நாங்கள் இருப்பது புறநகர்ப் பகுதி. அங்கங்கே காலிமனைகள். கடந்த
சிலநாட்களாக நாட்டில் நல்ல மழை. எங்கள் ஏரியா பக்கமும்தான்.
புதிய பூவிது பூத்தது
மழைக்குப் பிறகு, எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் காலிமனைகளில்
திடீரெனெ, பெரிய இலைகளுடன் புதிது புதிதாக சில செடிகள் - பூக்கவும் தொடங்கி விட்டன.
இதற்கு முன்னர் இந்த செடிகளை இங்கு பார்த்ததில்லை. ஆனாலும் வேறு
எங்கோ இதே செடிகளை பார்த்ததாக நினைவு. பெயரும் தெரியவில்லை. சிலரைக் கேட்டதில் அவர்களும்
தெரியவில்லை என்று சொல்லி விட்டார்கள். எனவே கிராமத்தில் இருக்கும், தஞ்சையில் தோட்டக்கலை
துறையில் பணிபுரியும், எனது மாமா பையனுக்கு வாட்ஸ்அப்பில் இந்த செடிகளை படம் எடுத்து
அனுப்பி விவரம் கேட்டு இருந்தேன். அவரும் தனது பதிலில், Botany name: martynia
annua, Common name: Devil’s claw, Family name: pedaliaceae என்று தெரிவித்து இருந்தார்
செடியின் பெயர்
அப்புறம் வழக்கம்போல் martynia annua என்று கூகிளில் தேடியதில்
விவரங்கள் கிடைத்தன. இந்த செடியானது தமிழில் புலிநகம், காக்காமூக்கு செடி, என்றும்
பல்வேறு பெயர்களில் இதன் காயின் வடிவத்தை வைத்து அழைக்கப்படுகிறது. பூனைப்புடுக்கு
என்றும் தமிழில் சொல்லுகிறார்கள். இந்த செடியின் காயும் அப்படித்தான் தோன்றுகிறது.
தெலுங்கில் கருடமூக்கு என்று அழைக்கிறார்கள்.
காக்காமூக்கு செடியின்
காய்
(கீழேஉள்ள படங்கள் : கூகிளுக்கு நன்றி)
கீழே உள்ள காக்காமூக்கு செடி காய் படங்களைப் பார்க்கும் போது பெயர்ப்
பொருத்தம் சரியானதாகவே தோன்றுகிறது. காரணப் பெயர் எனலாம். ஆங்கிலத்திலும் இந்த செடியின்
பூவின் தோற்றத்தை வைத்துதான் Tiger’s claw, Devil’s claw, Cat’s claw என்று அழைக்கிறார்கள்.
Unicorn Plant என்பது இதன் பொதுப்பெயர்.
9030 Photo By Marco Schmidt (Own work
(own foto)) [CC-BY-SA-2.5 (http://creativecommons.org/licenses/by-sa/2.5)], via
Wikimedia Commons Image 2 of 3
நோய்க்கு மருந்து:
இது ஒரு காட்டு மூலிகை என்றாலும் TB (tuberculosis) எனப்படும் காசநோய்,
தொண்டைப்புண், பாம்புக்கடி, காக்கைவலிப்பு போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படும் என்று
மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன.
குறிப்பு: தேள்கொடுக்கி என்றும் இந்தசெடி விக்கிபீடியாவில் சொல்லப்பட்டுள்ளது;
ஆனால் தேள்கொடுக்கி என்று வேறொரு மூலிகையை இண்டர்நெட்டில் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.
பிற்சேர்க்கை ( 27.செப்.17 - 3.57 p.m )
பிற்சேர்க்கை ( 27.செப்.17 - 3.57 p.m )
வே.நடனசபாபதிWednesday, September 27, 2017 7:48:00 am
புலி
நகம் செடி பற்றிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி! Martynia annua
எனப்படும் புலி நகம் (காக்காமூக்கு) செடி Martyniaceae எனப்படும் தாவர
குடும்பத்தை சேர்ந்தது. Pedaliaceae குடும்பத்தை சேர்ந்தது அல்ல. எள்ளு
(Sesamum indicum) போன்றவகள் தான் Pedaliaceae குடும்பத்தை சேர்ந்தவை.





