நான் மேலே சொன்ன த.மு.எ.க.ச மற்றும் வயல் எதிலும் உறுப்பினர் கிடையாது.
சிறப்பு சொற்பொழிவாளரான ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்கள், வாட்ஸ்அப்பில் கூட்டத்திற்கான
அழைப்பிதழை அனுப்பி இருந்தார். நானும் சென்று
இருந்தேன். வீட்டை விட்டு கிளம்பும் முன் மழை. கொஞ்சம் விட்டதும் ஆட்டோவில் சென்று வந்தேன்.
கூட்டம் துவங்கும் முன் எடுக்கப்பட்ட படங்கள்.(கீழே)
கூட்டம் துவங்கிய பின்
புதுக்கோட்டை கவிஞர் – ஆசிரியர் நா. முத்துநிலவன் அய்யா அவர்கள்
‘வீழ்வோம் என்று நினைத்தாயோ?” என்ற தலைப்பினில் சிறப்புரை ஆற்றினார். ஜார் மன்னர் காலம்
தொடங்கி சோவியத் புரட்சி நடந்த 1917 நவம்பர் வரையில் நிகழ்ந்த நிகழ்வுகளை நன்கு விவரமாக
எடுத்துரைத்தார்; மேலும் இரண்டாம் உலகப்போர், ஹிட்லரின் பாசிச வெறி மற்றும் அவனது கடைசி
நாட்கள், இந்தியாவில் நுழைந்துள்ள கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் பண மதிப்பிழப்பு மற்றும்
ஜீ.எஸ்.டியால் மக்களுக்குண்டான இன்னல்கள் பற்றியும் தனக்கே உரிய நடையில் விளக்கினார்.