Thursday, 1 January 2015

புத்தாண்டு பிறந்தது! (2015)



புத்தாண்டு பிறந்தது!  (2015)


புத்தாண்டு பிறந்தது! ஆங்கிலப்
புத்தாண்டு பிறந்தது!


புத்தாண்டை வரவேற்கும்
காலை வழிபாடு
சர்ச்சுகளில் மட்டுமா எங்கள்
ஊர் ஆலயங்கள் 
அனைத்திலும் தான்.


இந்த புத்தாண்டு தினத்தில்!
வைகுண்ட நாதருக்கும்
வந்து விட்டது ஆசை
இன்றே வைகுண்ட ஏகாதசி!


வண்ண வண்ண கேக்குகள் வகை
வகையாய் ஐஸ்கிரீம்கள் என்றே
வழிந்தோடும் பேககரிகள்.

மட்டன் பிரியாணி
சிக்கன் பிரியாணி
முட்டை பிரியாணி - என்றே
கமகமக்கும் விடுதிகள்


சைக்கிள் பூக்கூடைகளில்
புதிதாய் வந்த செய்தியென
மல்லிகை, முல்லை, செவ்வந்தி,
என்றே அடுக்கி வைக்கப்பட்ட
மலர்ப் பந்துகள் - கிறங்க வைக்கும்.
ஒற்றை ரோஜாவை தேடிய
இளைஞனுக்கும் ஏமாற்றமில்லை! 

வலைப் பதிவர்களின்
வாழ்த்துக்களுக்கும்
பஞ்சமில்லை!
நெஞ்சார வாழ்த்துங்கள்
வாயார சொல்லுங்கள்
அனைவருக்கும் ஆங்கில
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
 


                                            ( ALL PICTURES THANKS TO GOOGLE)