தஞசை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ளது கபிஸ்தலம் என்ற ஊர். இந்த ஊரில் 108
திவ்ய திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. நான்
இந்த ஊருக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி சென்று இருக்கிறேன்.
ஆனால் இந்த பெருமாள் கோயிலுக்கு சென்றதில்லை. நேற்று முன்தினம் (19.06.2014,
வியாழக்கிழமை) அந்த ஊரில் நடைபெற்ற காதணி விழாவுக்கு சென்று இருந்தேன். இந்த தடவை
கபிஸ்தலம் கோயிலுக்கு சென்றே ஆக வேண்டும் என்பதால் சீக்கிரமே புறப்பட்டுச் சென்றேன்.
படம் மேலே: தலபுராணத்தை விளக்கும் புடைப்பு சிற்பம்
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வழியாக பாபநாசம் சென்றேன். பாபநாசத்தில் ஊரில்
நுழைந்தவுடன் புளியமரம் என்று ஒரு பஸ் நிறுத்தம். அங்குதான் கபிஸ்தலம் செல்லும்
சிற்றுந்துகள் (MINI BUS) ஷேர் ஆட்டோக்கள் நிற்கின்றன. நான் சென்ற நேரம்
சிற்றுந்து வர இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்றார்கள். ஷேர் ஆட்டோக்காரர் ஒருவர் ” கபிஸ்தலம், கபிஸ்தலம்” என்று குரல் கொடுத்துக்
கொண்டு இருந்தார். ஏறகனவே நிறையபேர் இருந்ததால் நான் அதில் ஏறவில்லை. அவர் சென்ற
அடுத்த நிமிஷம் இன்னொரு ஷேர் ஆட்டோ. அதில் பயணம் செய்தேன். கட்டணம் ஐந்து ரூபாய்.
ஊரில் இறங்கியவுடன் கோயிலுக்கு வழி கேட்டு நடந்தேன்.
ஊருக்கு கிழக்கே (திருவையாறு – கும்பகோணம் சாலையில்)
சிறிது தூரத்தில் கோயிலுக்கு செல்லும்
வழியைக் காட்டும் அறிவிப்புப் பலகை ஒன்று இருந்தது. அது காட்டிய வழியே
தெருவுக்குள் நுழைந்தேன். சிறிது தூரத்தில் பெருமாள் கோயில். இதுநாள் வரை பெரிய
கோயிலாக இருக்கும் என்று நினைத்து இருந்தேன். இடம் பரப்பளவில் குறைவுதான். ஆனாலும்
108 திவ்ய தேசங்களில் ஒன்று என்பதால் வெளியூரிலிருந்து காரிலும், ஆட்டோவிலும்
பகதர்கள் தரிசனம் செய்ய வந்து இருந்தனர்.
உள்ளே நுழைந்தவுடன் ஒரு அம்மாள் பூ விற்றுக் கொண்டு இருந்தார். அவரிடம் பூ வாங்கிக்
கொண்டேன். கோயிலில் பெருமாள் தரிசனம். சின்ன வயது குருக்கள் ஒருவர் அர்ச்சனை
செய்தார். அங்கிருந்த மற்றொரு ஊழியர் ஒருவர் எனக்கு கோயிலின் தல புராணத்தை சொன்னார்.
(கஜேந்திரன் என்னும் யானையை முதலையின் பிடியிலிருந்து ஆதிமூலம் காப்பாற்றி இருவருக்கும் சாபவிமோசனம்
தந்த கதை ) நான் ஏற்கனவே படித்த கதைதான். பெருமாள் தரிசனம் முடிந்த பிறகு, உறவினர்
வீட்டு காதணி விழா நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபம் (கடைவீதிக்கு) சென்றேன்.
கபிஸ்தலத்தில் எடுத்த படங்கள்.
படம் மேலே:கோயிலுக்கு செல்லும் வழியைக் காட்டும் அறிவிப்புப்பலகை
படம் மேலே: கோயிலுக்கு செல்லும் சாலை
படம் மேலே: கோயில் முன்னே உள்ள அறிவிப்புப் பலகை
படம் மேலே: கோயில் முன் வாயில்
படம் மேலே: கோயில் முன் வாயில் உட்புறம்
படம் மேலே: கொடிமரத்துடன் கோயிலின் உட்புறம்
கோயில் இருக்குமிடம்:
1.கும்பகோணம் -
திருவையாறு, சாலையில்
சுவாமிமலை, உமையாள்புரம் தாண்டி கபிஸ்தலம் உள்ளது. 2. திருவையாறிலிருந்தும்
இந்த ஊருக்கு வரலாம். 3. தஞ்சாவூர் – பாபநாசம் வழியாகவும்
வரலாம்.4.கும்பகோணம் - பாபநாசம் வழியாகவும் வரலாம்.
தமிழில் கவித்தலம். கவி என்றால் குரங்கு. ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் என்ற இரு வானரங்கள் வழிபட்ட இடம் என்பதால் கவித்தலம். இந்த ஊரை மேல கபிஸ்தலம் என்றும் சொல்லுகிறார்கள்.
தமிழில் கவித்தலம். கவி என்றால் குரங்கு. ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் என்ற இரு வானரங்கள் வழிபட்ட இடம் என்பதால் கவித்தலம். இந்த ஊரை மேல கபிஸ்தலம் என்றும் சொல்லுகிறார்கள்.
அருமையான புகைப்படங்களுடன்
ReplyDeleteஅற்புதமான பதிவு
உடன் பயணித்ததைப் போன்று இருந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteபடங்கள் ஒவ்வொன்றுமே அற்புதம் ஐயா
ReplyDeleteதம 2
அருமையான புகைப்படங்களுடன் கபிஸ்தலம் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteகாலையில் - அழகிய படங்களுடன் இனிய தரிசனம்.. மகிழ்ச்சி ஐயா..
ReplyDeleteவணக்கம் ஐயா
ReplyDeleteதங்கள் படங்களின் மூலம் அழகிய தரிசனம் தந்தமைக்கும் மிக்க நன்றிகள். விரைவில் கபிஸ்தலம் சென்று வர வேண்டுமெனும் ஆசை ஏற்பட்டுள்ளது. படங்களுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றிகள் ஐயா.
த.ம நான்கு..
ReplyDeleteஅருமையான பயணக் கட்டுரை..
வாழ்த்துக்கள்
www.malartharu.org
வணக்கம் ஐயா. படங்களும் பதிவும் மிகவும் அருமை ஐயா. நேரில் சென்று வந்ததுபோல மகிழ்ச்சியளித்தது. பாராட்டுக்கள்.
ReplyDeleteகபிஸ்தலம் சென்று வந்த திருப்தி கொடுத்தது பதிவு. அந்தக் காவிரியாற்றில் தான் கஜேந்திரனுக்கு மோட்சம் கிட்டியதா?
ReplyDeleteதிவ்ய தேசம் எனவழைக்கப்படும் காரணமே ஆழ்வார்களுள் ஒருவராவது அத்தலத்துப்பெருமாளைப் பாடியதால் மட்டுமே. அப்படிப்பாடா தலப்பெருமாள்களும் உண்டு (சிரிமுஷ்ணம்). எனினும் வைணவத்தில் இறைவனைவிட பக்தனே வணங்கப்படவேண்டும்.
ReplyDeleteஆக, திவ்ய தேசத்தைப்பற்றியெழுதும்போது ஆழ்வார் என்ன பாடினார் என்று எழுதுவதும் வழக்கம்.
நீங்கள் விட்ட குறையை யான் முடிக்க இறைவன் திருவுள்ளம் போலும்.
திருமழிசையாழ்வார் இத்தலத்துப்பெருமாளை இப்படி மங்களாசாசனம் (போற்றிப்பரவுவதல்) செய்கின்றார்:
கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும்
மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு.
இத்தலத்துப்பெருமாளுக்கு எனவே ஆற்றங்கரைக்கிடக்கும் கண்ணன்'என்ற திருநாமமும் வந்தது.
அற்புதமான பதிவு
ReplyDeleteநான் தஞ்சாவூரில் வேலையில் இருந்தபோது எத்தனை முறை கபிஸ்தலம் சென்றிருக்கிறேன். பெருமாள் என்னைக் கூப்பிடவே இல்லையே? பெருமாளே, இது தர்மமா?
ReplyDeleteமறுமொழி > Ramani S said... ( 1 , 2 )
ReplyDeleteகவிஞர் எஸ்.ரமணி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteசகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > அ. பாண்டியன் said...
ReplyDeleteஆசிரியர் அ.பாண்டியன் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > Mathu S said...
ReplyDeleteஆசிரியர் எஸ்.மது அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅய்யா V.G.K அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > rajalakshmi paramasivam said...
ReplyDelete// கபிஸ்தலம் சென்று வந்த திருப்தி கொடுத்தது பதிவு. அந்தக் காவிரியாற்றில் தான் கஜேந்திரனுக்கு மோட்சம் கிட்டியதா? //
எல்லோருக்கும் தெரிந்த கதைதான் என்பதால், பதிவினில் கபிஸ்தலம் பெருமாள் கோயிலின் தல புராணத்தை விரிவாக எழுதாமல் விட்டு விட்டேன். கதைப்படி முதலை,யானை இரண்டிற்கும் சாப விமோசனம் கிடைத்த இடம் கபிஸ்தலம் கோயில் குளம்தான். மேலே உள்ள தண்ணீஈ இல்லாத குளம்தான். குளம் காவிரிக் கரையினில் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது.
இந்த கதைப்படி ஸ்ரீரங்கத்தில் ஆண்டுதோறும் அம்மா மண்டபம் காவிரிக் கரையில் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். நானும் இதுநாள் வரையில் இந்தக் கதை நடந்த இடம் ஸ்ரீரங்கம் காவிரிக் கரை என்றே நினைத்து இருந்தேன்.
இனிமேல் எந்த கோயில் பதிவானாலும், அந்த கோயிலின் தல புராணத்தினை எழுதிவிடுகிறேன்.
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > குலசேகரன் said...
ReplyDeleteசகோதரர் குலசேகரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
// திவ்ய தேசம் எனவழைக்கப்படும் காரணமே ஆழ்வார்களுள் ஒருவராவது அத்தலத்துப்பெருமாளைப் பாடியதால் மட்டுமே. அப்படிப்பாடா தலப்பெருமாள்களும் உண்டு (சிரிமுஷ்ணம்). எனினும் வைணவத்தில் இறைவனைவிட பக்தனே வணங்கப்படவேண்டும். ஆக, திவ்ய தேசத்தைப் பற்றி யெழுதும்போது ஆழ்வார் என்ன பாடினார் என்று எழுதுவதும் வழக்கம்.//
ஆமாம் அய்யா! இனிமேல் கோயிலைப் பற்றி ( கிறிஸ்தவ தேவாலயம் பற்றி எழுதுவதாக இருந்தாலும் கூட ) எழுதும் போதெல்லாம் இனிமேல் அந்த கோயிலுக்குரிய சிறப்பான பாடலையும் குறிப்பிடுவேன் அய்யா! தங்கள் நினைவூட்டலுக்கு நன்றி!
// நீங்கள் விட்ட குறையை யான் முடிக்க இறைவன் திருவுள்ளம் போலும். //
உண்மைதான் அய்யா! இறைவன் திருவுளம்தான்.
// திருமழிசையாழ்வார் இத்தலத்துப்பெருமாளை இப்படி மங்களாசாசனம் (போற்றிப்பரவுவதல்) செய்கின்றார்:
கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும்
மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு.
இத்தலத்துப்பெருமாளுக்கு எனவே ஆற்றங்கரைக்கிடக்கும் கண்ணன்'என்ற திருநாமமும் வந்தது.//
ஆற்றங்கரை கண்ணன் பற்றிய அழகான தமிழ்ப்பாடலைச் சொன்னதற்கு நன்றி!
மறுமொழி > venkatesamoorthy ramaswamy said...
ReplyDeleteசகோதரர் வெங்கடேச மூர்த்தி ராமஸ்வாமி அவர்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > பழனி. கந்தசாமி said...
ReplyDeleteஅய்யா பழனி.கந்தசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// நான் தஞ்சாவூரில் வேலையில் இருந்தபோது எத்தனை முறை கபிஸ்தலம் சென்றிருக்கிறேன். பெருமாள் என்னைக் கூப்பிடவே இல்லையே? பெருமாளே, இது தர்மமா? //
ஆமாம் அய்யா! நமது வாழ்க்கையில் இது மாதிரி நிறைய விஷயங்கள்.
நானும் கும்பகோணம் பலமுறை சென்று இருக்கிறேன். அந்த ஊரில் 3 மாதம் டெபுடேஷன் பணியும் செய்து இருக்கிறேன். இதுநாள் வரை கும்பகோணம் பார்த்தசாரதி கோயில் சென்றதில்லை. அதே போல புதுக்கோட்டையும். இங்குள்ள பிரகதாம்பாள் கோயில் சென்றதில்லை. இரண்டு கோயில்களுக்கும் சென்று வர வேண்டும்.
இந்த முறை தஞ்சாவூர் அல்லது கும்பகோணம் வந்தால் கபிஸ்தலம் பெருமாள் கோயில் சென்று வாருங்கள்.
அருமை! அடுத்த பயணத்தில் கபிஸ்தலம் போகணுமுன்னு மூளையில் முடிச்சுப் போட்டு வச்சுருக்கேன்:-)
ReplyDeleteதவறுக்குமேல் தவறு செய்கிறீர்கள். முதல் தவறு: திருக்கோயிலையும் தெயவத்தையும் பற்றிய பதிவில் அக்கோயிலையும் தெய்வத்தையும் சிறுமைப்படுத்தும்படி ஒரு அரசியல்வாதி அவதாரம் செய்த ஊர் என்று எழுதிவிடுகிறீர்கள். தமிழறிஞர் பேராசிரியர் ந.சஞ்சீவி அவர்களை இவர்தான் வைரமுத்துவின் மாமா என்று அறிமுகப்படுத்துவது போலவும், மு.இராகவையங்கார் என்ற மாபெரும் தமிழறிஞரைப்பற்றி எழுதும்போது, இவர்தான் திரைப்படப்பாடகி சின்மயின் தாத்தா என்று சொல்வதைப்போல. என்ன திமிர்!
ReplyDeleteஅடுத்து, திவ்ய தேசங்களைப்பற்றியும் இந்து மதத்தைப்பற்றியும் சற்றும் கவனத்தில் கொள்ளாமல் கிருத்துவமதத்தில் இணைத்து பேசுகிறீர்கள். கிருத்துவமதத்தில் தேவாலயத்துக்குப்பாடல் கிடையாது. கிருத்துவரக்ள் (நாயன்மார், ஆழ்வார் தலம் தலமாகச் சென்று பதிகங்களும் பாசுர்ங்களும் பாடியதைப்போல பாடவில்லை. ஆழ்வார்கள் பாசுரங்கள் வைணவத்தில் சாதாரணமாக பாடல்களாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு பாசுரத்துக்கும் ஒரு சக்தி உண்டு என்பது நம்பிக்கை. எப்படி என்பதை ஒரு வைணவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். அல்லது நூல்களைப்படித்துக்கொள்ளவும் தெரியாமல் தேவாலயத்தோடு இணைத்துச்சொல்லல் இந்துமதத்தை அவமதித்தல் ஆகும்.
ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் அப்பெருமாளைப்பற்றிய ஆழ்வார் பாசுரம் சுவரில் எழுதப்பட்டிருக்கும். அது உங்கள் கண்களில் தப்பக்காரணம், ஒரு டூரிஸ்டாக போயிருக்கிறீர்கள். பெருமாள் பக்தனாகச் சென்றிருந்தால் கண்டிப்பாக அப்பாசுரம் தென்பட்டிருக்கும். ஒரே ஒரு பாசுரமானாலும் அதை சுவரில் எழுதி வைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு ? திரு அன்பில் திவ்யதேசத்துக்குப் போய் பாருங்கள் தெரியும். (திருச்சிக்கருகில்) ஒரே ஒரு பாசுரம்தான். திருக்கோழிக்கு (உறையூர்) சென்று பாருங்கள். ஒரே ஒரு பாசுரம்தான். சுவரில் எழுதப்பட்டிருக்கும். நாய்னமார் பாடல்களுக்குக அப்படிப்பட்ட கட்டாயமில்லையென்பது எப்படி வைணவத்தில் மட்டும் ஆழ்வார் பாசுரங்கள் வைக்கபபடுகின்றன என்பது கண்டிப்பாக தெரிய வேண்டுமுங்களுக்கு.
திருமதி துளசி அவர்கள் காஞ்சி திவ்யதேசமொன்றைப்பற்றிய பதிவில் இப்படி ஆழ்வார் பாசுரத்தை எழுதாமல் விட்டதற்கு நான் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டியதற்கு அப்பாசுரத்தைப் போட்டதற்கு நன்றிகள் என்று மட்டுமே சொன்னார். தேவாலாயம் , கிருத்துவம் என்றெல்லாம் திமிராக எழுதவில்லை. அக்கோயிலுறையும் தெய்வத்தின் மேல் பக்தியில்லையென்றால் ஏன் போகவேண்டும்?
இனி எந்த திவ்ய தேசத்துக்கும் சென்றால், அங்கு எழுதப்பட்டிருக்கும் பாசுரத்தில் ஒன்றையாவது உரக்கப்பாடுங்கள். அப்போதுதான் பெருமாள் உங்களைக்கவனிப்பார். பாசுரத்தை எவராவது பாடுவார்களா நான் கேட்பேனா என்ற ஏக்கத்தில் காத்துக்கிடக்கிறார் பெருமாள் என்பது வைணவக நம்பிக்கை. ஆழ்வார்கள் என்றால் அவருக்கு அப்படி. எனவேதான் பெருமாளுக்குப்பக்கத்தில் கருவறையில் ஆழ்வார்களையும் வைப்பார்கள். பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்தும் மக்களுக்குக் கொடுக்கப்படுமுன் முதலில் ஆழ்வார்களுக்கே சமர்ப்பிக்கப்படும். தீர்த்தம் எல்லாம் கொடுத்தபின் உங்கள் தலையில் வைக்கப்படும் சடாரி நம்மாழ்வாரின் திருவடிகள் எனப்தை தெரிந்துகொள்ளுங்கள். அதன்பிற்குதான் பூஜை முடிந்ததாகப் பொருள். ஆழ்வார்கள் இல்லையென்றால் பெருமாள் கோயில்கள் இல்லை.
இது விதண்டவாதமோ, வாதமோ அல்ல. மீண்டும் மீண்டும் பிழை போடாமலிருக்க ஒரு வழிகாட்டி மட்டுமே. எப்படி எடுத்துக்கொளவது enpathu உங்கள் நயத்தக்க நாகரிகத்தைக் காட்டும்.
மறுமொழி > துளசி கோபால் said...
ReplyDelete// அருமை! அடுத்த பயணத்தில் கபிஸ்தலம் போகணுமுன்னு மூளையில் முடிச்சுப் போட்டு வச்சுருக்கேன்:-) //
சகோதரி துளசி கோபால் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நான் கோயில் பயணக் கட்டுரைகளை எழுதுவதற்கு உங்களுடைய பயணக் கட்டுரைகளின் தாக்கமும் ஒரு காரணம் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
கபிஸ்தலம் ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவில் பற்றிய பல தகவல்களையும் அருமையான படங்களுடன் பதிவிட்டதற்கு நன்றி ஐயா. பார்க்குமிடமெல்லாம் மிகவும் சுத்தமாக இருப்பது மனத்துக்கு ஆனந்தமாக உள்ளது.
ReplyDeleteதங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரம் அமையும்போது தொடரவும். நன்றி.
ReplyDeletehttp://geethamanjari.blogspot.com.au/2014/06/blog-post_22.html
மறுமொழி > 1 குலசேகரன் said... ( 2 )
ReplyDeleteசகோதரர் குலசேகரன் அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி!
// தவறுக்குமேல் தவறு செய்கிறீர்கள். முதல் தவறு: திருக்கோயிலையும் தெயவத்தையும் பற்றிய பதிவில் அக்கோயிலையும் தெய்வத்தையும் சிறுமைப்படுத்தும்படி ஒரு அரசியல்வாதி அவதாரம் செய்த ஊர் என்று எழுதிவிடுகிறீர்கள். தமிழறிஞர் பேராசிரியர் ந.சஞ்சீவி அவர்களை இவர்தான் வைரமுத்துவின் மாமா என்று அறிமுகப்படுத்துவது போலவும், மு.இராகவையங்கார் என்ற மாபெரும் தமிழறிஞரைப்பற்றி எழுதும்போது, இவர்தான் திரைப்படப்பாடகி சின்மயின் தாத்தா என்று சொல்வதைப்போல. என்ன திமிர்!//
நீங்கள் சொல்வது சரிதான். எனவே அந்த அரசியல்வாதியின் பெயர் சம்பந்தப்பட்ட் வாக்கியத்தை இந்த பதிவிலிருந்து எடுத்து விட்டேன். இது திமிர் இல்லை. பதிவு எழுதும் ஆர்வக் கோளாறில் ஏற்படும் பிழை. ஆலோசனைக்கு நன்றி!
// அடுத்து, திவ்ய தேசங்களைப்பற்றியும் இந்து மதத்தைப்பற்றியும் சற்றும் கவனத்தில் கொள்ளாமல் கிருத்துவமதத்தில் இணைத்து பேசுகிறீர்கள். கிருத்துவமதத்தில் தேவாலயத்துக்குப்பாடல் கிடையாது. கிருத்துவரக்ள் (நாயன்மார், ஆழ்வார் தலம் தலமாகச் சென்று பதிகங்களும் பாசுர்ங்களும் பாடியதைப்போல பாடவில்லை. //
இந்த பதிவினில் நான் எங்கும் இரு மதங்களை ஒப்பிட்டு எழுதவில்லை. நான் தந்த மறுமொழி ஒன்றில், நான் இனிமேல் எழுதப் போகும் கோயில் அல்லது தேவாலயங்களைப் பற்றிய பதிவினில் அவைகளுக்கென்று தனியாக பாடல்கள் இருந்தால் இனிமேல் எழுதுவேன் என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறேன். இல்லாத ஒன்றை சொல்ல வேண்டாம்.
// ஆழ்வார்கள் பாசுரங்கள் வைணவத்தில் சாதாரணமாக பாடல்களாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு பாசுரத்துக்கும் ஒரு சக்தி உண்டு என்பது நம்பிக்கை. எப்படி என்பதை ஒரு வைணவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். அல்லது நூல்களைப்படித்துக்கொள்ளவும் தெரியாமல் தேவாலயத்தோடு இணைத்துச்சொல்லல் இந்துமதத்தை அவமதித்தல் ஆகும். //
வாழ்க்கையில் எல்லாமே நம்பிக்கைதான். பதிவினில் இல்லாத ஒன்றை எழுதி வீண் வாதம் செய்ய வேண்டியதில்லை.
மறுமொழி > 2 குலசேகரன் said... ( 2 )
ReplyDelete// ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் அப்பெருமாளைப்பற்றிய ஆழ்வார் பாசுரம் சுவரில் எழுதப்பட்டிருக்கும். அது உங்கள் கண்களில் தப்பக்காரணம், ஒரு டூரிஸ்டாக போயிருக்கிறீர்கள். பெருமாள் பக்தனாகச் சென்றிருந்தால் கண்டிப்பாக அப்பாசுரம் தென்பட்டிருக்கும்.//
நான் ஒரு பக்தனாகவே அங்கு சென்றேன். எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு நான் ஒரு டூரிஸ்ட்டாக சென்றேன் என்று எதையாவது எழுத வேண்டாம்.
// ஒரே ஒரு பாசுரமானாலும் அதை சுவரில் எழுதி வைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு ? திரு அன்பில் திவ்யதேசத்துக்குப் போய் பாருங்கள் தெரியும். (திருச்சிக்கருகில்) ஒரே ஒரு பாசுரம்தான். திருக்கோழிக்கு (உறையூர்) சென்று பாருங்கள். ஒரே ஒரு பாசுரம்தான். சுவரில் எழுதப்பட்டிருக்கும். நாய்னமார் பாடல்களுக்குக அப்படிப்பட்ட கட்டாயமில்லையென்பது எப்படி வைணவத்தில் மட்டும் ஆழ்வார் பாசுரங்கள் வைக்கபபடுகின்றன என்பது கண்டிப்பாக தெரிய வேண்டுமுங்களுக்கு. //
எல்லா திருக் கோயில்களிலும் அந்த கோயில் சம்பந்தப்பட்ட பாடல்களை எழுதி வைத்து இருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
// திருமதி துளசி அவர்கள் காஞ்சி திவ்யதேசமொன்றைப்பற்றிய பதிவில் இப்படி ஆழ்வார் பாசுரத்தை எழுதாமல் விட்டதற்கு நான் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டியதற்கு அப்பாசுரத்தைப் போட்டதற்கு நன்றிகள் என்று மட்டுமே சொன்னார். தேவாலாயம் , கிருத்துவம் என்றெல்லாம் திமிராக எழுதவில்லை. அக்கோயிலுறையும் தெய்வத்தின் மேல் பக்தியில்லையென்றால் ஏன் போகவேண்டும்? //
நான் எழுதிய கபிஸ்தலம் பதிவினில் எழுதாத ஒன்றை ஏன் திரும்பத் திரும்ப அதுவும் திமிர் என்று ஏன் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. பொதுவாகச் சொல்லப்படும் கருத்துகளுக்கெல்லாம் ”அடாவடி”த் தனமாக பொருள் கொள்ள வேண்டியதில்லை.
// இனி எந்த திவ்ய தேசத்துக்கும் சென்றால், அங்கு எழுதப்பட்டிருக்கும் பாசுரத்தில் ஒன்றையாவது உரக்கப்பாடுங்கள். அப்போதுதான் பெருமாள் உங்களைக்கவனிப்பார். பாசுரத்தை எவராவது பாடுவார்களா நான் கேட்பேனா என்ற ஏக்கத்தில் காத்துக்கிடக்கிறார் பெருமாள் என்பது வைணவக நம்பிக்கை. ஆழ்வார்கள் என்றால் அவருக்கு அப்படி. எனவேதான் பெருமாளுக்குப்பக்கத்தில் கருவறையில் ஆழ்வார்களையும் வைப்பார்கள். பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்தும் மக்களுக்குக் கொடுக்கப்படுமுன் முதலில் ஆழ்வார்களுக்கே சமர்ப்பிக்கப்படும். தீர்த்தம் எல்லாம் கொடுத்தபின் உங்கள் தலையில் வைக்கப்படும் சடாரி நம்மாழ்வாரின் திருவடிகள் எனப்தை தெரிந்துகொள்ளுங்கள். அதன்பிற்குதான் பூஜை முடிந்ததாகப் பொருள். ஆழ்வார்கள் இல்லையென்றால் பெருமாள் கோயில்கள் இல்லை.//
நான் பெருமாளை தரிசனம் செய்யும் போது, பெருமாள் சன்னதியில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை சம்பிரதாயங்களும் கடை பிடிக்கப் பட்டன.
// இது விதண்டவாதமோ, வாதமோ அல்ல. மீண்டும் மீண்டும் பிழை போடாமலிருக்க ஒரு வழிகாட்டி மட்டுமே. எப்படி எடுத்துக்கொளவது enpathu உங்கள் நயத்தக்க நாகரிகத்தைக் காட்டும். //
திருவள்ளுவரின் நயத்தக்க நாகரிகத்தை நினைவுபடுத்திய சகோதரருக்கு நன்றி! இது ஒருவழிப் பாதை இல்லை.
மேலும் சென்ற ஆண்டு நான் எழுதிய “திருவள்ளுவர் தாடி, மீசை வைத்து இருந்தாரா? “ என்ற பதிவினில் சூடான உங்களது விமர்சனங்களுடன் உங்களிடம் உரையாடல் செய்ததும் மற்றும் ஒரு பதிவரைப் பற்றி நான் எழுதிய போது ஆன்மீகத்தை கிண்டலடிக்கும் அவருக்கு ஆதரவாக நீங்கள் கருத்துரை தந்ததும் நினைவுக்கு வருகிறது.
மறுமொழி > கீத மஞ்சரி said... ( 1 , 2 )
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கும் மற்றும் தொடர் பதிவு எழுத அழைத்ததற்கும் நன்றி!
நான் அப்பக்குடத்தான் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன் . நீங்கள் சொன்னபிறகுதான் இந்தக் கோயிலுக்குப் போக வேண்டும் போல் உள்ளது.இந்த மாதம்
ReplyDelete28.29 30 போன்ற தேதிகளில் திருவையாறு செல்லும் வேலை உள்ளதால் போகலாமா என்ற எண்ணம் உள்ளது .திருவையாறிலிருந்து இந்தக் கோயில் எவ்வளவு தூரம் உள்ளது?
மறுமொழி > அபயாஅருணா said...
ReplyDelete// நான் அப்பக்குடத்தான் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன் . நீங்கள் சொன்னபிறகுதான் இந்தக் கோயிலுக்குப் போக வேண்டும் போல் உள்ளது.இந்த மாதம் 28.29 30 போன்ற தேதிகளில் திருவையாறு செல்லும் வேலை உள்ளதால் போகலாமா என்ற எண்ணம் உள்ளது .திருவையாறிலிருந்து இந்தக் கோயில் எவ்வளவு தூரம் உள்ளது? //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
திருவையாறு – கபிஸ்தலம் 21.1 km
உதவிக்கு: http://distancebetween.info
அருமையான படங்கள்.. சிரத்தையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteமறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
கபிஸ்தலம் ஸ்ரீ கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் பற்றிய விவரங்களும் படங்களும் அருமை. இதுவரை அங்கு சென்றதில்லை. உங்கள் பதிவு அங்கு செல்ல தூண்டுகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteமறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅய்யா வே.நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
இது போன்ற ஊர்களில் உள்ள மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் கொஞ்சம் ஆவணப்படுத்தலாமே. பார்த்த மனிதர்கள் தந்த தாக்கங்கள் கண்ட காட்சிகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDelete// இது போன்ற ஊர்களில் உள்ள மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் கொஞ்சம் ஆவணப்படுத்தலாமே. பார்த்த மனிதர்கள் தந்த தாக்கங்கள் கண்ட காட்சிகள். //
சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி! நல்ல யோசனை. இனிமேல் எழுதும் பதிவுகளில் நிச்சயம் ஆவணப்படுத்துவேன். கபிஸ்தலத்தில் அர்ச்சனை செய்த அர்ச்சகர் ஒரு ஊமை. அவருக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதால் சில காரணங்களை முன்னிட்டு பதிவில் சொல்லவில்லை.
"வாலி, சுக்ரீவன் என்ற இரு வானரங்கள் வழிபட்ட இடம் " படங்களும் பதிவும் அருமை.
ReplyDeleteஅருமையான படங்கள்.....
ReplyDeleteநான் இது வரை இந்த கபிஸ்தலத்திற்குச் சென்றதில்லை. செல்லும் ஆவலைத் தூண்டி விட்டது உங்கள் படங்கள்.....
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
கோவிலுக்குச் சென்று வணங்கிய உணர்வு பதிவைப் பார்த்ததும் கிடைக்கிறது.
ReplyDeleteகடந்த ஜனவரிமாதத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களுக்கு சென்றோம் அப்போது இந்தக் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தோம். படங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteமறுமொழி > மாதேவி said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > Jeevalingam Kasirajalingam said...
ReplyDeleteசகோதரர் ஜீவலிங்கம் காசிராஜலிம்க்கம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
ReplyDeleteமூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// கடந்த ஜனவரிமாதத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களுக்கு சென்றோம் அப்போது இந்தக் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தோம். படங்கள் அனைத்தும் அருமை //
இது சம்பந்தமாக நீங்கள் பதிவு ஏதும் வெளியிட்டு இருந்தால் தெரியப் படுத்தவும்.
முன்பு எப்போதோ போய் இருக்கிறேன். மறுபடியும் உங்கள் பதிவு மூலம் கபிஸ்தலம் பார்த்து விட்டேன். படங்கள் எல்லாம் அழகு.
ReplyDeleteநன்றி.
சார்,
ReplyDeleteஉங்களுடைய இந்தப் பதிவிலிருந்து மூன்று படங்கள் என்னுடைய My Story Court என்கிற வலைத் தளத்திற்கு எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.
மறுமொழி > கோமதி அரசு said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > rajalakshmi paramasivam said...
ReplyDelete// சார், உங்களுடைய இந்தப் பதிவிலிருந்து மூன்று படங்கள் என்னுடைய My Story Court என்கிற வலைத் தளத்திற்கு எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன். //
சகோதரிக்கு நன்றி! எனது பதிவில் உள்ள அனைத்து படங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்! வாழ்த்துக்கள்!
Thankyou Sir.
ReplyDeleteஎன்னுடைய பதவில் http://rajalakshmi77.blogspot.in/2014/07/lord-vishnu-rescues-elephantgajendra.html உங்கள் பதிவிலிருந்து படங்கள் கொடுத்து உதவியதற்கு மிக்க நன்றி தமிழ் சார்.
ReplyDeletenice article
ReplyDeleteservice apartments in chennai