அரியலூர் அருகே உள்ளது கல்லங்குறிச்சி பெருமாள் கோயில்.
இதனை
கலியுக வரதராஜ பெருமாள் கோயில் என்று அழைப்பார்கள். அரியலூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் இந்த கோயில் மிகப் பிரசித்தம். இங்குள்ள பெரும்பாலோர் பெயர்கள், இந்த கோயில் பெருமாளின் பெயரை முன்னிலைப் படுத்தி கலியராஜ், கலியசுந்தரம், கலியம்மாள் என்று “கலி”யில் தொடங்குவதாகவே இருக்கும்.

கல்லங்குறிச்சி கோயிலுக்கு செல்லும் ஆசை:
எனது தாத்தாவின் (அம்மாவின் வழி) குடும்பத்தினருக்கு இந்த கோயில்
எப்படி நெருக்கம் என்று தெரியவில்லை. என் தாத்தாவிற்கு முதல் இரண்டும் பெண்
பிள்ளைகள். மூன்றாவதாக ஆண்பிள்ளை பிறந்தால் இந்த பெருமாள் பெயரை வைப்பதாக வேண்டிக் கொண்டார்களாம். ஆனால்
மூன்றாவதும் பெண்ணாகவே (என் அம்மா) பிறந்தது. என்றாலும் பெருமாள் பெயரையே என்
அம்மாவிற்கு “கலிய சுந்தரம்” என்று
வைத்து விட்டார்கள். (ஆனால் பின்னாளில் அம்மாவின் பெயரை ஆவணங்களில் எழுதும் போது
ஆண்/பெண் பெயர்க் குழப்பம் வந்தபடியினால், நாங்கள் எங்கள் அம்மாவின் பெயரை
“சுந்தராம்பாள்” என்று மாற்றி
விட்டோம்). இந்த விஷயத்தை கேள்விப் பட்டதிலிருந்து, எங்கள் தாத்தா குடும்பத்தினர்
வேண்டிக் கொண்ட கல்லங்குறிச்சி பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நீண்ட
நாட்களாக இருந்து வந்தது. அந்த ஆசை சென்ற வாரம்தான் நிறைவேறியது.
திருச்சி – அரியலூர் - கல்லங்குறிச்சி:
சென்ற ஞாயிறு (02.06.2013) அன்று நான் எனது மனைவி, மகன்
ஆகிய
மூவரும் எங்கள் வீட்டை விட்டு காலை கிளம்பினோம். விடுமுறை நாள் என்பதால் புறப்பட்டதில் கொஞ்சம் தாமதம். பின்னர் திருச்சி சிந்தாமணி (சத்திரம்) பேருந்து நிலையம் வந்து அரியலூர் செல்லும் பஸ்சில் ஏறினோம். திருச்சி – அரியலூர் சாலையில் அடிக்கடி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள், கரும்பு ஏற்றி வரும் லாரிகளால் சாலை ரொம்பவும் மோசம். மேலும் அடிக்கடி விபத்தும் நிகழும். நாங்கள் அரியலூர் சென்று சேர்ந்தபோது மதியம் 11.30 ஆகி விட்டது. அரியலூர் பேருந்து நிலையம் என்றுதான் அழகாக மாறும் என்று தெரியவில்லை. அரியலூரிலிருந்து கல்லங்குறிச்சிக்கு செல்ல மினி பஸ்கள் உண்டு. எனவே நடை சாத்துவதற்குள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஆட்டோ ஒன்றை பிடித்து (ஆட்டோ கட்டணம் செல்வதற்கு மட்டும் ரூ 150/=. ) சென்றோம்.

கல்லங்குறிச்சி கோயிலில் வழிபாடு:
கோயிலுக்கு சென்று சேர்ந்தபோது மணி மதியம் பன்னிரண்டு.
உச்சிகால பூஜை மதியம் 12.30 என்பதால், கோயில் நடை திறந்து இருந்தது. கோயிலுக்கு
வெளியே அந்த ஊர் ஜனங்கள் வைத்து இருந்த கடைப் பெண்கள் சொல்லியபடி இரண்டு அர்ச்சனை
தட்டுகள் ஒன்று மூலவருக்கு இன்னொன்று உற்சவருக்கு ( இரண்டு துளசி மாலைகள்,ஒரு
தேங்காய் , குங்குமம் ) வாங்கிக் கொண்டோம். அர்ச்சனை சீட்டு தட்டு ஒன்றுக்கு ரூ
2/=. வீதம் இரண்டு வாங்கினோம். நான் எந்தக் கோயிலுக்குப் போனாலும் அந்த கோயில்
தலபுராண புத்தகத்தை வாங்குவது வழக்கம். இங்கும் வாங்கினேன். பின்னர், கோயிலின் உள்ளே நுழைந்ததும் கருடாழ்வார்
சந்நிதியில் சூடம் ஏற்றி வழிபட்டோம். மூலவருக்கான அர்ச்சனை தட்டை அங்குள்ள பூசாரியிடம் கொடுத்தோம். அவர் ” தேங்காயை வெளியில் நீங்களே உடைத்துக் கொள்ளுங்கள் “ என்று கொடுத்து விட்டார். மூலஸ்தானத்தில் 12 அடி உயரத்திலான கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் உள்ளது. இவர்தான் மூலவர். வேறு சிலைகள் எதுவும் இல்லை. பூசாரி காட்டும் சிறிய தீப ஒளியில் சரியாகத் தெரியவில்லை. நாங்கள் மூலவரை வழிபட்டதும், உட்பிரகாரத்திலேயே வெளியில் உள்ள உற்சவரை வழிபட்டோம். அங்கு இளைய குருக்கள் ஒருவர் பூசை செய்தார். அவர் உற்சவரை புகைப்ப்டம் எடுப்பதில் தடை இல்லை என்றதும், அங்குள்ள உற்சவரை நானும் எனது மகனும் படம் பிடித்தோம். ( வெளியேயும் படங்கள் எடுத்தோம்.) பின்னர் வெளியே வந்து மூலவருக்கு எதிரே இருக்கும் கருடாழ்வார் சன்னதியின் அருகில் இருந்த தேங்காய் உடைக்கும் எந்திரத்தில் தேங்காயை நாங்களே உடைத்து கருடாழ்வாரை வழிபடுவதற்கும்., உச்சிகால பூஜை முடிவதற்கும் சரியாக இருந்தது. இனிமேல் மாலை 3 மணிக்குத்தான் நடை திறக்கும்..

கோயில் பற்றிய சில செய்திகள்:
பெரும்பாலும் பெருமாள் கோயில் மடப்பள்ளிகளில் பொங்கல்,
புளியோதரை விற்பனைக்கு கிடைக்கும். இந்த பெருமாள் கோயிலில் அவை சனிக்கிழமை மற்றும்
சிறப்பு நாட்களில் மட்டும் கிடைக்கும். அன்னதானம் எல்லா நாட்களிலும் உண்டு.
நாங்கள் சென்ற நேரம் அன்னதானமும் முடிந்து விட்டது.
பின்னர் கோயிலை சுற்றிப் பார்த்தோம். கோயிலின் மூல
ஸ்தானத்தில் ஆஞ்சநேயர் இருப்பதால் இந்த கோயிலில் திருமண நிகழ்வுகளை யாரும்
நடத்துவதில்லை, காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை மட்டும் வைத்துக்
கொள்கிறார்கள். கோயிலின் தலபுராணம் மங்கான் படையாட்சி என்பவரது குடும்ப வரலாறாக இருந்த
போதிலும், இந்த கோயிலுக்கு எல்லா சமூக மக்களும் வந்து வழிபடுகின்றனர். கோயிலில்
பெரும்பாலும் ஆடு மாடுகள் மற்றும் நெல், பயறு, மிளகாய் போன்ற விளை பொருட்களைத்தான்
இங்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக
தருகின்றனர். கோயில் உண்டியல்களும் உண்டு. கோயிலின்
உள்ளே கருடாழ்வார் சன்னதி எதிரே உள்ள, தசாவதார மண்டபத்தில் 12 தூண்கள் உள்ளன.
முதல் இரண்டு தூண்கள் தவிர, மீதமுள்ள பத்து தூண்களிலும் திருமாலின் பத்து
அவதாரங்களையும் சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர். கோயிலுக்கு வெளியே காற்றோட்டமான
பெரிய திடல் உள்ளது.
பஸ், வேன், காரில் செல்பவர்கள் கார் நிறுத்தம் ( CAR PARKING ) குறித்து கவலை
அடையத் தேவையில்லை.
கல்லங்குறிச்சி – அரியலூர் – திருச்சி:
எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு கல்லங்குறிச்சி பஸ்
நிலையம் வந்தோம். சற்று நேரத்தில்,
பாரதிராஜா படங்களில் வருவது போன்று,
சாலையில் புழுதியை கிளப்பிக் கொண்டு மண்வாசனையுடன் ஒரு மினி பஸ் வந்தது.
அரியலூர் செல்ல பயணச் சீட்டு கட்டணம் ரூ 4/=. அரியலூரில் ஒரு நல்ல சாப்பாடு
ஹோட்டலை தேடியலைந்தோம். பஸ் ஸ்டாண்டிலிருந்து கொஞ்சம் தொலைவில் திருச்சி ரோட்டில்
இருந்த மாருதி ரெஸ்டாரெண்ட் வந்து பகல் உணவை முடித்துக் கொண்டு மாலை திருச்சி
வந்து சேர்ந்தோம்.