பெரும்பாலும் என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் அனைவரது பதிவுகளையும்,
செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் பார்த்து விட்டு லைக் கொடுத்துவிடுவது எனது வழக்கம்.
சிலசமயம் கருத்துரைகளையும் எழுதுவேன். வலைப்பதிவர், நண்பர் எங்கள் ப்ளாக் (http://engalblog.blogspot.com
) ஸ்ரீராம் பாலசுப்ரமணியம் அவர்கள் ஃபேஸ்புக்கிலும் எனக்கு நண்பர். அன்றும் (27 டிசம்பர்
2016) அப்படித்தான். அவர் ஒரு பதிவை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார். அதற்கு
மற்றவர்களும் நானும் கருத்து தெரிவித்து இருந்தோம். அந்த பதிவு கீழே.
xxxxx
Sriram Balasubramaniam
இன்னுமா அந்த டிவி சேனல் பெயரை மாற்ற யாருமே முன்மொழியவில்லை!
Sridhar
Ponneri Sasi TV?
Murugan
Thirunavukkarasu Chi TV ?
Bhanumathy
Venkateswaran அதானே..!!!
Thamizh
Elango T சின்னம்மா டி.வி
xxxx
மேற்படி ”சின்னம்மா டி.வி” என்ற எனது கருத்துரையை சாதாரணமாகத்தான்
எழுதினேன். பின்னர் அதனை மறந்தும் விட்டேன். ஆனால் அடுத்தநாள் எனக்கு ஃபேஸ்புக்கிலிருந்து
ஒரு செய்தி வந்து இருந்தது. இதற்கு முன்னர் இதுமாதிரி எனக்கு எந்த அறிவிப்பும் வந்தது
கிடையாது. அந்த அறிவிப்பு இங்கே
Privacy tip: who can see when you
like or comment on a post
Thamizh Elango, you recently
commented on a post by Sriram Balasubramaniam. We want to make sure you know
who can see when you interact with posts. To learn more, check out Privacy
Basics.
—The Facebook Privacy Team
இந்த
அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு பரிசோதனை முயற்சியாக எனது கருத்துரையை நண்பரின்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து நீக்கினேன்; உடனே இந்த அறிவிப்பு மறைந்து விட்டது. நான்
மறுபடியும் ”சின்னம்மா டி.வி” என்று அதே கருத்துரையை
அதே பதிவினில் எழுதியுள்ளேன். இம்முறை எந்த அறிவிப்பும் எனக்கு வரவில்லை.
இந்த அறிவிப்பு, சாதாரணமான ஒன்றா அல்லது
எச்சரிக்கை மணியா அல்லது இதே போன்று எல்லோருக்கும் ஃபேஸ் புக்கிலிருந்து சொல்லி இருக்கிறார்களா
என்று தெரியவில்லை. நண்பர்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.