ரொம்ப நாளாகவே எனக்கு
“ ஸ்மார்ட் போன் (SMART
PHONE)’ வாங்க வேண்டும் என்று ஆசை.
கல்லூரியில் படிக்கும் எனது மகன் ஒன்று வைத்து இருக்கிறார். “ அப்பா, ஸ்மார்ட்
போனெல்லாம் உங்களுக்கு ஒத்து வராது. உங்களுடைய பதட்ட குணத்திற்கு, அவசரத்திற்கு, சட்டென்று
உங்களால் எடுத்து ஆப்ரேட் பண்ண வராது. சாதாரண செல்போனே போதும்” என்று அடிக்கடி சொல்வார். எனக்கோ சிரிப்பாகவும் சில
சமயம் கோபமாகவும் இருக்கும். இருந்தாலும் ஸ்மார்ட் போன் மீதுள்ள விருப்பம் குறைந்த
பாடில்லை.
நாளுக்கு நாள் மாறி
வரும் தொழில் நுட்பம் (TECHNOLOGY)
காரணமாக, சந்தையில் புதுப்புது பொருட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஸ்மார்ட் போனும்
அவ்வாறே. விலையும் அதிகம். ஏற்கனவே கையில் இருக்கும் செல்போன் வாங்கி இரண்டு
ஆண்டுகள்தான் இருக்கும். எனவே ஸ்மார்ட் போனெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று
இருந்தேன்.
இப்போது கூகிள் (GOOGLE) நிறுவனத்தார் ஆன்ட்ராய்ட் (ANDROID) என்னும் தொழில்நுட்ப முறையை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த தொழில் நுட்பமுறை உள்ள ஸ்மார்ட் போன்களை, பல செல்போன் நிறுவனங்கள்
விற்பனைக்கு விடுத்துள்ளன. எல்லாமே விலை அதிகம்.
மைக்ரோமாக்ஸ்
கேன்வாஸ் ஏ.1
அண்மையில்
மைக்ரோமாக்ஸ் கேன்வாஸ் ஏ.1 (MICROMAX CANVAS A.1) என்ற ஸ்மார்ட் போன் விளம்பரம் பார்த்தேன்.
ஆன்ட்ராய்ட் (ANDROID) தொழில்
நுட்பத்துடன் விலை ரூ 6999/= என்று இருந்தது.
படம் (மேலே) மைக்ரோமாக்ஸ்
கேன்வாஸ் ஏ.1
படம் (மேலே) போன் இருந்த அட்டைப்
பெட்டி
ஆன் லைன்
வர்த்தகத்தில் வாங்கினால் இன்னும் குறையும் என்றார்கள். ஆன் லைன் வர்த்தகத்தில்
TECHNOLOGY சம்பந்தப்பட்ட பொருட்களை
வாங்குவதில் உள்ள, சில சிக்கல்கள் காரணமாக அந்த பக்கம் போகவில்லை.ஆன் லைன் வர்த்தகத்தில்
தனக்கு கிடைத்த அனுபவம் ஒன்றினை, அய்யா வே.நடனசபாபதி அவர்கள், தனது வலைப்
பதிவினில் அண்மையில் எழுதி இருந்தார். இங்கு எனக்கு தெரிந்த ஒருவரது கடையில்
6900/= க்கு வாங்கினேன். குறைந்த
விலையில் இருந்த போதிலும் அதிக விலை ஸ்மார்ட் போனில் உள்ள பயன்பாடுகள் உள்ளன. ஒரு
நடுத்தரமான ஓட்டலில் சாப்பிடுவதற்கும், ஸ்டார் ஓட்டலில் (அதிகம் பணம் கொடுத்து)
சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்? சுவை (TASTE) எல்லா இடத்திலும் ஒன்றுதான்.
பயன்பாடுகள்:
ஆன்ட்ராய்ட் (ANDROID) ஸ்மார்ட் போன் வாங்கியதும் என்னவோ ஏதோவென்று
பயந்தேன். சாதாரண செல்போனிலிருந்து இந்த வகைப் போனிற்கு வந்தவுடன் கொஞ்சம் தடுமாற்றம்தான்.
நல்லவேளை, அப்படி ஒன்றும் இல்லை. பொதுவாகவே எல்லாவற்றிற்கும் அந்தந்த போனில் அதில்
உள்ள சாவிகளை (KEYS) இயக்கத்
தெரிந்து கொண்டாலே போதுமானதாகும். எல்லாம் தொடு திரை (TOUCH SCREEN) இயக்கம்தான். எனவே ஸ்மார்ட் போனை இயக்குவதும் சுலபமாகவே
உள்ளது. வங்கியில் ஏற்கனவே கம்ப்யூட்டரிலேயே பணியாற்றிய அனுபவம் இருப்பதால்
பிரச்சினை ஏதும் இல்லை.
இந்த ஆன்ட்ராய்ட்
போனில் தமிழில் படிக்க முடிகிறது. ஆனாலும் தமிழில் எழுத, NHM WRITER போன்ற தமிழ் எழுதி மென்பொருட்களை பயன்படுத்த
முடியாது போலிருக்கிறது. நாம் ஏதேனும் தரவிறக்கம் (DOWNLOAD) செய்யப் போக, போன் செயல்படாமல் போகவும் வாய்ப்புகள்
உண்டு. இதுபற்றிய விவரம் தெரிந்தவர்கள் அல்லது ஆன்ட்ராய்ட் போன் வைத்திருக்கும்
வலைப்பதிவர்கள், இங்கே சொன்னால் எல்லோருக்கும் பயன்படும் சகோதரர் திண்டுக்கல்
தனபாலன் அவர்கள் போனில் சில விவரங்கள் சொன்னார். முயன்று பார்க்க வேண்டும்.
யூ டியூப்பில் (YOUTUBE) தமிழில் விமர்சனம் (TAMIL REVIEW) ஒன்றை வீடியோவில் காண கீழே உள்ள இணையதள
முகவரியை க்ளிக் (CLICK)
செய்யவும்.
MICROMAX CANVAS A.1 – ஸ்மார்ட்போன் பற்றிய அனைத்து விவரங்களையும் http://www.micromaxinfo.com/canvasa1 என்ற இணையதளத்தில் காணலாம். இந்த இணையதளத்தில் ஒரு PDF பைலை இதில் இணைத்துள்ளார்கள்.
சில
முக்கிய ஐகான்கள் (ICON) அல்லது சாவிகள் (KEYS)
ஸ்மார்ட் போனை
ஆன் செய்தவுடன் மற்ற் APPS –
களுக்கு செல்ல இந்த ஐகானைத் (ICON)
தொடவும்.
இதற்கு முன்னர்
பார்த்த திரைகளைக் (SCREENS)
காணவும் அவற்றை நீக்கவும் இந்த ஐகானைத் (ICON) தொடவும்
மீண்டும்
மீண்டும், அடிக்கடி HOME SCREEN செல்ல இந்த ஐகானைத் (ICON) தொடவும்.
இதற்கு முன்னர்
பார்த்த திரைகளைக் (SCREENS) காண
இந்த ஐகானைத் (ICON) தொடவும்.
(ALL
PICTURES THANKS TO “GOOGLE”)