Thursday, 6 December 2012

மர்ம காய்ச்சல்!



காய்ச்சல் வாங்கலையோ? காய்ச்சல்!
என்றே ஊரெங்கும் ஒரே கூச்சல்!
அந்த காய்ச்சல் இந்த காய்ச்சல்
என்ற பெயரில்லாமல் மர்ம காய்ச்சல்!
அழையாத விருந்தாளியாய் அன்போடு!
என்னையும் நாடி வந்தது துடிப்போடு!
இலவச இணைப்பாய் உடம்பு வலியோடு!
தொடர் பதிவுகள் போல  கடும் இருமலோடு!

உணவும் இல்லை!  உறக்கமும் இல்லை!
வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை!
பதிவுலகம் பக்கம் பார்க்க முடியவில்லை!
வந்தவர்களுக்கு பதிலும் தர இயலவில்லை!
இருப்பதும் ஓர் உயிர் என்றே புரிகின்றது!
பத்து பதினைந்து நாட்கள் ஆனபின்னும்
அந்தோ அவதிப் பட்டேன் நாளும்!
மருத்துவரைக் கண்டதும் ஓடியது காய்ச்சல்!
எனக்கு வரவில்லை இன்னும் பாய்ச்சல்!


 ( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )


29 comments:

  1. விரைவில் பூரண நலம் பெறவும்
    முன்னை விட வேகமாய்ச் சீறிப் பாயவும்
    அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. விரைவில் பூரண குணமடைந்து துடிப்புடன் வாங்க, நானும் பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  3. :-)))))))))) நான்தான் உங்களுடைய ஐம்பதாவது பாலோவர்ஸ்.

    குணமானதும் எனது பக்கமும் வந்து போங்க நண்பரே.

    ReplyDelete
  4. அடடா இன்னமும் சரியாகவில்லையாங்க .இரத்தப் பரிசோதனை செய்தீர்களா ? என்ன சொன்னாங்க கவனமுடன் பார்க்கவும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. விரைவில் பூரண குணம் அடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  6. விரைவில் முழுநலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  7. விரைவில் குணமடைய வேண்டுகிறேன்…

    ReplyDelete
  8. மறுமொழி >Ramani said...
    // விரைவில் பூரண நலம் பெறவும் முன்னை விட வேகமாய்ச் சீறிப் பாயவும் அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்
    வாழ்த்துக்களுடன்...//
    கவிஞர் ரமணி அவர்களின் அன்பிற்கும், என் பொருட்டு அன்னை மீனாட்சி அம்மனிடம் வேண்டிக் கொண்டதற்கும் நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி > semmalai akash said...

    // விரைவில் பூரண குணமடைந்து துடிப்புடன் வாங்க, நானும் பிராத்திக்கிறேன் //

    தங்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி!

    //நான்தான் உங்களுடைய ஐம்பதாவது பாலோவர்ஸ்.//

    நன்றி! விரைவில் உங்கள் வலைப் பக்கம் வருகிறேன்!

    ReplyDelete
  10. மறுமொழி > Sasi Kala said...

    //அடடா இன்னமும் சரியாகவில்லையாங்க .இரத்தப் பரிசோதனை செய்தீர்களா ? என்ன சொன்னாங்க கவனமுடன் பார்க்கவும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.//

    காய்ச்சல் நின்று விட்டதால் டாக்டர் ரத்தப் பரிசோதனை வேண்டியதில்லை என்று சொல்லி விட்டார். நல்ல வேளையாக எனக்கு சர்க்கரை நோயும் மூச்சுத் திணறலும் இல்லை. அதனால் தப்பித்தேன். தங்கள் வேண்டுதலுக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    உங்களுக்கு ஒரு இமெயில் அனுப்ப நினைத்திருந்தேன். அதற்கும் முடியவில்லை. தங்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > T.N.MURALIDHARAN said...

    தங்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > மதுரை சரவணன் said...

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் உங்களை சந்திக்கிறேன். தங்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி!

    ReplyDelete
  14. விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது அழையா விருந்தாளியாக வந்த காய்ச்சலுக்கு தெரியவில்லை போலும் ... ஊட்டமிகு பழங்களும், உணவுகளும் உங்களைப் பழைய நிலைக்கு கொண்டுவரும்...

    ReplyDelete
  15. மறுமொழி > ezhil said...
    சகோதரியின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி!

    ReplyDelete
  16. தொடர் பதிவு போல கடும் இருமல்....
    அடடா! காய்ச்சலிலும் பதிவு நினைவு!
    இதற்குள் உடல் நலமடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    பிரார்த்தனைகளுடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
  17. காய்ச்சலுடன் எழுத்தும் பிறந்துவிட்டது.

    உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  18. மறுமொழி > Ranjani Narayanan said...

    //இதற்குள் உடல் நலமடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    பிரார்த்தனைகளுடன்,//

    சகோதரியின் அன்பான பிரார்த்தனைக்கு நன்றி! டாக்டரின் சரியான கவனிப்பு மற்றும் எனக்காக வேண்டிக் கொண்டவர்களின் பிரார்த்தனையுடன் என்னுடைய பிரார்த்தனை ஆகியவற்றால் இப்போது உடல் நலமடைந்து விட்டேன்.

    ReplyDelete
  19. மறுமொழி > மாதேவி said...
    இப்போது நான் நலம்! சகோதரியின் ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி!

    ReplyDelete
  20. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    எனக்கும் அதே நிலை தான். என் விஷயமாக அல்ல. என் மனைவி விஷயமாக கடந்த பத்து நாட்களாக ஒரே அலைச்சல்.

    ஒவ்வொரு மருத்துவ்மனைகளுக்கும், ஸ்பெஷலிஸ்டுகளுக்கும், மருந்துக்கடைகளுக்கும், X-Ray ECG BLOOD TEST போன்ற LAB களுக்கும், ஆட்டோக்காரர்களுக்கும் நாம் ஏதோ தரவேண்டிய பாக்கியுள்ளது. எந்த ஜன்மத்தில் என்ன கடன் பட்டிருக்கிறோமோ? அவற்றை இந்த ஜன்மத்திலாவது முற்றிலும் தீர்க்க முடியுமோ முடியாதோ?

    மேற்படி சம்பந்தப்பட்டவர்களின் பொருளாதார நிலை சற்றே உய்ர நாமும் ஏதோ ஒரு வழியில் உதவியாக இருப்பதில் இன்பம் கொள்ளத்தான் வேண்டியுள்ளது, நம் பொருளாதார நிலை நம்மோடு ஒத்துழைக்கும் வரை.

    எங்கு சென்றாலும் மிகவும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படுகிறது.

    ஒவ்வொன்றையும் பற்றி எழுத நமக்கும் ஏதாவது ஒரு மேட்டர் கிடைத்து விடுகிறது. நேரம் தான் கிடைப்பதில்லை. நேரம் கிடைத்தாலும் மின்சாரம் இருப்பதில்லை.

    >>>>>>>

    ReplyDelete
  21. //உணவும் இல்லை! உறக்கமும் இல்லை!
    வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை!

    பதிவுலகம் பக்கம் பார்க்க முடியவில்லை!
    வந்தவர்களுக்கு பதிலும் தர இயலவில்லை!

    இருப்பதும் ஓர் உயிர் என்றே புரிகின்றது!
    பத்து பதினைந்து நாட்கள் ஆனபின்னும்
    அந்தோ அவதிப் பட்டேன் நாளும்!

    மருத்துவரைக் கண்டதும் ஓடியது காய்ச்சல்!
    எனக்கு வரவில்லை இன்னும் பாய்ச்சல்!//

    நன்றாக நகைச்சுவையாகவே எழுதியுள்ளீர்கள் ஐயா.

    இன்று இப்போது தான் இந்தப்பதிவினை காண நேர்ந்தது.

    விரைவில் தாங்கள் பூரணகுணமடையவும், வழக்கம்போல அழகான பதிவுகள் வெளியிட்டு தகவல்கள் தெரிவிக்கவும் வேண்டுகிறேன்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  22. நலம் பெற பிரார்த்தனைகள்....

    ReplyDelete
  23. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2 )

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

    //எங்கு சென்றாலும் மிகவும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படுகிறது.//

    உண்மைதான். குறிப்பாக இந்த அறிவுரை எனக்கு கட்டாயம் தேவை.

    //ஒவ்வொன்றையும் பற்றி எழுத நமக்கும் ஏதாவது ஒரு மேட்டர் கிடைத்து விடுகிறது. நேரம் தான் கிடைப்பதில்லை. நேரம் கிடைத்தாலும் மின்சாரம் இருப்பதில்லை.//

    இது இருந்தா அது இல்லை அது இருந்தா இது இல்லை என்ற பழைய திரைப்படப் பாடல்தான் ஞாபகம் வருகிறது.


    //விரைவில் தாங்கள் பூரணகுணமடையவும், வழக்கம்போல அழகான பதிவுகள் வெளியிட்டு தகவல்கள் தெரிவிக்கவும் வேண்டுகிறேன்.//

    இறைவன் அருளால் நான் நலம்! கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறி வருகிறது!









    ReplyDelete
  24. மறுமொழி>இராஜராஜேஸ்வரி said...
    // நலம் பெற பிரார்த்தனைகள்.... //

    சகோதரியின் பிரார்த்தனைக்கு நன்றி! நலமே!

    ReplyDelete
  25. காய்ச்சலில் இருந்து குணமானது அறிந்து மகிழ்ச்சி. விரைவில் வழக்கம்போல் பதிவிட விழைகின்றேன்.

    ReplyDelete
  26. மறுமொழி> வே.நடனசபாபதி said...

    //காய்ச்சலில் இருந்து குணமானது அறிந்து மகிழ்ச்சி. விரைவில் வழக்கம்போல் பதிவிட விழைகின்றேன். //

    தங்களின் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி! இறைவன் அருளால் மீண்டு, மீண்டும் வநது விட்டேன்

    ReplyDelete