Wednesday, 22 October 2014

மதுரை - வலைப்பதிவர்கள் சந்திப்பு (2014) அழைப்பு


தமிழ் வலைப் பதிவர்களுக்காக, :மதுரை, தெப்பக்குளம், எண் 3, மேற்கு வீதியில் அமைந்துள்ள கீதா நடன கோபால நாயகி மந்திர்  அரங்கத்தினுள் வரும் ஞாயிற்றுக் கிழமை (26.10.2014) காலை தொடங்கி மாலை வரை “ தமிழ் வலைப் பதிவர்கள் “ சந்திப்பு விழா நடக்க இருக்கிறது

  
முற்பகல் நிகழ்ச்சிகள்:

காலை 9 மணிக்கு, தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. பின்னர் திரு சங்கரலிங்கம் (உணவு உலகம்) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார். அதுசமயம், அய்யா அன்பின் சீனா (வலைச்சரம்) அவர்கள் தலைமை தாங்குகிறார். கவிஞர் ரமணி (தீதும் நன்றும் ) அவர்கள் துணைத் தலைவராக இருக்கிறார். முன்னிலை வகிப்பது ஆசிரியர் மதுரை சரவணன் அவர்கள்.


தொழில் நுட்ப பதிவர்களுக்கு பாராட்டு செய்தவுடன், வலைப்பதிவர்களது சுய அறிமுகம் ( SELF INTRODUCTION) தொடங்கும். (எனவே வலைப் பதிவர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் வலைதளத்தினைப் பற்றியும் சுருக்கமாக குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.)

அதன் பின்னர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரை செய்ய இருக்கிறார். அன்னாரது உரைக்குப் பின் உணவு இடைவேளை

பிற்பகல் நிகழ்ச்சிகள்:

பிற்பகல் பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் சிறப்புரை செய்கிறார்.

பின்னர் குடந்தை ஆர்.வி சரவணன் அவர்கள்  எழுதி இயக்கிய சிலநொடி சிநேகம் என்ற குறும்படம் வெளியிடப்படுகிறது. மற்றும் வலைப் பதிவாளர்கள் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் எழுதிய “கரந்தை மாமனிதர்கள் , கிரேஸ் பிரதிபா (தேன்மதுரத் தமிழ்) அவர்கள் எழுதிய “துளிர்விடும் விதைகள் , மு.கீதா (வேலு நாச்சியார்) அவர்கள்  எழுதிய ஒரு கோப்பை மனிதம் , P.R.ஜெயராஜன் (சட்டப் பார்வை) அவர்கள் எழுதிய நல்லா எழுதுங்க ... நல்லதையே எழுதுங்க - ஆகிய நூல்கள்  வெளியிடப்பட இருக்கின்றன.

தாங்கள் வெளியிட இருக்கும் குறும்படம் மற்றும் நூல்கள் சம்பந்தமாக பதிவர்கள் வெளியிட்ட பதிவுகள்


கரந்தை மாமனிதர்கள்

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில்              
http://velunatchiyar.blogspot.com/2014/10/blog-post_97.html

துளிர் விடும் விதைகள் புத்தக வெளியீடு

நிகழ்ச்சியின் நிறைவாக திண்டுக்கல் தனபாலன் அவர்கள் நன்றியுரை நவிலுகிறார். அதன்பின்னர் நமது இந்திய நாட்டின் தேசியகீதம் பாடலுடன் விழா நிறைவுறும்.

வருக! வருக! வணக்கம்!

இந்த தமிழ் வலைப் பதிவர்கள் சந்திப்பினுக்கு அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறேன்!

மேலும் விவரங்களுக்கு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் கீழ்க்கண்ட பதிவுகளைக் காணுங்கள்


ALL PICTURES THANKS TO -  www.tamilvaasi.com
 


41 comments:

 1. அருமையாக முழுமையாக வலைப்பதிவர்கள்
  நிகழ்ச்சியினை பதிவிட்டமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  (திருச்சியிலிருந்து வரும் பஸ்
  மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வரும்
  அங்கிருந்து நிறைய பஸ்கள் தெப்பக்குளத்திற்கு வரும்
  சந்திக்க மகிழ்வோடு காத்திருக்கிறோம்)
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 2. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. பதிவர்கள் அனைவரையும் வரவேற்க 'ஜோக்காளி' காத்திருக்கிறான் !
  த ம 2

  ReplyDelete
 4. பதிவர் சந்திப்பு விழா வெற்றிகரமாகவும், மிகப்பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகள்.

  திருச்சி மாவட்டப் பதிவர்களின் பிரதிநிதியாகச் செல்லவிருக்கும் தங்கள் பயணமும் இனிமையாகவும், பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய என் நல்வாழ்த்துகள்.

  மிக முக்கியமான விஷயங்கள்:

  மறக்காமல் கேமராவுடன் செல்லுங்கள். அதன் பேட்டரியை இப்போதே, (மின்சாரம் இருக்கும்போதே) சார்ஜ் போட்டுக்கொள்ளுங்கள். விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் புகைப்படமாக எடுத்துத் தள்ளுங்கள். பிறகு அந்தக் கேமராவை சர்வ ஜாக்கிரதையாக வீட்டுக்கு எடுத்து வாருங்கள். பதிவேற்றுங்கள். கண்குளிரக் காணத் துடிப்பாகக் காத்துக்கொண்டு இருக்கிறோம். :)))))

  அன்புடன் VGK

  ReplyDelete
 5. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 8. அனைவரும் ஒன்று கூடி சந்தோஷமாக பதிவர் விழா சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா ...உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 9. பதிவர் கூட்டம் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். அதன் புகைப்படத் தொகுப்பை தாங்கள் வழங்குவீர்கள் ...ஆகையால் காத்திருக்கிறோம். இங்கு இருந்து காண ஆவலாக உள்ளது.
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  ReplyDelete
 11. பதிவர் சந்திப்பில் சந்திப்போம் ஐயா
  தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. விழா இனிதே சிறப்பாய் நடைபெற்றிட வாழ்த்துகள்!

  தீபாவளி வாழ்த்துகள்!

  ReplyDelete
 13. மிக அழகானத் தெளிவான பதிவு விழாவைப் பற்றி!

  மிகச் சிறப்பாக விழா நடைபெற வாழ்த்துக்கள்!

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! ஐயா!

  ReplyDelete
 14. விலை மதிப்பற்ற "மதுரை - வலைப்பதிவர்கள் சந்திப்பு விழா" மாபெரும் வெற்றியடைய
  குழலின்னிசை வலைப் பூ தனது வாழ்த்து வாசத்தை நேசமுடன் வழங்குகிறது.
  புதுவை வேலு

  ReplyDelete
 15. மதுரையில் நடைபெற இருக்கும் வலைப் பதிவர் திருவிழா வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் விழா சிறக்க

  ReplyDelete
 17. வாழ்த்துகள்! விழா சிறக்க

  ReplyDelete
 18. மறுமொழி > Ramani S said...

  // அருமையாக முழுமையாக வலைப்பதிவர்கள்
  நிகழ்ச்சியினை பதிவிட்டமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் //

  கவிஞர் அய்யாவுக்கு வணக்கம் ! இணையத்தில் இருந்த அழைப்பிதழ் படங்களில் , நடைபெறும் தேதியில் ஆண்டினை ( 2014) குறிக்க மறந்து விட்டார்கள். எனவே அதனை மட்டும் எடிட் செய்து படங்களை வெளியிட்டுள்ளேன்.

  // (திருச்சியிலிருந்து வரும் பஸ் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வரும்அங்கிருந்து நிறைய பஸ்கள் தெப்பக்குளத்திற்கு வரும் சந்திக்க மகிழ்வோடு காத்திருக்கிறோம்) //

  நன்றி அய்யா! மதுரையில் சந்திப்போம்!

  ReplyDelete
 19. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  வாழ்த்துரை தந்த சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 20. மறுமொழி > Bagawanjee KA said...

  வலைப் பதிவர்களை வரவேற்கக் காத்திருக்கும் ”ஜோக்காளி” நேரில் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்! நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  // பதிவர் சந்திப்பு விழா வெற்றிகரமாகவும், மிகப் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகள். //

  மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களின் வாழ்த்துரைக்கும், நீண்ட கருத்துரைக்கும், அன்பான ஆலோசனைகளுக்கும் நன்றி!

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் பதிவர் சந்திப்பு விழாவிற்கு .

  கலந்து கொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும் பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
  வாழ்த்துரை தந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 24. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  சகோதரி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 25. மறுமொழி > r.v.saravanan said...

  வாழ்த்துரை தந்த சகோதரர் டைரக்டர் குடந்தையூர் ஆர்.வி சரவணன் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 26. மறுமொழி > Angelin said...

  வாழ்த்துரை தந்த சகோதரிக்கு நன்றி!

  ReplyDelete
 27. மறுமொழி > R.Umayal Gayathri said...

  வாழ்த்துரை தந்த சகோதரிக்கு நன்றி!

  ReplyDelete
 28. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

  எங்கிருந்த போதும் , மறக்காமல் கருத்துரை தரும் சகோதரர் யாழ்பாவணன் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 29. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

  கரந்தை ஆசிரியருக்கு நன்றி! மதுரை பதிவர் சந்திப்பில் சந்திப்போம்!

  ReplyDelete
 30. மறுமொழி > அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

  மயிலாடுதுறை சகோதரருக்கு நன்றி!

  ReplyDelete
 31. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

  சகோதரர் துளசிதரன் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 32. மறுமொழி > yathavan nambi said...

  வாழ்த்துரை தந்த சகோதரர் புதுவை வேலு அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 33. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யா அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 34. விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளும்.

  உங்கள் தளத்தில் புகைப்படங்களைக் காண நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 35. அழைப்பிதழ் தொடங்கி நிகழ்ச்சி நிரல் வரை அருமையாய்ப் பகிர்ந்து நூல் வெளியிடுபவர்களின் அறிவிப்புப் பதிவுகளையும் இணைத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 36. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  சகோதரர் வெங்கட் நாகராஜ அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி! நீங்களும் மதுரைக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

  ReplyDelete

 37. மறுமொழி > தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

  சகோதரி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 38. பகிர்வுக்கு நன்றி. அவசியம் வருகிறேன்.

  ReplyDelete
 39. மறுமொழி > சிவகுமாரன் said...

  சகோதரர் சிவகுமாரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நானும் இப்போது மதுரைக்குத்தான் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நேற்று இரவு இங்கு (திருச்சியில்) நல்ல மழை. இப்போது விட்டு இருக்கிறது. மதுரையில் சந்திப்போம்!

  ReplyDelete