இன்று தமிழ்நாட்டில் “பில்லியன்” டாலர் கேள்வி எதுவென்றால் “கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்படுமா? மூடப்படுமா?” என்பதுதான். நிச்சயம் தொடங்கப்படும் என்பதுதான் பதில்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்ட ஆரம்ப நிலயில் யாருமே எதுவுமே சொல்லவில்லை. இந்த திட்டம் தொடங்கப் படுவதற்கு முன் ஆலை விபத்துக்கள் உலகில் எந்த இடத்திலும் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. செர்னோபில் அணு ஆலை விபத்து , யூனியன் கார்பைடு தொழிற்சாலை விபத்துக்கள் என்று நடக்கத்தான் செய்தன. ஊரின் நடுவே இருக்கும் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் விபத்து நடந்தால் கூட அந்த ஊருக்கு அதிகம் பாதிப்புதான். அந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையை எதிர்த்து யாரும் போராடுவது கிடையாது.. சமூக ஆர்வலர்கள், சாதி சங்கங்கள்,உள்ளூர் அரசியல் கட்சிகள், இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவ மதங்களின் முக்கியமான நபர்கள் என்று எல்லோரும் போராட்டத்தை தொடங்கி விட்டார்கள். இப்போது எப்படி முடிப்பது என்று முழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் உண்மை.உள்ளாட்சி தேர்தலுக்காகஒருநாள் ஒத்திவைத்தார்கள். வழக்கம் போல போராட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு என்று மாறி மாறி காட்சிகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன.
ஜெயலலிதாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பது தீராத ஆசை. இதனை திருச்சியில் 2011- சட்டமன்ற தேர்தல் கூட்டத்தில் பேசும் போது “தொண்டர்கள் விரும்பும் கூட்டணி” என்று குறிப்பிட்டார். ஆனாலும் அந்த கூட்டணி ஏற்படவே இல்லை. சட்ட மன்ற தேர்தல், ஊராட்சி தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு சாதகமாக அரசியல் காற்றும் வீசுகிறது.காங்கிரஸைப் பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் திமுக என்பது அதிகப் படியான ஒரு சுமை. பாராளுமன்ற தேர்தல் வரும்போது அல்லது வருவது போல் ஒரு சமிக்ஞை தோன்றினாலும் சுமையை இறக்கி வைத்து விடுவார்கள்.
அரசியலில் யாரும் பழசை நினைத்துக் கொண்டு இருப்பதில்லை. .இன்று நிலைமை என்ன என்பதுதான் முக்கியம். ஜெயலலிதாவிற்கு காங்கிரஸோடு கூட்டணி வைப்பதில் தனிப்பட்ட முறையிலும் ஆட்சி செய்வதிலும் அநேக அனுகூலங்கள்.
மத்திய – மாநில அரசுக்கு எதிரான போராட்டம் எதுவாயினும் அதைக் கையாள வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு அதிகம் உண்டு.
அதிலும் பாதுகாப்புத் துறை சம்பந்தப் பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக (முக்கியமாக அங்கு பணி செய்யும் ஊழியர்களை தடுத்தல் போன்றவை) நடக்கும் போது பாதுகாப்பு தர வேண்டியது மாநில அரசின் கடமை. காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா கூட்டணி வைக்கும் சந்தர்ப்பம் அமையும் போது எல்லாம் தலை கீழாக மாறிவிடும்.
மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தனது ஆட்சியில் நிலவும் மின் பற்றாக்குறை நீங்க அவருக்கு கூடங்குளம் அணு மின் நிலையம் அவசியம் தேவை. பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி, அவரது பாணியில் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது எது வேண்டுமானாலும் நடக்கும். போராட்டம் செய்யும் பாதி பேர் காணாமல் போய் விடுவார்கள். இன்னும் சிலர் மத்திய – மாநில அரசுகள் இப்போது செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக அறிக்கை விடுவார்கள். பொது மக்கள் பயம் தெளிந்து விடும்.
கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வதைப் போல “அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா”.
தி.த.இளங்கோவன்,
ReplyDeleteஇதைத்தான் என்ப்பதிவில் ஒரு பகுதியாக சொல்லி இருந்தேன். இப்போதைக்கு சாத்வீகம் , கூட்டணி அமைந்த பின்னரும் போராட்டம் தொடர்ந்தால் இரும்புகரம் பாயும்!
கடைசி வரியில் அடிச்சீங்க ஒரு அடி!
ReplyDeleteவணக்கம்! வவவால் சார்! சொன்னபடியே தாங்கள் எனக்கு பின்னூட்டம் தந்ததில் மிக்க மகிழ்ச்சி! ” கூடங்குளம் அரசியல்” (04-அக்டோபர்-2011)என்ற எனது கட்டுரையின் தொடர்ச்சிதான் இது. ந்ன்றி!
ReplyDeleteசென்னை பித்தன் அவர்களுக்கு வணக்கம்!
ReplyDeleteபதிவுலகில் எவ்வாறு இணைவது என்று நான் கூகிளில் தேடியபோது தங்களது ”ஒரு பதிவர் மனம்திறக்கிறார் “என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் தாங்கள்குறிப்பிட்ட’’பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.. .. ..எழுதுவது ஒன்றே நோக்கமாக இருந்தது’’ என்ற வரிகள் என்னை மேலும் எழுதத் தூண்டியது.முன்பே
சொல்லியிருக்க வேண்டியது.இன்றுதான் எனக்கு நேரம் கிடைத்தது.தங்கள் வருகைக்கு நன்றி