புதிய கனவுகளோடு வந்தவர்கள், இன்னும் பழைய கனவுகளே நிறைவேறாதவர்கள் என்று, சென்னையில் உள்ள அனைவரும் உச்சரிக்கும் பெயர் “செம்பரம்பாக்கம் ஏரி” என்பதாகும். இந்த ஏரியானது புயல், மழை, வெள்ளத்தில் நிரம்பிக் கொண்டு இருந்தபோது, அதன் உபரி நீரை வெளியேற்ற யாருடைய உத்தரவிற்கோ காத்து இருந்ததாகவும், அதில் முடிவு எடுக்க ஏற்பட்ட தாமதமே சென்னையின் அழிவுக்கு காரணம் என்றும் சொல்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு உண்மைகள் உள்ளன என்று தெரியவில்லை. இங்கு எல்லாமே அரசியல்தான்.
மகாராணி உத்தரவு:
(Queen Alexandrina Victoria - 24 May 1819 – 22 January 1901) Picture courtesy: express.co.uk)
சிலசமயம் பேச்சு வழக்கில் ”பெரிய மகாராணின்னு நினைப்பு” என்று பழையகாலத்து
ஆட்கள் சொல்லுவது வழக்கம். அவர்கள் அப்படி குறிப்பிடுவது, அந்தகாலத்து இங்கிலாந்து
மகாராணி எனப்படும் அலெக்ஸாண்ட்ரினா விக்டோரியா (Alexandrina Victoria) அவர்களைத்தான்.
அவரைப் பற்றி குறிப்பிடும்போது, மாட்சிமை தங்கிய (MAJESTY) என்றுதான் குறிப்பிட்டார்கள்.
அவரும் அதற்குத் தகுந்தாற் போலவே தனது காலத்தில் ஆட்சி நிர்வாகம் செய்தார்.
இங்கிலாந்து
நாட்டு சட்டப்படி,
எல்லா மசோதாக்களும் இங்கிலாந்து ராணியின் ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக முடியும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின்
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது, ஆட்சிக் கட்டிலில் இங்கிலாந்து அரண்மனை இருந்தபோதும், பிரிட்டிஷ் இந்தியாவின் நேரடி
ஆளுகை என்பது வைஸ்ராய் மற்றும் கவர்னர்கள் முலமாகவே நடைபெற்றது. இவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களே
என்பதனை சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு கீழிருந்த அதிகார வர்க்கம் என்பது இந்தியர்களே.
படம் – மேலே) பிரிட்டிஷ் ஆட்சியின் பிரகடனம் Picture courtesy: indiamike.com/files
எனவே ஒவ்வொரு சட்டத்தையும் அமுல்படுத்தும் போதும், சின்ன உத்தரவாயினும்
“மாட்சிமை தங்கிய மகாராணி ஆணைப்படி ….. …. “ என்றே வாசிக்கப்பட்டது. ஆக பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்தில், இந்தியாவில் எந்த செயலைச் செய்தாலும் மகாராணியாரின் பெயரிலேயே செய்யப்பட்டதைப்
புரிந்து கொள்ளலாம். எனவே இந்த உத்தரவை எதிர்ப்பவர்கள், மகாராணியாரின் உத்தரவை எதிர்ப்பவர்கள்
, அரசு எதிர்ப்பாளர்கள், ராஜாங்க குற்றவாளிகள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் கம்பெனி ஆட்சிக்குப் பிறகு, விக்டோரியா மகாராணி அவர்கள்,
1876 இல் இந்தியாவின் பேரரசி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்; இதன் மூலம் இந்தியா
அவரது நேரிடையான ஆட்சிக்கு வந்தது; இந்தியா சுதந்திரம் அடையும் வரை இந்த ஆட்சி நீடித்தது.
அந்நாளில், முடியாட்சி முறையில் இந்த ’மாட்சிமை தங்கிய’ என்ற வார்த்தையை,
மன்னர்களுக்கும், மகாராணிக்களுக்கும் பெயரின் முன்னால் சேர்த்து, அவர்களை மரியாதையாக
அழைப்பது வழக்கமாக இருந்தது. ( இப்போதும் புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு கல்லூரியின்
பெயர் ’மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை’ என்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை
ஆண்ட மன்னர் பெயரால் அழைக்கப்படுகிறது )
அரசாங்க உத்தரவுகள்:
எனினும் ஆங்கிலேயர் ஆட்சியில், ஒவ்வொரு அரசாங்க உத்தரவையும் அந்தந்த
நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள அரசு ஊழியர்களே செய்தனர். ஒவ்வொரு உத்தரவையும் மகாராணியே
தனிப்பட்ட முறையில் போட வேண்டும் என்று யாரும்
எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள
அவரவர் அவரவருக்குண்டான அரசுப் பணிகளை செய்தனர். எனவே நிர்வாகம் வரிசைப்படி அமைந்தது.
மேலும் அரசு அதிகாரிகளிடமும், அரசு ஊழியர்களிடமும் தங்கள் கடமையில் இருந்து தவறினால்
என்ன நடவடிக்கை எடுப்பார்களோ என்ற பயமும் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு,
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பல பிரிவுகள், பிரிட்டிஷ் அரசியலமைப்பு சட்ட அடிப்படையிலேயே
அமைந்தது. எனினும், “மாட்சிமை தங்கிய மகாராணி
ஆணைப்படி ….. …. “ போன்று “மாட்சிமை தங்கிய ஜனாதிபதி (அல்லது பிரதமர்) ஆணைப்படி“ போன்ற வாசகங்கள் இல்லை. ஜனநாயக முறைப்படியே அமைகின்றன.
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)