Showing posts with label தமிழ் பல்கலைக் கழகம். Show all posts
Showing posts with label தமிழ் பல்கலைக் கழகம். Show all posts

Saturday, 20 July 2013

எம்ஜிஆர் கட்ட நினைத்த “தமிழ் நாடு ” எழுத்து வடிவ கட்டிடங்கள்



      ( தமிழ் பல்கலைக் கழகம்” Photo thanks to www.thehindu.com )

ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தமது வலைப்பதிவில் “ கரந்தை தமிழ்ச் சங்கம் “ வரலாற்றினை தொடராக எழுதி வருகிறார். அண்மையில் எழுதிய பதிவில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தஞ்சையில் தமிழ் பல்கலைக் கழகம் நிறுவ எடுத்துக் கொண்ட தகவல்களை எழுதியுள்ளார். (கரந்தை - மலர் 16  http://karanthaijayakumar.blogspot.com/2013/07/16.html ) அந்த கட்டுரையைப் படித்ததும் தமிழ் பல்கலைக் கழகம் குறித்த சில நினைவுகள் வந்தன.


Tamil university library building open ceremony  (Opened by Chief Minister  Dr. M.G.R )

                              
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு இவைகளை ஆராய்ச்சி செய்ய தஞ்சையில் தமிழ் பல்கலைக் கழகம் நிறுவ  ஆவன செய்தார். சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் ( அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று) உருவாக்கப்பட்டது. 
  
இங்கு  குறிப்பிடத்தக்க செய்தி ஒன்று.  தமிழ் பல்கலைக் கழகம் அமைந்த இடம் வாகையூர் என்று அழைக்கப் படுகிறது. அங்குள்ள கட்டிடங்களின் அமைப்பு வானத்திலிருந்து பார்க்கும்போது தமிழ் நாடு என்ற எழுத்துக்கள் தோன்றும்படி தொடங்கப்பட்டது. ஆனால் மி மற்றும்  ழ் என்ற இரண்டு எழுத்துக்கள் வடிவில் மட்டுமே கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. என்ன காரணத்தினாலோ ( வேறு என்ன? எல்லாம் அரசியல்தான்.) மற்ற எழுத்துக்களின் வடிவில் கட்டடங்கள் கட்டப்படவே இல்லை. அப்போது இண்டர்நெட் வசதி இப்போது உள்ளது போல் கிடையாது. செய்தித் தாள்கள் மூலம் விவரம் அறிந்ததோடு சரி. இப்போது இருக்கும் கட்டிடங்களை  விக்கிமேப்பியாமூலம் காணலாம். மி மற்றும் ழ்என்ற இரண்டு எழுத்துக்கள் வடிவில் மட்டுமே  கட்டிடங்கள் இருப்பதைக் காணுங்கள். இங்கே க்ளிக் செய்யுஙகள்.

இங்கு எம்ஜிஆர்  தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினைக் .காணலாம். தஞ்சாவூர், தமிழ் பல்கலைக் கழகத்தில், விட்டுப் போன எழுத்துக்கள் வடிவங்களில் கட்டிடங்களை கட்டினால் தமிழ் நாடு நிறைவுறும்.

இது பற்றிய விவரங்களை இணையத்தில் தேடியபோது இந்த செய்தி விவரமாக எங்கும் இல்லை. சென்ற மாதம் வெளியான DECCAN CHRONICLE – இல் (23 ஜூன் 2013) “ Tamil letters shape varsity building “ என்ற தலைப்பில் ப்ரமிளா கிருஷ்ணன் என்பவர் எழுதிய கட்டுரையை இணையத்தில் படிக்க நேர்ந்தது. அதில் வெளிவந்த படம் இது. ( http://www.deccanchronicle.com/130623/news-current-affairs/article/tamil-letters-shape-varsity-building )




 தமிழ் பல்கலைக் கழகத்தின் அதிகாரப் பூர்வமான இணைய தளத்தில் இந்த செய்தியோ, தமிழ் பல்கலைக் கழகம் தொடங்க எம்ஜிஆர் செய்த உதவிகளைப் பற்றியோ, புகைப் படங்களோ, வரலாறு எதுவும் இல்லை. இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. இப்போது நடக்கும் அரசு எம்ஜிஆர் வழிவந்த அரசு. எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தமிழ் பல்கலைக் கழக வளாகத்தில் எம்ஜிஆர் கட்ட நினைத்த “தமிழ் நாடு என்ற வடிவில் அமையும் கட்டிட அமைப்பை முடிக்க வேண்டும் மேலும் தமிழ் பல்கலைக் கழக இணையதளத்தில் எம்ஜிஆர் தொடங்கிய வரலாற்றினையும், துவக்ககால புகைப் படங்களையும் வெளியிட ஆவன செய்ய வேண்டும்.



கட்டுரை எழுத துணை நின்றவை: (நன்றியுடன்)


www.sthapatimps.org/gallery.html