Thursday, 25 September 2014

தி இந்து – நவராத்திரி மலர் – 2014



நேற்று, வீட்டிற்கு பேப்பர் போடும் தம்பி “சார், இந்து நவராத்திரி மலர் வாங்குவீர்களா? “ என்று தயங்கியபடியே கேட்டார். அவரது கையில் தி இந்து நவராத்திரி மலர் 2014. “சரிப்பா வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வாங்கினேன். தீபாவளி மலர் அளவில் இருந்தது. விலை ரூ80/= (பக்கங்கள் 132).

வண்ணமும் வாசமும்:

ஆசிரியர் கே.அசோகன் அவர்கள் செப்டம்பர் 16,2014 அன்றுடன் தி இந்து தமிழ் நாளிதழ் தொடங்கி , வாசகர்களாகிய உங்களின் நல்லாதரவோடு ஓராண்டைப் பூர்த்தி செய்யும் நிறைவோடு வாசம் மிக்க இந்தமலரை சமர்ப்பிப்பதில் உவகை அடைகிறோம் “ என்று முன்னுரை படிக்கிறார்.

ஓவியர் சிவா வரைந்த பிள்ளையார் படத்துடனும், தெய்வத்தின் குரலில் மகா பெரியவர் சொன்ன அருள்வாக்கோடும் மலர் துவங்குகிறது. தீபாவளி மலர் போன்று நிறைய வண்ணப் படங்கள், கட்டுரைகள், அனுபவம், சிறுகதை என்று இந்த நவராத்திரி மலர் விரிகின்றது.

நவராத்திரி சிறப்புக்கள்:

புராணங்களில் சொல்லப்பட்ட விளக்கம் மற்றும் சோழர் காலம் முதல் மராட்டியர் காலம் வரை நவராத்திரி விழா கொண்டாடப் பட்ட வரலாற்றைச் சொல்லுகிறார் (கலையின் நாயகிக்கு ஒரு விழா) அ.கா.பெருமாள்.
இந்த நவராத்திரி மலரில் என்.ராஜேஸ்வரி அவர்களின் நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன என்பது தனிச் சிறப்பு. கூடவே வண்ணப்படங்கள். ஒவ்வொரு நாளும் கொண்டாடும் முறைகள்  பற்றி குறிப்பிடும் அவர் இந்த மலரின் இறுதியில் கொலு வைக்கப்படும் ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு தத்துவம் உண்டு என்கிறார். 
(படம் மேலே) “கொலு உருவான கதையில் கொலுவில் சுண்டல் வைக்கும் வழக்கம் எப்படி வந்தது என்பதற்கு, வட இந்திய கிராமப்புறங்களில் சொல்லப்படும் அனுசூயா கதையை அழகாகச் சொல்லுகிறார்

கொலு வைத்தல்:

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் நவராத்திரி வைபவங்கள் பற்றி சொல்லுகிறார் கே.கே மகேஷ். நம் ஊர் தசரா போன்று வேறு பல நாடுகளில் நடக்கும் கொண்டாட்டத்தை தரணி எங்கும் தசரா வில் (ஸ்ரீஜா வெங்கடேஷ்) காணலாம். இன்னும் சாரி எழுதிய “பன்னிரு நவராத்திரிகள்,  கா.சு.வேலாயுதன் எழுதிய “கோவையின் தசரா கோலங்கள் ஆகியன.

குள.சண்முகசுந்தரம் எழுதும் நாட்டார் வரிசைக் கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. இந்த மலரில் மெச்சி ஆச்சி வீட்டு கொலுவைப் பற்றி சொல்லுகிறார். மைசூர் தசரா போன்று ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் கொண்டாடப்படும் தசரா பற்றிய விவரத்தினைத் தருகிறார் ராமேசுவரம் ராஃபி. நவராத்திரிக்கு ஏற்ற ஒவ்வொரு நாளும் ப்டைக்கப்படும் சுண்டல் போன்ற நிவேதனங்கள் பற்றி சொல்லுகிறார் விருகம்பாக்கம் மீனலோசனி. இன்னும்,  கொலு பொம்மைகள் தங்களுக்குள் பேசினால் எனன பேசும் என்று கற்பனை செய்து பார்க்கிறார் தேனுகா.

வேறு கட்டுரைகள்:

இடையிடையே வேறு சில கட்டுரைகள். ஒரு வரவேற்பறை எப்படி அமைய வேண்டும் என்பதனை விளக்குகிறார் குமார். நடனமாடும் வீடு ஒன்றைப் பற்றிச் சொல்லுகிறார் ம.சுசித்ரா. ரசிகமணி டி.கே.சி யின் “ என்னைக் கவர்ந்த புஸ்தகங்கள் “ என்ற மறுவாசிப்பு கட்டுரை இலக்கிய வாசகர்களை மனம் குளிரச் செய்யும். நவீன கவிதைகளுக்கு மெட்டமைத்து பாடுவது குறித்து பேசுகிறார் ரவிசுப்பிரமணியன். சென்னையில் நடக்க இடம் உண்டா? என்று அங்காலாய்த்துக் கொள்கிறார் ஆசை என்ற புனைபெயர்க்காரர்.


தி இந்துவின் இந்த நவராத்திரி மலரின் வண்ணமும் வாசமும் வரப்போகும் தீபாவளி மலருக்கான முன்னோட்டம் எனலாம். வாங்கி படியுங்கள்!

அனைவருக்கும் எனது உளங்கனிந்த நவராத்திரி வாழ்த்துக்கள்!

( நன்றி: தி இந்து - மேலே உள்ள படங்கள் அனைத்தும் தி இந்து நவராத்திரி மலர் 2014 புத்தகத்திலிருந்து CANON POWER SHOT A800 கேமரா மூலம் காப்பி செய்யப்பட்டு எடிட் செய்யப் பெற்றவை. )






45 comments:

  1. செலவு ஏதும் இல்லாமல் தங்களின் உதவியால் அந்த மலரில் உள்ள படங்களையும், முக்கிய விஷயங்களையும் அறிய முடிந்துள்ளது.பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  2. தங்களுக்கும் மனமார்ந்த நவராத்திரி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. தமிழ்பத்திரிக்கைகளைப் பார்ப்பதே அரிதாகி விட்ட என் போன்றவர்களுக்கு இந்தப் பத்திரிக்கை செய்திகள் ஒரு அப் டேட். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நவராத்திரி மலரின் வண்ணமும் வாசமும்
    எட்டச் செய்த அருமையான பகிர்வுகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete

  5. தி இந்து – நவராத்திரி மலர் – 2014 ஐ கண் முன்னே கொண்டு வந்தமைக்கு நன்றி. படங்களை மிக அழகாக படம் பிடித்து பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றி!

    ReplyDelete
  6. மிக அருமை. வாழ்த்துகள் ராஜி. !!!!!!!!!

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா.

    இந்தியாவில் வெளியாகும் திஇந்து- நவராத்திரி மலரின் சிறப்பம்சங்களை படிக்க தந்தமைக்கு நன்றி ஐயா.
    இனிய நவராத்திரி தின வாழ்த்துக்கள் த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அப்போ இந்த வருடம் தீபாவளிக்கு ஒரு தீபாவள் மலர் தி இந்து தமிழ் நாள்தழில் இருந்து எதிர்பார்க்கலாம், நல்ல தொரு படப் பகிர்வுக்கு மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  9. நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.. ஐயா.

    ReplyDelete
  10. சீசன் பதிவு ...
    சுண்டல் கொலு ரெடியா
    வரலாமா?

    ReplyDelete
  11. இது புதிதாக இருக்கிறதே.. தீபாவளி மலர் தெரியும். நவராத்திரிக்கும் மலரா? உங்கள் விமரிசனம் வாங்கத் தோன்றுகிறது

    ReplyDelete
  12. உளங்கனிந்த நவராத்திரி வாழ்த்துக்கள்!
    இலவசமாக நவராத்திரி மலர் படிக்க வைத்தீர்கள்.
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. நவராத்திரி மலரை வாங்கி படிக்க தூண்டியது உங்கள் பகிர்வு! அருமை! நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    திரு V.G.K அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி> துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி> G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி! பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் குறைந்தது அரைமணி நேரமாவது படித்தால் அவர்களுக்கு ஞாபகசக்தி குறையாது. மருத்துவமனையில் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது அங்கிருந்த neurologist சொன்ன ஆலோசனை இது. தி இந்து தமிழ் வாங்கி படியுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் தகவல்கள் நிறையவே உள்ளன.

    ReplyDelete
  17. மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி> வே.நடனசபாபதி said...

    அய்யா அவர்களுக்கு நன்றி! வாங்கி படியுங்கள்.

    ReplyDelete
  19. மறுமொழி> Thenammai Lakshmanan said...

    // மிக அருமை. வாழ்த்துகள் ராஜி. !!!!!!!!! //

    ராஜிக்கு போய்ச் சேரவேண்டிய கருத்துரை இங்கு இடம் மாறி வந்து விட்டது என்று நினைக்கிறேன். சகோதரி கவனிக்கவும்.

    ReplyDelete
  20. மறுமொழி> ரூபன் said...

    கவிஞருக்கு வணக்கம்! தங்கள் வருகைக்கு நன்றி! இலங்கையில் இந்த மலர் கிடைக்காது என்பதில் எனக்கு வருத்தமே! வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

    ReplyDelete
  21. மறுமொழி> J.Jeyaseelan said...

    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி> KILLERGEE Devakottai said...

    தேவகோட்டை சகோதரர் கில்லர்ஜிக்கு நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி> Mathu S said...

    // சீசன் பதிவு ...சுண்டல் கொலு ரெடியா
    வரலாமா? //
    நான் VRS ஆள். மனைவி மத்திய அரசு ஊழியர். மகன் கல்லூரி மாணவர். எங்கள் வீட்டில் கொலுவெல்லாம் வைக்க நேரம் இல்லை.

    ReplyDelete
  24. மறுமொழி> rajalakshmi paramasivam said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    // இது புதிதாக இருக்கிறதே.. தீபாவளி மலர் தெரியும். நவராத்திரிக்கும் மலரா? உங்கள் விமரிசனம் வாங்கத் தோன்றுகிறது //

    தி இந்து வெளியிட்ட முதல் தீபாவளி மலரை வாங்க முடியாமல் போய்விட்டது. சென்ற ஆடி மாதத்தில் ஆடி மலர் என்று சிறிய புத்தகத்தை வெளியிட்டு இருந்தார்கள். அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இந்த நவராத்திரி மலர் சிறப்பாகவே உள்ளது


    ReplyDelete
  25. மறுமொழி> kovaikkavi said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  26. .மறுமொழி> ‘தளிர்’ சுரேஷ் said...

    சகோதரர் அவர்களுக்கு நன்றி!


    ReplyDelete
  27. நவராத்திரி வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  28. அருமையான பதிவு
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  29. super iyya nantri; val-tha- 'vayyaitheelai' van-kkukk-erom'

    ReplyDelete
  30. படங்கலும் தகவல்களும் அருமை ஐயா!

    ReplyDelete
  31. சிறப்பான மதிப்புரை. படங்களைத் தெரிவு செய்து அமைத்திருந்த விதம் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  33. மறுமொழி> Yarlpavanan Kasirajalingam said...
    //அருமையான பதிவு தொடருங்கள் //
    சகோதரர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களுக்கு நன்றி!
    // எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள். //
    தங்கள் மின்நூலை தரவிறக்கம் (DOWNLOAD) செய்யும்போது சரியாக அமையவில்லை. மீண்டும் சரிசெய்து பார்க்க வேண்டும். படித்த பின் நிச்சயம் கருத்திடுவேன்.

    ReplyDelete
  34. மறுமொழி> Meena Narayanan said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி! நீங்கள் வலைத்தளம் ஏதும் தொடங்கவில்லையா?

    ReplyDelete
  35. மறுமொழி> Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரரின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  36. மறுமொழி> Dr B Jambulingam said...

    முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  37. நவராத்திரி மலர் - புதிதான விஷயம்....

    படங்கள் அனைத்துமே அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  38. ஸ்கேன் செய்தது போலவே பளிச்சென்று உள்ளன புகைப்படங்கள் .
    தங்கள் மதிப்புரை மலரை படிக்கத் தூண்டுகிறது,

    ReplyDelete
  39. படங்களும் மதிப்புரையும் அருமை!!

    ReplyDelete
  40. தி இந்து – நவராத்திரி மலர் – 2014 ஐ உங்கள் மூலம் பார்த்தும் படித்தும் விட்டேன்.
    படங்கள் எல்லாம் அழகாய் எடுத்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  41. மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...

    // நவராத்திரி மலர் - புதிதான விஷயம்....//

    ஆமாம் அய்யா! சாதாரணமாக பத்திரிகைகள் தீபாவளி மலர்கள்தான் வெளியிடும். பொங்கல் மலர் என்பதே கிடையாது. தி இந்து – (தமிழ்) இப்போது நவராத்திரி மலர் வெளியிட்டு இருப்பது புதுமையான விஷயம்தான்.

    // படங்கள் அனைத்துமே அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. //

    தங்கள் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  42. மறுமொழி> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    // ஸ்கேன் செய்தது போலவே பளிச்சென்று உள்ளன புகைப்படங்கள் . தங்கள் மதிப்புரை மலரை படிக்கத் தூண்டுகிறது, //

    நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைப்பக்கம் வந்து பாராட்டினைத் தெரிவித்த மூங்கிற் காற்று டி.என்.முரளிதரன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  43. மறுமொழி> மனோ சாமிநாதன் said...

    // படங்களும் மதிப்புரையும் அருமை!! //

    சகோதரி அவர்களுக்கு நன்றி! உங்கள் வலைப்பக்கம் வரவேண்டும். ஏற்கனவே படித்த கருத்துரை எழுதாமல் விட்டுப் போன உங்கள் பதிவு ஒன்றை தொடர வேண்டும்.

    ReplyDelete
  44. மறுமொழி> கோமதி அரசு said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete