இன்று ‘ஆசிரியர் தினம்’ மறைந்த முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர்
ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னாள் ஆசிரியர் ஆவார். இவரது நண்பர்களும், மாணவர்களும் இவரது
பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்து இருக்கிறார்கள். அப்போது இவர் தனது பிறந்தநாளை
‘ஆசிரியர் தினம்’ என்று கொண்டாடுமாறு சொல்லி இருக்கிறார். 1962 ஆண்டு முதல் டாக்டர்
ராதாகிருஷ்ணன் பிறந்த தேதியான, செப்டம்பர் 5 ஆம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட மத்தியஅரசு
ஆணை பிறப்பித்ததாக வரலாறு சொல்கிறது.
எனது நினைவுகள்:
அப்போது, அதாவது அரசு உத்தரவு போட்ட நாளில் நான் மூன்றாம் வகுப்பு
பள்ளிச்சிறுவன். எனவே எனக்கு இவையெல்லாம் அப்போது தெரியாது. உயர்நிலைப் பள்ளி படிப்பிற்காக
நேஷனல் ஹைஸ்கூல் (திருச்சி) சென்றபோது ஆறாம் வகுப்பின் போதுதான் எனக்கு தெரியும். அப்போதைய
எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர், பூவராக ஐயங்கார் அவர்கள், காலை இறை வணக்கத்தின் போது
ஆசிரியர்தினம் பற்றிய தமது பேச்சில் டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தக் காட்டி பேசியதாக
நினைவு. இவரும் அவரைப் (ராதாகிருஷ்ணன்) போலவே இவரும் பஞ்சகச்சம் வேட்டி அணிந்து, தலையில்
ஆசிரியர்களுக்கு உரிய தலைப்பாகையும், கதர்கோட்டும் அணிந்து பள்ளிக்கு வருவார். கண்டிப்பான
தலைமை ஆசிரியர்.
நல்லாசிரியர் விருதுகள்:
எனக்குத் தெரிந்து அன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் எல்லோருமே
நல்லாசிரியர்கள்தான். இவர்களில் சிலரை மத்திய அரசு தேர்ந்தெடுத்து, இருபத்து ஐந்து
ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் கொடுத்து ஆண்டுதோறும் கவுரவித்து
வருகிறது. மாநில அரசும் தன் பங்கிற்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. இப்போது
இதிலும் அரசியல் கலந்து விட்டதாகத் தெரிகிறது. வேண்டியவர், வேண்டாதோர் என்ற கண்ணோட்டத்தில்
உண்மையான பலருக்கு விருதுகள் கிடைப்பதில்லை.
ஆசிரியர் தினம் என்றால் பள்ளி ஆசிரியர்களை மட்டுமே கவுரவிப்பதாக
இருக்கிறது. கல்லூரி ஆசிரியர்களும் ஆசிரியர்கள்தானே என்று யாரும் நினைப்பதாகத் தெரியவில்லை.
என்னதான் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்தான், ஆசிரியர் தினம் என்றாலும்,
இந்தநாளில் எனக்கு நினைவுக்கு வருவது, எனக்கு ஆனா, ஆவன்னா சொல்லிக் கொடுத்த, அந்த வயதான
முதலாம் வகுப்பு ஜோஸ்பின் டீச்சர் முகம்தான்.
வலைப்பதிவில் ஆசிரியர்கள்:
இன்றையதினம் பல ஆசிரியர்கள் வலைப்பதிவர்களாக இருக்கக் காண்கிறோம்.
கீழே உள்ள பட்டியலில் பணியில் இருப்பவர்களும், பணி ஓய்வு பெற்றவர்களும் உண்டு. விடுபட்டவர்கள்
மன்னிக்கவும்.
புலவர் சா.இராமாநுசம், சென்னை (புலவர் குரல்)
முனைவர் பழனி.கந்தசாமி, கோவை (மன அலைகள்)
ருக்மணி சேஷசாயி, சென்னை (பாட்டி சொல்லும் கதைகள்)
ரஞ்சனி நாராயணன், பெங்களூர் (ரஞ்சனி நாராயணன்)
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை (வளரும் கவிதை)
துளசி கோபால், நியூசிலாந்து (துளசி தளம்)
கரந்தை ஜெயக்குமார், (தஞ்சாவூர்)
முனைவர் இரா.குணசீலன், ஈரோடு ( வேர்களைத் தேடி)
கருமலைத் தமிழாளன் , கிருஷ்ணகிரி (கருமலைத் தமிழாளன்)
கவி.செங்குட்டுவன்,கிருஷ்ணகிரி (கல்விக்கோவில்)
முனைவர் எம்.பழனியப்பன், சிவகங்கை (மானிடள்)
ஆதிரா முல்லை, சென்னை (ஆதிரா பார்வைகள்)
சுவாதி, சென்னை (சுவாதியும் கவிதையும்)
பேராசிரியர் பா.மதிவாணன், திருச்சி (இனிது இனிது)
ஜோசப் விஜூ, திருச்சி (ஊமைக்கனவுகள்)
பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், திருச்சி (பதிவுகள் – பார்வைகள்)
மணவை ஜேம்ஸ், மணப்பாறை (மணவை)
துளசிதரன் வே.தில்லையகத்து, பாலக்காடு / (தில்லையகத்து
க்ரோனிக்ல்ஸ்)
மாலதி, புதுக்கோட்டை (மாலதி)
சு.ராஜமாணிக்கம், புதுக்கோட்டை (அண்டனூர் சுரா)
அ.பாண்டியன், மணப்பாறை (அரும்புகள் மலரட்டும்)
மகா.சுந்தர், புதுக்கோட்டை (எண்ணப்பறவை)
சோலச்சி, புதுக்கோட்டை (சோலச்சி)
த.ரேவதி, புதுக்கோட்டை (தமிழ்)
கீதா, புதுக்கோட்டை (தென்றல் வேலுநாச்சியார்)
கிருஷ்ணவேணி, புதுக்கோட்டை (நிசாரி)
பொன்.கருப்பையா, புதுக்கோட்டை (புதுகை மணிமன்றம்)
சி.குருநாத சுந்தரம், புதுக்கோட்டை (பெருநாழி)
மைதிலி கஸ்தூரி ரெங்கன், புதுக்கோட்டை, (மகிழ்நிறை)
மது என்கிற கஸ்தூரி ரெங்கன், புதுக்கோட்டை (மலர்த்தரு)
இரா.எட்வின், பெரம்பலூர் (நோக்குமிடமெல்லாம்)
பேராசிரியர் தருமி, மதுரை (தருமி)
மதுரை சரவணன், மதுரை (மதுரை சரவணன்)
முருகன், அருப்புக்கோட்டை (ஆதி.முருகன்)
லோகநாதன்.கே, வேலூர் (டீச்சர் லோகநாதன்)
பேராசிரியர் எம்.ஏ.சுசீலா, மதுரை (எம்.ஏ.சுசீலா)
பேராசிரியர் அன்பழகன், தஞ்சாவூர் (ஹரணி பக்கங்கள்)
பேராசிரியர் அன்பழகன், தஞ்சாவூர் (ஹரணி பக்கங்கள்)
கரந்தை சரவணன், தஞ்சாவூர் (கரந்தை சரவணன்)
அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆசிரியர்தின
வாழ்த்துகள்.
தொடர்புடைய எனது பதிவு
ஆசிரியரும் பிள்ளைகளும் – அன்றும் இன்றும்
http://tthamizhelango.blogspot.com/2015/05/blog-post_62.html