Wednesday, 26 October 2011

புதிய பதிவர்களே! பின்னூட்டம் பற்றி கவலைப் படாதீர்கள்!


வலைப் பதிவு போடுவது எப்படி என்று தெரிந்து கொண்டவுடன் எல்லோரையும் போல் எழுதத் தொடங்குகின்றனர். வலைப் பதிவுகளை திரட்டியில் இணைத்ததும் எப்போது வரும் என்று பரபரப்பு. இணையத்தில் வெளி வந்ததும் ஒரு பரவசம். அதன்பின் நமது ஆக்கத்திற்கு வாசகர்கள் என்ன பின்னூட்டம் (Comments) போடுகிறார்கள் என்று நமது வலைப் பதிவு நீங்கும் வரை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். யாரும் எதுவும் சொல்லாத போது மனது அவ்வளவு தானா என்று தோன்றும். வலைப் பதிவு என்பதே நீர்க்குமிழி போல திரட்டிகளில் இருக்கப் போவது கொஞ்ச காலம்தான். இன்றைய செய்தி நாளை வராது. சாலையில் யாரும் உங்களை “அவர் பெரிய வலைப் பதிவர்என்று சொல்லப் போவது இல்லை. எனவே இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஏனெனில் வலை பதிவை பார்வையிடும்  பல வாசகர்களுக்கு பின்னூட்டம் இட நேரம் இருக்காது. இன்னும் சிலருக்கு  அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் தமிழில் வசதி இருக்காது. அதனால் அவர்கள் படிப்பதோடு சரி. இன்னும் சிலர் விமர்சனம் செய்தால் ஏதாவது வில்லங்கம் வருமோ என்று விமர்சனம் பக்கம் செல்வதே கிடையாது. இதனால்தான் பல பதிவர்கள் குழு அமைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பின்னூட்டம் போடுகின்றனர். இந்த விமர்சனங்கள் பெரும்பாலும் “சூப்பர்”. ”பிரமாதம்” “நல்ல பதிவு” என்ற போக்கிலேயே இருக்கும். படித்துவிட்டு விமர்சனம் செய்கிறார்களா இல்லையா என்றே தெரியாது. படிக்காமலேயே இந்த பாணியில் நட்புக்காக பின்னூட்டம் போடுபவர்களும்  உண்டு. உண்மையி லேயே பின்னூட்டம் தருபவர்களும் உண்டு. பிரபல  பதிவர்களின் பதிவுகளுக்கு மெனக்கெட்டு  நீங்கள் பின்னூட்டம் போடுவீர்கள். ஆனால் அவர்களுக்கோ உங்கள் பதிவுகளை படிக்க நேரமே கிடைக்காது. அதனால் அவர்களும் பின்னூட்டம் தர மாட்டார்கள்.

உங்கள் வலைப்பதிவை எத்தனை பேர் பார்வையிட்டார்கள், எந்தெந்த நாட்டிலிருந்து பார்வையிட்டார்கள், எந்தெந்த நாட்களில் பார்வையிட்டார்கள் என்பதனை உங்கள் வலைப் பதிவில் இருக்கும் வசதி (உதாரணத்திற்கு ப்ளாக்கரில் இருக்கும் STATS ) மூலம் பார்வையிட்டால் பின்னூட்டங்களைப் பற்றி கவலைப் படமாட்டீர்கள். அதுவே உங்களை ஊக்கப் படுத்தும். எனவே பதிவுகளை எழுதுங்கள். எழுதிக் கொண்டே இருங்கள். கமெண்டுகளைப் பற்றி கவலைப் படாதீர்கள்.8 comments:

 1. //எனவே பதிவுகளை எழுதுங்கள். எழுதிக் கொண்டே இருங்கள். கமெண்டுகளைப் பற்றி கவலைப் படாதீர்கள்.//

  நன்று! :-)

  ReplyDelete
 2. சாரே கவலைப்பட்டாதிங்க நான் உங்களுக்கு ஆதரவு தரேன்.(பின்னூட்டம் கிடைக்காம ரொம்ப நொந்து போயிருப்பிங்க போல தெரியுது)

  இப்படி மரங்களை காப்போம், மண் வளம் காப்போம் , விவசாயிகள் பாவம்னுலாம் பதிவுப்போட்டா யாரும் எட்டிப்பார்க்கமாட்டங்க(அனுபவம்) சினிமா விமர்சனம்(கில்மா படமா இருந்த டபுள் ஓகே) அடல்ட் ஜோக், கிசு..கிசு எழுதீனா கல்லா கட்டலாம்! :-))
  நான் கூட பேங்கில இருந்து வீஆரெஸ் வாங்கலாம்னு பார்க்கிறேன், ஆனால் ஒரு பேங்கிலும் எனக்கு வேலைத்தரமாட்டேன்கிறாங்க :-))

  ReplyDelete
 3. வணக்கம் சேட்டைக்காரன்! உங்கள் வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 4. வணக்கம்! வவ்வால் சார்!உங்கள் விமர்சனம் எனது பதிவுகளுக்கு ஒரு வழிகாட்டி. நன்றி! சொந்த பெயரிலேயே நான் எழுதுவதால் மற்றவர்களைப் போல் என்னால் சிலவற்றை எழுத இயலாது.

  ReplyDelete
 5. இதைத்தான் கண்ணபிரான் கீதையில் அன்றே சொன்னான்.... கடமையைச் செய்... பலனை எதிர்பாராதே என்று... (ஏதோ நம்மால் இயன்ற தத்துவம்).
  முடிஞ்சா நம்ம பக்கத்தைப் பாருங்களேன்!
  http://ch-arunprabu.blogspot.com/

  ReplyDelete
 6. வணக்கம் அருண் அம்பி அவர்களே!வருகைக்கு நன்றி.உங்கள் வலை பக்கத்தில் என்னுடைய கருத்துக்களை பதிந்துள்ளேன்.

  ReplyDelete
 7. மிகச்சரியாக சொன்னீர்கள் Sir! நானும் அப்படி தான் எழுத ஆரம்பித்து இதை அனுபவித்திருக்கிறேன்! தொடர்பவர்கள் பட்டையையே தூக்கிவிட்டு கமென்ட் பாக்ஸையும் சரிப்பார்ப்பதை தவிர்த்தே சில மாதங்கள் எழுதினேன்!

  ReplyDelete
 8. Reply to ….. // யுவராணி தமிழரசன் said... //
  எனது வேண்டுகோளுக்கு இணங்க, எனது பழைய பதிவை பார்வையிட்டு கருத்துரை வழங்கிய சகோதரி யுவராணி தமிழரசன் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete