Showing posts with label வைகறை. Show all posts
Showing posts with label வைகறை. Show all posts

Monday, 1 August 2016

புதுக்கோட்டை - வீதி.29 இல் கவிஞர்கள் வலைப்பதிவர்கள்



இப்போதெல்லாம் பெரும்பாலான கவிஞர்கள் வலைப்பதிவர்களாக இருக்கிறார்கள். ஆனால் வலைப்பதிவர்கள் எல்லோரும் கவிஞர்கள் அல்லர். அதேபோல கவிஞர்களாக மட்டுமே இருப்பவர்களும்  உண்டு. அந்த வகையில் கவிஞர்கள் வலைப்பதிவர்கள் என இரு சாராரையும் உறுப்பினர்களாகக் கொண்டு இலங்குவது வீதி இலக்கியக் களம், புதுக்கோட்டை ஆகும். 

நேற்று (31.07.2016 –ஞாயிறு) இவ் வீதியின் 29 ஆவது சந்திப்பு, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய மாடியில் அமைந்து இருக்கும், ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜில் காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. வழக்கம் போல மறக்காமல் எனக்கும் அழைப்பிதழை மின்னஞ்சல் வழியே அனுப்பி இருந்தார்கள். நேற்று காலை 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருந்த வசந்த பவனில் காலை உணவை முடித்துக் கொண்டு பஸ்சில் புதுக்கோட்டை பயணமானேன். புதுக்கோட்டை வந்ததும், பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த ’வீதி’யின் ப்ளக்ஸ் பேனரை படம் பிடித்துக் கொண்டு நிகழ்ச்சிகள் நடக்கும் கல்லூரிக்கு சென்றேன். 

(படம் மேலே) புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த ப்ளக்ஸ் பேனர்.



(படங்கள் மேலே) ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜ் இருக்கும் மாடி

(படம் மேலே) விழா நடந்த அறை வாசலில் புதுக்கோட்டை கம்பன் விழாவிற்கு வந்து இருந்த, விருத்தாசலம் ஓவியர் மோகன் அவர்கள் சிடி கடை வைத்து இருந்தார்.

நிகழ்ச்சிகள்:

முனைவர் நா.அருள்முருகன் அவர்களின், புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள் என்ற புத்தக அறிமுகம், சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் நாறும்பூ நாதன் அவர்களின் சிறப்புரை மற்றும் மறைந்த கவிஞர் வைகறை குடும்பநிதி வழங்குதல் என்று மூன்று நிகழ்ச்சிகள் ஒருசேர நடைபெற்றன. ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் தலைமை தாங்கினார். நூல் அறிமுகத்தை, கவிஞர்கள்  கு.ம.திருப்பதி, ராசி பன்னீர் செல்வன் மற்றும் தங்கம் மூர்த்தி ஆகியோர் சிறப்புற செய்தனர். பின்னர் எழுத்தாளர் நாறும்பூ நாதன் அவர்கள் சிறப்புரை செய்ய, முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் ஏற்புரை செய்தார்.

கூட்டத்தின் முடிவில் சகோதரி ஆசிரியை மு.கீதா அவர்கள் , பணம் கொடுத்தவர்கள் பட்டியலை வாசித்திட, மறைந்த கவிஞர் வைகறை மனைவி ரோசலின் மற்றும் அவர்களது மகன் ஜெய்க்குட்டி ஆகியோரிடம் குடும்பநிதி வழங்கப்பட்டது. ( LIC Endowment Policy For Rs 2,03,000/= (Rupees two lakhs and three thosand only)  மற்றும் ரொக்கப் பணமாக ரூ 40,500/=)
இன்று (01.08.16) மீண்டும் ரூ 10,000/= வழங்கப்படுகிறது.)

கூட்ட அமைப்பாளர்கள் கவிஞர்கள் நீலா மற்றும் பா.ஸ்ரீ மலையப்பன் ஆகிய இருவரும் கூட்ட ஏற்பாடுகளை சிறப்புற செய்து இருந்தனர்
 
(படம் மேலே) நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் சகோதரி கவிஞர் த.ரேவதி அவர்கள் வீணை வாசித்தார்.

(படம் மேலே) மேடையில் (இடமிருந்து வலம்) ராசி. பன்னீர் செல்வன், நா.முத்துநிலவன், நா.அருள்முருகன் மற்றும் கு.மா.திருப்பதி


(படங்கள் மேலே) வந்திருந்தவர்கள்

(படம் மேலே) ஆசிரியை மு.கீதா அவர்கள் மறைந்த கவிஞர் வைகறை குடும்பநிதி கொடுத்தோர் பட்டியலை வாசிக்கிறார்.



(படங்கள் -  மேலே) மறைந்த கவிஞர் வைகறை குடும்பநிதி அவரது மனைவி மற்றும் மகனிடம் வழங்கப்படுகிறது.

(படம் மேலே) முனைவர் நா.அருள்முருகன் சிறப்புரை

(படம் மேலே) மறைந்த  கவிஞர்  வைகறையின் மனைவி சகோதரி ரோசலின் அவர்களின் கண்ணீர் உரை 

(படம் மேலே) கவிஞர் பா.ஸ்ரீ மலையப்பன் நன்றியுரை

கீழே உள்ள படங்கள் கவிஞர் பா.ஸ்ரீ மலையப்பன் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொண்டவை. 

(படம் – மேலே) ஆசிரியர் நா.முத்துநிலவன் உரை 

(படம் மேலே) கவிஞர் கு.மா. திருப்பதி உரை
             
எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்துபவர் ஆசிரியர் மகாசுந்தர்
                                      

Thursday, 5 May 2016

வைகறை என்ற கவிஞனுக்கு



வலைப்பதிவரும், பள்ளி ஆசிரியருமான, கவிஞர் வைகறை என்றறியப்பட்ட திரு.ஜோசப் பென்சிஹர் அவர்கள் இப்போதுதான் மறைந்தார் (21.04.2016) என்பது போன்ற பிரம்மை. அதற்குள் நாட்கள் , வாரங்கள் ஆகி விட்டன. இனி மாதங்கள், வருடங்கள் என்று காலச்சக்கரம் ஓடி விடும். ஆனாலும் புதுகை கவிஞர்கள் மத்தியில் அவர் நினைவு என்றும் இருக்கும் என்று எடுத்துக் காட்டும் வண்ணம், நேற்று (04.05.2016 - புதன் கிழமை) வைகறை நினைவஞ்சலி கூட்டம் -வீதி 27, புதுக்கோட்டையில், ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியில், மாலை நடைபெற்றது. 

வைகறை நினைவஞ்சலி:

எப்போதுமே புதுக்கோட்டையில் வலைப்பதிவர், வீதி இலக்கிய விழா என்றால், ’நம்ம வீட்டு கல்யாணம் நாம்தான் தோரணம் கட்ட வேண்டும்’ என்பது போல ஓடி ஆடி, ஓய்வில்லாமல் கவிஞர் வைகறை ஏதாவது செய்து கொண்டு இருப்பார். அவரை நான் கடைசியாகப் பார்த்தது, ஜனவரியில்தான். ( திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்த, வீதி இலக்கியக் கூட்டம்). அன்றும் அவர் ப்ளக்ஸ் பேனரைக் கட்டுவது, டேபிள், சேர்களை ஒழுங்கு படுத்துவது என்று மும்முரமாகவே இருந்தார். அன்று அவருடைய ஒரே மகன் ‘ஜெய்’யையும் அழைத்து வந்து இருந்தார்.

நேற்று கவிஞர் வைகறை இல்லாத ’வீதி’ இலக்கியக் களம் வெறிச்சோடிக் கிடந்தது. வந்திருந்த அனைவரும் இனம் புரியாத ஒரு சோகத்தில்தான் இருந்தனர். ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்கள் முன்னிலை வகித்து கூட்டத்தை நடத்தினார்கள். கவிஞர் வைகறையின் படத்திற்கு மலரஞ்சலி செய்யும்போது, சில பெண் கவிஞர்கள் வாய்விட்டு அழவும் செய்தனர். ஒவ்வொருவர் பேச்சிலும் இது எதிரொலிக்கவும் செய்தது. 

சென்ற மாத பவுர்ணமியில் இருந்த வைகறை, இந்த மாத பவுர்ணமியில் இல்லாமல் போய்விட்டதை நினைக்கும்போது, அன்று பாரி மகளிர் பாடிய ’கையறு நிலை’ சங்கப் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.
-    பாரிமகளிர் (புறநானூறு – 112)

சில படங்கள்:

வலைப்பதிவர், சகோதரி ஆசிரியை M.கீதா அவர்கள் ’வைகறை நினைவஞ்சலி கூட்டம் -வீதி 27 ’ என்ற தலைப்பினில் ஒரு வலைப்பதிவை http://velunatchiyar.blogspot.com/2016/05/27_4.html வெளியிட்டு இருக்கிறார். அதில் நிகழ்ச்சி பற்றிய அதிக விவரங்களும், படங்களும் இருப்பதால், நான் மீண்டும் அதே காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை இங்கு வெளியிடவில்லை. எனவே சில படங்கள் மட்டும் இங்கே.















 (கீழே உள்ள படம் மட்டும் – நன்றி Geetha M at Thendral)

வங்கி கணக்கு எண்: 

கவிஞர் வைகறையின் மனைவி ரோஸ்லின் மற்றும் அவர்கள் மகன் ஜெயசன் பெயரில் வங்கியில் ஒரு வைப்புநிதி வைப்பதற்காக முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண் முதலான விவரங்களை அய்யா முத்துநிலவன் அவர்கள் தனது வலைத்தளத்தில் அறிவிப்பார் என்று நினைக்கிறேன்.
xxxxxxx

பிற்சேர்க்கை (06.05.2016) 

வங்கிக் கணக்கு எண் http://www.malartharu.org/2016/05/bank-account-number.html

வணக்கம்,
வலைப்பதிவர் மாநாட்டின் வங்கிக் கணக்கையே வைகறை நிதிக்கும்  பயன்படுத்தலாமா என்கிற ஆலோசனைக் கூட்டம் இன்று பாரி மழலையர் பள்ளியில் நடைபெற்றது.

கூட்டத்தில் கவிஞர் முத்து நிலவன், கவிஞர் செல்வா, கவிஞர் கீதா மற்றும் கவிஞர் மாலதி அவர்களுடன் விதைக்கலாம் ஸ்ரீ மற்றும் சிவாவும் கலந்துகொண்டனர்.

நிறைய யோசனைக்குப்பிறகு அதே கணக்கினையே வைகறை நிதிக்கும் பயன்படுத்தலாம் என்கிற முடிவு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிதியளிக்க விரும்புவோர்கள் கீழ்க்கண்ட கணக்கிலேயே வரவு வைக்கலாம்.

First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645

நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக  இருக்கும்.
bloggersmeet2015@gmail.com