10 பாகங்கள்) அடங்கிய நூலினை அன்பின் சீனா தம்பதியினரிடம் தந்தேன்.

அப்போது புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். எனது கேமராவில் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்று இரண்டைத் தவிர மற்றவை சரியாக அமையவில்லை. (கேமராவை சர்வீஸ்  செய்ய வேண்டும்) எனவே VGK  (வை கோபாலகிருஷ்ணன்) அவர்கள் பதிவில் வந்த சில படங்களையும் இங்கு இணத்துள்ளேன். அவருக்கு நன்றி. திருச்சியில் அன்பின் சீனாவுடன் நடைபெற்ற இந்த சந்திப்பினை
61 / 2 / 2 ] மீண்டும் பதிவர் சந்திப்பு - அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் திருச்சி விஜயம். .  http://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html  என்ற பதிவில் திரு VGK  எழுதியுள்ளார். .

படம்.1 : (மேலே) அன்பின் சீனா மெய்யம்மை ஆச்சி தம்பதியினர்


படம்.2: (மேலே) கண்ணதாசன் எழுதிய நூலை நான் தந்தபோது


படம்.3: (மேலே)  திரு VGK, அன்பின் சீனா ஆகியோருடன் நான்

படம்.4: (மேலே) திரு VGK பொன்னாடை போர்த்துகிறார்
PHOTO THANKS TO http://gopu1949.blogspot.in


 
படம்.5: (மேலே) திரு VGK தான் எழுதிய “எங்கேயும் எப்போதும் என்ற நூலினைத் தருகிறார்.
PHOTO THANKS TO http://gopu1949.blogspot.in
  
படம்.6: (மேலே) திரு VGK பரிசுப் பொருள் வழங்குகிறார்
PHOTO THANKS TO http://gopu1949.blogspot.in