சில மாதங்களுக்கு
முன்னர் “தமிழ் திரட்டிகளுக்கு என்ன ஆயிற்று? ” என்ற ஒரு
பதிவினை எழுதி இருந்தேன்.அதில்(http://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post_9869.html ) ”என்ன காரணம்
என்று தெரியவில்லை?
இப்போது சமீப காலமாக நன்கு பிரபலமாக
இருந்த தமிழ் தளங்கள் நின்று விட்டன. அல்லது செயல்படாமல் நிற்கின்றன” –
என்ற எனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தேன்.
இப்போது
வலைச்சரத்தில் 22.மார்ச்.2015 இற்குப் பிறகு புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்க யாரும்
வராதபடியினால் அப்படியே நிற்கிறது. வலைச்சரம் மீதுள்ள ஆதங்கத்தில் (அன்பர்கள்
மன்னிக்கவும்) எழுதிய கட்டுரை இது.
வலைச்சரம்:
தமிழ் வலையுலகில் தனி மணிமகுடமான் வலைச்சரம் 26.02.2007 இல் தொடங்கப் பட்டது வலைச்சரம். இங்கு வாரம் ஒரு வலைப் பதிவர் ஆசிரியராக இருப்பார். அவர் தனது மனங் கவர்ந்த அல்லது படித்த வலைப் பதிவர்களை அந்த வாரம் முழுக்க அறிமுகம் செய்ய வேண்டும். அப்போது வலைச்சரத்திற்கு வரும் பின்னூட்டங்களுக்கும் பதில் தர வேண்டும். இதுதான் வலைச்சரத்தின் நடைமுறை. இந்த வலைச்சரத்தில் வலைப்பதிவர் உதவிப்பக்கம் மற்றும் தமிழில் எழுத மென்பொருள் என்று ஆக்க பூர்வமான பதிவுகளும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் வலைச்சரத்தில் யார் யார் ஆசிரியர்களாக இருந்தார்கள் என்ற பட்டியலும் இருக்கின்றது வலைச்சரத்திற்கு ஒருவாரம் ஆசிரியர் பொறுப்பு என்பது பெருமிதமாகவும் அந்த வலைப் பதிவரையும் அறிமுக நண்பர்களையும் ஊக்குவிப்பதாகவும் இருக்கின்றது.
அன்பின் சீனா மற்றும்
தமிழ்வாசி பிரகாஷ்
அன்பின் சீனா அவர்கள்
வலைச்சர வரலாற்றை கீழ்க்கண்ட தனது பதிவுகளில் எழுதி இருக்கிறார். மேலும் அன்று
தொடங்கி இன்றுவரை பொறுப்பேற்ற வலைப்பதிவர் பெயர், வலைத்தள முகவரி, மின்னஞ்சல்
மற்றும் செல் போன் எண்கள் ஆகியவற்றை கொண்ட MS WORD XL கோப்பு (FILE) ஒன்றையும் தந்துள்ளார். வலைப் பதிவர்களோடு தொடர்பு
கொள்ள இந்த கோப்பு பயன்படும்.
வலைச்சரத்தில் அந்த
வார ஆசிரியரின் பணி நிறைவடைந்த ஒவ்வொரு ஞாயிறு அன்றும், அடுத்த வாரம் வரப் போகும் ஆசிரியரைப்
பற்றி அறிமுகம் செய்வது அன்பின் சீனாவின் வழக்கம்.
அன்பின் சீனா
அவர்களுக்கு வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் குழுவில் துணையாக இருந்து வருபவர்
தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள். இவர் "வலைச்சரம்" சீனா ஐயா சிறப்புப் பேட்டிhttp://www.tamilvaasi.com/2012/02/blog-post_27.html
என்ற பதிவினை மீள் பதிவாக வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவினில் வலைச்சரம் பற்றிய தகவல்கள், மற்றும் வலைப் பதிவர்களுக்கான பயனுள்ள
தகவல்களைக் காணலாம்.
எனது வேண்டுகோள்
கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து
இயங்கி வந்த வலைச்சரத்தில், கடந்த மாதங்களில் ஒரே ஆசிரியர் ஒருவாரம் ஆசிரியர்
பொறுப்பில் இருந்து விட்டு அடுத்த வாரமும் அவரே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
தனது அனுபவத்தை, விடாது கருப்பு – வலைச்சரத்தில்! என்றே தலைப்பிட்டு எழுதினார் திரு வெங்கட் நாகராஜ் அவர்கள்.
மூத்த வலைப்பதிவர்
அய்யா V.G.K (வை.கோபால கிருஷ்ணன்)
அவர்கள் என்னை ஒருவாரம் வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்க அழைத்தபோதும், இரண்டாவது
முறையாக அன்பின் சீனா அவர்கள் அழைத்தபோதும், அப்போது கண்ணில் ஏற்பட்ட கோளாறு
காரணமாக உடனடியாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இருந்த போதிலும் அப்போதிருந்தே,
வலைச்சரம் ஆசிரியர் பணிகளுக்காக வலைப்பதிவர்கள் பற்றிய குறிப்புகள் படங்கள்
ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொண்டேன். பின்பு அன்பின் சீனா அவர்கள் மறுபடியும் அழைத்தபோது,
தட்டாமல் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு பணி (18.பிப்ரவரி.2013
முதல் 24.பிப்ரவரி.2013 முடிய) செய்தபோது இவை உதவின. அவ்வப்போது பின்னூட்டங்கள்
இடும்போது மட்டும் கொஞ்சம் அதிகம் கம்ப்யூட்டரில் உட்கார வேண்டி இருந்தது. மேலும்
நான் பணி விருப்பஓய்வு பெற்று வீட்டில் இருந்தபடியினால் பணிச்சுமையோ அல்லது
அலுப்போ தெரியவில்லை.
அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள், வலைச்சரம் ஆசிரியர்
பொறுப்பில் இருந்தபோது எழுதியது இது.
// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,
அப்பாடா. பதிவர்களையும் அவர்களின்
பதிவுகளையும் தேடிப்பிடிச்சு, தினம்
ஒரு பதிவு
வீதம் போட்டு, வரும்
பின்னூட்டங்களுக்கு பதில் எழுதி, மூச்சு முட்டிப் போச்சுங்க. ஆச்சு, ஒரு மாதிரியாகத்தானே இந்த வலைச்சர ஆசிரியப் பொறுப்பு என்னும் இன்பமான சுமையை
இறக்கி வைக்கிறேன். //
( PICTURE
- COURTESY: “ GOOGLE IMAGES )
இப்போது வலைச்சரம்
கடந்த மூன்று வாரங்களாக அப்படியே நிற்கிறது. எனவே “வலைச்சரம்” அடுத்து என்ன
யுத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலைப்பதிவர்கள் யோசிக்க வேண்டிய தருணம் இது. என்னுடைய ஆலோசனை என்னவெனில், ஆசிரியர் பணிக்கு யாரும் இல்லாத போது வலைச்சரத்தின் அந்நாளைய பழைய பதிவுகளை மீள்
பதிவுகளாக வெளியிடலாம். இதில் ஒன்றும் தவறேதும் இல்லை. வாழ்க வலைச்சரம்!

