’கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை’
– என்ற கதையாக, இருக்கிற பிரச்சினைகளை யெல்லாம் விட்டு விட்டு, இப்போது ’சசிகலா முதல்வர்
ஆகலாமா?” என்று இருபக்கமும் விவாதம் நடைபெறுகிறது. தற்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களின்
திடீர் தியானப் புரட்சியும், பேட்டிகளும் தமிழக அரசியலை, இன்னும் சூடாக்கி விட்டது.
சசிகலா நடராஜனுக்கு ஆதரவாக அப்போலோ புகழ் சி.ஆர் சரஸ்வதி, வளர்மதி போன்றவர்கள் தங்களுக்கு
கொடுக்கப்பட்ட பணியை செய்ய, டீவி காட்சிகளில் வந்து விட்டார்கள். பழ.நெடுமாறன், தோழர்
தா.பாண்டியன், போன்றவர்களும் தங்களது விசுவாசக் குரலை ஒலிக்கத் தொடங்கி விட்டார்கள்.
எதிர்க்கட்சி என்ற முறையில் ஸ்டாலின் போன்றவர்கள் தங்களது அரசியலை தொடங்கி விட்டார்கள்.
மக்களும் பணப் பிரச்சினை, ரேஷன் பிரச்சினை, ஆதார் குழப்பங்கள், பீட்டாவுக்கு தடை, மெரினா
தாக்குதல் போன்றவற்றை மறந்து விட்டு நாடகமேடைப் பக்கம் வேடிக்கை பார்க்க வந்து விட்டதில்,
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி கட்சியினருக்கு, அப்பாடா என்று ஒரு ஆசுவாச
பெருமூச்சு.
எங்கே தவறு?
இந்திய ஜனநாயக அரசியல் முறைப்படி, யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு
வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம், பெரும்பான்மை ஜனநாயகம் என்ற அடிப்படையில் அந்த கட்சியினரால்
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள்,, முதல்வரை
தேர்ந்தெடுக்கலாம் என்று அரசியல் சாசனம் சொல்வதால், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட
சசிகலா முதல்வர் பதவி கோருகிறார். அவர் அந்த பதவிக்கு தகுதியானவரா இல்லையா என்பதற்கு
இங்கு எந்த அளவுகோலும் இல்லை.
சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போதே, பார்வையாளராக வந்த சசிகலாவை,
சபாநாயகர் ஆசனத்தில் உட்காரவைத்து விட்டு, ’நான் அப்படித்தான் செய்வேன்? உங்களால் என்ன
செய்ய முடியும்?” என்று மற்றவர்களை ஒரு பார்வை பார்த்தவர் ஜெயலலிதா.
ஓ.பி.எஸ்சின் கலகக்குரல்
நெடுநாள் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், மனதுக்குள் இருந்த மன அழுத்தத்தையும்
மெரினாவில் போட்டு உடைத்து விட்டார் ஓ.பி.எஸ். இக்கட்டான சமயங்களில் மட்டும், தேவைப்
படும்போது தன்னை பயன்படுத்திக் கொண்டதையும், இப்போது அவமானப்பட்டதையும் அவரால் தாங்கிக்
கொள்ள முடியாததன் வெளிப்பாடே அவருடைய காலங்கடந்த திடீர்க் கலகம். சூழ்ச்சி அரசியலில்
இதெல்லாம் சகஜம். தி.மு.கவை விட்டு எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது இருந்த நிலைமைதான் இப்போது
அ.தி.மு.கவிலும் உண்டாகி இருக்கிறது. ஆனால் ஒ.பி.எஸ் அவர்களை எம்.ஜி.ஆரோடு ஒப்பிட முடியாது.
வி.கே.சசிகலா என்ற சின்னம்மா தோற்றத்திலும் உடை அலங்காரத்திலும் தன்னை ஜெயலலிதாவாக
காட்டிக் கொள்வதை நிறையபேர் ரசிக்கவில்லை. அவர் சசிகலாவாகவே இருக்கட்டும். மெரினா புரட்சியில்,
பல்வேறு பிரச்சினைகளும் ‘ஜல்லிக்கட்டு’ என்ற மையப் புள்ளியில் குவிந்ததைப் போன்று,
சசிகலாவுக்கு எதிரான எல்லா எதிர்ப்புக் குரல்களும் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில்
ஒன்று சேர்ந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதும்,
இரட்டை இலை யாருக்கு என்பதும் ஒரு பொதுத்தேர்தல் வந்தால்தான் தெரியும்.
கதைகளும் கற்பனைகளும்
நமது நாட்டில் மன்னர் ஆட்சியின்போது சாமான்யன் கேள்வி கேட்கமுடியாது,
அரசாள முடியாது. ஆனால் சாமான்யன் அரசனை கேள்வி கேட்பது போலவும், அரசன் சாதாரண மக்களிடம்
கருத்து கேட்பது போலவும் கதைகள் உண்டு. அரச வம்சத்தில் வாரிசு இல்லாத நிலையில். பட்டத்து
யானை கையில் ஒரு மாலையைக் கொடுத்து வீதிக்கு அனுப்புவார்களாம்: அந்த பட்டத்து யானை
யார் கழுத்தில் மாலை போடுகிறதோ, அவனை ராஜாவாக்கி விடுவார்களாம் இப்படியும் ஒரு கதை.
இதன் அடிப்படையில், கரிகால் சோழன் மன்னன் ஆனான் என்றும் ஒரு கதை உண்டு. (நிச்சயம் அந்த
யானையை சாதாரண மக்கள் இருக்கும் தெருக்களின் பக்கம் அழைத்து வந்து இருக்க மாட்டார்கள்
எனலாம்)
இதையெல்லாம் விட, மேலாக, காட்டுக்குப் போன ராமன் வரும்வரை, அவனுடைய
பாதுகைகளை அரியாசனத்தில் வைத்து பரதன் நாடாண்டதாக இராமாயணத்தில், ஒரு கதை உண்டு. இன்றும்
‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்ற கதாகலாட்சேபம் விமரிசையாகத்தான் சொல்லப் படுகிறது.
சரஸ்வதி சபதம்
சில புராணக் கதைகளையும், மக்கள் மத்தியில் நிலவிய சில நாடோடிக்
கதைகளையும், ஒன்றாகப் பிசைந்து, தனது கற்பனா சக்தியின் மூலம், புராண திரைப்படக் கதைகளை
தயாரித்து இயக்கி வெற்றி கண்டவர் A.P.நாகராஜன் அவர்கள். அந்தகாலத்து ஊர் திருவிழாக்களில்
இவரது புராணப்பட வசனங்களை, சவுண்ட் சர்வீஸ் அபிமானிகள் லவுட் ஸ்பீக்கரில் ஒலிபரப்பாமல்
இருக்க மாட்டார்கள்.
மேலே சொன்ன அம்சங்களோடு வெற்றிகண்ட ஒரு தமிழ்த் திரைப்படம்தான்
A.P.நாகராஜனின் ‘சரஸ்வதி சபதம்’. இந்த படத்தின் கதைப்படி, ”தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா,
இங்கு நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா” என்று பாடிவந்த பிச்சைக்காரப் பெண் ஒருத்தி,
யானை மாலை போட்டதால் பட்டத்து ராணி ஆகிறாள். பட்டத்து ராணி ஆனதும், அவள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்
இந்த கால அரசியலை நினைவூட்டும். நிறையபேருக்கு இந்த படமும், கதையும் அத்துப்படி என்பதால்
கதையை இங்கு விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. இந்த வேடத்தில் நடித்து இருப்பவர் நடிகை
கே.ஆர் .விஜயா அவர்கள்.
சட்ட திருத்தம் தேவை
எனவே, ஒரு பிரதமராகவோ அல்லது முதல் அமைச்சராகவோ தேர்ந்தெடுக்கப்
படும்போது அவர் ஜனநாயக முறைப்படி தேர்தலில் நின்று, (எம்.பி அல்லது எம்.எல்.ஏ - என்று)
தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருத்தல் அவசியம் என்று அரசியல் சட்ட திருத்தம் செய்யாதவரை,
இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும்.
இப்போது நடக்கும் அரசியல் செய்திகளைப் பார்க்கும்போது , சட்டசபையை
கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்துவதே நாட்டுக்கு நல்லது என்று தோன்றுகிறது.
Agreed...
ReplyDeletegood analysis
நன்றி மேடம்.
Deleteதங்கள் பாணியில் ஒன்றையும் விட்டுவிடாமல் மிகவும் அருமையானதொரு அலசலை ஓர் பதிவாகக் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுகள்.
ReplyDelete>>>>>
மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களுக்கு நன்றி.
Delete// ஒ.பி.எஸ் அவர்களை எம்.ஜி.ஆரோடு ஒப்பிட முடியாது. வி.கே.சசிகலா என்ற சின்னம்மா தோற்றத்திலும் உடை அலங்காரத்திலும் தன்னை ஜெயலலிதாவாக காட்டிக் கொள்வதை நிறையபேர் ரசிக்கவில்லை.//
ReplyDeleteஇவையெல்லாம் 100% உண்மைதான்.
>>>>>
தங்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி அய்யா.
Delete//பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதும், இரட்டை இலை யாருக்கு என்பதும் ஒரு பொதுத்தேர்தல் வந்தால்தான் தெரியும்.//
ReplyDeleteநிச்சயமாக அப்போதுதான் அனைவரின் வண்டவாளங்களும் தண்டவாளத்தில் ஏறக்கூடும்.
>>>>>
தங்களின் மூன்றாம் வருகைக்கு நன்றி அய்யா. பொதுத்தேர்தல் ஒன்றே தக்க தீர்வாக இருக்க முடியும்.
Delete‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்ற கதாகலாட்சேபம் + சரஸ்வதி சபதம் படத்தில் வரும் அந்த ”தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா, இங்கு நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா” என்ற அருமையான பாடல் ஆகியவற்றை யோசித்து இங்கு இணைத்துள்ளது மிகவும் பொருத்தமாக உள்ளன.
ReplyDelete>>>>>
தங்களின் நான்காம் வருகைக்கும் பாராட்டினுக்கும் மீண்டும் நன்றி அய்யா.
Deleteஆரம்ப வரிகளான ’கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்பதும் கட்டுரையின் நிறைவு வரிகளான ‘இப்போது நடக்கும் அரசியல் செய்திகளைப் பார்க்கும்போது, சட்டசபையை கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்துவதே நாட்டுக்கு நல்லது என்று தோன்றுகிறது’ என்பதும் நியாயமாகவே தோன்றி சிரிப்பினை வரவழைத்தன.
ReplyDelete>>>>>
அன்புள்ள V.G.K அவர்களுக்கு, மேலே சொன்ன பழமொழியில் , ‘மனை’ என்பதற்கு ‘மணை’ என்று இருக்க வேண்டும். நான் டைப் செய்யும் போது ஏற்பட்ட எழுத்துப் பிழையை இப்போது சரி செய்து விட்டேன்.
Delete‘கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை’என்பதே சரி.
//தி.தமிழ் இளங்கோ Monday, February 13, 2017 12:46:00 pm
Deleteஅன்புள்ள V.G.K அவர்களுக்கு, மேலே சொன்ன பழமொழியில் , ‘மனை’ என்பதற்கு ‘மணை’ என்று இருக்க வேண்டும். நான் டைப் செய்யும் போது ஏற்பட்ட எழுத்துப் பிழையை இப்போது சரி செய்து விட்டேன்.
‘கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை’என்பதே சரி.//
அவளோ ஓர் கிழவி. அவளை மணையில் அமர வைத்தால் என்ன அல்லது மனையில் குழிவெட்டி உயிருடன் புதைத்தாலும்தான் என்ன என நினைத்து
நானும் அந்த எழுத்துப்பிழையினை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. :)
எனினும் தங்களின் நேர்மையான இந்த விளக்கத்திற்கு என் நன்றிகள்.
நன்றி அய்யா.
Deleteமக்கள் நலன் காக்கும் அரசாக மத்திய அரசு இருந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலுக்கு ஏற்பாடு செய்யும் ஆனால மத்தியில் இருப்பது மக்கள் நலன் காக்கும் அரசு அல்ல அது பிஸினஸ்மேங்களின் நலன் காக்கும் அர்சு அதனால் தமிழகத்தில் நடக்கும் குழப்பத்தை பயன்படுத்தி அதில் குளிர்காயத்தான் முயல்வார்கள் அவர்களின் செயல்கலே இப்போதையை குழப்பத்திற்கு காரணம் அவர்கள் மட்டும் குழப்பம் விளைவிக்காமல் இருந்திருந்தால் மக்கள் விரும்பாவிட்டாலும் சசிகலா முதல்வராகவும் பன்னீர் செல்வம் துணை முதல்வாரகவும் சசிகலாவுடன் இணைந்து செயல்பட்டு இருப்பார் எந்தவொரு பிரச்சனையில்லாமல்... ஆனால் தமிழக் முன்வாசல் வழியாக வர முடியாத மத்திய அரசு பின்புறம் வழியாக தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வர முயல்கிறது இது புரியாமல் மக்களு ஆளுக்கு ஆள் பலவிதமாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள்
ReplyDeleteநண்பர் மதுரைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஜெயலலிதாவை அப்போலோவில் சேர்த்தது முதல் மெரினாவில் அடக்கம் செய்யும் வரை பிஜேபிக்கும் சசிகலாவுக்கும் இருந்த Understanding இல் எதனால் விரிசல் என்று தெரியவில்லை.
Delete’சட்ட திருத்தம் தேவை’ என்ற தலைப்பின் கீழ் தாங்கள் எழுதியுள்ள .....
ReplyDelete//எனவே, ஒரு பிரதமராகவோ அல்லது முதல் அமைச்சராகவோ தேர்ந்தெடுக்கப் படும்போது அவர் ஜனநாயக முறைப்படி தேர்தலில் நின்று, (எம்.பி அல்லது எம்.எல்.ஏ - என்று) தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருத்தல் அவசியம் என்று அரசியல் சட்ட திருத்தம் செய்யாதவரை, இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும்.//
என்பதை ஏனோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், சட்டசபையில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ள கட்சிக்கு நல்லதொரு தலைமை கிடைக்காமல் போகவும் வாய்ப்பாக அது அமைந்து விடக்கூடும்.
பலரையும் நன்கு யோசிக்க வைக்கும் தங்களின் இந்தப் பதிவுக்கும் பகிர்வுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.
அன்புள்ள V.G.K அவர்களே, தங்களுடைய அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteயார் பிரதமராகவோ, முதல்வராகவோ ஆனாலும், 6 மாதத்துக்குள் மக்களைச் சந்தித்து வென்றாகவேண்டுமே. இதில் ஒரே ஒரு பிரச்சனை, அதிகாரத்தில் இருப்பதால், பண, அதிகார பலத்தோடு இடைத் தேர்தலைச் சந்திக்கலாம். அதை மாத்திரம் மாற்றிவிட்டால் நல்லது.
ReplyDeleteமக்களுக்கு மீண்டும் பணம் கிடைக்கும் ஒரு வழியைக் (திரும்ப தேர்தல்) கூறியுள்ளீர்கள். பொதுமக்களின் ஓட்டு உங்கள் கருத்துக்குத்தான்.
நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteவீட்டை பூட்டி காவல்காரரிடம் கொடுத்து விட்டு திரும்ப வந்து பார்ததால் திமிர் பிடித்த காவல்காரர் திருப்பதிக்கு போயிருக்கிறேன் வரும் வரை காத்திருக்கவும் என்று கடிதம் எழுதி வைத்து இருந்தால் என்ன செய்வது இது தான் இன்றைய மக்கள் மன நிலை.
ReplyDeleteவீட்டை பூட்டி காவல்காரரிடம் கொடுத்து விட்டு திரும்ப வந்து பார்ததால் திமிர் பிடித்த காவல்காரர் திருப்பதிக்கு போயிருக்கிறேன் வரும் வரை காத்திருக்கவும் என்று கடிதம் எழுதி வைத்து இருந்தால் என்ன செய்வது இது தான் இன்றைய மக்கள் மன நிலை.
ReplyDeleteநண்பரின் வித்தியாசமான கருத்துரைக்கு நன்றி.
Deleteஉங்களின் கோபம் பல இடங்களில் தெறிக்கிறது அடைமொழியாக - அதுவும் சாதுவாக - நல்லது...
ReplyDeleteநண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
Deleteதாங்கள் சொன்ன கடைசி விடயமே சரி என்பது எனது கருத்து நண்பரே
ReplyDeleteநண்பருக்கு நன்றி.
Deleteநாட்டு நடப்பை விலாவாரியாக விவரித்துள்ளீர்கள். பாராட்டுகள்! நீங்கள் பதிவின் இறுதியில் சொன்னதுபோல் இப்போதைக்கு சட்டசபையை கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்துவதே உசிதம்.
ReplyDeleteமரியாதைக்குரிய மூத்த வலைப்பதிவர் V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteசீட்டுக் கட்டு ஆட்டத்தில் ஆடுகிறவர்களில் வெற்றி முகத்தில் இருக்கும் இருவருக்குள் பாதி ஆட்டத்தில் மனஸ்தாபம் என்றால் அதற்காக ஆட்டத்தையே கலைத்து விட்டு புது ஆட்டம் போடலாம் என்றால்----
ReplyDeleteஅன்பிற்குறிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அந்த திருச்செந்தூர் சுப்ரமண்யசாமி கடவுளுக்குத்தான் தெரியும்.
Deleteஅடிக்கடி தேர்தல் என்பது நாட்டின் பண வீக்கத்தை அதிகரிக்கும். விலைவாசிகள் எகிறும். எல்லா துன்பங்களும் சாதாரண எளிய மக்களுக்குத் தான்.
ReplyDeleteவெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் எந்த ஆட்சியிலும் இப்படிப்பட நிலைகள் ஏற்படுவது எதிர்காலத்தில் வாடிக்கையாக போய்விடுகிற மாதிரி அரசியல் நிலைகள் மாறிக் கொண்டே வருகின்றன. அதற்கெல்லாமான சட்டத்தீர்வுகளுக்கு யோசிக்க தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதே உண்மை.
நன்றி அய்யா. நமதுநாட்டில் அரசியல் என்பது ஒரு Business ஆக மாறி விட்டது. பங்குதாரர்களுக்குள் பிரச்சினை என்றால் பாதிக்கப் படுவது மக்கள் தான்.
Deleteபொதுத்தேர்தல் நடத்துவதே சிறந்தது என்பதே என் கருத்தும். அதற்கும் ஏகப்பட்ட சட்ட விதிகளை சொல்வார்கள். பெரும்பான்மை மக்களுக்கு எதிராக, அதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலபேர்களால் முடிவு செய்யப்படுவது ஜனநாயக நகைமுரண். சட்ட விதிகளில் மாற்றம் செய்து தேர்தல் நடத்த வழிசெய்யவேண்டும்.
ReplyDeleteபன்னீர்செல்வம், தீபா என்றெல்லாம் தேடுபவர்கள் சொல்வது ஒரே விஷயத்தைத்தான். சசிகலா எதிர்ப்பு. எதிர்க்க இவருக்கு ஆதரவு. அவ்வளவுதான்.
நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. இங்கு நமதுநாட்டில் நிறையவே நகைமுரண்கள். இன்னும் சற்று நேரத்தில் சசிகலா விடுதலை என்று செய்தி வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. அப்போது காட்சிகள் மாறலாம்.
Deleteஇறுதியில் தாங்கள் கூறியிருப்பதே சிறந்த தீர்வு ஐயா
ReplyDeleteஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஆம் ! சட்ட மன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதே நல்லது உங்கள் கத்தே!!!..நல்ல கட்டுரை..
ReplyDeleteகீதா
நன்றி மேடம்.
Deleteசட்டசபையைக் கலைக்கட்டும்..
ReplyDeleteவெற்றி பெற்று எவர் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் உள்ளே வரட்டும்!..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete>>> வீட்டை பூட்டி காவல்காரரிடம் கொடுத்து விட்டு திரும்ப வந்து பார்ததால் திமிர் பிடித்த காவல்காரர் திருப்பதிக்கு போயிருக்கிறேன் வரும் வரை காத்திருக்கவும் என்று கடிதம் எழுதி வைத்து இருந்தால் என்ன செய்வது?..<<<
ReplyDeleteஇப்படிச் சொன்னாலும் சொல்லலாம்!..
>>> இந்த வீடே என்னுடையது.. ஓரளவுக்குத் தான் பொறுமை காக்க முடியும்!. எதிர்த்துப் பேசினால் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!..<<<
தங்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி. ஜெயலலிதா மறைவிற்குப் பின், நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். விதி வலியது.
Deleteநன்றாக ஆழமாக, நீள, அகலம் பார்த்து அலசி உள்ளீர்கள்.
ReplyDeleteபதில் காலத்தின் கையில் தான் இருக்கிறதே!
கவிஞரின் கருத்துரைக்கு நன்றி. தீர்ப்பை சொல்லி விட்டார்கள். தமிழக அரசியல் அடுத்த கட்டத்திற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
Deleteசுடச்சுட பின்னூட்டம் எழுத முடியவில்லை. a LOT OF WATER HAS FLOWED UNDER THE THAMES.... ஐஅதிமுக கட்சியில் சசிகலாவின் பொதுச் செயலாளர் தேர்வெ கேள்விக்குறி. ஆனால் அது அவர்களின் கட்சிப் பிரச்சனை இப்போது அவர் சிறைக்குச் செல்லும்போது தினகரனை கட்சிப் பொறுப்புக்கு உள்ளாக்கியதும் சரியாகத் தோன்றவில்லை அதுவும் கட்சிப் பிரச்சனைஅவரால் நியமிக்கப் பட்ட எடப்பாடியை அரசமைக்கச் சொல்லிக் கூப்பிட்டிருக்கிறார்கள் இதையெல்லாம் மக்கள் கேள்வி கேட்க வேண்டுமென்றால் இன்னொரு தேர்தல் வரவேண்டும் அதுவரை நாம் பார்வையாளர்களே
ReplyDelete// இன்னொரு தேர்தல் வரவேண்டும் அதுவரை நாம் பார்வையாளர்களே //
Deleteஎன்ற அருமையான கருத்தைச் சொன்ன, அய்யா ஜீஎம்பி அவர்களுக்கு நன்றி.
சட்டசபையைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி இருக்கலாம். ஆனால் சசிகலா தரப்பினர் எல்லா எம் எல் ஏக்களையும் தங்கள் பக்கம் இழுத்து விட்டார்கள்! :( இனி நடக்கப் போவதை வேடிக்கை பார்க்கலாம்! வேறென்ன செய்வது?
ReplyDeleteநன்றி மேடம்.
Delete//(நிச்சயம் அந்த யானையை சாதாரண மக்கள் இருக்கும் தெருக்களின் பக்கம் அழைத்து வந்து இருக்க மாட்டார்கள் எனலாம்)//
ReplyDeleteஅருமை
ஆசிரியர் மது அவர்களுக்கு நன்றி.
Deleteபெரும்பாலான மக்களின் கருத்து சசிகலாவுக்கு எதிராக இருந்த போதிலும், அவர் ஆட்சி அமைவதை நம்மால் தடுக்க முடியாமல் வெறும் பார்வையாளராகத் தான் இருக்க வேண்டியிருப்பது பெரிய சோகம். நீங்கள் சொல்வது போல் ஆட்சியைக் கலைத்து விட்டுத் தேர்தலை நடத்தினால் தான் மக்களின் ஆதரவு யாருக்கென்று தெரியும்.
ReplyDeleteநல்ல அரசியல் அலசல்.
ReplyDeleteகவனித்தபடி உள்ளேன் புதினத் தாள்களில் சகோதரா.