Thursday, 4 June 2015

விளம்பரமே இல்லாத விளம்பரப் பதிவுகள்



பல நண்பர்கள் ஏற்கனவே இதுபற்றி எழுதிய விஷயம்தான். இருந்தாலும் அந்த பதிவுகளில் அப்படி என்னதான் இருக்கிறது என்று போய் பார்த்தேன். எனக்கு தட்டுப்பட்ட ஒன்றிரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஆசைதான். உதாரணத்திற்கு தமிழ்மணத்தில் வெளியாகும் பொக்கிஷம் மற்றும் வார்த்தை விருந்து போன்றவை. இன்னும் சில வலைத்தளங்களையும் சொல்லலாம்.

இந்த மாதிரியான பதிவுகளை என்ன காரணத்திற்காக யார் எழுதிறார்கள்? எதற்காக எழுதிறார்கள்? என்றே தெரியவில்லை. எழுதுபவரின் சுயவிவரம் (PROFILE) எங்குமே இருக்காது. சிலசமயம் பதிவின் வெளியே தமிழ்மணத்தின் முகப்பில் kamali , என்றும் உள்ளே Posted by hari என்றும் இருக்கும். சில பதிவுகளில் எழுதுபவர் பெயர் வெவ்வேறாக இருந்தாலும் போய்ச் சேருவது என்பது ஒரே பதிவிற்குத்தான். தமிழ்மணத்தில் அதிகம் ஹிட்ஸ் வாங்குவதற்காக அல்லது முதலிடம் வருவதற்காக அப்படிச் செய்கிறார்களா என்றால் அப்படி செய்வதாகவும் தெரியவில்லை.

பெரும்பாலும் பொதுநலம் சார்ந்த அல்லது உடல்நலக் குறிப்புகளையே பதிவுகளாகப் போடுகிறார்கள்

விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்த பொது மக்கள்

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat”

"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் ?

பென்டிரைவ் விலை இருமடங்காக வாய்ப்பு!

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலையை பற்றி தெரிந்து கொள்வோம்

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவதும் ஏன்? எதற்கு?”
“KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

“1915களில் திருச்சி பெரிய கடை வீதியின் அரிய புகைப்படம்..

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!

ஒரு பதிவினில் 60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து....!! என்று ஒரு செய்தி. போய் பார்த்தால் அப்படி சொல்லும் டாக்டர் யார் என்பது பற்றிய குறிப்பே இல்லை..

சிலசமயம் கவர்ச்சியாக சினிமா செய்திகளைக் கொண்டு இருக்கும். சில நண்பர்கள் தினத்தந்தி, தினமலர், தினமணி, தினகரன் என்று தமிழ் நாளிதழ்களின் வார மலர்களில் வந்தவற்றை அப்படியே COPY & PASTE முறையில் தங்கள் பதிவுகளில் பகிர்ந்து இருப்பார்கள். அவற்றை இந்த விளம்பர பதிவுகள் மறுபடியும் COPY & PASTE முறையில் வெளியிடுவதைக் காண முடிகிறது.

“ அருகிலுள்ள விளம்பரத்தை ஒரு க்ளிக்காவது அழுத்துங்கள் நண்பர்களே.. : - என்று கெஞ்சலாக கேட்டு இருப்பார்கள். சரி இதனால் என்னதான் ஆகப் போகிறது என்று, அவர்கள் சொல்லும் விளம்பரம் எங்கு இருக்கிறது என்று தேடிப் பார்த்தால் எங்குமே இருக்காது. இதுவாவது பரவாயில்லை, ஒரு பதிவில் சரியான ஒரு விளம்பரத்தைக் கண்டுபிடித்துக்ளிக் செய்தால் மட்டுமே விளம்பரத்தை நீக்க முடியும். என்று கட்டம் கட்டி சொல்லி இருக்கிறார்கள்.கை வலிக்கும் வரை அந்த கட்டத்தை க்ளிக் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். இப்படி இல்லாத விளம்பரத்தைச் சொல்லி வரும் பதிவுகளை என்னவென்று சொல்வது.

இது மாதிரியான பதிவுகளை பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ளலாம். அப்படியே புறக்கணித்து விடலாம். இல்லை டைம் பாஸிங்கிற்காக என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் போய்ப் பார்க்கலாம். பாதகம் இல்லை. ஆனாலும் ரகசிய கேமரா போன்று, இதிலும் ஏதேனும் உள்குத்து விஷயங்கள் ஏதும் இவற்றில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. தொழில்நுட்பம் தெரிந்த நண்பர்கள்தான் சொல்ல வேண்டும். எவை எப்படி இருப்பினும் அவை நமது வலைத்தளத்தை பாதிக்காமல் இருந்தால் சரிதான்.





41 comments:

  1. இந்த மாதிரி விளம்பர இடைஞ்சல்களால் எரிச்சல்தான் ஏற்படுகிறது

    ReplyDelete
  2. I think they get paid for the visitors hits on the advertisement.

    Nice and relevant post for the time

    God Bless YOu

    ReplyDelete
  3. ஒன்றிரண்டு பதிவு படிக்க முயற்சிக்கும் போது தடை ஆகையால் விட்டு விட்டேன், எரிச்சல் தான் வருகிறது.

    ReplyDelete
  4. வணக்கம்.நல்ல தகவலைத் தந்தீர்கள். நன்றி அய்யா,

    ReplyDelete
  5. நானும் பலமுறை இந்த தலைவலிகளை சந்தித்து இருக்கிறேன் நண்பரே..
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  6. இதுபோன்ற பதிவுகளை புறக்கணிப்பதே நல்லது. இவைகளை தடுக்க தமிழ்மணம் ஏன் ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் கேள்வி. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  7. இந்தப் பிரச்சினை பல நாட்களாக இருந்து வருகிறது. அவைகளைப் புறக்கணிப்பது ஒன்றே வழி.

    ReplyDelete
  8. எனக்கும் இந்த அனுபவம் உண்டு. இந்த தளங்களுக்கு போகாமல் இருப்பது ஒன்று தான் நாம் தலைவலியில் இருந்து தப்பிக்க ஒரே வழி.
    த ம 6

    ReplyDelete
  9. அப்படி விளம்பரங்கள் உள்ள
    பதிவுகளை நான் தொடர்வதில்லை
    நல்ல பயனுள்ள கேள்விகளை
    எழுப்பிப்போன பதிவுக்கு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. விளம்பரத்தில் இவ்வளவு சிக்கல்களா? இவ்வாறான தளங்களைத் தவிர்த்தால் மட்டுமே கவனத்தை வாசிப்பில் மட்டுமே செலுத்த உதவும். இவ்வாறான நிகழ்வுகளை நான் எதிர்கொண்டதில்லை. இது ஓர் எச்சரிக்கைப்பதிவாக உள்ளது.

    ReplyDelete
  11. பதிவைத் திறந்தால் விளம்பரம் கண்டால் அதைப் படிப்பதையே தவிர்த்து விடுவேன்

    ReplyDelete
  12. உண்மைதான் நண்பரே, தமிழ்மணத் தினசரிப் பதிவுகளில் டாப்-10இல் வந்திருக்கிறதே என்று சொடுக்கினால்... விளம்பரப் பூச்சிகளின் தொல்லையால் திரும்பவேண்டிய நிலை. இதைத் தமிழ்மண நண்பர்களே பார்த்துத் திருத்தினால்தான் உண்டு. நல்ல பதிவு.தமகூ1

    ReplyDelete
  13. நான் பொதுவாக என் எல்லையைத்தாண்டி வேறு எங்குமே அனாவஸ்யமாகச் செல்வதில்லை. அதனால் எனக்குத் தொல்லையும் இல்லை. ஆரம்ப நாட்களில் ஓரிருமுறை நானும் இவைகளில் தெரியாமல் மாட்டி எரிச்சல் அடைந்ததும் உண்டு. பலரின் கருத்துக்களை அறிய நல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வு.

    வலைச்சர வேலைகளால் டேஷ் போர்டு பக்கமே வரவில்லை. அதனால் இங்கு வந்துசேர மிகவும் தாமதமாகி விட்டது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. அந்தப் பக்கமே செல்ல வேண்டாம்...!

    ReplyDelete
  15. நானும் இந்த அனுபவத்தை பெற்றவன் தான்! நலமா நண்பரே!

    ReplyDelete
  16. ஐயா நாங்கள் அந்தப் பக்கமே போவதில்லை.....நீங்களும் அந்தப் பக்கம் போகவே வேண்டாம் என்று தாழ்மையுடன் சொல்லுகின்றோம்....ஆனால் பலருக்கும் இது ஒரு நல்ல பதிவு பலருக்கும்....

    ReplyDelete
  17. சில விளம்பரங்களை சொடுக்கினால் நமது கணனியில் விளம்பரங்கள் வரும்படி ஒரு மென்பொருள் இன்ஸ்டால் ஆகிவிடுமாம். ஒருமுறை எனக்கு இதுபோல ஆயிற்று. அன்றிலிருந்து ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன். எச்சரிக்கைப் பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > சென்னை பித்தன் said...

    அதுதான் கருத்துரை தந்த மூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி.

    // இந்த மாதிரி விளம்பர இடைஞ்சல்களால் எரிச்சல்தான் ஏற்படுகிறது //

    நான் குறிப்பிட்ட இந்த பதிவுகளில் எங்கு தேடினும் விளம்பரமே இல்லை; அதனால்தான் தலைப்பையே இவ்வாறு வைத்தேன்.

    ReplyDelete
  19. மறுமொழி > வெட்டிப்பேச்சு said...

    வேதாந்தி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    // I think they get paid for the visitors hits on the advertisement. //

    No chance sir. Because, I have not seen any advertisements in these blogs.

    // Nice and relevant post for the time. God Bless YOu //

    Thank you for your blessings Sir.

    ReplyDelete
  20. மறுமொழி > R.Umayal Gayathri said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    // ஒன்றிரண்டு பதிவு படிக்க முயற்சிக்கும் போது தடை ஆகையால் விட்டு விட்டேன், எரிச்சல் தான் வருகிறது. //

    நீங்கள் குறிப்பிடுவது விளம்பரங்கள் உள்ள பதிவுகள். நான் குறிப்பிட்ட இந்த பதிவுகளில் விளம்பரங்கள் ஏதும் இல்லை. ஆனாலும் அருகிலுள்ள விளம்பரங்களை சொடுக்க சொல்லுகிறார்கள். அதுதான் எனக்கு புரியவில்லை.

    ReplyDelete
  21. மறுமொழி > mageswari balachandran said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  22. சமீபத்தில் ஒரு பதிவின் உள்ளே சென்றால் அடைத்துக் கொண்டு விளம்பரம். நாம் கீழே நகர அதுவும் அப்படியே படிக்க விடாமல். சரி அமுக்கிப் பார்த்து விட்டு நகர்த்தி விடலாம் என்றால் என்ன செய்தாலும் நகரும் வழியில்லை. கோவத்தை அடக்கிக் கொண்டு வந்து விட்டேன்.

    ReplyDelete
  23. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  24. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // இதுபோன்ற பதிவுகளை புறக்கணிப்பதே நல்லது. இவைகளை தடுக்க தமிழ்மணம் ஏன் ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் கேள்வி. தகவலுக்கு நன்றி! //

    அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. நீங்கள் குறிப்பிடுவது விளம்பரங்களே தலைவலியாக உள்ள பதிவுகளைப் பற்றி. ஆனால், பிரச்சினை என்னவென்றால், நான் குறிப்பிட்ட இந்த பதிவுகளில் விளம்பரங்களே இல்லை. ஆனாலும் அருகிலுள்ள விளம்பரங்களை சொடுக்க சொல்லுகிறார்கள். என்னவென்று சொல்வது? எனவே தமிழ்மணம் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  25. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

    முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  26. மறுமொழி > S.P. Senthil Kumar said...

    சகோதரர் அவர்களது கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  27. மறுமொழி > Ramani S said...

    கவிஞர் அய்யாவிற்கு நன்றி.

    ReplyDelete
  28. மறுமொழி > Dr B Jambulingam said...

    முனைவர் அவர்களது கருத்துரைக்கு நன்ரி.

    // விளம்பரத்தில் இவ்வளவு சிக்கல்களா? இவ்வாறான தளங்களைத் தவிர்த்தால் மட்டுமே கவனத்தை வாசிப்பில் மட்டுமே செலுத்த உதவும். இவ்வாறான நிகழ்வுகளை நான் எதிர்கொண்டதில்லை. இது ஓர் எச்சரிக்கைப்பதிவாக உள்ளது. //

    இது ஒரு எச்சரிக்கைப் பதிவுதான் அய்யா. கீழே ரஞ்சனி மேடம் சொல்வதை கவனியுங்கள்.

    ReplyDelete
  29. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M B அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  30. மறுமொழி > Muthu Nilavan said...

    ஆசிரியர் அவர்களது கருத்துரைக்கு நன்றி.

    // உண்மைதான் நண்பரே, தமிழ்மணத் தினசரிப் பதிவுகளில் டாப்-10இல் வந்திருக்கிறதே என்று சொடுக்கினால்... விளம்பரப் பூச்சிகளின் தொல்லையால் திரும்பவேண்டிய நிலை. இதைத் தமிழ்மண நண்பர்களே பார்த்துத் திருத்தினால்தான் உண்டு. நல்ல பதிவு.தமகூ1 //

    நீங்கள் சொல்வது விளம்பரங்களை அடைத்துக் கொண்டு வருமானத்தை மையமாகக் கொண்டு வரும் பதிவுகளுக்கு பொருந்தும். ஆனால் நான் சொல்ல வந்தது, குறிப்பிட்ட இந்த பதிவுகளில் விளம்பரங்கள் ஏதும் இல்லை, ஆனாலும் அருகிலுள்ள விளம்பரங்களை சொடுக்க சொல்லுகிறார்கள் என்பதுதான். அதனால்தான் பதிவின் தலைப்பை ”விளம்பரமே இல்லாத விளம்பரப் பதிவுகள்” என்று வைத்தேன். கீழே ரஞ்சனி மேடம் சொல்வதையும் கொஞ்சம் கருத்தில் வையுங்கள்.

    ReplyDelete
  31. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள V.G.K அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி.

    // நான் பொதுவாக என் எல்லையைத்தாண்டி வேறு எங்குமே அனாவஸ்யமாகச் செல்வதில்லை. அதனால் எனக்குத் தொல்லையும் இல்லை.//

    உங்கள் வழி, எப்போதும் தனி வழிதான். யாரும் குறுக்கிட மாட்டார்கள்.

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.

    என்பது திருக்குறள். (எண் - 341)

    // ஆரம்ப நாட்களில் ஓரிருமுறை நானும் இவைகளில் தெரியாமல் மாட்டி எரிச்சல் அடைந்ததும் உண்டு. பலரின் கருத்துக்களை அறிய நல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வு.//

    உங்களது பாராட்டிற்கு நன்றி.

    // வலைச்சர வேலைகளால் டேஷ் போர்டு பக்கமே வரவில்லை. அதனால் இங்கு வந்துசேர மிகவும் தாமதமாகி விட்டது. பகிர்வுக்கு நன்றிகள். //

    எந்த வேலையாக இருந்தாலும், நீங்கள் எப்படியும் எனது பதிவிற்கு வந்து கருத்துரை தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

    ReplyDelete
  32. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

    // நானும் இந்த அனுபவத்தை பெற்றவன் தான்! நலமா நண்பரே! //

    நலம்தான் அய்யா! ஆனாலும் என்னால் தொடர்ச்சியாக கம்ப்யூட்டரில் உட்கார முடியவில்லை. இதனால் பல பதிவுகளைப் படிக்க மட்டுமே இயலுகிறது; உடனுக்குடன் கருத்துரை ஏதும் தர முடிவதில்லை.

    ReplyDelete
  33. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    நல்ல ஆலோசனை ஒன்றை தந்தமைக்கு நன்றி.!

    ReplyDelete
  34. இந்த தளங்களெல்லாம் Spam மெசேஞ் போன்றது. பேஸ்புக்கை நன்கறிந்தவர்கள் நிச்சயம் அறிவார்கள். ஒரு மெசேஜ் நமக்கு வரும் அதனை கிளிக் இட்டால் விபரீத வீடியோக்களோ , புகைப்படங்களோ நம்மை தொடர்பு படுத்தி பரவிடும். பிறகு நமது சுயவிவரங்கள் திருடப்பட்டது கடைசிவரை நமக்குத் தெரியாது . அனுபவித்தவர்கள் உணர்வீர்களென நினைக்கிறேன் . சமீபத்தில் round.com என்கிற Spam வலம்வந்ததை கவனித்திருப்பீர்கள். அதனைப் போலவே வலைப்பதிவுலகில் உள்நுழைந்திருக்கும் தளங்கள்தான் தற்போது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தளங்கள் . இத்தளங்களில் வீடியோக்களோ புகைப்படங்களோ இடம்பெற்றிருக்காது என்றாலும் உங்களின் சுய விவரம், ஈமெயில், கைபேசி எண்கள், திருடும் செயலியாக இத்தளங்கள் அமைக்கப்பெற்றது. ஆகவே எளிதாக இவற்றை முடக்கிவிட முடியாது. கூடுமானவரை கவனத்தில் கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுங்கள்.

    ReplyDelete
  35. வணக்கம்
    ஐயா.

    நல்ல தகவலை பகிர்ந்துள்ளீர்கள்... விளம்பரம் உள்ள பக்கம் தயவு செய்து போக வேண்டாம் ஐயா நீங்கள் ஒரு விளம்பரத்தில் கிளிக் செய்யும் பட்சத்தில் தங்களின் கணனியில் உள்ள TASK MANAGER என்ற போல்டரில் தங்களின் கணனியில் உள்ள அனைத்து மென் பொருளும் வேலை செய்யும் அதனுடன் சேர்ந்து இயங்கி நமது கணனியில் உள்ள தகவலை திருடிக்கொண்டே இருக்கும் .... அதனால் Task Manager என்றதை கிளிக் பன்னி அதில் வித்தியாசமான புரோக்கிரேம் இருந்தால் அழித்து விடவும்... ஏது இருப்பின்
    தெடர்பு கொள்ளவும்
    rupanvani@yahoo.com.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  36. வணக்கம்
    ஐயா

    த.ம 14

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  37. சகோ .ரூபன் சொன்னது போல் இருக்கும் என்பதால் ,இம்மாதிரி பதிவுகளை பார்க்காமல் இருப்பதே நல்லது :)

    ReplyDelete
  38. நல்ல தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள் ஐயா
    இதுபோன்ற பதிவுகளை புறக்கணிப்பதே சிறந்தது என்று எண்ணுகின்றேன்
    நன்றி ஐயா
    தம+1

    ReplyDelete
  39. உண்மையில் நல்ல காத்திரமானதொரு பதிவு. நன்றி.
    http://manathil-paddathu.blogspot.in

    ReplyDelete