Thursday, 27 June 2013

ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது ( எனது 101 ஆவது பதிவு)



யாரும் பயப்பட வேண்டாம் இது 35 ஆண்டுகளுக்கு முன்பு (1978 - இல்) நடந்தது. அப்போது மணப்பாறையில் (வங்கியில்) பணிபுரிந்த நேரம். தினமும் திருச்சியிலிருந்து  மணப்பாறைக்கு சென்று வந்தேன். (காலையில் செல்லும்போது  பஸ். மாலையில் திரும்பி வரும்போது ரெயில்). என்னைப்போல் அந்த ஊரில் வெவ்வேறு அலுவலங்களில் பணிபுரிந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் இவ்வாறே சென்று வந்தோம். எல்லோருமே நண்பர்கள். காலையில் பஸ்சில் பேச நேரம் இருக்காது. மாலை திரும்பும்போது ரெயிலில் பேச நேரம் இருக்கும். அப்போது எல்லா விவரங்களும் அலசப்படும்.

உண்மையா அல்லது வதந்தியா:

ஒருநாள் ரெயிலில் திரும்பும்போது, நண்பர்களிடையே ஒரு செய்தி சொல்லப்பட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாது என்று அரசாங்கம் அறிவிக்கும் என்பதுதான். அந்தநாளில் இப்போது இருப்பதுபோல் இண்டர்நெட் (INTERNET), செல்போன், குறுஞ்செய்திகள் (SMS) மின்னஞ்சல் (email) வசதிகள் இல்லாத நேரம். அந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியா என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் அந்த செய்தி நன்றாக உலாவியது. அடுத்தநாள் வாடிக்கையாளர்கள் சிலரும், உள்ளூர் நண்பர்களும் இதுபற்றி என்னை கேட்டனர். யாருக்கு தெரியும்? .

கறுப்பு பணக்காரர்கள்:

பொதுவாக கறுப்பு பணக்காரர்கள் தங்களது சொத்துக்களை வெவ்வேறு முறைகளில் வைத்து இருப்பார்கள். முதலாவது: அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெளிப்படையாக வங்கிக் கணக்குகளில், லாக்கர்களில், சொத்து பத்திரங்களில் வைத்து இருப்பார்கள். சிலர்

ஆடிட்டர் வைத்துக் கொண்டு வரியை ஒழுங்காக கட்டி ரசீதெல்லாம் வைத்து இருப்பார்கள். இரண்டாவது: அதே ஆசாமிகள் சில சொத்துக்களை தனது பெயரில் இல்லாமல் இன்னொருவர் (பினாமி) பெயரில் வைத்து இருப்பார்கள். பினாமி சொத்து பினாமிகளுக்கே பெரும்பாலும் சென்று சேரும். மூன்றாவது: தங்க நகைகளாக அல்லது தங்க கட்டிகளாக பதுக்கி வைத்துக் கொள்ளுதல். நான்காவது: ரொக்கப் பணம். அதாவது கறுப்பு பணத்தை ரொக்கமாக, உயர் மதிப்பு (higher value denomination currency) நோட்டுக்களாக பதுக்கி வைத்தல். 1954 இல் சுதந்திர இந்தியாவில் Rs 1,000,  Rs. 5,000,  Rs. 10,000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. இவைகளில், அப்போது பெரும்பாலும் புழக்கத்தில் இருந்த உயர்மதி்ப்பு நோட்டு ஆயிரம் ரூபாய்தான். 

ரொக்கமாக வைத்து இருப்பவர்களுக்கு எப்போதுமே ஒரு பயம்.. அதாவது தாங்கள் வைத்து இருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அரசாங்கம் சொல்லிவிட்டால் என்ன ஆகுமோ என்ற கவலைதான். அவ்வாறு அறிவிக்கும் முன்னர் ஒரே சமயத்தில் எல்லா பணத்தையும் வங்கியில் கட்டவும் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றவும் முடியாது. 



மத்திய அரசு அறிவிப்பு:

எங்கள் வங்கியில், எனக்கு எழுத்தர் - காசாளர் (Clerk – cum – Cashier ) என்று இரண்டு வேலைகள். அப்போது காசாளராக கௌண்டரில் இருந்த நேரம். ஒருநாள் சிலர் கௌண்டரில் ஆயிரம் ரூபாய்களைக் கட்டினர். அதிகம் இல்லை. பக்கத்து கவுண்டர்களிலும் இதே போல் கட்டினர். அன்று மாலை பணிமுடிந்து ரெயிலில் திரும்பும் போது, இதேபோல் மற்ற வங்கிகளிலும் ஆயிரம் ரூபாய் வந்ததாக வங்கி நண்பர்கள் சொன்னார்கள். அடுத்து சிலநாட்களில் மக்களுக்கு தெரிவிக்கப்பட்ட  செய்தி “ ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது. மத்திய அரசு அறிவிப்பு “ என்பதுதான். ( அறிவிக்கப்பட்ட நாள் - ஜனவரி 16, 1978 , அன்றைய பிரதமர் திரு.மொரார்ஜி தேசாய் அவர்கள் )

அரசாங்கம் வெளியிடப் போகும் ஒரு அறிவிப்பு, தகவல் தொடர்பு அதிகம் இல்லாத அந்தநாளில், சாதாரணமான ஒரு ஊரிலேயே முன்னதாகவே சிலருக்கு மட்டும் தெரிந்து விடுகிறது என்றால் மற்ற பெரிய ஊர்களில் என்ன நடந்து இருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். மூட்டை கட்டி வைத்து இருந்த, விஷயம் தெரியாதவர்கள் என்ன செய்து இருப்பார்கள்?  கர்மயோகி அவர்கள் (www.karmayogi.net/?q=abarimidamaanaselvam1) தனது இணைய தளத்தில் அபரிதமான செல்வம்என்ற தனது கட்டுரையில் எழுதியது இது.

// ரூ.1000 நோட்டு இனி செல்லாது என 40 வருஷத்திற்கு முன் ஒரு சட்டம் வந்தது. அன்று ஒரு பெட்டிக் கடைக்காரன் 1000 ரூபாய் நோட்டில் பாக்கு மடித்துக் கொடுத்தான். 40 ஆண்டுக்கு முன்னும் பம்பாய் பெட்டிக் கடையில் 1000 ரூபாய் நோட்டு புழங்கியது. //

நேரம் இருக்கும்போது கர்மயோகியின் இந்த கட்டுரையை நண்பர்கள் அவசியம் படிக்கவும்.

முடிவு:

இப்போது 24 மணி நேர ATM CARD வசதி இருப்பதால், அவசர செலவுகளுக்கு மட்டும் பணத்தை கையில் வைத்துக் கொண்டு மீதியை வங்கிக் கணக்கில் வைத்துக் கொள்வதுதான் நல்லது. எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். 




( குறிப்பு: ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மட்டுமன்றி மற்ற 5000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுக்களையும் செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தது. The Indian 1000-rupee banknote (INR1000) is a denomination of Indian currency. It was first introduced by the Reserve Bank of India in 1954. In January 1978, all high-denomination banknotes (INR1000, INR5000, and INR10,000) were demonetised to curb )
 



My thanks to:

Google



 








 




44 comments:

  1. 5000, 10000 ரூபாய் நோட்டுகள் கூட இந்தியாவில் இருந்தது என்பது எனக்கு புதிய தகவல்....

    இப்போதும் மூட்டை மூட்டையாக கள்ளப் பணம் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்! :)

    ReplyDelete
  2. 101-வது பதிவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. தங்களின் 101வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.அரிய தெரியாத தகவலான ஐந்தாயிரம் பத்தாயிரம் பற்றி சொன்னமைக்கும் அந்த பணத்தாள்களை காட்டியமைக்கும் நன்றி

    ReplyDelete
  4. அனுபவம் புதுமையாயிருந்தது..

    ReplyDelete
  5. வியப்பான தகவல்...

    பகிர்வு 101 - மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    இணைப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  6. பல அரிய தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  7. 101 ஆவது பதிவிற்கும்,5,000, 10,000 ரூபாய் நோட்டுகளின் அபூர்வ படங்களை பதிவில் தந்தமைக்கும் வாழ்த்துக்கள்!
    விரைவில் 1001 ஐ எட்ட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. 5000, 10000 ரூபாய் நோட்டுகள் கூட இந்தியாவில் இருந்தது என்பது எனக்கு புதிய தகவல்....

    எனக்கும்....

    சுவாரஸ்யமான அபூர்வமான தகவலுடன்
    படங்களுடன் கூடிய பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  9. பயனுள்ளவைகளை மட்டுமே தரும்
    தங்கள் பதிவுகள் ஆயிரம் ஆயிரமாய்ப் பல்கிப் பெருக
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... ( 1 )

    // 5000, 10000 ரூபாய் நோட்டுகள் கூட இந்தியாவில் இருந்தது என்பது எனக்கு புதிய தகவல்....//

    எனக்கும் புதிய தகவல்தான். கட்டுரைக்கான தேடலின்போது கூகிள் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  11. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... ( 2 )
    நன்றி! அய்யா! உங்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (உங்கள் வலைப்பக்கம் வந்தும் சொல்வேன்)

    ReplyDelete
  12. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...

    கவிஞரின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > Madhu Mathi said...

    கவிஞரின் அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    அன்புச் சகோதரரின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி > ஸ்கூல் பையன் said...

    தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    வங்கி மேலாளரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  17. 5000, 10000 ரூபாய் நோட்டுகள் இருந்துச்சா?! ஆச்சர்யமா இருக்கு..,

    ReplyDelete
  18. மறுமொழி > Ramani S said... ( 1 )

    கவிஞரின் வாழ்த்திற்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > Ramani S said... ( 2 )

    // பயனுள்ளவைகளை மட்டுமே தரும், தங்கள் பதிவுகள் ஆயிரம் ஆயிரமாய்ப் பல்கிப் பெருக, மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் //

    கவிஞரின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )
    நன்றி அய்யா! தாங்கள் வெளியூரில் இருப்பது போலத் தெரிகிறது!

    ReplyDelete
  21. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )

    மீண்டும் நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > ராஜி said...

    // 5000, 10000 ரூபாய் நோட்டுகள் இருந்துச்சா?! ஆச்சர்யமா இருக்கு.., //

    உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஆச்சரியம்தான். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  23. பல அறியாத தகவல்களை இந்தப் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன். நன்றி ஐயா. நூற்றியொன்றாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து பல பதிவுகள் எழுதிச் சிறப்புறவும் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. பல அறிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete

  25. என் நினைவு சரியாக இருக்குமானால் அந்தக் காலத்தில் “நாம் இருவர் “ என்ற திரைப் படத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு கேட்டு குய்யோ முறையோ என்று ஒரு பாத்திரம் அலறுவார்.சாரங்கபாணியா வி.கெ ராமசாமியா தெரியவில்லை. அது நினைவுக்கு வருவதுபோல் 1978-ன் அறிவிப்பு நினைவுக்கு வரவில்லை..

    ReplyDelete
  26. மறுமொழி > கீத மஞ்சரி said...
    சகோதரி கவிஞர் கீதமஞ்சரியின் கருத்துரைக்கும், வாழ்த்துக்களுகும் நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > Sasi Kala said...

    சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  28. ஆசைக்காக ஒண்ணு, ரெண்டு ஆயிரம் ரூபாய் வைத்திருந்தவர்களின் கதி என்னவாயிற்று? சிலர் உண்மையிலேயே ஆசைக்காக சேர்த்து வைத்திருக்க சாத்தியம் இருக்கிறது அல்லவா? 5,000 மற்றும் 10,000 நோட்டுக்கள் உண்மையிலேயே இருந்ததா? புதிய தகவல்.

    ReplyDelete
  29. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // என் நினைவு சரியாக இருக்குமானால் அந்தக் காலத்தில் “நாம் இருவர் “ என்ற திரைப் படத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு கேட்டு குய்யோ முறையோ என்று ஒரு பாத்திரம் அலறுவார்.சாரங்கபாணியா வி.கெ ராமசாமியா தெரியவில்லை.//

    நாம் இருவர் படத்தில் நடித்தவர் சாரங்கபாணி.

    // அது நினைவுக்கு வருவதுபோல் 1978-ன் அறிவிப்பு நினைவுக்கு வரவில்லை.. //

    அப்போது ஆட்சி புரிந்த ஜனதா கட்சி ( JANATHA PARTY) தலைவர்களிடையே சரியான ஒற்றுமை இல்லை. கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம், முன்னரே கசிந்து விட்டதால் முழு அளவில் வெற்றி பெற இயலவில்லை. அதனால் பரபரப்பு இல்லாமல் போய்விட்டது.

    ReplyDelete
  30. மறுமொழி > Packirisamy N said...

    // ஆசைக்காக ஒண்ணு, ரெண்டு ஆயிரம் ரூபாய் வைத்திருந்தவர்களின் கதி என்னவாயிற்று? //

    நிறையபேர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. மேலே GMB .அவர்களுக்கு கொடுத்த மறுமொழியைக் காணவும். தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  31. ஆம் நீங்கள் சொல்வது உண்மையே! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது!அதனால் விலை வாசியில் பல மாற்றங்கள் கூட ஏற்பட்டன!

    ReplyDelete
  32. செல்லாது என்பது வதந்தியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் உண்மையில் அப்படி நடந்திருக்கிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
    5000, 10000 நோட்டுக்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை புதிய செய்திதான்
    101 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. 101 வது பதிவுக்கு இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  35. மறுமொழி > T.N.MURALIDHARAN said...

    மூங்கிற் காற்று முரளிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  36. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    சகோதரியின் கருத்துரைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!


    ReplyDelete
  37. எனக்கு தெரியாத தகவல் இது. 500 க்கும் முன்கூட்டிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  38. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
    தங்களது கருத்துரைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  39. தங்களை தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறேன். தென்றல் தளம் வருக.

    ReplyDelete
  40. மறுமொழி > Sasi Kala said...

    சகோதரி தென்றல் சசிகலா அவர்களுக்கு! முன்பு ” எனது ஊர் – தொடர் பதிவு “ எழுத அழைத்தீர்கள். உடனே ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களது சொந்த ஊருக்கு (திருமழபாடி) கேமராவோடு சென்று வந்து ஒரு பதிவு எழுதினேன்.. இப்போழுது மறுபடியும் ஒரு தொடர்பதிவு! எனக்கு உங்களைப் போல நகைச்சுவையாக எழுத வராது. இருந்தாலும் எழுதுகிறேன்! நன்றி!

    ReplyDelete
  41. படித்தேன்...
    சுவை...
    புதிய தகவல்...

    ReplyDelete