நமது தமிழ் வலைப்பதிவர்கள் பலருக்கும், குறிப்பாக நூல் வாசிப்பு
பழக்கம் உள்ளவர்களுக்கு பயன் தரும் நிறைய விஷயங்கள், இந்த இணைய தளத்தில் இருக்கின்ற
படியினால், அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ப்ரதிலிபி அமைப்பாளர்கள்:
(Picture courtesy: therodinhoods.com)
வெவ்வேறு மொழியைச் சேர்ந்த
, இலக்கிய ஆர்வம் உள்ள சாப்ட்வேர் பொறியாளர்கள் ஐந்துபேர் உருவாக்கிய தளம் இது. சங்கர
நாராயணன் (தமிழ்நாடு), ஷைலி (குஜராத்), ராகுல் (பீகார்), உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த
ரஞ்சித் பிரதாப் மற்றும் பிரசாந்த் ஆகிய ஐவர் அணிதான் இவர்கள். புதிய தலைமுறை 2/10/2015 இதழில் ப்ரதிலிபி பற்றிய செயல்பாடு, நோக்கம் பற்றி கட்டுரை ஒன்றை http://www.pratilipi.com/blog/5079071125929984 வெளியிட்டு இருக்கிறார்கள். திண்ணையிலும் http://puthu.thinnai.com/?p=29129 இதுபற்றிய
விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
நூல்கள் (BOOKS):
வாசிப்பு பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த பகுதியில் நிறையவே மின்நூல்கள்.
பிரபல எழுத்தாளர்களோடு நமது வலைப்பதிவு நண்பர்களது நூல்களையும் இங்கு காணலாம். ஸ்மார்ட்போன்
கையில் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் இந்த நூல்களைப் படித்துக் கொண்டே இருக்கலாம்.
நமது வலைப்பதிவர்கள் இந்த பகுதியில் இணைத்த நூல்கள் சிலவற்றைக் கீழே. குறிப்பிட்டுள்ளேன்.
சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் – ராஜலட்சுமி
பரமசிவம்
சேகுவரா – மாதவராஜ்
புத்தகப் பார்வை – வா.மு.கோமு
சிதம்பர ரகசியம் – கீதா சாம்பசிவம்
வெள்ளை அடிமைகள் – ஜோதிஜி
ஈழம் வந்தார்கள் வென்றார்கள் – ஜோதிஜி
காணாமல் போன நண்பர்கள் – தருமி
தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு – தஞ்சை
வெ.கோபாலன்
மகாகவி பாரதியார் வரலாறு – வ.ரா
ப்ளாக் தொடங்குவது எப்படி? – அப்துல்
பாசித்
கணிதமேதை சீனிவாச இராமானுஜன் – கரந்தை
ஜெயக்குமார்
ஏரிகள் நகரம் நைனிதால் - வெங்கட் நாகராஜ்
ட்விட்டர் கையேடு – Twitamils குழு
கணிதமேதை சீனிவாச இராமானுஜன் – கரந்தை
ஜெயக்குமார்
மேலும், கவிதைகள் (POEMS), கதைகள் (STORIES), கட்டுரைகள்
(ARTICLES) என்று படைப்பாளிகளின் படைப்புகளையும் இங்கு காண முடிகிறது.
பத்திரிகைகள் (MAGAZINES):
பத்திரிகைகள் என்ற பிரிவில் பலரும் தங்கள் மின் இதழ்களை இங்கு இணைத்துள்ளனர்.
அகல் – மாதம் ஒருமுறை வரும். மின்னிதழ்.
முதல் பக்கம் என்ற தலைப்பில் அந்தந்த மாத இதழ் பற்றிய முன்னுரை மற்றும் படைப்பாளிகளின்
கட்டுரைகள், கதைகள், கவிதைகள் என்று ரசனையான அம்சங்கள்.
அகம் என்று மற்றொரு மாத மின்னிதழ். அகல், அகம் பெயர்க்குழப்பம் பிரதிலிபியைப் படிக்கும்போது
தவிர்க்க இயலாது போலிருக்கிறது.
தளம் – இது ஒரு கலை இலக்கிய காலாண்டு
இதழ். ஆசிரியர் பாரவி.
படிகம் – நவீன கவிதைக்கான இதழ்
– ஆசிரியர் ரோஸ் ஆன்றா.
தமிழ் – இலவச மின்னிதழ் காலாண்டு.
ஆசிரியர் சி.சரவண கார்த்திகேயன்.
பிராமின் டுடே _ மாத இதழ். ஆசிரியர்
எஸ்.எஸ்.வாசன்.( செப்டம்பர் 2015 இதழில் ’பிராமணர்களும் கலப்புத் திருமணங்களும்’என்ற
சிறப்புக் கட்டுரை )
சிகரம் – ஈரோட்டிலிருந்து வெளிவரும்
ஒரு காலாண்டு இதழ். ஆசிரியர் சந்திரா மனோகரன்.
சல்லிகை – கலை, இலக்கிய இணைய இதழ்.
ஆசிரியர் கால பைரவன்.
இன்மை.காம் -
சிறகு – ஆசிரியர் சிறகு இரவிச்
சந்திரன்.
காவிரிக்கதிர் – ஆசிரியர் கோமல்
அன்பரசன். மாயவரத்திற்கு என்று அவ்வூர் பற்றிய செய்திகள், கட்டுரைகள் தாங்கி வரும்
மாத இதழ்.
கொலுசு – கவிதைகள் அடங்கிய மின்னிதழ்.
அருளமுது –பெரும்பாலும் கிறிஸ்தவம்
சார்ந்த இலக்கிய மின்னிதழ்.
எல்லா மின்னிதழ்களும் தொடர்ச்சியாக இணைக்கப்படுவது போல் தெரியவில்லை.
தேவைப் படுவோர் அந்தந்த இதழ்களின் இணையதளம் சென்றுதான் தொடர வேண்டும் போலிருக்கிறது.
வேண்டுகோள்:
பொதுவாகக் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும் இடுகைகள் (பதிவுகள்) ஒன்றின்
மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு வரும். முதலில் வைக்கப்பட்ட பதிவு அடியிலும், கடைசியில்
வைக்கப்படும் பதிவு புதிதாக மேலேயும் நிற்கும். ஆனால் ப்ரதிலிபியில் புதிதாகச் சேர்க்கப்படும் விவரங்கள் (படைப்புகள்
அனைத்தும்) ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக, அடியில் சென்று சேர்ந்து விடுகின்றன. .இதனால்
ப்ரதிலிபியில், சம்பந்தப்பட்ட பக்கத்தைத் திறந்ததும் எப்போதும், பழைய இடுகைகளே முன்னிற்கின்றன.
புதியவற்றை பார்க்க அடிப்பக்கம் வரை ஸ்க்ரோல்
செய்ய வேண்டி உள்ளது.
இது குறித்து ப்ரதிலிபியின் தமிழ் பக்கத்தின் பொறுப்பாளராக இருக்கும், திலீபன் அவர்களிடம் செல்போனில் பேசினேன்.; இதே குறைபாட்டினை நிறையபேர் சொல்லி இருப்பதாகவும், விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இன்னும் சிறப்பாக தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளின் அமைப்பில் இதன் இணையதளம் அமைந்தால் நன்றாக இருக்கும்.





















